தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 10 Apr 2025

12 August 2015

இரட்டைத்தலை கொண்ட அபூர்வ நல்லபாம்பு: உண்ணாமல் உயிர் வாழும் அதிசயம் - வீடியோ


பீஜிங், ஆக. 12- 

பாம்புகள் ஒன்றாக விளையாடாது என்பதால் பாம்புகளின் உரிமையாளர்கள் அதனை தனித்தனியாக பிரித்து வைத்தே வளர்ப்பது வழக்கம். ஒன்றாக இருந்தால், ஒன்றை ஒன்று உண்டுவிடும், உணவுக்காக சண்டையிடும். ஆனால், ஒரே உடலில் இருபாம்புகள் இருந்தால் என்ன செய்வது? 

தெற்கு சீனாவின் யூலின் மாகாணத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பாம்பு பண்ணை ஒன்றில் 10 நாட்களுக்கு முன் ஆச்சர்யமளிக்கும் வகையில் இரட்டைத் தலையுடன் ஒரு நல்ல பாம்பு பிறந்தது. தனித்தனி மூளைகள் கொண்ட இந்த பாம்பு  சுதந்திரமாக சிந்தித்து தத்தமது உடலைக் கட்டுப்படுத்தும் ஆற்றலுடன், பிரிக்க முடிந்த இரட்டையர்களாக காணப்படுகிறது. 

இவ்வாறான பாம்புகள் வழக்கமாக நீண்ட காலம் வாழாது. ஒரு வேளை அவற்றினை முறையாக கவனமெடுத்து வளர்த்தால் சில காலம் பாதிப்பின்று வாழ வைக்க முடியும். ஆனால், இந்த அபூர்வ நல்ல பாம்போ எதையோ சாப்பிடவோ குடிப்பதோ இல்லை. ஆனாலும், ஆரோக்கியமாக இருக்கிறது. இருப்பினும் அது இன்னும் எவ்வளவு நாள் உயிரோடிருக்கும் என்று சொல்ல முடியாது என்கின்றனர் பாம்பியல் வல்லுநர்கள். 

தற்போது சீனாவின் நான்னிங் மிருகக்காட்சிசாலையை கலக்கி வரும் அந்த பாம்பின் சேட்டைகள் வீடியோ வடிவில்:




நன்றி:மாலை மலர்,
டெய்லி மிரர்

No comments:

Post a Comment