தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

29 August 2015

300 தொன் தங்கத்துடன் 1945ல் மாயமான ரயில் கண்டுபிடிப்பு?


போலந்தில் 70 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன ரயில் ஒன்றில் நாஜி காலத்து தங்கப் புதையல்கள் காணப்படுவதாக வதந்திகள் பரவியுள்ள நிலையில், அந்த ரயில் இருக்கும் இடத்தை 'அனேகமாக கண்டுபிடித்துவிட்டதாக' அரசாங்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
நிலத்திற்குள் ஆழ ஊடுருவி பார்க்கும் ராடார் கருவி மூலம் கிடைத்துள்ள படங்களை தான் பார்த்துள்ளதாக போலந்தின் கலாசாரத்துறை அமைச்சர் கூறுகின்றார்.
வ்ரோக்லா நகருக்கு வெளியே, நிலத்துக்கு அடியில் உள்ள பதுங்குகுழி ஒன்றின் படங்கள் அவை என்று அவர் கூறியுள்ளார்.
'தங்க ரயில்' இருக்கின்ற இடமாக அது இருக்க 90 வீத வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த ரயிலில் என்ன இருக்கின்றது என்பது மர்மமாகவே இருக்கின்றது.
ஆனால், சோவியத் இராணுவம் 1945-ம் ஆண்டில் போலந்துக்குள் முன்னேறிவந்த போது, குறித்த ரயிலில் ஏற்றப்பட்ட தங்கப் பெட்டகங்களாக அவை இருக்கலாம் என்று உள்ளூர் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனுடன் சம்பந்தப்பட்டவர் என்று கூறிய நபர் ஒருவர் அளித்திருந்த மரண வாக்குமூலம் ஒன்றிலேயே இந்த ரயில் பற்றிய தகவல் வெளிப்பட்டுள்ளது.

நன்றி :BBC

No comments:

Post a Comment