தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

24 May 2018

மழை காலத்தில்அதானும் தொழுகையும்


இஸ்லாம் பின்பற்ற இலகுவான இயற்கையான மார்க்கமாகும் அதனை கஷ்டபடுத்தி கொள்வதை ஒரு போதும் அல்லாஹ் விரும்பவில்லை பல சந்தர்ப்பங்களில் ஒரு சில சலுகைகளை இந்த மார்க்கம் அதன் பொது விதியிலிருந்து நீங்கி எங்களுக்கு வழங்குகின்றது அப்படியான சலுகைகளை முழுமையாக பயன்படுத்துவது தான் நபி ஸல் அவர்கள் எங்களுக்கு காட்டிதந்த வழிமுறையாகும்.

உதாரணமாக:
பிரயாணத்தை இஸ்லாம் சிரமமான ஒன்றாக பார்ப்பதினால் அதில் தொழுகையை பாதி அளவு சுருக்க மற்றும் நோன்பை விட்டு விட்டு வேறு நாளில் பிடிக்க, அதே போல் ஜும்ஆவை விட அனுமதித்துள்ளது இந்த சலுகைகளை நபி ஸல் அவர்களும் நபித்தோழர்களும் பயன்படுத்தி இருப்பதை ஹதீஸ்களில் நாம் பார்க்க முடிகின்றது அது போல் நோயை இஸ்லாம் சிரமமாக பார்ப்பதினால் தொழுகை , நோன்பு போன்ற கடமையான வணக்கங்களில் நோயாளர்களுக்கு பல சலுகைகளை வழங்குவதை பார்கின்றோம். இப்படி இஸ்லாம் பல சந்தர்ப்ப சூழ்நிலைகளில் எங்களுக்கு எண்ணற்ற சலுகைகளை வழங்குகின்றது இஸ்லாம் வழங்கும் அந்த சலுகைகளை முழுமையாக நாம் பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும் இவற்றை பயன்படுத்தாது தங்களைத் தாங்களே சிரமப்படுத்தி கொள்வதை இஸ்லாம் தடுக்கிறது.
அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திப்பதில்லை.'
(சூராபகரா 286)
ﻳُﺮِﻳﺪُ ﺍﻟﻠَّﻪُ ﺑِﻜُﻢُ ﺍﻟْﻴُﺴْﺮَ ﻭَﻟَﺎ ﻳُﺮِﻳﺪُ ﺑِﻜُﻢُ ﺍﻟْﻌُﺴْﺮَ
'அல்லாஹ் உங்களுக்கு இலகுவாக்க விரும்புகிறானே தவிர, கஷ்டத்தை(க் கொடுக்க) விரும்பவில்லை.'
(சூராபகரா 185)
69. 'இலகுவாக்குங்கள்; சிரமத்தைக் கொடுக்காதீர்கள். மேலும் நல்லவற்றையே சொல்லுங்கள். சலிப்படைந்து ஓடிவிடுமாறு செய்யாதீர்கள்; வெறுப்பூட்டாதீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 3. கல்வியின் சிறப்பு
இஸ்லாம் வழங்கியுள்ள சலுகைகளில் பல இடங்களில் இன்று நடைமுறை படுத்தபடாத மறைந்து போன சுன்னாவாக மழைகால அதான், மற்றும் தொழுகை இருப்பதை பார்கின்றோம்.
*1) மழை கால அதானும் கடமையான தொழுகையை வீடுகளில் தொழுது கொள்ள அனுமதியும்*
405– பாங்கு சொல்பவரிடம் ஒரு மழை நாளில் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் என்று (பாங்கில்) கூறிய பிறகு ஹய்ய அலஸ்ஸலாஹ் (தொழுகைக்கு வாருங்கள்) என்பதைக் கூறாமல் *(ஸல்லூ fபீ Bபுயூதிகும்)* உங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள் என்று கூறுவீராக என இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள். (இவ்வாறு கூறியதை) மக்கள் வெறுப்பது போல் இருந்த போது என்னை விட மிகவும் சிறந்தவ(ரான நபி (ஸல்) அவ)ர்கள் இவ்வாறு செய்துள்ளனர் என்று கூறி விட்டு நிச்சயமாக ஜும்ஆ அவசியமானது தான். எனினும் நீங்கள் சேற்றிலும் சகதியிலும் நடந்து வந்து அதனால் உங்களுக்குச் சிரமம் தருவதை நான் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்கள்.
புஹாரி-901: அப்துல்லாஹ் பின் அல் ஹாரிஸ் (ரலி).
666 ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻋَﺒْﺪُ ﺍﻟﻠَّﻪِ ﺑْﻦُ ﻳُﻮﺳُﻒَ ﻗَﺎﻝَ ﺃَﺧْﺒَﺮَﻧَﺎ ﻣَﺎﻟِﻚٌ ﻋَﻦْ ﻧَﺎﻓِﻊٍ ﺃَﻥَّ ﺍﺑْﻦَ ﻋُﻤَﺮَ ﺃَﺫَّﻥَ ﺑِﺎﻟﺼَّﻠَﺎﺓِ ﻓِﻲ ﻟَﻴْﻠَﺔٍ ﺫَﺍﺕِ ﺑَﺮْﺩٍ ﻭَﺭِﻳﺢٍ ﺛُﻢَّ ﻗَﺎﻝَ * ﺃَﻟَﺎ ﺻَﻠُّﻮﺍ ﻓِﻲ ﺍﻟﺮِّﺣَﺎﻝِ * ﺛُﻢَّ ﻗَﺎﻝَ ﺇِﻥَّ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻛَﺎﻥَ ﻳَﺄْﻣُﺮُ ﺍﻟْﻤُﺆَﺫِّﻥَ ﺇِﺫَﺍ ﻛَﺎﻧَﺖْ ﻟَﻴْﻠَﺔٌ ﺫَﺍﺕُ ﺑَﺮْﺩٍ ﻭَﻣَﻄَﺮٍ ﻳَﻘُﻮﻝُ ﺃَﻟَﺎ ﺻَﻠُّﻮﺍ ﻓِﻲ ﺍﻟﺮِّﺣَﺎﻝِ ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ
குளிரும் காற்றும் நிறைந்த ஓர் இரவில் இப்னு உமர் (ரலி) அவர்கள் பாங்கு சொன்னார்கள். பிறகு "ஓர் (முக்கிய) அறிவிப்பு! (உங்கள்) இருப்பிடங்களிலேயே நீங்கள் தொழுது கொள்ளுங்கள்'' (அலா! ஸல்லூ ஃபிர் ரிஹால்) என்று அறிவிப்புச் செய்தார்கள். பின்னர், "(கடுங்) குளிரும் மழையுமுள்ள இரவுகளில் "ஓர் அறிவிப்பு! (உங்கள்) இருப்பிடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்'' என்று அறிவிக்குமாறு பாங்கு சொல்பவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பணிப்பார்கள்'' என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 666
மேலும் “ ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றுகொண்டிருந்த போது மழை பெய்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் யார் விரும்புகிறாரோ அவர் தமது இருப்பிடத்திலேயே தொழுதுகொள்ளட்டு
ம்!” என்று கூறினார்கள். முஸ்லிம் 1243
*மழைகாலங்களில் மஸ்ஜிதுக்கு வருகை தருவது சிரமமான காரியம் என்பதால் இஸ்லாம் வீடுகளில் தொழுதுகொள்ள எங்களுக்கு அனுமதி தந்ததுள்ளது இந்த சலுகையை நாம் பயன்படுத்துவதுடன் எமது மஸ்ஜித்களிலும் இந்த அதான் முறை நடைமுறைக்கு வர வேண்டும்*
*2) தொழுகையை ஜம்உ செய்வதற்கு அனுமதி*
1151 ﻭ ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺃَﺑُﻮ ﺑَﻜْﺮِ ﺑْﻦُ ﺃَﺑِﻲ ﺷَﻴْﺒَﺔَ ﻭَﺃَﺑُﻮ ﻛُﺮَﻳْﺐٍ ﻗَﺎﻟَﺎ ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺃَﺑُﻮ ﻣُﻌَﺎﻭِﻳَﺔَ ﺡ ﻭ ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺃَﺑُﻮ ﻛُﺮَﻳْﺐٍ ﻭَﺃَﺑُﻮ ﺳَﻌِﻴﺪٍ ﺍﻟْﺄَﺷَﺞُّ ﻭَﺍﻟﻠَّﻔْﻆُ ﻟِﺄَﺑِﻲ ﻛُﺮَﻳْﺐٍ ﻗَﺎﻟَﺎ ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻭَﻛِﻴﻊٌ ﻛِﻠَﺎﻫُﻤَﺎ ﻋَﻦْ ﺍﻟْﺄَﻋْﻤَﺶِ ﻋَﻦْ ﺣَﺒِﻴﺐِ ﺑْﻦِ ﺃَﺑِﻲ ﺛَﺎﺑِﺖٍ ﻋَﻦْ ﺳَﻌِﻴﺪِ ﺑْﻦِ ﺟُﺒَﻴْﺮٍ ﻋَﻦْ ﺍﺑْﻦِ ﻋَﺒَّﺎﺱٍ ﻗَﺎﻝَ ﺟَﻤَﻊَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺑَﻴْﻦَ ﺍﻟﻈُّﻬْﺮِ ﻭَﺍﻟْﻌَﺼْﺮِ ﻭَﺍﻟْﻤَﻐْﺮِﺏِ ﻭَﺍﻟْﻌِﺸَﺎﺀِ ﺑِﺎﻟْﻤَﺪِﻳﻨَﺔِ ﻓِﻲ ﻏَﻴْﺮِ ﺧَﻮْﻑٍ ﻭَﻟَﺎ ﻣَﻄَﺮٍ ﻓِﻲ ﺣَﺪِﻳﺚِ ﻭَﻛِﻴﻊٍ ﻗَﺎﻝَ ﻗُﻠْﺖُ ﻟِﺎﺑْﻦِ ﻋَﺒَّﺎﺱٍ ﻟِﻢَ ﻓَﻌَﻞَ ﺫَﻟِﻚَ ﻗَﺎﻝَ ﻛَﻲْ ﻟَﺎ ﻳُﺤْﺮِﺝَ ﺃُﻣَّﺘَﻪُ ﻭَﻓِﻲ ﺣَﺪِﻳﺚِ ﺃَﺑِﻲ ﻣُﻌَﺎﻭِﻳَﺔَ ﻗِﻴﻞَ ﻟِﺎﺑْﻦِ ﻋَﺒَّﺎﺱٍ ﻣَﺎ ﺃَﺭَﺍﺩَ ﺇِﻟَﻰ ﺫَﻟِﻚَ ﻗَﺎﻝَ ﺃَﺭَﺍﺩَ ﺃَﻥْ ﻟَﺎ ﻳُﺤْﺮِﺝَ ﺃُﻣَّﺘَﻪ ﺭﻭﺍﻩ ﻣﺴﻠﻢ
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹ்ரையும், அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்; மக்ரிபையும், இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது அச்சமோ மழையோ இருக்கவில்லை.வகீஉ என்பவரின் அறிவிப்பில், நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு ஏன் செய்தார்கள்?’ என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “தம் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக (இவ்வாறு செய்தார்கள்)” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : முஸ்லிம்
மழை அச்சம் போன்ற காரணம் இல்லாமல் உள்ளூரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையை ஜம்மு செய்திருக்கும் போது மழை அச்சம் கலவரம் போன்ற மக்களுக்கு சிரமமாக உள்ள நேரங்களில் தாராளமாக இச்சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை இந்த நபி மொழியில் இருந்து நாம் விளங்கிக்கொள்ள முடிகின்றது.
*அல்லாஹு அஃலம்*
_ தொகுப்பு_
*இன்திகாப் உமரி*

No comments:

Post a Comment