போர்த்துக்கல் நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடியாமல் போராடிய காட்சிகள் தற்போது வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போர்த்துக்கல் நாட்டில் உள்ள Madeira சர்வதேச விமான நிலையம், உலக அளவில் ஆபத்தான நிலையங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்த விமான நிலைய பகுதியில் சமீபத்தில் வீசிய பலத்த காற்றை எதிர்கொள்ள முடியாமல் பல பயணிகள் விமானங்கள் போராடிய காட்சிகள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஓடுபாதையை நோக்கி தாழ்வாக இறங்கிய விமானங்கள், ஓடுபாதையை நோக்கி செல்ல முடியாமல் காற்றின் போக்கிற்கு திரும்பி பக்கவாட்டு நிலையிலேயே தரையிறங்க நேரிட்டது.
சில விமானங்களின் சக்கரங்கள் ஓடுபாதையை அடைந்தும், காற்றை சமாளிக்க முடியாமல் மீண்டும் மேலே பறக்கும் காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
சர்வதேச விமானங்கள் இதுபோன்ற ஆபத்துகளை எதிர்கொள்ள பலத்த காற்று ஒரு காரணமாக இருந்தாலும், Madeira விமான நிலையத்தின் ஓடுபாதையானது மிக குறுகிய நீளத்தில் உள்ளதால், இதுவும் விமானங்கள் பாதுகாப்பாக தரையிறங்குவதற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
ஒரு விமான நிலைய ஓடுபாதையின் சராசரி நீளம் 1829 மீற்றர்கள் ஆகும். ஆனால், Madeira விமான நிலையம் கடந்த 1964ம் ஆண்டு தொடங்கப்பட்ட போது, அதனுடைய ஓடுபாதையின் நீளம் வெறும் 1,600 மீற்றர்கள் தான்.
சுமார் 90,718 கிலோ எடையுடன் வரும் ஒரு விமானம் தரையிறங்க இது போதுமான நீளம் அல்ல.
90 ஆயிரம் கிலோ எடையைவிட கூடுதலாக எடை உள்ள போயிங் போன்ற சர்வதேச விமானங்கள் பாதுகாப்பாக தரையிறங்க சுமார் 2,438 மீற்றர் நீளமுடைய ஓடுபாதை அமைப்பது அவசியம்.
இதன் விளைவாக, கடந்த 1977ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் திகதி இந்த விமான நிலையத்தில் தரையிறங்கிய சர்வதேச Boeing 727 விமானம் ஓடுபாதை பற்றாக்குறையால், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் சுவற்றில் பலமாக மோதி பெரும் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், அந்த விமானத்தில் பயணம் செய்த 164 பயணிகளில் 131 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்திற்கு பிறகு Madeira விமான நிலையத்தின் ஓடுபாதையை 200 மீற்றர்கள் கூடுதலாக விரிவுப்படுத்தினர்.
ஆனால், தற்போதும் இந்த ஓடுபாதையின் நீளமான 1800 மீற்றர்கள் என்பது ஓடுபாதையின் சராசரி நீளத்தை கூட எட்டவில்லை.
சர்வதேச போயிங் விமானங்கள் இங்கு தினந்தோறும் வருவதால், இதன் ஓடுபாதையை 2,438 மீற்றர்களாக அதிகரித்தால் தான் எதிர்கால விபத்துக்களை தவிர்க்க முடியும்.
தற்போது வெளியாகியுள்ள வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல இணையதளம், காலநிலை ஆபத்துகளை விட, இந்த விமான நிலைய ஓடுபாதையின் அமைப்பு தான் ஆபத்து நிறைந்து காணப்படுவதாக தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment