தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 09 Apr 2025

18 July 2014

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH 17;சிதறிக் கிடக்கும் சிதிலங்கள்

நேற்று( 17.7.14) மலேசியன் ஏர்லைன்ஸின் போயிங் 777 ரக
விமானம், உக்ரைனின் டோனியேஸ்க் பிரதேசத்திலுள்ள,
கிராபோவோ எனும் இடத்தில் நொறுங்கி விழுந்தது.
இது குறித்து ஒரு சர்வதேச விசாரணைத் தேவை என உலகக்
தலைவர்கள் கோரியுள்ளனர். அந்த விமானத்தில் இருந்த 298 பேரும்
உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு, ரஷ்யாவே காரணம் என்று உக்ரைன்
கூறுகிறது. இச்சம்பவத்தை அடுத்து உக்ரைன்-
ரஷ்யா இடையேயான பதற்றம் அதிகரித்து வருகிறது. நொறுகி விழுந்த இந்த
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம் எச் 17ல்
இருந்த 298 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த விமானம்
நொறுங்கி விழுந்த இடத்தில், சிதறிக் கிடக்கும் சிதிலங்கள். இந்தச்
சிதிலங்களில் கை கடிகாரம் ஒன்றும், பிரேஸ்லெட் ஒன்றும்
அடங்கும். மேலும் உடற்பகுதிகள், உடமைகள் ஆகியவற்றை தேடும்
பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ரோஸ்பைன் எனும்
கிராமத்துக்கு அருகில், அந்த விமானம் நொறுங்கி விழுந்த
இடத்தில் தேடுதல் நடவடிக்கையில், பணிக் கடமையில் இல்லாத
காவல்துறையினர், நிலக்கரிச் சுரங்க ஊழியர்கள் உட்பட பலர் ஈடுபட்டுள்ளனர்.
அந்த கிராமத்துக்கு மேலாகத்தான் அந்த விமானம்
வெடித்து, எரிந்து, நொறுங்கி விழுந்தது. உக்ரைனின் கிழக்குப் பகுதியில்,
கிளர்ச்சியாளர்களின்
கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில், நொறுங்கி விழுந்த
விமானத்தில் இருந்தவர்களின் உடல்களை தேடும்
பணி தொடருகிறது. அந்த விமானத்தின் முக்கிய சமிஞ்கைகள்
மற்றும் உரையாடல்கள் அடங்கிய கறுப்புப் பெட்டிகளில்
ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சமபவத்துக்கு ரஷ்யாவும்,
உக்ரைனும் ஒருவர் மீது ஒருவர்
குற்றஞ்சாட்டுகின்றனர்.

Source:bbc

No comments:

Post a Comment