நேற்றைய தினம் காஸா மீது இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களால் 100
பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்துடன் கடந்த மூன்று
வாரங்களாகதொடரும் இஸ்ரேலிய தாக்குதல்களினால் உயிரிழந்தோர் தொகை 1200 ஆக
உயர்ந்திருப்பதாக பலஸ்தீன தகவல்கள் தெரிவிக்கின்றன. காஸா
பகுதிக்கெனவிருந்த ஒரேயொரு மின்பரிமாற்ற நிலையமும் சேதமடைந்துள்ள
நிலையில் வைத்தியசாலைகள் மற்றும் நீர் வசதிகளும்
பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து வெளியாகும் தகவல்கள்
தெரிவிக்கும் அதேவேளை யுத்த நிறுத்தம் குறித்த இழுபறியும் தொடர்கிறது.
காஸா மீது திணிக்கப்பட்டிருக்கும் தடைகள்நீக்கப்படாமல் யுத்த நிறுத்தம்
எனும் பேச்சுக்கே இடமில்லையெனஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளஅதேவேளை
இஸ்ரேலுக்குள் நுழையக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள
சுரங்கப்பாதைகளைத் தகர்ப்பதற்கான தமது நடவடிக்கைகள் தொடரும் என இஸ்ரேலிய
தரப்பும் அறிவித்துள்ளது. இதுவரை 53 இராணுவத்தினரை இழந்துள்ளதாக இஸ்ரேலிய
இராணுவம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் "நாங்கள் மரணத்தைஎதிர்பார்த்தே
காத்திருககிறோம்" அவர்கள் மரண குழிக்குள் வருவதை எதிர்பார்த்தே வர
வேண்டும்எனஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எனினும், யுத்த நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தைகள் மறுபுறத்தில்
தொடர்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் இடம்பெற்ற
தாக்குதல்களில் மாத்திரம் நான்கு பள்ளிவாசல்கள்
தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
Source:http://www. sonakar.com/?p=22076
No comments:
Post a Comment