எதிர்வரும் ஜனவரி மாதம் எட்டாம் திகதி ஜனாதிபதித் தேர்தல்கள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்ட தினத்திலேயே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உள்ளூராட்சி சபை உறுப்பினர் ஒருவர் படுகாயமடைந்திருக்கிறார்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியிலிருந்து மூத்த அமைச்சர்கள் உட்பட பெருமளவான அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்குத் தாவியுள்ளமையை ஐ.தே.கவின் ஆதரவாளர்கள், மக்கொன பகுதியில் கொண்டாடிக்கொண்டிருந்தவேளை, இனந்தெரியாதோர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தியிருக்கிறார்கள்.
இதன்போது ஐ.தே.க வின் முன்னார் பேருவளை எதிர்க்கட்சித் தலைவர் சமில ரணசிங்க என்பவர் தலையில் குண்டடிபட்டு ஆபத்தான நிலையில் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படவில்லையென ஐ.தே.க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment