உங்களைப் பற்றி, கூகிள் அறிந்து வைத்துள்ள அனைத்து விடயங்களையும் அறிந்து
கொள்ள விரும்புகிறீர்களா? கீழுள்ள ஆறு இணைப்புகளும், உங்களைப் பற்றி
கூகிள் அறிந்துள்ள தரவுகளை உங்களுக்குக் காண்பிக்கும்.
1. உங்களை கூகிள் எப்படிப் பார்க்கிறது?
உங்கள் வயது, பால், விருப்பங்கள் என அனைத்து பற்றியதான சுயவிபரக் கோவையை
கூகிள் உருவாக்க முயற்சிக்கிறது. இது, உங்களுக்குப் பொருத்தமான
விளம்பரங்களைக் காட்சிப்படுத்த தேவையானது. இந்த இணைப்பில் கூகிள் உங்களை
எப்படிக் காண்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம், மாற்றங்களும் செய்யலாம்:
https://www.google.com/ads/preferences/
2. உங்களின் இருப்பிடங்களின் வரலாற்றை அறிந்திட
நீங்கள் அண்ட்ராய்டு திறன்பேசியை பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்கள்
இருப்பிடம் தொடர்பான தரவுகளும், கூகிளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த இணைப்பில், உங்களின் மொத்த இருப்பிட வரலாற்றை அறிந்து கொள்ள
முடிவதோடு, அதனை தரவிறக்கிக் கொள்ளவும் முடியும்.
https://maps.google.com/locationhistory
3. உங்களின் மொத்த கூகிள் தேடலின் வரலாற்றையும் காண
நீங்கள் கூகிளில் மேற்கொண்ட ஒவ்வொரு தேடலையும், கூகிள் சேமிக்கிறது.
அத்தோடு, நீங்கள் கிளிக் செய்த, கூகிள் விளம்பர இணைப்புகளையும் அது
சேமித்து வைத்திருக்கிறது. இந்த இணைப்பில் அவற்றைக் கண்டு கொள்ளலாம்.
https://history.google.com
4. உங்கள் கூகிள் கணக்கைப் பாவித்த அத்தனை சாதனங்களையும் அறிந்திட
உங்கள் கூகிள் கணக்கை, வேறு யாராவது பயன்படுத்துகிறார்கள் என சந்தேகக்
கவலை தோன்றினால், உங்கள் கூகிள் கணக்கைப் பாவிக்கும் அத்தனை சாதனங்கள்,
அதன் ஐபி முகவரி மற்றும் அண்ணளவான இருப்பிடம் என்பனவெல்லாம் இந்த
இணைப்பில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
https://security.google.com/settings/security/activity
5. உங்கள் கூகிள் தரவுகளை அணுகும் அத்தனை செயலிகள் மற்றும் நீட்சிகள் பற்றி அறிய
உங்கள் கூகிள் கணக்கில், எந்த செயலிகள் மற்றும் நீட்சிகள் அணுக்கம்
பெற்றுள்ளது, எவ்வகையான அணுக்கங்கள் என்பன பற்றி இந்த இணைப்பில்
அறியலாம். அணுக்கத்தை நீக்கிவிடவும் முடியும்.
https://security.google.com/settings/security/activity
6. உங்களின் அத்தனை கூகிள் தரவுகளையும் பதிவிறக்க
உங்களின் அத்தனை தரவுகளையும் கூகிள் தரவிறக்கிக் கொள்ள வழிசமைக்கிறது:
உரலிகளின் சேமிப்பு, மின்னஞ்சல்கள், தொடர்பாடல்கள், கோப்புகள்,
சுயவிபரக்கோவை, உங்கள் யூடியுப் காணொளிகள், நிழற்படங்கள் என அனைத்தையும்
இந்த இணைப்பில் தரவிறக்கிக் கொள்ளலாம்.
https://www.google.com/takeout
Written by Cloud Fender Translated by Tharique Azeez
Thanks
No comments:
Post a Comment