தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

23 September 2013

மூன்று மாகாணங்களிலும் முதலிடம் பெற்றோர் இவர்கள்தான்

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண
சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற
உறுப்பினர்களுக்கான விருப்பு வாக்குகள்
தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
நேற்று (22) இரவு 11.30 மணியளவில் சகல
விருப்பு வாக்குகளும் வெளியிடப்பட்டதாக தேர்தலுக்கு பொறுப்பான அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.
மத்திய மாகாணம் கண்டி மாவட்டம் மற்றும்
வடமேல் மாகாணம் குருநாகல் மாவட்டம் ஆகிய
இரு மாவட்டங்களுக்குமான
விருப்பு வாக்குகள் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டது.
மூவரது விருப்பு வாக்குகள் மீள
எண்ணப்பட்டமையே இத் தாமதத்திற்கான காரணம்
என கூறப்படுகிறது.
விருப்பு வாக்குள் அறிவிப்பதற்கு தாமதம்
ஏற்பட்டமையின் காரணமாக கண்டி மாவட்ட செயலகத்திற்கு முன்னால் நேற்று (22)
இரவு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இம்முறை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள்
மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள்
குழப்பநிலையை ஏற்படுத்தியதன் காரணமாக
கண்டி மாவட்ட செயலகத்திற்கு முன்னால் பதற்ற நிலை உருவானது.
வடமேல் மாகாண விருப்பு வாக்கு தொடர்பில்
அநேகரின் கவனத்தை ஈர்த்த, ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணி கட்சியில் போட்டியிட்ட
தயாசிறி ஜயசேகர அதிக
விருப்பு வாக்குகளை பெற்றார். இலங்கை மாகாணசபை தேர்தல் வரலாற்றில்
அதிகப்படியான
விருப்பு வாக்குகளை தயாசிறி ஜயசேகர
3,36,327 வாக்குகளை பெற்றுக்
கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் மகனான ஜொஹான் பெர்ணான்டோ - 1,34,443
விருப்பு வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார்.
மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய
மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட
தி.மு.ஜெயரத்னவின் மகன் அனுரத்த ஜெயரத்ன -
107,644 விருப்பு வாக்குகளை பெற்று முதலிடத்தில்
உள்ளார்.
இவருக்கு அடுத்த படியாக இரண்டாம் இடத்தில்,
சரத் ஏக்கநாயக்க 70,174
விருப்பு வாக்குகளுடன் உள்ளார்.
இந்நிலையில் 25 வருடங்களின் பின்னர் இடம்பெற்ற வடக்கு மாகாண சபை தேர்தல்
முடிவுகளும் விருப்பு வாக்குகள்
விபரங்களும் விரைவில் வெளியிடப்பட்ன.
வடக்கு, தேசிய மற்றும் சர்வதேசிய ரீதியில்
அனைவரது கவனத்திற்கும் எதிர்பார்ப்புக்கும்
மத்தியில் வட மாகாண சபை தேர்தல் இடம்பெற்றது.
வடமாகாணசபை தேர்தலில் இலங்கை தமிழரசுக்
கட்சி 38 ஆசனங்களில் 30 ஆசனங்களைப்
பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் முதலமைச்சர்
வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் 132,255 விருப்பு வாக்குகளை பெற்றார்.
வடக்கு கிழக்கு தேர்தல் வரலாற்றில்
அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற
பெருமையும் தமிழரசுக் கட்சியின்
முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.
விக்னேஸ்வரனையே சாரும். இவரைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் கூடிய
விருப்பு வாக்குகளை அனந்தி எழிலன் - 87,870
விருப்பு வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ள
அதேவேளை மூன்றாமிடத்தில் சித்தார்த்தன் -
39,715 விருப்பு வாக்குகளையும் பெற்றுக்
கொண்டுள்ளார்.



நன்றி :அத தெரண - தமிழ

No comments:

Post a Comment