தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 12 Apr 2025

09 September 2013

பிரான்சில் சினிமாவில் வருவது போன்ற நகைக்கொள்ளை

சினிமாவில் வருவது போன்ற பரபரப்பான
கொள்ளை சம்பவம் ஒன்றில், பிரான்சில் சுமார் 2.6
மிலியன் டாலர்கள் மதிப்புள்ள ஆபரணக்
கற்களும், கைக்கடிகாரங்களும்
கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. முகமூடி அணிந்த கொள்ளையர், கார் ஒன்றை,
பாரிஸ் நகைக்கடை ஒன்றின் ஜன்னல் வழியாக
மோதி, உள்ளே நுழைந்து சில நிமிடங்களில்
அங்கு இருந்த விலைமதிப்புள்ள கற்களையும் ,
கைக்கடிகாரங்களையும் கொள்ளையடித்துச்
சென்றுவிட்டனர். இதே போன்று பல கொள்ளைச்சம்பவங்கள்
ஏற்கனவே பிரான்சில் நடந்துள்ளன. ஜூலையில்தான், 136 மிலியன் டாலர்கள்
மதிப்புள்ள நகைகள் பிரென்சு நகரான கேனில்
உள்ள ஒரு ஹோட்டலில்
இருந்து கொள்ளையடிக்கப்பட்டன. 'ரோஜா சிறுத்தைகள்' ( பிங்க் பாந்தர்ஸ்)
என்றழைக்கப்படும் ஒரு கிரிமினல் குழுதான்
இதைச் செய்திருக்கவேண்டும் என்ற சந்தேகங்கள்
எழுந்திருக்கின்றன. இந்தக் குழு உலக அளவில்
1999லிருந்து சுமார் 300
கொள்ளைகளை நடத்தியிருக்கிறது.


source:BBC

No comments:

Post a Comment