அரசாங்க ஊழியர்களின் லீவு மற்றும் முக்கிய தேவைகள் கருதி ரெலிமெயில் சேவை சட்டபூர்வ ஆவணமாக்கப்படுமென தபால் சேவைகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க தெரிவித்தார். ஒக்டோபர் மாத இறுதியுடன் 'ரெலி கிராம்' சேவை முடிவுக்கு கொண்டு வரப்படுமென தொலைத்தொடர்புகள் அமைச்சு அறிவி த்துள்ளமையைய டுத்தே, அமைச்சர் ரெலிமெயில் சேவையின் ஆரம் பம் குறித்து விளக்கமளித்தார்.
ரெலிகிராம் சேவை நிறுத்தப்பட்டாலும் அதற்கு மாற்றீடாக ரெலிமெயில் என்னும் சேவை தபால் நிலையங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளது. இதற்கூடாக அதிமுக்கிய தகவல்கள் வழமையான சேவை போன்றே முன்னெடுக்கப்படுவதுடன் அதனை சட்டபூர்வ ஆவணமாக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார். அதிக செலவீனம் மற்றும் மக்கள் பாவனை குறைவு என்பன காரணமாகவே தொலைத்
தொடர்புகள் மற்றும் தபால் சேவைகள் ஆகிய அமைச்சுக்கள் இணைந்து 'ரெலிகிராம்' சேவையினை நிறுத்த தீர்மானம் எடுத்ததாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
'ரெலி' கிராம், ஒன்றினை அனுப்புவதற்கு ரெலிகொம் நிறுவனத்திற்கு ரூபா 74.42 சதமும் தபால் திணைக்களத்துக்கு 95 ரூபா 40 சதமும் செலவாகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் கணனி பாவனைகு காரணமாக தனிநபர்கள் மின்னஞ்சலூடாகவே முக்கிய தகவல்களை பரிமாற்றம் செய்து வருகின்றனர். எனவே தான் 'ரெலி கிராம்' சேவைக்கு பதிலாக 'ரெலி மெயில்' சேவை வழமைக்கு கொண்டுவரப்படவுள்ளது எனவும்
அமைச்சர் குறிப்பிட்டார்.
நன்றி:தினகரன்
No comments:
Post a Comment