தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 10 Apr 2025

30 September 2013

'டைட்டானிக்' கப்பலின் பிணக் குவியல்:ஒரிஜினல் புகைப்படம் ஏலம்

லண்டன், செப்.30-



இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சொகுசு கப்பலான
'டைட்டானிக்' தனது முதல் பயணத்தின்
போதே நியூயார்க் நகருக்கு செல்லும் வழியில்
15-4-1912 அன்று கடலில்
மூழ்கி ஜலசமாதியானது. வட அட்லாண்டிக் பெருங்கடலில் இந்த கோர விபத்து நேர்ந்த
போது டைட்டானிக் கப்பலில் 2 ஆயிரத்து 224
பயணிகள் இருந்தனர்.
கப்பல் இரண்டாக பிளந்ததால் ஆயிரக்
கணக்கானவர்கள் கடல் நீரில் மூழ்கி உடல்
உறைந்து பரிதாபமாக பலியாகினர். 710 பேர் மட்டுமே மீட்பு படகுகளின் மூலம் உயிர்
தப்பி நியூயார்க் நகருக்கு வந்து சேர்ந்தனர்.
இந்த விபத்தில் பலியானவர்களின் பிரேதங்கள்
உரிய மரியாதையுடன் சிறப்பான முறையில்
அடக்கம் செய்யப்பட்டதாக
நேற்று வரை கூறப்பட்டு வந்தது. ஆனால், இந்த கூற்றை பொய்ப்பிக்கும்
வரலாற்று சிறப்புமிக்க அரிய புகைப்படம்
சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நீரில் மூழ்கி இறந்த பயணிகளின்
பிணத்தை சாக்கு மூட்டைகளில்
கட்டி குவித்து வைத்திருக்கும் காட்சியும், இரண்டு கடற்படை சிப்பாய்கள்
சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட
ஒரு பிரேதத்தை அனாயசமாக
கொண்டு வந்து கீழே போடும் காட்சியும் இந்த
அரிய புகைப்படத்தில்
பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 100 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்களின்
பார்வைக்கு வந்துள்ள இந்த
வரலாற்று சிறப்புமிக்க புகைப்படம் அடுத்த
(அக்டோபர்) மாதம் 19ம்
தேதி ஏலத்திற்கு வருகிறது.
இந்த புகைப்படம் ஒரு மிகப்பெரிய சோக வரலாற்றுடன் தொடர்புடையது என்பதால் சுமார்
5 ஆயிரம் பவுண்டுகள்
வரை விலை போகலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி:மாலைமலர்

No comments:

Post a Comment