தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

26 September 2012

5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மக்கொன அல் ஹஸனியாவின் மூன்று மாணவர்கள் சித்தி

 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று உத்தியோகபூர்வமாக வெளியிடபட்டது .
எமது பாடசாலைஅல்-ஹஸனியா M.V.த்தில் 
இருந்து மூன்று மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர்.
தினகரன் இணயத்தளத்தில் இன்று வெளியிடப்பட்ட செய்தியை
தொடர்ந்து வாசிக்கவும் .

புலமைப்பரிசில் முடிவுகள் நேற்று வெளியாகின: தேசிய ரீதியில் 196 புள்ளிகளுடன் இருவர் முதலாமிடம்; 3ம் இடத்தில் கந்தானை மாணவி.

  தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டன. www.doenets.lk என்ற பரீட்சைத் திணைக்களத் தின் இணைய தளத்தில் நேற்று உள்ளடக்கப் பட்டிருந்ததுடன் காலை 10.00 தொடக்கம் கொழும்பு சுற்றுப்புறப் பாடசாலைகளுக்கு பரீட்சை பெறுபேறு கள் அனுப்பி வைக்கப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ. எம். என். ஏ. புஷ்பகுமார தெரிவித்தார். வெளியிடப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் 2 மாணவர்கள் முதலாம் இடத்தையும், 1 மாணவன் மூன்றாம் இடத்தையும், 8 மாணவர்கள் நான்காம் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



   இதனடிப்படையில் காலி ரிச்மன்ட் கல்லூரி மாணவன் கிசார எஸ். கொடித்துவக்கு மற்றும் தலாத்து ஓயா கனிஷ்ட வித்தியாலய மாணவி
 ஆர். எம். ஏ. உபேக்ஷா மதுவந்தி ஆகிய இருவரும் தேசிய ரீதியில் 196 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தையும், கந்தானை ரிலாஹுல்ல, செவன்த்டே அட்வென்டிஸ் உயர்பாடசாலை மாணவி டபிள்யு. எம். ஏ. ஆதித்யா பண்டார விக்ரமசிங்க 195 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் தட்டிக் கொண்டுள்ளார். இதேவேளை, கம்பஹா கோத்தமி கனிஷ்ட வித்தியாலய மாணவன் ஏ. எல். தினேத் சங்கலான அமரசிங்க, ஹொரன தக்ஷிலா கனிஷ்ட பாடசாலை மாணவன் சந்து அனுசர ஜயலத், காலி சங்கமித்த மகளிர் மகா வித்தியாலய மாணவி செவ்னி அமனேத்மி ஜாகொட, அம்பலங்கொட, தர்மசோக மகா வித்தியாலய மாணவன் ஜே. கே.செனிரு ருவித், குருநாகல், மலியதேவி மகளிர் மகா வித்தியாலய மாணவி இ. ஐ. எம். நிராலி ஹசேலா இதிரிசிங்க, குருநாகல் மலியதேவி ஆதர்ஷ மகா வித்தியாலய மாணவன் ஆர். எம். தரிந்து நிமேஷ் பண்டார ரத்னாயக்க, தம்புத்தேகம ஆரம்ப பாடசாலை மாணவன் டி. எம். சந்துன் கல்ஹார திஸாநாயக்க மற்றும் மாத்தளை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மாதிரி முன் பாடசாலை மாணவன் டி. எம். உதித்த சந்தருவன் விஜேரட்ண ஆகிய மாணவ, மாணவிகள் 194 புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இம்முறை நடைபெற்ற 2012 ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி நாடு முழுவதிலும் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 3 இலட்சத்து 10 ஆயிரத்து 329 மாணவ, மாணவிகள் தோற்றியி ருந்தனர். இவர்களது பரீட்சைப் பெறுபேறுகள் சுமார் 28 நாட்களுக்குள் வெளியிடப்பட்டமை விசேட அம்ச மாகும். இதேவேளை, வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில் பிரபல பாடசாலைகளுக்கு மாணவ, மாணவிகளை சேர்த்துக்கொள்ளுதல் மற்றும் புலமைப் பரிசில் பெற்றுக்கொள்வதற்கு தகுதியானவர்களை மாவட்ட ரீதியில் பெற்றுக் கொள்வது தொடர்பான வெட்டுப்புள்ளிகளும் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளன.


 இதனடிப்படையில், தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கான அதிகூடிய வெட்டுப்புள்ளியாக 149ம் ஆகக் குறைந்த வெட்டுப்புள்ளியாக 140 என்றும், சிங்கள மொழி மூலமான பாடசாலைகளுக்கான அதிகூடிய வெட்டுப் புள்ளியாக 152 ம் ஆகக் குறைந்த வெட்டுப் புள்ளி 143 என்றும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைக்கு தோற்றிய மாணவ, மாணவிகளில் எவரேனும் ஒருவர் தனது விடைத்தாள் மீள் திருத்தத்திற்கு விரும்பின் அக்டோபர் 15 ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை அதிபர்கள் ஊடாக விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேவேளை, மாவட்ட ரீதியில் வெளியிடப்பட்ட வெட்டுப்புள்ளிகள் மற்றும் அதனைவிட கூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவ, மாணவிகளே புலமைப் பரிசில் பெற்றுக் கொள்ளவும், பிரபல பாடசாலைகளில் இணைந்து கொள்ளவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்த அவர், இது தொடர்பான முழுமையான அறிவுறுத்தல்கள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைத்துள்ள பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான ஆவணங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஸாதிக் ஷிஹான்

Thanks.thinakaran.lk

No comments:

Post a Comment