தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

04 September 2012

நம் லேப்டாப் (மடிக்கணினி) இண்டர்நெட்-ஐமொபைல் போன் மற்றும் அருகில் இருக்கும்கணினியில் இலவசமாக பகிர்ந்துகொள்ளஉதவும் மென்பொருள்.

கிராமம் முதல் நகரம் வரை இணைய இணைப்பு இல்லாத இடம் என்று ஏதுவுமில்லை, பெரும்பாலான இடங்களில் அதிவேக இண்டர்நெட் என்று சொல்லக்கூடிய 3G இணைப்பில் இணையம் பயன்படுத்துகிறோம், நாம் பயன்படுத்தும் இண்டர்நெட்-ஐ WIFI அருகில் மூலம் இருக்ககூடிய மொபைல் போன் மற்றும் நண்பர்களின் லேப்டாப் என அனைத்திலும் பகிர்ந்து கொள்ள ஒரு மென்பொருள் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

இலவசமாக இண்டர்நெட் பகிர்ந்து கொள்ள இண்டர்நெட் பகிர்ந்து கொள்ள பல வகையான மென்பொருட்கள் இருந்தாலும் அதில் சில மென்பொருட்கள் தான் முழுமையாக வேலை செய்கிறது, பல மென்பொருட்கள் இண்டர்நெட்-ஐ பகிர்ந்து கொள்ள உதவுவதோடு வைரஸையும் நம் கணினியில் சேர்த்தே கொடுக்கிறது அல்லது Popup தொந்தரவில் விளம்பரங்கள் கொடுக்கிறது. இப்படி எந்தப்பிரச்சினையும் கொடுக்காமல் ஒரு மென்பொருள் இண்டர்நெட்-ஐ பகிர்ந்து கொள்ள
உதவுகிறது. தறவிரக்க முகவரி : www.bzeek.com/ static/index.html இத்தளத்திற்கு சென்று மென்பொருளை இலவசமாக தறவிரக்கி நம் கணினியில் நிறுவிக்கொள்ளவும், விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்திற்கு மட்டுமே இந்த மென்பொருள் துணை புரிகிறது. மென்பொருளை நம் கணியில் நிறுவிய பின் நாம் மொபைல் மூலமாகவோ அல்லது மோடம் மூலமாகவோ அல்லது USB டிவைஸ் மூலமாகவோ எப்படி நாம் இண்டர்நெட் பயன்படுத்தினாலும் நம் இண்டர்நெட்–ஐ அருகில் இருக்கக்கூடிய மற்றொரு லேப்டாப் அல்லது மொபைல் போன் ஐபேட் என அனைத்திலும் ஒரே சொடுக்கில் பகிர்ந்து கொள்ளலாம். இலவசமாக WIfi இண்டர்நெட்-ஐ இனி நம் குழுவில் உள்ளவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளலாம். கண்டிப்பாக
இந்தப்பதிவு மடிக்கணினி வைத்திருக்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
Thanks winmani.com

No comments:

Post a Comment