( அன்னாரின் நினைவு தினம் இன்றாகும் )
‘தேசமான்ய’ எம்.ஏ. பாக்கீர் மாக்கார் இந்த நாட்டின் வரலாற்றில் முக்கிய தடம்பதித்த ஒரு தலைவராவார். ஐக்கிய இலங்கை மீது அசையாத நம்பிக்கை கொண்ட இத்தலைவர், பணத்தை அல்ல, நல்ல மனித உள்ளத் தைத்தான் நிறையச் சம்பாதித்தார். வழக்கறிஞராக, அரசியல்வாதி யாக, நகரசபைத் தலைவராக, அமைச்சராக, பிரதி சபாநாயராக, சபாநாயகராக, ஆளுநராக என்றெல்லாம் பதவிகளை அலங் கரித்த இத்தலைவர், களங்கமற்ற கரங்களைக் கொண்டவர். அல்லாஹ்வுக்குப் பயந்து காரியங் களை ஆற்றி திருப்தி கண்டவர். சிறந்த முஸ்லிமாக இவர் வாழ்ந்தவர். இவற்றுக்கு இடையில் ஒற்றுமையாக நல்லெண்ணத்தை வளர்¡ப்பதில் இவரின் பங்களிப்பு அலாதியானது. நேர்மையான ஓர் அரசியல் பிரமுக ராக இவர் மிளிர்ந்தார். சகலரின் அன்புக்கும் பாத்திரமானார். தமிழ் மொழியை இவர் நேசித்தார். தமிழில் பேசினார். தமிழை வளர்த்தார். கொழும்பில் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார்.
தமிழகத்தில் நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட் டிலும் இவர் பங்குபற்றி தமிழ் மீதான பற்றை உலகுக்கு உணர்த்தினார். ஒருவகையில் வரலாறு பதித்த ஒரு தலைவராகவே இவரை நாம் பார்க்கி றோம். கொழும்பில் கோட்டை பழைய நாடாளுமன்றத்தின் இறுதிச் சபாநாய கரும் இவரே. அவ்வாறே கோட்டே ஸ்ரீஜயவர்தனபுர புதிய நாடாளுமன்றத்திலும் முதலாவது சபாநாயகரும் இவரே. இளைஞர் பரம்பரையின் வளர்ச்சி யில் இவர் அதிக ஆர்வம் கொண்டார். அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னனியை ஸ்தாபித்து முஸ்லிம் வாலிபர்பளுக்கு அரசியல் ரீதியிலும் பல்துறை சேவைகளை வழங்கினார். முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இன்று பலம்வாய்ந்த ஒரு முஸ்லிம் வாலிப அமைப்பாக இயங்கி வருகிறது. வார இறுதி நாட்களை முஸ்லிம் கிராமங்களுக்குச் சென்று கழித்து அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதில் இவர் ஆர்வம் கொண்டு செயற்பட் டார். பின்தங்கிய கிராமங்களுக்கும் அவர் விஜயம் செய்தார். வைத்தியப் பரம்பரையில் வந்த இவர் மருத்துவ ஆலோசனை களையும் வழங்கினார். இஸ்லாமிய யூனானி மருத்துவ முறைக்கும் இவர் புத்துயிர் அளித்தார். தமது உத்தியோகபூர்வ வாசஸ்தல மான ‘மும்தாஜ் மஹாலை’ முஸ்லிம் களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் தளமாக, இடமாக ஆக்கி சமூகப் பணிகளையும் உத்வேகத்துடன் செய்தார். வழக்கறிஞர் தொழிலால் இவர் சம்பாதிக்கவில்லை. தம்மிடம் வழக்குக் காக வருவோருக்குத் தமது பணத்தைக் கொடுத்து உதவும் பண்பினராக அவரை நீதிமன்ற வட்டாரங்கள் பாராட்டின. நாள்தோறும் பாராளுமன்றத்துக்கு செல்வதை வழக்கமாக்கிக் கொண்ட இவர் பாராளுமன்ற ஊழியர்களின் நலன் பேணல் விடயத்திலும் ஆர்வமாகச் செயற்பட்டார். முஸ்லிம் கல்வி மாநாடு மூலம் இவர் கல்விப் பணி செய்தார். கொழும்பு ஸாஹிராவின் ஆளுநராக வும் இவர் சேவை செய்தார். இந்தோனேஷிய ஹஜ் விமானம் இலங்கையில் விபத்துக்குள்ளான போது ஸ்தலத்துக்கு விரைந்த பாக்கீர் மாக்கார் பலநாட்கள் அங்கு நின்று நிவாரணப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டார். முதலாவது உலக இஸ்லாமிய வெகுசனத் தொடர்பாடல் மாநாட்டு க்கு ஜகார்த்தா சென்றிருந்த வேளை பாக்கீர் மாக்காரின் மீது இந்தோனேஷிய முஸ்லிம்கள் வைத்திருந்த பெரும் மதிப்பையும், அன்பையும் நேரில் காண முடிந்தது. கந்தளாய் குளம் உடைப்பெடு த்த போது அங்கும் விரைந்த இவர் நிவாரணப் பணிகளில் முழு மூச்சாக ஈடுபட்டார். கிழக்கில் 1978 இல் சூறாவளி அனர்த்தத்தின் போது பாதிக்கப் பட்ட மக்களுக்காக ‘சதாம் ஹுஸைன்’ மாதிரிக் கிராமத்தை ஈராக் உதவியுடன் அமைத்துக் கொடுத்ததும் இந்தத் தலைவர் தான்! முஸ்லிம்களை ஊடகத் துறையில் ஆர்வம் கொள்ளச் செய்த இவர் தனது சொந்தப் பணத்தைப் போட்டு முஸ்லிம்களுக்கு ஒரு தனிப்பத்திரிகையான தமிழில் ‘உதயம்’ பத்திரிகையையும் ‘ஆங்கி லத்தில்’ ளிதிதீனி பத்திரிகையையும் பல கஷ்டங்களுக்கு மத்தியில் வெளியிட்டார். டயானா இளவரசியின் திருமண நிகழ்வில் பங்குபற்ற அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவும் பிரதமர் ரணசிங்க பிரேமதாசவும் லண்டன் சென்ற போது நாட்டின் பதில் ஜனாதிபதியாக பாக்கீர் மாக்கார் பதவி வகித்தார். இலங்கையில் முஸ்லிம் ஒருவர் பதில் ஜனாதிபதியாகப் பதவி வகித்தா ரென்றால் அது பாக்கீர் மாக்கார் மட்டுமே. மர்ஹ¥ம் பாக்கீர் மார்காரின் அந்தரங்கச் செயலாளராக நீண்டகாலம் பதவிவகித்த இன்றைய பாராளுமன்றப் பேரவை உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பீ. இத்தலைவரின் பணி களில் எல்லாம் முழுமையான பங்களி ப்பு நல்கி அவருக்கு ஒத்துழைப்பு வழங்கியதை மறக்கவே முடியாது. இந்தத் தலைவரின் இலட்சியக் கனவுகளை நனவாக்கும் நோக்குடன் “தேசிய ஐக்கியத்துக்கான பாக்கீர் மாக்கார் மன்றம்’ பாடுபட்டு வருகிறது. மர்ஹ¥ம் பாக்கீர் மாக்காரின் புதல் வரும், முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் இதன் தலைவராக இருந்து பணி புரிகிறார். இம்மன்றம் தொடர்ந் தும் பல நல்ல பணிகளை முன்னெ டுக்க வேண்டும். பாக்கீர் மாக்காரின் நற்பணிகளை வளரும் இளைஞர் தலைமுறையினருக்கு நற்பாடங்களாக ஊட்டவேண்டும்.
(எப். எம். பைரூஸ்)
நன்றி தினகரன்

No comments:
Post a Comment