தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

01 September 2012

சாம்சங் அபராதம்: 30 வண்டியில் காசுகள் (நம்பாதீங்க!)

இணையத்தில் தொழில்நுட்ப செய்திகளை வாசித்து வருபவர்களுக்கு ஆப்பிள்(Apple), சாம்சங் (Samsung) நிறுவனங்களுக்கிடையே நடந்து வரும் "பேடன்ட் யுத்தம் (Patent War)" பற்றி தெரிந்திருக்கும். அதில் சமீபத்தில் ஆப்பிள் சாதனங்களை காப்பியடித்ததற்காக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பு 5800 கோடி ரூபாய்) அபராதம் சாம்சங் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்டது.

இது பற்றிய கற்போம் தளத்தின் பதிவு: ஆப்பிள் Vs சாம்சங் - 5800 கோடி வழக்கு

 இது தொடர்பாக இணையத்தில் பரபரப்பாக ஒரு வதந்தி பரவிவருகிறது. அது,

சாம்சங் நிறுவனம் ஆப்பிளுக்கு கட்ட வேண்டிய ஒரு பில்லியன் அமெரிக்க டாலரை ஐம்பது சென்ட் காசுகளாக (நம்மூர் ஐம்பது பைசா போன்று) முப்பது வண்டிகளில் (Trucks) அனுப்பியுள்ளது. அபராதம் விதித்த நீதிமன்றம் "அதை எப்படி செலுத்த வேண்டும்" என்றெல்லாம் சொல்லவில்லை என்பதால் சாம்சங் இப்படி செய்துள்ளது. இதனால் ஆப்பிள் நிறுவனத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது உண்மையல்ல, வதந்தி ஆகும். மேலும், சாம்சங் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட அபராதம் இறுதியானது இல்லை. இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. அப்போது இந்த அபராதம் மூன்று மடங்காகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

உண்மையில் சாம்சங் இப்படி அனுப்பினால் அதை நிராகரிப்பதற்கு அமெரிக்க சட்டத்தின்படி ஆப்பிளுக்கு உரிமை உள்ளது.

இந்த வதந்தி முதலில் El Deforma என்னும் தளத்தில் வந்தது. இதனை யாஹூ தளம் வெளியிட்டதால் இணையத்தில் வேகமாக பரவியது.

நம்மூரில் ஒரு பழமொழி சொல்வார்கள்,

"உண்மை செருப்பு அணிவதற்குள், வதந்தி ஊர் சுற்றிவிட்டு வந்துவிடும்"
THANKS BLOGGERNANBAN 

No comments:

Post a Comment