தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

29 September 2012

'இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' திரைப்படத்தின்இயக்குனர் கைது!

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி படம் எடுத்த அமெரிக்கரான நகோலா பேசலி நகோலாவை அமெரிக்கப் பொலிஸார் திடீரென கைது செய்துள்ளனர். உலகம் முழுவதும் இஸ்லாமியர்களிடையே பெரும் கொந்தளிப்பையும், கொதிப்பையும் ஏற்படுத்தியது நகோலா இயக்கிய 'இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' என்ற திரைப்படம். இதில் நபிகள் நாயகத்தையும், இஸ்லாமியர்களையும் இழிவுபடுத்தும் வகையில் சித்தரித்திருந்தார் நகோலா. இதனால் இஸ்லாமியர்கள் கடும் கொந்தளிப்பையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர். லிபியாவில் அமெரிக்க தூதரகத்தைத் தாக்கி அங்கிருந்த அமெரிக்க தூதரைக் கொலை செய்தனர். உலக நாடுகள் முழுவதிலும் அமெரிக்காவுக்கு எதிராக பெரும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் வெடித்தன. இந்நிலையில் சர்ச்சைக்குரிய நகோலாவை அமெரிக்க பொலிஸார் திடீரென கைது செய்துள்ளனர். ஆனால் இவ் விவகாரம் தொடர்பாக அவர் கைது செய்யப்படவில்லை. கடந்த 2010ம் ஆண்டு அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு வேறொரு வழக்கி�் 21 மாத சிறைத் தண்டனை விதித்திருந்தது. இருப்பினும் பின்னர் அது புரேபஷனாக அது மாற்றப்பட்டது - அதாவது காத்திருப்புக் காலம். இந்த காத்திருப்புக் காலத்தின்போது அவர் இணையதளத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றத்திற்காக தற்போது அவரைக் கைது செய்துள்ளனராம். காத்திருப்புக் காலத்தின்போது அவர் ஐந்து ஆண்டுகளுக்கு நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல், கனணீ, இணையதளம் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்த து. அதை மீறியதற்காகத்தான் தற்போது கைது செய்துள்ளனர். மற்றபடி இஸ்லாமை இழிவுபடுத்திய குற்றத்திற்காக அவரைக் கைது செய்யவில்லை அமெரிக்க காவல்துறை. நகோலாவை கைது செய்த பொலிஸார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது. thanks:virakesari

No comments:

Post a Comment