இஸ்லாத்துக்கு எதிராகவும் முஹம்மது நபியை அவமதிக்கும் விதமாகவும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு சமூக இணையத் தளங்களில் வெளியிடப்பட்ட Innocence of Muslims என்ற திரைப்படத்துக்கு எதிர்ப்புத்தெரிவித்து உலகளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக அமெரிக்க தூதரகங்களை இலக்கு வைத்ததாக அவ்வார்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.
முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் வகையில் வடிவமைக்குட்பட்டிருக்கும் குறித்த திரைப்படமானது அவர்களின் உணர்வுகளைப் பெரிதும் பாதித்துள்ளது.
"குற்றமற்ற முஸ்லிம்' என்ற தமிழ் பொருள்படும் இத்திரைப்படத்தை தயாரித்து இயக்கியவர் சாம் பசில். இது அவரது உண்மையான பெயரல்ல. இரண்டுமணித்தியாலங்கள் நீளமான இத்திரைப்படத்தில் 59 நடிகர்கள் தமது பங்களிப்பை வழங்கியுள்ளதுடன் திரைக்குப் பின்னாலான தொழில்நுட்ப உதவிகளுக்கு 49 தொழில்நுட்பவியலாளர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த வருடமே திரைப்பட வேலைகள் அனைத்தும் நிறைவடைந்திருந்தபோதும் அது வெளியிடப்படவில்லை. மாறாக அதன் முதல்பதிப்பு லொஸ் ஏன்ஜலீஸில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட சிலருக்கு மட்டும் காண்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அதன் அரபு வடிவம் எகிப்தின் தொலைக்காட்சி அலைவரிசையொன்றில் (அல் நாஸ்) காட்டப்பட்டதையடுத்தே பிரச்சினை பூதாகரமாக எழுந்தது.
சுமார் 14 நிமிடம் நீளம் கொண்ட இத்திரைப்படத்தின் முன்னோட்டம் சமூக இணையத்தளங்களான யூரியூபிலும் பேஸ்புக்கிலும் மக்கள் அபிமானத்தைப் பெரும் நோக்கோடு வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே உலக முஸ்லிம்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
சுமார் 5 மில்லியன் டொலர் செலவில் 100 இற்;கும் மேற்பட்ட இஸ்ரேலிய யூதர்களின் நிதியுதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தில் முஹம்மது நபியை இழிவுபடுத்தும் பல காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதுடன் முஸ்லிம்களை மிகக் கேவலமானவர்களாகவும் மோசமானவர்களாகவும் சித்தரிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இத்திரைப்பட நடிகர்களின் ஆதங்கம்
இத்திரைப்படத்தில் நடித்தவர்கள் திட்டமிடப்பட்டுதாம் தவறாக வழிநடத்தப்பட்டிருப்பதாகவும் ஏமாற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
சுமார் 2000 வருடங்களுக்கு முன்னரான எகிப்திய போர் வீரனின் கதையைச் சொல்லும் திரைப்படம் என்ற ரீதியிலேயே தமக்கு அறிவுரைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் நடிப்புக்கு பின்னரான பின்னணி வசனங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆர்ப்பாட்டங்கள்
இணையத்தளங்களில் வெளியான இத்திரைப்படத்தின் முன்னோட்டங்களை பார்வையிட்ட மக்கள் உடனடியாக தமது எதிர்ப்பினை வெளியிட ஆரம்பித்தனர். தூனிசியா, எகிப்து, லிபியா, சூடான், ஆப்கானிஸ்தான், பலஸ்தீன், யேமன், சிரியா, மொரோக்கோ, கட்டார், அவுஸ்திரேலியா,இந்தியா என ஆர்ப்பாட்டங்கள் உலகின் நாலா பாகங்களிலும் தொடர்கின்றன.
லிபிய ஆர்ப்பாட்டமும் தூதுவர் படுகொலையும்
குறித்த திரைப்படம் தொடர்பிலான தகவல்களால் லிபியாவில் மிக உக்கிரமான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. தற்போதும் அங்கு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
பெங்காசி நகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க துணை தூதரகத்தை சுற்றிவளைத்து ரொக்கட் மற்றும் கைகுண்டு தாக்குதல்களையும் மேற்கொண்டனர். இதனால் தூதரகத்தில் பணியிலிருந்த லிபியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் கிறிஸ்தோபர் ஸ்டீபன் உள்ளிட்ட நான்கு அமெரிக்க அதிகாரிகள் உயிரிழந்தனர். பாதுகாப்பு வலயத்துக்கு உட்பட்ட குறித்த பிரதேசத்திலேயே இச்சம்பவம் பதிவானது. இதற்கு மேலதிகமாக அமெரிக்க தேசிய கொடிகள் எரிக்கப்பட்டும் திரைப்பட இயக்குனரின் உருவ பொம்மையை எரித்தும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அமெரிக்காவின் நடவடிக்கை
லிபியாவில் அமெரிக்க தூதுவர் கொல்லப்பட்டதையடுத்து அமெரிக்கா தனது கவனத்தை லிபியா மீது திருப்பியுள்ளது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இச்சம்பவத்துக்கு பாரிய கண்டனம் வெளியிட்டுள்ளார். அத்துடன் மத்திய கிழக்கை சுற்றியுள்ள பிரதேசத்தில் இருக்கும் சுமார் 95 போர்க்கப்பல்களில் விஷேட திறன்படைத்த கப்பல்களான இரு கப்பல்களை அமெரிக்கா பெங்காகி நோக்கி அனுப்பியுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி, இது லிபியர்களுக்கெதிரான நடவடிக்கையோ முஸ்லிம்களுக்கு எதிரானதோ அல்ல எனத் தெரிவித்தார்.
திரைப்படத்துக்கு ஐ.நா.வும் கண்டனம்
உலக நாடுகளில் கொந்தளிப்பு நிலையை உருவாக்கியுள்ள இத் திரைப்படத்துக்கு ஐ.நா.வும் தனது கண்டனங்களை வெளியிட்டுள்ளது. இது குறித்து ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் விடுத்துள்ள அறிக்கையில், வெறுப்பைத் தூண்டக்கூடிய இத்திரைப்படம் கண்டிக்கத்தக்கது. மதவெறியையும் இரத்தக் கலரியையும் தூண்டும் விதமாக திட்டமிட்டு இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனினும் இதனைத் தொடர்ந்து உருவாகும் வன்முறைகளை ஆதரிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகை பேச்சாளர் ஜே.கேர்னி
இது ஒரு துக்ககரமான சம்பவம். அத்துடன் சிக்கலான காலப்பகுதியும் கூட. குறித்த அவமதிப்பு முற்றுமுழுதாக திரைப்பட தயாரிப்பாளர் உள்ளிட்ட குழுவினையே சாரும். இதற்கு அமெரிக்க அரசோ மக்களோ எவ்வாறு பொறுப்பாக முடியும்? எனகேள்வியெழுப்பியுள்ளார்.
முடிவு என்ன?
இஸ்லாத்துக்கு எதிரான இத்திரைப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்டவர்கள் அனைவரும் அமெரிக்கர்கள் என்பதாலேயே அமெரிக்க தூதரகங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் இலக்கு வைக்கப்பட்டன. அவ்வாறெனில் அதற்கு அமெரிக்க என்ன செய்யப் போகிறது?
இன்று எல்லா நாடுகளிலும் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான நடவடிக்கைகளால் அமெரிக்காவுடன் முறுகளில் உள்ள இஸ்லாமிய நாடுகளின் உறவு மேலும் சிக்கலை நோக்கியே பயணிக்கும்.
- எம்.எப்.எம்.பஸீர்THANKS:VIRAKESARI

No comments:
Post a Comment