தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

21 September 2012

இறைவனின் ஜோதியை (இஸ்லாத்தை) தங்கள் வாயால் ஊதி அணைக்க நினைக்கும் மூடர்கள்!

கடந்த ஷில நாட்களாக அமெரிக்காவில் உள்ள ஒருவன் இஸ்லாத்தையும், இறைதூதர் நபி(ஸல்)அவர்களையும், இழிவுபடுத்தி எடுத்த படத்தைபற்றி பேசப்படுகிறது. இணையதளங்களிலும், பத்திரிக்கைகளிலும் வழக்கம்போல முஸ்லிம்கள் சகிப்புத்தன்மையில்லாவர்கள், இஸ்லாத்தில் கருத்து சுதந்திரம் கிடையாது என்று சிந்தனைக்கோ, அறிவுக்கோ வேலை கொடுக்காமல் இஸ்லாத்தை, முஸ்லிம்களைப்பற்றி மீடியாக்கள் சொன்ன அளவுகோளை மட்டும் வைத்துக்கொண்டு எழுதிதள்ளுபவர்களை இதுவரை நாம் பார்த்தோம் இனியும் பார்க்கலாம்.

 அனால் இஸ்லாம் கடுமையான எதிர்ப்பில்தான் வளர்ந்தது என்பதை இஸ்லாத்தை படிக்கும் எவரும் உணர்ந்துக்கொள்வார்கள். இதை நாம் கடந்த காலத்தில் அமெரிக்கவர்த்தக மையம் தாக்கப்பட்டபிறகு அதற்கு முன்பிருந்ததைவிட இஸ்லாமிய வளர்ச்சி அதிகமானதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்: தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். 9:32 இப்படி இவர்கள் விமர்சனம் செய்வதினால் இஸ்லாம் என்றால் என்ன? முஹம்மது நபி என்றால் யார்? அவர் என்ன போதித்தார் என்று தெரியாத மக்களுக்கும் இனி இஸ்லாம் பற்றிய செய்தி விறைவாக சென்றடையும், அதன் மூலம் இஸ்லாம் மேலும் அதிகமாக வளரும் என்பதில் கொஞ்சமும் சந்தேகம் கிடையாது. இனிமேல் படித்த, எல்லாம் அறிந்த மேதாவிகள் என்று தங்களைகூறும் அறிவீனர்கள் இதுபோன்ற நேரங்களில் அதை எதிர்க்கும் முஸ்லிம்களை விமர்சனம் செய்வதுதான் இங்கு வேடிக்கை. காரணம் முஹம்மது நபி(ஸல்)அவர்களை பொறுத்தவரை அவர்களின் வாழ்கை ஒரு கண்ணாடி குடுவை போன்றதாகும். அந்தரங்க வாழ்க்கை முதல் பகிரங்க வாழ்க்கை வரை அனைத்தும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது அதை யாரும் படிக்கலாம், பின்பற்றலாம், ஆனால் இந்த அறிவீனர்கள் பின்பற்றும் கொள்கைகள் அப்படியா? யாரும் பின்பற்றவும் முடியாது ஏன் அதையாரும் படிக்க கூட தகுதியற்றவை. இந்த லட்சனத்தில் அவர்கள் இறைவனின் தூதர் நபி(ஸல்)அவர்களை விமர்சனம் செய்ய தகுதி அற்றவா்கள உலகத்தலைவர்களும் அன்னல் நபி(ஸல்)அவர்களும் ஐந்து ஒப்பீடுகள். முதல் ஒப்பீடு: இந்த உலகத்தில் உள்ள மற்ற தலைவர்கள் தங்களுக்கு கூஜா தூக்கவும், போஸ்டர் ஒட்டவும், கட்அவுட் வைக்கவும் தொண்டர்களைத்தான் உறுவாக்கினார்கள். ஆனால் முஹம்மது நபி(ஸல்)அவர்கள் தான் வரும்போது எழுந்துகூட நிற்க கூடாது என்று சொல்லி தன்மான தோழர்களை சஹாபாக்களை உறுவாக்கினார்கள். தான் வரும்போது தனக்காக எழுந்துகூட நிற்ககூடாது என்று சொன்ன முஹம்மது நபி எங்கே? தான்செய்த ஊழல்காரணமாக பிடிபட்டு ஜெயிலுக்கு சென்றால் தனக்காக தீ குளிக்குமாறு தொண்டர்களை மறைமுகமாக தூண்டும் இந்த கேடுகெட்டவர்கள் எங்கே? இரண்டாம் ஒப்பீடு: இந்த ஒழுக்கம் கெட்ட தலைவர்கள்தங்களின் பகிரங்க வாழ்கையைத்தான் மற்றவர்களுக்கு காட்டினார்கள், சொன்னார்கள். இவர்களின் அந்தரங்க வாழ்கை யாருக்காவது தெரியுமா? யாருக்கும் தெரியாது. காரணம் அத்தனை ஒழுக்கம் கெட்டதாக வெளியில் சொல்ல தகுதி இல்லாததாக மோசடிகள் நிறைந்ததாகவும், லஞ்சலாவன்யம் நிறைந்ததாகவும் இருக்கிறது. ஆனால் முஹம்மது நபி(ஸல்)அவர்கள் அவர்கள் எப்படி தங்களின் பகிரங்க வாழ்வை மக்களுக்கு சொன்னார்களோ அதுபோலவே தங்களின் அந்தரங்க வாழ்கையையும் மக்களுக்கு சொன்னார்கள், வெளியில் எப்படி இருந்தார்கள் என்று பதியப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளதோ அதுபோலவே அந்தரங்க வாழ்வில் அவர்கள் தங்கள் குடும்பத்தில் எப்படி நடந்தார்கள், எப்படி உணவருந்தினார்கள், எப்படி உறங்கினார்கள், என்பதும் பாதுகாக்கப்பட்டுள்ளது. ‘ஒரு முறை முஹம்மது நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள் உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே!’ முஹம்மது நபி(ஸல்)அவர்கள் எப்படி வீட்டில் குடும்பத்தார்களிடம் நடந்துகொண்டார்கள் என்று அவர்களின் மனைவிமார்களே சொல்லி அது பாதுகாக்கப்பட்டுள்ளது. இறைவனின் தூதர்(ஸல்)அவர்களையும் அவர்களின் கொள்கையையும் பலதாரமணத்தையும் விமர்சிக்கும் இவர்கள் தன் தலைவன் இன்றைய இரவு பொழுதை யாருடன் கழித்தான், அவனுடைய வாழ்வில் தன் மனைவியோடு, குழந்தைகளோடு, பெற்றோரோடு, சகோதர சகோதரிகளோடு உறவினர்களோடு எப்படி நடந்தான் என்று இவர்களுக்கு தெரியுமா? ஆளாளுக்கு ஒரு தொலைக்காட்சியும், பத்திரிக்கையும் வைத்துக்கொண்டு தனக்கு சாதகமாக செய்திகளை மிகைப்படுத்தி சொல்லும் மீடியாக்களை நம்பி வாழும் இந்தகேடுகெட்ட விமர்சகர்கள் அல்லாவின் தூதரை விமர்சனம் செய்ய தகுதி அற்றவர்கள். மூன்றாம் ஒப்பீடு: இவர்கள் பின்பற்றும் தலைவர்கள் ஒரு சமூகத்துக்கோ, அல்லது ஒரு சமூகத்தின் ஒரு பிரிவுக்கோதான் தலைவன். ஒரு ஊரில் தலைவனாக இருப்பவன் பக்கத்து கிராமத்து மக்களை கூடஅதிகாரம் செய்ய கட்டளையிட தகுதி அற்றவன். ஆனால் அன்னல் நபி(ஸல்)அவர்கள் இந்த உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் தலைவர். உலகம் முழுமைக்கும் இந்த குர்ஆனை கொண்டு ஆட்சி செய்தவர்கள் அவர்களின் ஒரு ஒருஅசைவும் உலக மக்களால் பின்பற்றப்படும் உன்னத தலைவர் ஆவார்கள். நான்காம் ஒப்பீடு: இவர்கள் பின்பற்றும் தலைவர்கள் ஒரு துறைக்குத்தான் தலைவன். அரசியலுக்கு தலைவனாக இருப்பவனுக்கு ஆன்மீகம் தெரியாது அந்த அரசியலிலும் மக்களிடம் ஓட்டு பொறுக்கி அவர்களிடம் ஊழல் செய்வதை தவிர வேறு எதுவும் தெரியாது. ஆன்மீகத்துக்கு தலைவன் என்பவன் அதிலும் அரைவேக்காடாக இருப்பதை பார்க்கிறோம். அதை சொல்லி பெண்களின் கற்பை சூரையாடும் காம வெறியர்கள் தான் தன்னை ஆன்மீக தலைவன் என்கிறார்கள். அன்னல் நபி(ஸல்)அவர்கள் ஆன்மீகம் மட்டும் அல்ல மனித வாழ்வுக்கு தேவையான அனைத்து துறைக்கும் அவர்கள் தலைவராக இருந்தார்கள். ஆன்மீகத்துக்கு எப்படி தலைவரோ அதுபோல ஆட்சி அதிகாரத்தின் தலைவராக ஜனாதிபதியாக இருந்தார்கள், போர் நடந்தால் அதில் தலைமையேற்று வழிநடத்தினார்கள், வட்டியை ஒழித்து பொருளாதாரத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார்கள், அத்தோடு ஒழுக்கமிக்கவராகவும் இருந்தார்கள். மேலும் தன்னை பின்பற்றும் மக்களையும் ஒழுக்கமிக்கவர்களாக உறுவாக்கினார்கள். இன்று ஒன்றுமில்லாதவனாக இருப்பவன் அரசியலில் தலைவனாக வந்தபிறகு சிறிது காலத்திலேயே கோடீஸ்வரனாக மாறிவிடுகிறான். ஆனால் அன்னல் நபி(ஸல்)அவர்கள் வசதியாக இருந்து தலைவர் ஆனபிறகு ஏழையாக மரணித்தார்கள்.அதில் முக்கியமாக சொல்லவேண்டுமானால். ‘தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் அரசாங்க சொத்துக்கள் ஹராம் (தடுக்கப்பட்டவை) என்று கூறினார்கள். “ஒன்றும் அறியாத தன் பேரன் அரசாங்கத்துக்கு நன்கொடையாக வந்த பேர் ஈத்தம்பழத்தை எடுத்து வாயில் வைத்தபோது துப்பிவிடு அரசாங்க சொத்துக்கள் நமக்கு ஹராம் (தடுக்கப்பட்டது) என்று உனக்கு தெரியாதா?“ என்று போதனை செயத உத்தமர். இப்படி இன்று எந்த தலைவனாவது கூறமுடியுமா? கூறியதாக வரலாறு உன்டா? ஐந்தாம் ஒப்பீடு: இந்த தலைவர்கள் ஒரு ஒரு குறிப்பிட்ட காலம் தான் தலைவர்கள், அதுவும் இந்த உலகத்துக்கு மட்டும்தான். உயிர்வாழும் வரைதான் இவர்கள் வழிகாட்டுவதாக சொல்வார்கள். ஆனால் அன்னல் நபி(ஸல்)அவர்கள் எப்படி இந்த உலக வாழ்வில் முஸ்லிம்களுக்கு தலைவரோ அதுபோல முஸ்லிம்கள் மறனித்தாலும் நாளை மறுமையிலும் அவர்கள் தான் எங்கள் தலைவர். மனிதன் மரணித்த பிறகு உள்ள வாழ்க்கைக்கும் வழிகாட்டி உள்ளார்கள். எனவே இறைவன் கொடுத்த பகுத்தறிவை இவர்கள் பயன்படுத்தட்டும் சிந்தித்து சரியான பாதையை ஏற்று நடக்கவேண்டும் என்பதே நமது ஆசை. மாறாக இப்படிப்பட்ட வீண் விமர்சனங்கள் செய்வதால் இஸ்லாத்துக்கு எந்த நஷ்டமும் ஏற்படாது என்பதை உணரட்டும். ஆனால் முஸ்லிம்கள் இஸ்லாத்தையும், முஹம்மது நபி(ஸல்)அவர்களையும் தங்களின் உயிரைவிட மேலாக மதிக்கிறார்கள் எனவே இப்படிப்பட்ட கேடு கெட்ட விமர்சனங்கள் வரும்போது அதை எதிர்ப்பது, அதை அமைதியன முறையில் கண்டிப்பது முஸ்லிம்களின் மீது கடமையாகும் என்பதை இவர்கள் உணரவேண்டும். சரியான பாதையில் இருப்பவர்கள் சரியான கொள்கையில் இருப்பவர்கள் இப்படிப்பட்ட நேரத்தில் அதை கண்டுகொள்ள கூடாது இது கருத்து சுதந்திரம்என்பது அவர்களின் அரைவேக்காட்டு கொள்கைகளுக்கு வேண்டுமானால் பொருந்தும். அது சத்தியமான கொள்கைக்கு பொருந்தாது. நன்றி:niduri.com

No comments:

Post a Comment