தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks
Showing posts with label நபிகளாரை அவமதிக்கும் திரைப்படம். Show all posts
Showing posts with label நபிகளாரை அவமதிக்கும் திரைப்படம். Show all posts

24 September 2012

தலைநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவமதிக்கும் விதமாகவும் முஸ்லிம்கள் தமது உயிரிலும் மேலாக நேசிக்கும் முஹம்மது (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் விதமாகவும் தயாரிக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்துக்கெதிராக இன்றும்
தலைநகரில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று  நடைபெற்றது.
நபவியா தரீக்காவினர் ஏற்பாடு செய்திருந்த இம்   மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியில்  ஆயிரக்கனக்கானவர்கள் கலந்துகொண்டனர்.
பட இணைப்பு 

21 September 2012

இலங்கையின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டம்

ஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவமதிக்கும் விதமாகவும் முஸ்லிம்கள் தமது உயிரிலும் மேலாக நேசிக்கும் முஹம்மது (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் விதமாகவும் தயாரிக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்துக்கெதிராக இன்று புனித ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து இலங்கையின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்களும் கண்டனப்பேரணிகளும் இடம்பெற்றன. இதோ சில பட இணைப்புககள்.




பேருவல

















இறைவனின் ஜோதியை (இஸ்லாத்தை) தங்கள் வாயால் ஊதி அணைக்க நினைக்கும் மூடர்கள்!

கடந்த ஷில நாட்களாக அமெரிக்காவில் உள்ள ஒருவன் இஸ்லாத்தையும், இறைதூதர் நபி(ஸல்)அவர்களையும், இழிவுபடுத்தி எடுத்த படத்தைபற்றி பேசப்படுகிறது. இணையதளங்களிலும், பத்திரிக்கைகளிலும் வழக்கம்போல முஸ்லிம்கள் சகிப்புத்தன்மையில்லாவர்கள், இஸ்லாத்தில் கருத்து சுதந்திரம் கிடையாது என்று சிந்தனைக்கோ, அறிவுக்கோ வேலை கொடுக்காமல் இஸ்லாத்தை, முஸ்லிம்களைப்பற்றி மீடியாக்கள் சொன்ன அளவுகோளை மட்டும் வைத்துக்கொண்டு எழுதிதள்ளுபவர்களை இதுவரை நாம் பார்த்தோம் இனியும் பார்க்கலாம்.

20 September 2012

நபிகளாரை அவமதிக்கும் திரைப்படம்: உலகெங்கும் கொதித்தெழுந்த முஸ்லிம்கள்

செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி. அவ்வளவு சீக்கிரம் இதனை யாரும் மறந்து விட முடியாது. அது அமெரிக்க வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளி. இன்னும் கொஞ்சம் தெளிவாய் சொல்வதானால் அமெரிக்காவின் துக்கமான நாள் என்று கூட சொல்லலாம். ஆம், இவ்வருடமும் செப்டம்பர் 11 ஆம் திகதி நடந்த சம்பவம் அது.யாரும் அதனை எதிர்ப்பார்த்திருக்க முடியாது. வழமையான கலவரங்கள் கூட குறைவாக பதிவாகிக் கொண்டிருந்த மத்திய கிழக்கில் திடீரென ஆர்ப்பாட்டங்கள். யார் ஏற்பாடு செய்தார்கள்? எதற்காக ஒழுங்குபடுத்தினார்கள்? என்பதையெல்லாம் அறிவதற்குள் பாரிய சேதங்கள். கூடவே சில உயிர்களையும் குடித்து விட்டது. எகிப்து மற்றும் லிபியா, இவை இரண்டும் அரபு வசந்தத்தின் தென்றலை அனுபவித்து வரும் நாடுகள். இவை இரண்டு நாடுகளிலும் தான் ஆர்ப்பாட்டம் தீவிரமாய் ஆரம்பித்தன.