தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

19 September 2012

தலை நகரை அதிர வைத்த தவ்ஹீத் ஜமாஅத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்

[பட இணைப்பு ]
September 19, 2012
முஸ்லிம்கள் உயிருக்கு மேலாக மதிக்கும்
நபி (ஸல்)அவர்களையும் இஸ்லாத்தையும்
இழிவுபடுத்தும் விதம் திரைப்படம் எடுத்த
ஜெர்ரி ஜோன்ஸ் என்ற கிறிஸ்தவ பாதிரியையும்
அதை அங்கீகரித்த அமெரிக்க அரசையும்
வெளியிட்ட யூடியுப் தளத்தையும் கண்டித்த
 ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக
இன்று பி.ப 1.30 மணியளவில் கொழும்பில்
மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டம்
கொழும்பு கோட்டை ரெயில்வே நிலையத்திற்கு
முன்பாக ஆரம்பமாகி ஆண்கள், பெண்கள் மற்றும்
 குழந்தைகள் சகிதம் தாய்மார்கள் உட்பட
பல்லாயிரக் கணக்கானோருடன் அமெரிக்க
தூதரகத்தை நோக்கி நகர்ந்தது. அனைவரும்
நபிகளார் மீதுள்ள உண்மையான
பாசத்தை வெளிப்படுத்தினர். இடையில் போலிஸ்
வழிமறித்து நிறுத்த அவ்விடத்தில் கோசங்களை
 எழுப்பி முஸ்லிம்களின்
கோபத்தை வெளிப்படுத்தினர்.

  தவ்ஹீத்   ஜமாஅத்தின் கட்டுக் கோப்பையும்
ஒழுக்கத்தையும் பார்த்த போலிஸ் அதிகாரிகள்
தடையை நீக்கி அமெரிக்க தூதரகம் செல்ல
அனுமதித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட
அனைவரும் பதாதைகளை ஏந்திய வன்னம்
கடுமையான கோசங்களை எழுப்பிக்
கொண்டு காலி முகத்திடலுக்கு அருகில்
நெருங்கம் போது மீண்டும் போலிஸாரினால்
தடுக்கப்பட்டனர். அவ்விடத்திடத்திலும்
ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்டுக்கோப்புடன்
நடந்து கொண்டதினால் அமெரிக்க தூதரகத்தின்
உள்ளே செல்ல 5 பேருக்கு மாத்திரம்
அனுமதி வழங்கினர். அங்கு சென்ற ஜமாஅத்தின்
உயர்நிலை நிர்வாகிகள் அமெரிக்க
தூதரகத்தின் அலுவலக
பொருப்பு அதிகாரியிடம் கண்டனங்களை
 தெரிவித்ததோடு யூடியுபில்
இருந்து அப்படம் நீக்கப்பட வேண்டும்
என்று எச்சரிக்கையாக
சொல்லி விட்டு வந்து அங்கு நடந்ததை
கூடியிருந்த மக்களுக்கு எடுத்துரைத்தனர்.
அதைத் தொடர்ந்து கண்டன உரை தமிழ் மற்றும்
 சிங்கள மொழிகளில் நடைபெற்றது. தமிழில்
ஜமாஅத்தின் துணைத் தலைவர் சகோ. பர்ஸான்
அவர்களும் சிங்களத்தில் ஜமாஅத்தின் பொதுச்
செயலாளர் சகோ. அப்துர் ராஸிக் அவர்களும்
கண்டன உரையாற்றினர். அதன் போது அமெரிக்க
கொடிஇ ஜெர்ரி ஜோன்ஸ் மற்றும் ஒபாமாவின்
போட்டோக்களும் பொம்மைகளும் தீயிட்டுக்
கொழுத்தப்பட்டது. அங்கு கூடியிருந்த
மீடியாக்களுக்கள் தலைமை நிர்வாகிகளிடம்
பேட்டி கண்டனர். அத்தோடு கண்டப்
பேரணி கலைந்தது. அல்ஹம்துலில்லாஹ்!





















உபயம்:sltjweb

No comments:

Post a Comment