தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

21 January 2020

வானொலி புகழ் அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி காலமானார்



வானொலி புகழ் அறிவிப்பாளரும் ஓய்வுபெற்ற அதிபருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி நேற்று (20) திங்கட்கிழமை இரவு 11.30ற்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காலமானார்.
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமாகியுள்ளார்.
அன்னாரின் ஜனாஸா இன்று (21) அதிகாலை 2.30 மணியளவில் தேசிய வைத்தியசாலையிலிருந்து பாணந்துறை, கொஸல்வத்தையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணியளவில் பாணந்துறையிலிருந்து கல்முனைக்கு கொண்டு செல்லப்படும் என அவரது மகனான MJM மின்ஹாஜ் தெரிவித்தார்.
இளம் ஊடகவியலாளர்கள் பலரை உருவாக்கிய ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் மறைவு சமூகத்திற்கும் ஊடகத்துறைக்கும் பேரிழப்பாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என் எம் அமீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இவர் வானொலி மற்றும் தொலைக்காட்சி அறிவிப்பளாராக திகழ்ந்ததோடு ஆசிரியராக, அதிபராக என்று கல்வித்துறையிலும் சேவையாற்றியுள்ளார். பாணந்துறை ஜீலான் மத்திய மஹா வித்தியாலயத்தின் ஓய்வுபெற்ற அதிபருமாவார்.
சிரேஷ்ட ஒலிபரப்பாளருமான அல் ஹாஜ் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களது ஜனாஸா சாய்ந்தமருது உஸ்மான் வீதியில் அமைந்துள்ள இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து அக்பர் பள்ளிவாசல் மையவாடியில் இன்று பிற்பகல் (மஃரிப் தொழுகையின் பின்னர்) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

Source:Thinakaran

No comments:

Post a Comment