'இனசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்'
திரைப்படத்துக்கு எதிர்ப்புத்
தெரிவித்து லண்டனிலுள்ள கூகுள்
அலுவலகத்துக்கு முன்னால் ஆயிரக்கணக்கானோர்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
'யூடியூப்' இணையத்தளத்திலிருந்து 'இனசன்ஸ் ஒப் முஸ்லிம்' திரைப்படத்தின்
காணொளிகளை அகற்றுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள்
இதன்போது வலியுறுத்தியிருந்தனர். "இது கருத்துச் சுதந்திரம் அல்ல, அதற்கு ஓர்
எல்லையுண்டு; நபிகள்
நாயகத்தை அவமானப்படுத்தும்
எந்தவொரு நடவடிக்கையையும் நாம்
அனுமதிக்கப்போவதில்லை" என ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டோர் கோஷம் எழுப்பியுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம் சுமார் 4
மணித்தியாலங்கள் வரை நீடித்துள்ளது.
சுமார் 10,000 பேர் வரை இவ் ஆர்ப்பாட்டத்தில்
கலந்துகொண்டதாக முஸ்லிம்
அமைப்பொன்று தெரிவித்துள்ளது. எனினும் சுமார் 3000 பேர் வரையிலேயே இதில்
ஈடுபட்டதாக லண்டன் பொலிஸார்
தெரிவிக்கின்றனர்.
கூகுள் குறித்த காணொளிகளை உடனடியாக
அகற்றாவிடின் பிரித்தானியா பூராகவும் இவ்
ஆர்ப்பாட்டத்தினைத் தொடரப் போவதாக இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
'இனசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' திரைப்படம் மற்றும்
அதன் காணொளிகள் உலகம் பூராகவும் பெரும்
சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இதன்காரணமாக லிபியாவில் இடம்பெற்ற
ஆர்ப்பாட்டத்தில் அந்நாட்டுக்கான அமெரிக்கத்
தூதுவரும் கொல்லப்பட்டார்.
மேலும் பல உலகநாடுகளில் அமைந்துள்ள
அமெரிக்கத் தூதரகங்களும்
தாக்குதலுக்குள்ளாகின. அண்மையில் இதே காரணத்துக்காக பாகிஸ்தான்
யூடியூப் உட்பட 20,000 இணையத்தளங்களைத்
தடை செய்தமை குறிப்பிடத்தக்கது.
thanks:virakesari
No comments:
Post a Comment