ஒலிபரப்பு அலைவரிசைகளும்
தமது பண்பலை வானொலி அதிர்வெண்களை நவம்பர்
முதலாம் திகதி முதல் மாற்றியமைக்கவுள்ளன. தெளிவான ஒலி கிடைப்பதற்கு தடையாக உள்ள தொழில்நுட்பப் பிரச்சினைகளைக் குறைப்பதற்காக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு, வானொலி அதிர்வெண்களை மாற்றியமைத்துள்ளது. இலங்கையிலுள்ள 45 பண்பலை ஒலிபரப்பு அலைவரிசைகளும் 87.5 தொடக்கம் 108 வரையான மெகா ஹேட்ஸ் வீச்சில் ஒலிபரப்பு செய்துவருகின்றன. இப்போது இரண்டு
அலைவரிசைகளுக்கிடையில் 100 கிலோ ஹேட்ஸ் அதிர்வெண் வித்தியாசம் உள்ளது. இந்த வித்தியாசம் 300 கிலோ ஹேட்ஸாக அதிகரிக்கும்போது இலங்கையின் எந்தப் பகுதியிலும் தெளிவான ஒலியை பெறக்கூடியதாக இருக்கும் என ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment