தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

02 November 2012

மழைக்கால சளி, தலைவலி போக என்ன சாப்பிடனும் தெரியுமா?

மழை என்பது சந்தோசமான விசயம்தான் என்றாலும் அழையா விருந்தாளியாக நோய்கள் வந்து ஒட்டிக்கொள்ளும். சின்ன தலைவலி, ஜலதோசத்திற்கு கூட மருத்துவரிடம் ஓடாமால் வீட்டில் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே மழைக்கால நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள். என்ன பொருட்கள் சாப்பிட்டால் நோய்களில் இருந்து தப்பிக்கலாம் என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன். விரவி மஞ்சள் மழைக்காலத்தில் தலையில் நீர் கோர்த்துக்கொண்டு தலைவலி ஏற்படும். இதனை தவிர்க்க விரவி மஞ்சளை விளக்கெண்ணையில் நனைத்து அதை விளக்கில் காட்டி சுடவேண்டும். அப்போது கரும்புகை கிளம்பும். இந்த புகையை மூக்கின் வழியாக உரிஞ்சினால் தலைவலி, நெஞ்சுவலி போன்றவை நீங்கும். மஞ்சள்தூள் ஆவி பிடிங்க ஜலதோஷத்தின் போது உள்ள தலைவலி நீங்க: சிறு கரண்டியில் நீர் ஊற்றி ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டுக் கலக்கி அதை அடுப்பில் சூடேற்றவும். அப்போது வெளிவரும் ஆவியை பிடித்தால் தலைவலி குணமாகும். துளசி இலை ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கு 2 இலவங்கம் சேர்த்து மைபோல அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். பனங்கிழங்கு மழைக்கால ஜலதோஷம் நீங்கவும், காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கு சிறந்த மருந்து. பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி அத்துடன் பனங்கல் கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும். மழைக்கால கசாயம் மழைக்காலத்தில் நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு தொல்லை ஏற்படுத்தும். இந்த சளி தொந்தரவு நீங்க தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கசாயம் செய்து சாப்பிடலாம். சளியினால் ஏற்படும் இறைப்பு நீங்கும். மூச்சுத்திணறலுக்கு முசுமுசுக்கை முசுமுசுக்கை இலையை அரித்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும். கரிசலாங்கன்னி, அரிசி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட மூச்சு இறைப்பு குணமாகும். தலைப்பாரம் நீங்க இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து சூடாக்கி வெதுவெதுப்பாக அதை தலையில் நெற்றியில் பற்று போட தலையில் உள்ள நீர் இறங்கி தலைபாரம் குணமாகும். நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும். சாம்பிராணி புகை போடுங்க ஒரு கரண்டியில் நெருப்புத் துண்டுகளை எடுத்து அதன் மீது சிறிது சாம்பிராணி, மஞ்சள் தூள் ஆகியவைகளை போட்டுப் புகை வரவழைத்து, அந்தப்புகையை மூக்கினால் உள்ளிழுத்தால் சளித் தொல்லை நீங்கும். தும்மல் தீர்க்கும் தூதுவளை தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும் சுண்டைக்காயை வத்தல் செய்து, அதை மிக்ஸியில் அரைத்து பவுடரை சாம்பார், குருமா போன்ற எல்லா குழம்புகளிலும் 1/2 கரண்டி மசால் பவுடருடன் சேர்த்து சாப்பிட எந்தவித சளிகபம் இருந்தாலும் குணமாகும். Thanks:new jaffna.com

No comments:

Post a Comment