தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

19 November 2012

தலைக்கு 'டை' பயன்படுத்துபவர்களா....? (Dye என்ற வார்த்தை Die என்பது)

'டை அடிப்பது சகஜமாகிவிட்ட இக்காலத்தில் வயது முதிர்ந்து நரையை மறைக்கவும், இளையோர் நாகரீகத்துக்காகவும் விதவிதமாக டை அடிப்பது எல்லோருக்கும் சகஜமாகிவிட்டது. ''டை பயன்படுத்துவதால்... அலர்ஜியில் ஆரம்பித்து, ஹார்மோன் சமச்சீரின்மை, புற்றுநோய் வரை ஆபத்து நேரலாம்'' என்கின்றனர் மருத்து ஆராய்ச்சியாளர்கள், ''தொடர்ந்து உபயோகிக்கும்போது, நம் தலைமுடியுடன் மட்டும் அது
வினைபுரிவதில்லை. உடலிலும் சென்று ரத்தத்திலும் கலக்கிறது. இரண்டு நாட்கள் வரை தங்கும் செமி டெம்ப்பரரி டை; 15 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை நீடித்திருக்கும் பெர்மனன்ட் டை; ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை நீடிக்கும் பெர்மனன்ட் டை என எல்லா டைகளுமே ரசாயன தயாரிப்பு என்பதுதான் பிரச்னையே! டைகளில் இருக்கும் பினலின்டயமின், அமோனியா, ஹைட்ரஜன் பெராக்ஸைடு போன்ற பல ரசாயனப்
பொருட் கள்... நம் ஹார்மோன்களைச் சரியாக செயல் படவிடாமல் தடுக்கின்றன. இதன் காரணமாக வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு, ஒவ்வொரு வரின் உடல்நிலையைப் பொறுத்து ஒவ்வொரு விதமான பாதிப்பு ஏற்படும். அலர்ஜி, உடம்பின் எதிர்ப்பு சக்தி குறைவது, கான்சர், சிறுநீர்ப்பை கேன்சர் என்று பல பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மீசைக்கு டை அடிப்பதும் அதிகமாகவே இருக்கிறது. அப்படி
அடிக்கும்போது சுவாசத்தின் வழியாக உள்ளே சென்று நுரையீரலை பாதிக்கக்கூடும் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை. அதேசமயம், மீசைக்கு கீழே இருக்கும் தோல் வழியாகவும் அது உடலில் ஊடுருவும் என்பதை மறக்கவேண்டாம்'' என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள், ''செம்பருத்தி, மருதாணி போன்ற இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி, நரையிலிருந்து தப்பிக்க
முயற்சிக்கலாம். எல்லாவற்றையும்விட, நரை முடியை அதன் அழகோடு ஏற்றுக்கொள்வது மிகமிகச் சிறந்தது!'' என்று எளிமையான வழிகாட்டுகின்றனர் மருத்துவர்கள். அழகுக்கலை நிபுணர்கள் தெரிவிக்கையில், ''டை என்ற வார்த்தையே இப்போது உபயோகத்தில் இல்லை. 'டை' (Dye) என்ற வார்த்தையின் உச்சரிப்பு, இறப்பு (Die) என்பதையும் குறிப்பதால்... 'கலரிங்' (Coloring) என்கிற சொல்லுக்கு உலகம் மாறிவிட்டது. பொதுவாக...
'டை'யில் மூன்று வகை உண்டு மெட்டாலிக் டை, ஹெர்பல் டை, அனிலைன் டை. இதில் சின்ன சின்ன பாக்கெட்டுகளில் மலிவுவிலையில் கிடைக்கும் டை... மெட்டாலிக் வகையைச் சார்ந்தது. இதில் ஏகப்பட்ட கெமிக்கல்கள் சேர்ந்திருக்கும். இதை உபயோகித்தால், அப்படியே முடியில் தங்கிவிடும். 'ப்ளீச்' செய்ய முடியாது. இது உடலுக்கு தீங்கையே ஏற்படுத்தும். இதற்கு மாற்றாக வந்த ஹெர்பல் டை... அவுரி விதை
மற்றும் ஹென்னா கலந்து வந்தாலும், கூடவே கெமிக்கலும் கலக்கப்பட்டே வருவதால்... இதுவும் உடலுக்கு கேடு ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இப்படிப்பட்ட டைகள் எல்லாம் முடியில் மட்டும் இல்லாமல்... உடலுக்குள்ளும் ஊடுருவி சென்று விடுவதுதான் ஆபத்துகளுக்கு அழைப்பு வைத்துவிடுகிறது. மூன்றாவது வகையான 'அனிலைன் கலர்' எனப்படும் டை, அமோனியா கலக்காமல் வந்துள்ளது. இதையும்கூட
எல்லோருக்குமே உடனே நாங்கள் போட்டுவிடுவதில்லை. பேட்ச் டெஸ்ட் என்கிற டெஸ்ட் செய்வோம். அதாவது, காதுக்கு பின்புறம் இதை அடித்துவிட்டு, வீட்டுக்கு போகச் சொல்லி விடுவோம். 24 மணி நேரத்துக்குக்குள்... அரிப்பு, தடிப்பு எந்த பிரச்னைகளும் வராமல் இருந்தால் மட்டுமே... அதை அவர்களுக்கு கலரிங் செய்ய பயன்படுத்துவோம்'' என்கின்றனர் அழகுக்கலை நிபுணர்கள். ''அலர்ஜி உள்ளவர்கள்,
சிம்பிளாக மருதாணியை தலையில் தடவ சொல்லிவிடுவோம். இயற்கையான கலரிங் பொருளான மருதாணியில் எந்தத் தீங்கும் இல்லையே!'' ஆக, இனி டை அடிக்கும் முன்... யோசியுங்கள்!

thanks:lankasri.com

No comments:

Post a Comment