ஊர் செய்திகள்
date
15 December 2011
யுனெஸ்கோவில் ஏற்றப்பட்டது பலஸ்தீனக் கொடி: அமெரிக்க, இஸ்ரேல் முகங்களில் கரி
இது பலஸ்தீனத்தின் வெற்றியாக மட்டுமன்றி இஸ்ரேல், அமெரிக்காவிற்கு பாரிய அடியாகவும் கருதப்படுகின்றது.
அவ்விரு நாடுகளின் எதிர்ப்பினையும் மீறியே பலஸ்தீனம் யுனெஸ்கோவின் உறுப்பு நாடாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதன் போது கருத்துத் தெரிவித்துள்ள பலஸ்தீன ஜனாதிபதி இது தமக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியென தெரிவித்துள்ளார்.
06 December 2011
1974 ல் மலையகத்தை அதிர வைத்த விமான விபத்து
1974 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி இரவு 10மணி 10 நிமிடம் நோட்டன் பிரிட்ஜ் பகுதியை மட்டுமல்லாது அப்பிரதேசத்தை அண்டிய ஏனை ய பகுதி மக்களையும் பீதியடைச்செய்த சம்பவம் அது.
ஆம் இந்தோனேசியாவிலிருந்து 185 ஹஜ் பயணிகளை ஏற்றிக்கொண்டு மக்கா நோக்கி பயணித்த Martin Air Dc 8ரக பயணிகள் விமானம் நோட்டன் ஏழுகன்னியர் மலையில் மோதி சிதறிய நாள் அது. சோகம் என்னவெனில் விமானமோட்டிகள் உட்பட 191 பேரும் அதே இடத்தில் உடல் சிதறிபலியாகினர்.
26 November 2011
தெற்கு அதிவேக நெடுஞ்சாலைப் பயணம் எவ்வாறு அமையும்? (காணொளி இணைப்பு)
இலங்கையில் முதன்முதலாக அமைக்கப்பட்டுள்ள இந்த தெற்கு அதிவேக நெடுஞ்சாலை எதிர்வரும் 27 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்ப டவுள்ளது. ஜப்பானிய சமாதானத் தூதர் யசூசி அகாசி மற்றும் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி கே.அரசரட்ணம் உட்பட அதிதிகள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஆம், புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த வீதி மக்களுக்கு எவ்வாறான பயனுடையதாக இருக்கும் என்றும் இதனால் ஏற்படும் விளைவுகள் எவ்வாறானதாக இருக்கும் என்று சற்று நோக்குவோமாயின்,
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை கொழும்பு கொட்டாவையிலிருந்து காலி பின்னதுவ வரையான சுமார் 100 கிலோமீற்றர் தூரத்தைக்கொண்டதாக அமைந்துள்ளது. கொட்டாவ, கஹதுட்டுவ, கௌனிகம, தொடங்கொட, லெவன்துவ, குருந்துகஹ, நாயபமுல்ல ஆகிய இடங்களைக் கடந்து பின்னத்துவ செல்கின்றது.
காலியிலிருந்து 100 கிலோமீற்றர் பாதுகாப்பாக பயணிக்க முடியாத எந்தவொரு வாகனங்களுக்கும் இவ்வீதியில் பயணிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த வீதியில் செல்வதற்காக அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் அனைத்தும் நுழைவாயிலில் கட்டணம் செலுத்திய பின்னரே உள் நுழைய முடியும்.
இவ் வீதியினூடாக கொட்டாவையிலிருந்து காலி நகருக்கு சுமார் ஒரு மணித்தியாலத்திற்குள் செல்லக்கூடியதாக இருக்கும் என்று போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி கே.அரசரட்ணம் தெரிவித்தார்.
முச்சக்கர வண்டி, துவிச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள், உழவு இயந்திரம் போன்ற குறிப்பாக 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க முடியாத வாகனங்கள் மற்றும் அதிகளவு புகையை வெளியிடும், முறையாக நிறுத்தற் கருவிகள் (பிரேக்) செயற்படாத வாகனங்கள் வெளிச்ச, சமிக்ஞை விளக்குகள் முறையாக இல்லாத அனைத்து வாகனங்களுக்கும் இவ்வீதியில் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக பாதசாரிகள் எவரும் நடந்து செல்வதற்கு முற்றாக தடைவிதிக்கப் பட்டுள்ளது. அவ்வாறு மீறி நடந்து செல்பவர்களுக்கு எதிராக 5ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வீதியில் மணித்தியாலத்திற்கு 120 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பயணிக்க முடியும் என்பதுடன் இந்த வீதியில் பயணிப்பதற்காக 8 இடங்களில் மாத்திரமே நுழைவாயில்கள் அமைக் கப்பட்டு பயணிக்கும் தூரங்களுக்கான கட்டணங்கள் நான்கு வகையாக அறவிடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதன்படி, கொட்டாவையிலிருந்து காலி பின்னதுவ வரை பயணிக்கும் வாகனங்கள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு 400 ரூபா 700 ரூபா, 1500 ரூபா மற்றும் 2000 ரூபா என்ற அடிப்படையில் கட்டணங்கள் அறவிடப்படவுள்ளன. இதில் கார், கெப் ரக வாகனம், 9 ஆசனங்கள் வரையுள்ள சகல வாகனங்கள், எக்ஸல்2 மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 400 ரூபாவும் 9 ஆசனங்களுக்கு அதிகமான வேன் மற்றும் 33 ஆசனங்கள் கொண்டுள்ள சகல பஸ் வண்டிகளுக்கும் 700 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.
அத்தோடு 22 க்கும் அதிகமான ஆசனங்களைக் கொண்ட பஸ், 6 சக்கர வாகனங்கள் மற்றும் எக்ஸல் 3 ஐ உடைய மோட்டார் லொறி, டிரெக் வாகனம் ஆகியவற்றுக்கு 1500 ரூபாவும் அறவிடப்படவுள்ளது. இதேவேளை ஒன்றாக இணைக்கப்பட்ட கோச் 2 உடன் பயணிக்கும் பஸ், எக்ஸல் 4 மற்றும் அதற்கு அதிகமான வாகனங்களுக்கு 2000 ரூபா அறவிடப்படுமென வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இவ்வாறு அறிவிடப்படும் கட்டணங்கள் வாகனங்கள் பயணிக்கும் தூரத்திற்கு ஏற்றவாறு அறவிடப்படும். இந்த வீதிகளில் பொது மக்கள் நுழையாத வகையில் வீதியின் இரண்டு பக்கமும் வேலிகள் போடப்பட்டுள்ளதுடன் வீதி தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
எனினும் பொதுமக்களின் பார்வைக்காக கடந்த 19, 20 ஆம் திகதிகளில் வீதி திறந்து வைக்கப்பட்டதுடன் பல விளையாட்டு மற்றும் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 27 ஆம் திகதி இந்த வீதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படுவதையடுத்து சட்டவிரோதமாக வாகனங்கள் செல்லுமாக இருந்தால் தண்டப்பணம் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சிறிய ரக வாகனங்கள் உள்நுழைவதற்கு அனுமதியளிக்கப்பட்டாலும் எதிர்காலத்தில் இந்த வீதியூடாக பயணிக்கத் தகுதியுடைய பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவது குறித்தும் ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதியே சிறிய ரக வாகனங்களுக்கு மாத்திரம் அனுமதியளிக்கப்படுவதாக போக்குவரத்துப்பிரிவுப் பொலிஸ் பொறுப்பதிகாரி கே. அரசரட்ணம் தெரிவித்தார்.
தெற்கு அதிவேக மார்க்கத்திற்குள் பிரவேசிப்பதற்கும் வெளியேறுவதற்கும் எட்டு இடங்கள் காணப்படுவதுடன் அவை கொட்டாவை, கஹதுடுவ, களனிகம, வெலிபன்ன, குறுந்துஹா, தாபம, தொடங்கொடை, பத்தேகம மற்றும் பின்னதுவ ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வீதியின் போக்குவரத்துக் கடமைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 500 உத்தியோ கத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விஷேடமாக பயிற்சியளிக்கப் பட்டவர்களே இவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தெற்கு அதிவேக வீதியை ஹம்பாந்தோட்டை வரை விஸ்தரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கான மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் நிர்மல் கொத்தலாவல ஊடகவியலாளர் மாநாடொன்றின் போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இரண்டாம் கட்டத்தின் கீழ் அடுத்த வருடம் மாத்தறை வரையில் இந்த தெற்கு அதிவேக வீதி நெடுஞ்சாலை நிர்மாணிக்கப் படவுள்ளது. காலி முதல் மாத்தறை வரையான தெற்கு அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகள் 2013 ஆம் ஆண்டு நிறைவடையவுள்ளன.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் எதிர்காலத்தில் ஆங்காங்கே சிசிடி எனப்படும் பாதுகாப்புக் கமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்களை குறைத்தல், வேகம் என்பவற்றை கண்காணி க்கவென விசேட போக்குவரத்து பொலிஸ் பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொட்டாவை தொடக்கம் பின்னதுவ வரையான 8 நுழைவாயில்களிலும் பாதுகாப்பு கமரா பொருத்தப்படவுள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கண்காணிப்புப் பணிப்பாளர் பி.டி.கே.பண்டார தெரிவித்தார்.
இதேவேளை, பாதுகாப்புக் கமராக்களை அவதானிக்க சிறப்புப் பிரிவு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தெற்கு அதிவேக வீதியில் இடம்பெறும் போக்குவரத்துக் குற்றச் செயல்களை இனங்காண பாதுகாப்பு கமராக்கள் பெரிதும் துணைபுரியும் என பண்டார கூறியுள்ளார்.
2003 ஆம் ஆண்டு இதன் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இந்த வீதியில் 22 பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நிதி உதவிகளை சர்வதேச ஜப்பான் வங்கி,ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் மற்றும் ஏனைய நிறுவனங்கள் வழங்கியுள்ளன.
இந்த வீதியினூடாக ஆகக் குறைந்த வேகமாக 80 கி.மீ வேகத்திலும், ஆகக் கூடியதாக 120 கி.மீ வேகத்திலும் பயணிக்கலாம். புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேற்படி வீதியில் சொகுசு பஸ் சேவையொன்றை நடத்த இலங்கை போக்குவரத்துச் சபை திட்டமிட்டுள்ளதாக சபையின் தலைவர் எம்.டி பந்துசேன அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இம்மாதம் 27 ஆம் திகதி இந்த வீதி திறந்து வைக்கப்படும் என்றும் அன்று முதல் இரண்டு பஸ் வண்டிகள் காலியிலிருந்து கொட்டாவ வரை சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ள பஸ் வண்டிகள் ஒரு மணித்தியாலத்தில் காலியிலிருந்து கொட்டாவ வரை பயணிக்கும் எனவும் அதற்கான கட்டணம் தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனவும்அவர் தெரிவித்தார். அவை சொகுசு பஸ்கள் என்பதால் பஸ்ஸின் அனைத்து ஆசனங்களிலும் பயணிகள் பாதுகாப்புப் பட்டிகளை அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் மேலும் குறிப்பிட்டார். 22 பாலங்கள் காணப்படுகின்றது.
இவ்வீதியில் வாகனம் ஓட்டும் சாரதிகள் கையடக்கத்தொலைபேசி பாவித்தால் அவர்களுக்கு 500 ரூபா அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி திடீரென விபத்துக்கள் ஏற்பட்டால் 1969 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் பாதுகாப்புக் கடமைகளில் போக்குவரத்துப்பிரிவு பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டிருப்பர் என்று போக்குவரத்துப்பிரிவுப்பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார். அது மாத்திரமன்றி மழைக்காலங்களில்வேகத்தை கட்டுப்படுத்திச் செல்ல வேண்டும் என்பதுடன் மிகவும் அவதானமாக செல்லுமாறும் கேட்கப்படுகின்றனர்.
பாதுகாப்பு சேவைகளை வழங்குவதற்கென விஷேடமாக வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒன்பது கார்களும் 06 மோட்டார் சைக்கிள்களும் ஈடுபடுத்தப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
Thanks:virakesari
15 November 2011
குழந்தைகளுக்கென ஒரு விசேட உலாவி
அதிவேகமாக வளர்ச்சியடைந்துவரும் இணையத்திலிருந்து பல்வேறு நன்மைகளைக் குழந்தைகள் பெற்றுக்கொள்கின்றனர்.
அவர்களின் அறிவாற்றலைப் பெருக்க இது உதவுகின்றபோதிலும் இணையத்தில்தீமைகளும் இருக்கவே செய்கின்றன.
பொதுவாக தமது குழந்தைகள் இணையத்துடன் இணைந்து இருக்கும் போது பெற்றோர் ஆபாச தளங்கள், தேவையில்லாத வன்முறைத் தளங்கள், செட்டிங் போன்றவற்றில் சென்று விடக்கூடாது என அவர்கள் அதிக அக்கறை கொள்வார்கள்.
எனினும் அவர்களால் தமது குழந்தைகளை எந்நேரமும் கண்காணித்துக்கொண்டு இருக்க முடிவதில்லை.
எனவே தங்களது குழந்தைகளின் பாதுகாப்பான இணைய உபயோகத்திற்கு உறுதி அளிக்கும் உலாவியொன்றினைப்பற்றியதே இச்செய்தி.
குழந்தைகளுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள இவ்வுலாவியின் பெயர் Kidzui.
இதை உருவாக்கியவர்கள் பல மில்லியன் தளங்கள், வீடியோப் படங்கள், ஒளிப்படங்கள் போன்றவற்றை இணைத்திருக்கிறார்கள்.
அதுவும் நிர்வாகிகளால் பலமுறை சோதனை செய்யப்பட்டு பாதுகாப்பானவை என்ற பின்னரே இதில் இணைக்கப்பட்டிருக்கின்றது.
இதில் குழந்தைகள் பாதுகாப்பான காணொளிகளை மட்டுமே பார்வையிடமுடியும்.
மேலும் ஏராளமான விளையாட்டுகளும் இதில் உள்ளன.
இதில் முதலில் பெற்றோர்கள் தங்களது கணக்கை உருவாக்கி குழந்தைகளைக் கட்டுப்படுத்துவதற்கான (Parental Controls) அமைப்பை செய்து கொள்ள முடியும்.
இதன்படி உங்கள் குழந்தைகள் இவ்வுலாவியை மட்டுமே பயன்படுத்தக்கூடியவாறும், கணனியில் வேறு எதனையும் செய்யமுடியாதவாறும் செட்டிங்களை மேற்கொள்ளமுடியும்.
பாதுகாப்பான இவ்வுலாவியை நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கென தரவிறக்கம் செய்துகொள்ளுங்களேன்!
தரவிறக்கம் செய்ய: http://www.kidzui.com/download
Thanks:virakesari
13 November 2011
அல்குர்ஆன் விளக்கம்
எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, நல்லதைச் செய்து நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார் (இருக்கின்றார்?)
நன்மையும் தீமையும் சமமாக மாட்டா. நீர் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக்கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்குமிடையே பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பர் போன்று ஆகிவிடுவார்.
பொறுமையாக இருந்தார்களே, அவர்களைத் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள். மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்களைத் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்.
உங்களுக்கு ஷைத்தானிடத்திலிருந்து ஏதேனும் ஊசலாட்டம் (தீயதைச் செய்ய) உம்மைத் தூண்டுமாயின், உடனே அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக் கொள்வீராக! நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியேற்பவன், நன்கறிபவன். (41: 3336)
12 November 2011
மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்!
காலை உணவு
காலையில் உணவு உண்ணாமல் இருப்பதன் மூலம் ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
அதிகமாகச் சாப்பிடுவது
மிக அதிகமாகச் சாப்பிடுவதன்மூலம் இரத்த நாளங்கள் இறுகி மூளையின் சக்தி குறைந்து போகிறது.
புகை பிடித்தல்
புகை பிடிப்பதால் மூளை சுருக்கமும் அல்ஸைமர்ஸ் வியாதி வருயதற்கு காரணமாகிறது
சர்க்கரை சாப்பிடுதல்
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
சுவாசித்தல்
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
தூக்கமின்மை
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
போர்வையால் மூடிக்கொண்டு தூங்குவது
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
நோயுற்ற காலம்
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
மூளைக்கு வேலை
மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது,மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
பேசாமல் இருப்பது
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது. உங்க மூளையை இனி நல்லா பாதுகாத்துகோங்க
09 November 2011
Emergency landing of Boeing 767 LOT Polish Airlines in Warsaw Chopin Airport
சில்லுகள் இல்லாமல் விமானத்தை தரையிறக்கிய விமானி!
02 November 2011
அனைவரும் விரும்பும் கட்டண மென்பொருளை இலவசமாகப் தரவிறக்குங்கள் : 6 ஆம் திகதி வரை மட்டுமே சலுகை
எனினும் ஒப்பீட்டளவில் கட்டண மென்பொருட்களின்தரமும், வசதிகளும் செயல்படும் வேகமும் இலவச மென்பொருட்களில்சற்றுக் குறைவே.
இருந்த போதிலும் 49.95 அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள WinX Video Converter Deluxe மென்பொருளை முற்றிலும் இலவசமாக தரவிறக்கும் வசதி பாவனையாளர்களுக்கு வழங்கப்படுகின்றது.
எனினும் இச்சலுகை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை மாத்திரமே. எனவே அனைவரும் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவி பயன்படுத்திக்கொள்ளமுடியும்.
MKV, M2TS, MTS, AVCHD, H.264/MPEG-4 AVC, AVI, MPEG, MP4, WMV, MOV, FLV, RM, RMVB, WebM, Google TV, etc. போன்ற அனைத்து வகையான வீடியோ போர்மட்களிலும் கன்வேர்ட் செய்ய ஏதுவாக உள்ளது.
DVD Burner மற்றும் Youtube Video Downloader போன்ற இதர பயனுள்ள வசதிகளும் இந்த மென்பொருளில் உள்ளது. Windows,Mac பாவனையாளர்கள் இதனை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பில் சென்று இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். மென்பொருளுக்கானLicence Code அந்த தளத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கும் அந்த சீரியல் எண்ணைக் கொடுத்து மென்பொருளின் முழு பதிப்பையும் இலவசமாக 'எக்டிவேட்' செய்து கொள்ளுங்கள்.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய - WinX Video Converter Deluxe.
மேலும் இச்செய்தியை பகிர்ந்துகொள்வதன் மூலம் மற்றவர்களும் இதனைப் பெற்றுக்கொள்ள வழிசெய்திட முடியும்.
குறிப்பு: எதிர்வரும் 6 ஆம் திகதி வரை மட்டுமே இலவசமாக தரவிறக்கம் செய்யமுடியும் மேலும் 10ஆம் திகதிக்குள் 'எக்டிவேட்' செய்து கொள்ளவும் வேண்டும்.
Thanks,virakesari.lk
01 November 2011
ராணி 2ம் எலிசபெத் மறைவை அறிவிப்பதற்கான பயிற்சியை பிபிசி தொடங்கியுள்ளதாக தெரிகிறது.
எலிசபெத் மறைந்தால் அதுபற்றி செய்தி வெளியிடும் முறை பற்றி ஊழியர்களுக்கு பிபிசி பயிற்சி அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து லண்டனில் வெளியாகும் தி சண்டே டைம்ஸ் நாளிதழில் இடம்பெற்ற செய்தி வருமாறு: 2002ம் ஆண்டில் இங்கிலாந்து ராணி (குயின் மதர்) இறந்தபோது அதை இங்கிலாந்து அரசு செய்தி நிறுவனமான பிபிசி வெளியிட்ட விதம் கடும் சர்ச்சைக்கு உள்ளானது.
அனுபவம் வாய்ந்த செய்தி வாசிப்பாளர் பீட்டர் சிசன்ஸ் பழுப்பு நிற கோட், பிரவுன் நிற டை அணிந்து ராணி மறைவை அறிவித்தார். அதுபோன்ற தவறு ஏற்பட்டு விமர்சனத்துக்கு உள்ளாகாமல் இருக்க, ராணி 2ம் எலிசபெத் மறைவை அறிவிப்பதற்கான பயிற்சியை பிபிசி தொடங்கியுள்ளதாக தெரிகிறது.
இதற்கான போலி வீடியோ ஒளிபரப்பி ஊழியர்களுக்கு செய்தி வெளியிட பயிற்சி தரப்படுகிறது. துக்க செய்தியை அறிவிக்கும்போது செய்தி வாசிப்பாளர்கள் அணிய வேண்டிய உடைகள் அலமாரிகளில் வைக்கப்பட்டன. மற்ற நிகழ்ச்சிகள் ரத்து, தேசிய கீதம் ஒலிபரப்பு,வாழ்க்கை வரலாறு வீடியோ ஆகியவை பற்றியும் ஊழியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
ராணி மறைந்தால் 12 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். அதன் பிறகு அவரது உடல் அடக்கம் செய்யப்படும் வரை மட்டுமின்றி அதன் பிறகு சில நாட்களும் காமெடி நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப கூடாது என்றும் பயிற்சி தரப்படுகிறது. இவ்வாறு தி சண்டேடைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
Thanks:dinakaran.com
31 October 2011
The United Nations announced October 31, 2011 as the "Day of 7 Billion."
இதனை உறுதி செய்யும் பொருட்டு இக்குழந்தையின் பிறந்த நேரம் உட்படத் தகவல்கள் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அனுப்பப்படுமென அந்நாட்டு சுகாதார அமைச்சின் செயலாளர் ஹென்ரிக் ஒனா தெரிவித்துள்ளார்.
உலக சனத்தொகை 7 பில்லியன் என்ற எண்ணிக்கையை அடையும் நாளை முழு உலகமே எதிர்பார்த்துக்காத்திருந்தது.
குறிப்பாக 7 பில்லியனாவது குழந்தை யாரென்பது தொடர்பில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவந்தது.
இந்நிலையில் பிலிப்பைஸ் நாட்டின் அரசாங்க வைத்தியசாலையொன்றில் பிறந்த குழந்தையென அந்நாட்டின் அரசாங்கம் தெரிவிக்கின்றது.
டெனிக்கா கமாச்சோ என பெயரிடப்பட்டுள்ள அக் குழந்தை ஞாயிற்றுக்கிழமைபின்னிரவு பிறந்துள்ளது.
இக்குழந்தை பிறந்தவுடன் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் அனைத்தும் அவ்வைத்தியசாலையில் நிரம்பியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இக்குழந்தைக்கு பரிசில்கள் குவிந்து வருவதாகவும், பெற்றோர் கேக் வெட்டி கொண்டாடியதாகவும் கூறப்படுகின்றது.
எனினும் உத்தியோகபூர்வமாக இவ்வறிப்பு வரும் வரை அனைவரும் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks.virakesari.lk
21 October 2011
கடாபி கொல்லப்பட்டார்
'உப்பு அதிகமானால் ஆரோக்கியம் கெடும்'
ஆயுளைக் குறைக்கும் உடல் பருமன்
சென்னையின் நிலைமை
"அதிகமான வைட்டமின்கள் ஆயுளை குறைக்கும்"
மனித ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள் அத்தியாவசியமாக தேவைப்படுகின்றன. ஆனால் அதே வைட்டமின்களை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் ஒருவரின் ஆயுளையே குறைக்கக்கூடிய ஆபத்தான நஞ்சாக அவை மாறுகின்றன என்று அமெரிக்க ஆய்வின் முடிவு குறிப்புணர்த்துகிறது.
ஐம்பது வயது முதல் அறுபது வயதுக்கு இடைப்பட்ட சுமார் முப்பத்தி எட்டாயிரம் அமெரிக்க பெண்களின் மருத்துவ சிகிச்சைமுறைகளை ஆராய்ந்த மருத்துவ ஆய்வாளர்கள், இவர்களில் பெரும்பாலானவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாகவும், ஆனாலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் கூடுதல் வைட்டமின் மாத்திரைகளை இவர்கள் தினசரி உட்கொண்டதாகவும் கண்டறிந்தனர்.
இப்படி தேவைக்கு அதிகமான கூடுதல் வைட்டமின்களை தொடர்ந்து சாப்பிட்டவர்களின் ஆயுட்காலம் அவர்களை ஒத்த மற்றவர்களின் ஆயுட்காலத்தோடு ஒப்பிடும்போது குறைந்து காணப்பட்டதை இவர்கள் அவதானித்தார்கள். இதைத்தொடர்ந்து ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் தங்களின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்காக கூடுதல் வைட்டமின்களை உட்கொள்வது நன்மை பயக்காது என்பதுடன், ஆபத்தாக முடியும் என்றும் மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள்.
குறிப்பாக, பல்வேறு வைட்டமின்களடங்கிய மல்டிவைட்டமின் மாத்திரைகள், போலிக் அமிலம், வைட்டமின் பி 6, மெக்னீஷியம், துத்தநாகம், தாமிரம் மற்றும் இரும்புச்சத்து மாத்திரைகள் ஆகியவை தேவைக்கதிகமாக உட்கொள்ளும்போது ஆயுட்காலத்தை அதிக அளவில் குறைப்பதாக இவர்கள் கருதுகிறார்கள்.
இந்தியாவில் அதிகரித்துவரும் ஒரு ஆபத்தை இந்த ஆய்வின் முடிவுகள் எடுத்துக்காட்டுவதாக கூறுகிறார் சென்னையைச்சேர்ந்த உணவு நிபுணர் மருத்துவர் கவுசல்யாநாதன். அதாவது, மருத்துவரின் முறையான ஆலோசனை பெறாமல், தாங்களாகவே பல்வேறு வைட்டமின்களை மருந்துகடைகளில் வாங்கி சாப்பிடும் போக்கு இந்திய நடுத்தரவர்க்கத்தினர் மத்தியில் அதிகரித்துவருவதாகவும், இது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
20 October 2011
03 October 2011
20 September 2011
முதன் முதலாக சூரிய ஒளியைப் பார்த்த குரங்குகளின் ஆனந்தம் (வீடியோ இணைப்பு)
இதுவரை வெளி உலகமே தெரியாமல் மருத்துவ பரிசோதனை கூடத்தில் வளர்ந்து வந்த குரங்குகள் முதன் முதலாக சூரிய ஒளியைக் கண்டு மகிழ்ச்சியில் குதிக்கும் தருணத்தை ஜேர்மனிய தொலைக்காட்சி ஒன்று வீடியோவாக வெளியிட்டு பிரபலமடைந்துள்ளது.
அண்மையில் இவ்வாறு மருத்துவ பரிசோதனைக்காக அடைக்கப்பட்டுள்ள குரங்குகளை சுதந்திரமாக நடமாட விடவேண்டும் என பல தரப்புக்களிடமிருந்து எதிர்ப்பைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்கிறார்கள். எது எவ்வாறாயினும் வெளியில் வந்ததும் கட்டித் தழுவி தங்களுக்குள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காட்சி நெகிழ வைக்கிறது. |
நன்றி. மனிதன்.com08 Sep 2011 |
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மூவர் முதலிடம்
அகில இலங்கை ரீதியில் மூவர் 195 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர். அதில் ஸகி அஹமட் தமிழ் மொழிமூலம் தோற்றியமை குறிப்பிடத்தக்கது.
மற்றைய இருவரும் சிங்கள மொழி மூலம் தோற்றியவர்களாகும். களுத்துறை மகளிர் கல்லூரி மாணவியான ஒசாதி ரஷி பிரபா பொன்சேகாவும் மற்றவர் களுத்துறை தொடங்கொட, மிரிஸ்வெல மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த கே.டி.வி.நெத்மி ரணவீர ஆகியோராவர்.
இதற்கு அடுத்தபடியாக 194 புள்ளிகளை இருவர் பெற்றுள்ளனர். ஒருவர் விஸ்வமடு மேற்கு நெத்தலியாரு வித்தியாலயத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் சேதுராமன் என்பவரும் பிபிலை,மெதகமவைச் சேர்ந்த இசான் லசிந்தசத்சர என்பவருமாவர்நன்றி .வீரகேசரி இணையம் 9/15/2011 5:37:48 PM
புனித ஹஜ் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை ஆயிரத்தால் அதிகரிப்பு _
இதன் படி எதிர்வரும் வருடத்திற்கான இலங்கை ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 3800 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை முதற் தடவையாக ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இம்முறை முன்னுரிமை வழங்கப்படுமென அமைச்சர் எ.எச்.எம்.பௌஸி தெரிவித்துள்ளார்.
மேலும் இம்முறை 5000 யாத்திரீகர்களின் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். முதற்கட்ட யாத்திரீகர்கள் ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி சவூதி அரேபியாவைச் சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. __
18 September 2011
அளவ்வ சந்தியில் ரயில் விபத்து: பாரிய சேதம் _
இவ்விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 30 பேர் காயமடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
அதிவேக இன்டசிற்றி ரயில் வண்டியே விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் இதனால் பெருமள விலான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவ்வதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். __
15 September 2011
14 September 2011
பிரித்தானிய நெடுஞ்சாலையில் 120 மைல் வேகத்தில் துரத்திப் பிடித்த பொலிசார்: காணொளியைப் பாருங்கள் !
M1 நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்ற கார் ஒன்றைப் பொலிசார் மடக்கிப் பிடிக்க முயன்றபோது அது மிகவும் லாவகமாகத் தப்பிச் சென்றுவிட்டது. அதனைக் கோட்டைவிட்ட பொலிசார், உடனடியாக உலங்கு வானூர்தியின் உதவியை நாடியிருந்தனர். கமரா பொருத்தப்பட்ட உலங்கு வானூர்த்தி M1 நெடுஞ்சாலையில் தப்பிச் சென்ற காரை அடையாளம் கண்டு கீழே உள்ள பொலிசாருக்கு தகவல் வழங்க திரும்பவும் பொலிசார் அதனை துரத்தும் படலம் ஆரம்பமாகியது பல குச்சி ஒழுங்கைகளூடாக தனது காரைச் செலுத்துவதும் பின்னர் நெடுஞ்சாலையில் ஏற்றி காரை 120 தொடக்கம் 130 மைல் வேகத்தில் செலுத்துவதுமாக இருந்த அந்த வாகன ஓட்டுனருக்கு ஒரு விடையம் தெரியாமல்போய்விட்டது. அதாவது வானத்தில் தன்னை பொலிசாரின் ஹெலிகாப்டர் துரத்துவது அவருக்கு தெரியாது. ஒரு முறை பொலிசார் கிட்ட நெருங்கும்போது நெடுஞ்சாலையில் எதிர் திசையாகக் காரை ஓட்டி சாகசம் கூடப் புரிந்துள்ளார் இந்த ஓட்டுனர். இவரைப் பொலிசார் மடக்கிப் பிடித்தார்களா இல்லை கோட்டைவிட்டார்களா என வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். |
19 Aug 2011 நன்றி manithan.com |
இந்தத் தேடல் பொறியை உபயோகித்துள்ளீர்களா?
இதனை விடவும் ஒரு விடயத்தினை ஆழமாகத்தேட ஒரு தளம் உள்ளது.
அத்தளம் www.soovle.com
இந்தத்தளமானது கூகிள்,யாஹூ,ஆஸ்க், விக்கிபீடியா, ஆன்சர்ஸ், யூடியூப்,அமேசன் போன்ற அனைத்திலும் ஒரே இடத்தில் உடனடியாக தேட வழி செய்கின்றது.
இத்தளத்திற்கு சென்று தேடுதல் கட்டத்திற்குள் என்ன தேடவேண்டுமோ அதற்கான வார்த்தையைக் கொடுத்ததும் தானாகவே ஒவ்வொரு தேடு பொறியிலும் எந்த வார்த்தை அதிகமாக தேடப்பட்டிருக்கிறதோ அந்த வார்த்தைக்கான Suggestion Keyword கொடுக்கப்பட்டிருக்கும் இதிலிருந்து நாம் எந்தத் தளத்தில் தேடவேண்டுமோ அந்தத் தளத்தை சொடுக்கி நாம் தேடியவற்றை விரிவாக பார்க்கலாம்.
மிகவும் இலகுவானதும், விரிவாகவும் தேட இத்தளம் மிகச் சிறந்ததொரு தெரிவாகும். _
நன்றி
வீரகேசரி இணையம் 9/5/2011 11:41:30 AM
19 August 2011
எச் ஐ வி தொற்றைக் குறைக்க விருத்தசேஷனம்
இந்த எச் ஐ வி மற்றும் எயிட்ஸை குணமாக்குவதற்கான வழிகளை விஞ்ஞானிகள் தேடிக்கொண்டிருக்கும் அதேவேளை, அதனை தொற்றாமல் தடுப்பதற்கான வழிகள் குறித்தும் பெரும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்த நோய் பெண்களில் இருந்து ஆண்களுக்கு பரவுவதை ஆண்கள் விருத்தசேஷனம் செய்து கொள்வதன் மூலம் 60 வீதத்தால் குறைக்க முடியும் என்று அண்மைய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. அதாவது முஸ்லிம்கள் உட்பட சில சமூகத்தினர் செய்துகொள்வது போன்று ஆண்குறியின் முன் தோலை அகற்றுவதே விருத்த சேஷனம் ஆகும்.
இதனால், பல ஆப்பிரிக்க நாடுகளில் ஆண்கள் விருத்த சேஷனத்தை செய்து கொள்வதை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜிம்பாப்பேவேயிலும் அரசாங்கம் இப்படியான திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் பத்து லட்சம் ஆண்களுக்கு விருத்த சேஷனம் பண்ண முடியும் என்று அந்த நாட்டின் அரசாங்கம் நம்புகிறதது.
bbc
பிரசுரிக்கப்பட்டது: 18 ஆகஸ்ட், 2011 - 15:54 ஜிஎம்டி
நன்றி bbctamil.com
சவூதி பாணியில் காத்தான்குடியில் ஈச்சமரங்கள் காய்த்துக்குலுங்குகின்றன
சவூதி பாணியில் காத்தான்குடியில் ஈச்சமரங்கள் காய்த்துக்குலுங்குகின்றன
07/08/2011
-அபூ ஜுமைல்-
இது புனித றமழான் மாதம், இந்த மாதத்தின் சிறப்பு உணவுகளில் எம் கண்முன்னே தோன்றுவது ஈச்சம்பழங்கள்தான் என்றால் அது மிகையாகாது.
மத்திய கிழக்கு நாடுகளில் அதிலும் விசேடமாக சவூதி அரேபியாவில் இருந்து தான் கூடுதலான பேரீச்சம்மரங்கள் காய்த்து உலகிற்கெல்லாம் பேரீச்சம் பழங்கள் கிடைக்கின்றன.
ஆனால் அதே சவூதி பாணியில் காத்தான்குடி நகரில் 70 பேரீச்சம்மரங்கள் நடப்பட்டு அவைகள் காய்த்துக்குலுங்குகின்றன. பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பெருமுயற்சியினால் இம்மரங்கள் நடப்பட்டன.
வீதி அழகிற்காக நடப்பட்ட இந்த பேரீச்சம் மரங்கள் தற்போது காய்த்துக்குலுங்குவதைக் காண பலரும் வருகைதருகின்றனர்.
அண்மையில் காத்தான்குடிக்கு விஜயம் செய்த சுதேச வைத்திய அமைச்சர் சாலிந்த திஸாநாயக்காசும் அம்மரங்களைப் பார்க்கத்தவறவில்லை.
நன்றி
kattankudi.info
13 August 2011
12 July 2011
07 July 2011
நீங்களே சரிசெய்யக்கூடிய கணினிப் பிரச்சனைகள்..
கணினியில் ஏற்படக்கூடிய பொதுவான அடிப்படைப் பிரச்சனைகளுக்காக கணினிப் பராமரிப்பாளரை அழைக்காமல், ஒரு சில நிமிடங்களில் நாமே சரி செய்ய முடியும். அத்தகைய சரி செய்யக்கூடிய பிரச்சனைகள் சிலவற்றை பார்ப்போம்.
கணினியை தொடங்கும்போது (Power On) மூன்று பீப் ஒலி (Beep Sound) கேட்டால்:
ரேம் நினைவகம் சரியாக பொருத்தப்படாமல் இருக்கலாம் அல்லது பழுதடைந்திருக்கலாம். எனவே மதர்போர்டில் (Mother Board) மாட்டியுள்ள ரேம் நினைவகத்தை (RAM Memory) கழற்றி மீண்டும் சரியாக அதன் ஸ்லாட்டில் பொருத்தி கணினியை இயக்கவும்.
கணினியை இயக்கும் போதெல்லாம் கணினிக் கடிகாரத்தில் நேரம் மாறிவிடுகிறதா?
மதர் போர்டில் உள்ள 3 வோல்ட் மின்சக்தி கொண்ட சீமாஸ் (CMOS) பேட்டரி தீர்ந்து போயிருக்கலாம். புதிய பேட்டரி வாங்கிப் பொருத்திப் பார்க்கவும்.
மூன்று பீப் ஒலிகளில் ஒன்று நீளமாகவும், இரண்டு குறைவாகவும் கேட்டால்:
இத்தகைய ஒலி கேட்டால் கணினியின் டிஸ்பிளே கார்டில் (Display Card) பிரச்சினை என்பதை அறிந்து கொள்ளவும். இந்தக் கார்டை கழற்றி திரும்பப் பொருத்தவும். அப்பொழுதும் பிரச்சினை தொடர்ந்தால் அதனை மாற்ற வேண்டியதிருக்கும்.
இடைவிடாமல் பீப் ஒலி கேட்டால்:
இது விசைப் பலகையில் (கீ போர்ட் - Key Board) பிரச்சினை இருந்தால் தோன்றும் ஒலியாகும். ஏதேனும் ஒரு விசையோ, பல விசைகளோ தூசு படிந்ததன் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களால் மேலே எழாமல் இறுக்கமாக அழுந்தியிருந்தால் இந்த ஒலி தோன்றும். அதனை சரிசெய்தால் ஒலி நின்றுவிடும்.
கணினித் திரை (Monitor) மற்றும் சிபியூவில் ஷாக் அடித்தால்:
நேர், எதிர் மின் இணைப்புகளுடன் எர்த் (Earth) எனப்படும் மூன்றாவது இணைப்பு சரியாக கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்க்கவும். நிலத்தில் பதிக்கப்பட்ட சிறு குழாயின் மூலமாக இந்த இணைப்புக் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். அப்படிக் கொடுக்கப்படாமல் தொடர்ந்து ஷாக் அடிக்கும் நிலையிலேயே இருந்தால் கணினி விரைவிலேயே பழுதாகும் நிலை ஏற்படும்.
கணினியை இயக்கியதும் ஹார்ட் டிஸ்க் ஃபெயிலியர் ( HDD Error or Hard Disk Failure) என்பது போன்ற தகவல் திரையில் தோன்றினால்:
சிபியூ(CPU)வில் ஹார்ட்டிஸ்க்கிற்கு மின்சாரம் தரும் இணைப்பு (Power Card), டேட்டா கேபிள் (Data Card) இணைப்பு ஆகியவற்றை கழற்றி சரியாகப் பொருத்தவும். சிபியூவில் தூசிகள் படிந்திருந்தால் அதனை துடைத்துப் பிறகு இயக்கிப் பார்க்கவும். அல்லது சிடி டிரைவில் ஏதேனும் சிடிக்கள் இருந்தாலும் இதுபோன்ற பிரச்சனை எழும். சிடியை எடுத்துவிட்டு இயக்கிப் பார்க்கவும்.
சுவிட்ச் ஆன் செய்ததும் கணினி இயங்கவில்லையென்றால்:
கணினிக்கான மின் இணைப்புகள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதா எனப் பார்க்கவும். கணினியின் மின்சார தொடர்பை நிர்வகிக்கும் எஸ்.எம்.பி.எஸ். (SMPS) பகுதி சரியாக வேலை செய்கிறதா என்பதையும், எஸ்.எம்.பி.எஸ்-லிருந்து மதர்போர்டிற்குச் செல்லும் மின் இணைப்பு சரியாக பொருத்தப்
பட்டுள்ளதா என்பதையும் பரிசோதித்துப் பார்க்கவும்.
மேற்கண்ட சோதனைகளைச் செய்யும்போது கண்டிப்பாக கணினிக்கான மின் இணைப்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்யவும்.
இவை அல்லாமல் வைரஸ் தாக்குதல், மின்னழுத்தம் ஆகியவற்றாலும் கணினி தாக்கப்படலாம். அவற்றை கணினிப் பராமரிப்பாளரிடம் சொல்லித்தான் சரி செய்யவேண்டும்
19 May 2011
பாலஸ்தீனப் போராட்டம் - ஒரு ஈமானியப்பார்வை
By AC Agar Mohamed
பகுதி-1
பகுதி-2
18 May 2011
இருண்டிருந்த ஐரோப்பா இஸ்லாமிய ஆட்சியில் வளர்ச்சி வெற்றி அடைந்தது.
17 May 2011
15 May 2011
உணவு வகைகள் மற்றும் அவற்றின் சத்துக்கள்
வாழைப்பழம் - எல்லா நேரத்திலும் விரும்பபக்கூடிய மற்றும் அனைவராலும் வாங்கக்கூடிய பழம்.
வாழைப்பழம் எல்லா நேரத்திலும் (வருடம் முழுவதும்) கிடைக்கக்கூடிய பழமாகும். இது பல நோய்களைக் குணமாக்கக்கூடிய தன்மையுடையது. இப்பழம் எல்லா மனிதர்களாலும் சுலபமாக வாங்கக்கூடியது மற்றும் அதிகளவில் கிடைக்கக்கூடியது. அனைத்துவகை வாழைப்பழங்களும் ஏதோ ஒரு வகையில் பலனளிக்கக்கூடியவைகளாகும்.
வாழைப்பழம் போதுமான சக்தியினை அளிக்கின்றது. இதில் அதிக நார்ச்த்து மற்றும் சுக்ரோஸ், ப்ரக்டோஸ், குளுக்கோஸ் போன்று இயற்கை சர்க்கரைப்பொருட்கள் உள்ளது.
வாழைப்பழம் சில உடல்நலக்கோடுகள் ஏற்படுவதை தடுக்கிறது அல்லது அவற்றை மேற்கொள்ள உதவுகிறது.
- மனஅழுத்தம் - வாழைப்பழத்தில் ஒருவகை புரதம் உள்ளது. நம் உடல் இப்புரதத்தினை செரடோனன் எனும் வேதிப்பொருளாக மாற்றுகிறது. இப்பொருள் மனதை தளர்வாகவும் சந்தோஷமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
- ப்ரிமென்ஸ்ட்ரூவல் சின்ட்ரோம் - (மாதவிடாய் முன் அளிகுறிகள்)வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரிப்படுத்துகிறது. இது ஒருவரின் மனநிலையினை மாற்றச் செயல்படுகிறது.
- இரத்த சோகை - வாழைப்பழத்தில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளது. இது, இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது இரத்தசோகை நோயை மேற்கொள்ள உதவியாக இருக்கிறது
- இரத்த அழுத்தம் - வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் தாதுப் பொருளும் அதே வேளையில் குறைந்த உப்பும் உள்ளது. எனவே இரத்த அழுத்தத்தை குறைக்க இது தகுந்த உணவாகும்.
- மூளைத்திறன் - பொட்டாசியம் அதிகமுள்ள பழங்கள் மக்கள் சுதாரிப்பாக இருக்கச் செய்து, அதிகளவில் கற்றுக்கொள்ள உதவுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன
- மலச்சிக்கல் - வாழைப்பழத்தில் உள்ள அதிக நார் சத்தானது மலச்சிக்கல் பிரச்சினையை மேற்கொள்ள உதவுகிறது மற்றும் சாதாரணமாக எவ்வித கஷ்டமுமின்றி மலம் கழிக்க உதவுகிறது.
- நெஞ்செரிச்சல் - வாழைப்பழத்தில் இயற்கையாகவே நம் உடலில் உள்ள அமிலத்தை சமமாக்கும் தன்மை உள்ளது. இது நெஞ்செரிச்சலிலிருந்து நல்ல நிவாரணம் தர உதவுகிறது.
- அல்சர் எனப்படும் வயிற்று மற்றும் குடல்புண் - வாழைப்பழம் மென்மையாகவும் வழுவழுப்பாகவும் இருப்பதால், இது குடலில் ஏற்படும் கோளாறு உள்ளவர்களுக்கும், நல்ல உணவாக பயன்படுகிறது. வாழைப்பழம் அதிக அமிலத்தன்மையைச் சரிசெய்வதோடு, புண் ஏற்பட்ட இடத்தில் ஒரு பாதுகாப்பு சுவரை ஏற்படுத்துகிறது.
- ஸ்ட்ரோக் - வாழைப்பழத்தினை உணவில் ஒருபகுதியாக தவறாமல் எடுத்துக்கொள்வதினால் அதிகளவு (40 சதம்) ஸ்ட்ரோக் ஏற்படும் ஆபத்தினை தவிர்க்கிறது.
ஓட்ஸ் (புல்லரிசி உணவு)
- ஓட்ஸ்-ல் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் உப்பு உள்ளது. ஓட்ஸ்-ல் இயற்கை இரும்புசத்து அதிகம் உள்ளது. சுண்ணாம்புச் சத்தும் அதிகம் உள்ளதால், இதயம், எலும்பு மற்றும் நகங்களுக்கு நல்லது.
- இதில் கரையக்கூடிய நார்பொருள் உள்ளது. அரை கப் சமைத்த ஓட்ஸ்-ல் கிட்டத்தட்ட 4 கிராம் கூழ்மநிலை கரையக்கூடிய நார்பொருள் உள்ளது (பீடா குளுகான்) உள்ளது. இந்த நார்பொருள் இரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்புப் பொருளை குறைக்க உதவுகிறது.
- ஓட்ஸ் உடலில் உள்ள உபரி கொழுப்புப்பொருளை உறிஞ்சி வெளியேற்றுகிறது. இதினால்தான இது மலச்சிக்கலை குணப்படுத்துகிறது. ஏனெனில் அதிக கரையக்கூடிய நார்பொருள், வயிறு/குடல் செயல்களை ஒழுங்கு செய்ய உதவுகிறது
- அதிக ஓட்ஸ் கொண்ட உணவு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை நிலைப்படுத்துகிறது.
- நரம்பு சம்மந்தமான கோளாறுகளிலும் ஓட்ஸ் உதவுகிறது
- ஓட்ஸ் பெண்களில் மாதவிடாய் நிற்கும் காலங்களில் ஏற்படும் கருப்பை மற்றும் கருவகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க உதவுகிறது
- ஓட்ஸ்-ல் சில தனிப்பட்ட கொழுப்பு அமிலம் மற்றும் ஆட்டிஆக்ஸிடாண்ட்ஸ்கள் உள்ளன. இவை இரண்டும் வைட்டமின் ஈ-உடன் இணைந்து, உடல் திசுக்களில் ஏற்படும் சிதைவினை தாமதிக்கிறது மற்றும் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தினை குறைக்கிறது.
தலைவலி
தலைவலிகள்
நாம் ஒவ்வொருவரும் எப்போதாவது தலைவலியினால் அவதிப்பட்டவர்களே. சில தலைவலிகள் மிகுந்த அசெளகரியத்தை ஏற்படுத்தும். ஆனால் பெரும்பான்மையானவை தற்காலிகமாக நீங்கக்கூடியவை. பொதுவாக தலைவலிகள் தற்காலிகமாக வந்து தாமாகவே நீங்கக்கூடியவை. ஆனால் தாங்க முடியாத அளவிற்கு தலைவலி இருக்குமேயானால் மருத்துவரை அணுகுவதற்குத் தயங்காதீர்கள். மருத்துவரானவர் தலைவலியானது தீவிர பாதிப்பிற்குரியதா, அடிக்கடி வரக்கூடியதா அல்லது காய்ச்சலுடன் வரக்கூடியதா என சோதிப்பார்.
|
|
|
|
|
குறிப்பு : மோசமான தலைவலிகள் உங்களுக்கு இருக்குமேயானால்,மருத்துவரை அணுகி அவற்றின் அறிகுறிகள், பாதிப்புத்தன்மை மற்றும் வலியைக் குறைக்க நீங்கள் கையாண்ட நடவடிக்கைகள் முதலியவற்றைத் தெளிவாக விளக்கவும்.
நன்றிwww.indg.in