உலகின் 7 பில்லியனாவது குழந்தை பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த தம்பதியினருக்குப் பிறந்த குழந்தையாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இதனை உறுதி செய்யும் பொருட்டு இக்குழந்தையின் பிறந்த நேரம் உட்படத் தகவல்கள் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அனுப்பப்படுமென அந்நாட்டு சுகாதார அமைச்சின் செயலாளர் ஹென்ரிக் ஒனா தெரிவித்துள்ளார்.
உலக சனத்தொகை 7 பில்லியன் என்ற எண்ணிக்கையை அடையும் நாளை முழு உலகமே எதிர்பார்த்துக்காத்திருந்தது.
குறிப்பாக 7 பில்லியனாவது குழந்தை யாரென்பது தொடர்பில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவந்தது.
இந்நிலையில் பிலிப்பைஸ் நாட்டின் அரசாங்க வைத்தியசாலையொன்றில் பிறந்த குழந்தையென அந்நாட்டின் அரசாங்கம் தெரிவிக்கின்றது.
டெனிக்கா கமாச்சோ என பெயரிடப்பட்டுள்ள அக் குழந்தை ஞாயிற்றுக்கிழமைபின்னிரவு பிறந்துள்ளது.
இக்குழந்தை பிறந்தவுடன் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் அனைத்தும் அவ்வைத்தியசாலையில் நிரம்பியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இக்குழந்தைக்கு பரிசில்கள் குவிந்து வருவதாகவும், பெற்றோர் கேக் வெட்டி கொண்டாடியதாகவும் கூறப்படுகின்றது.
எனினும் உத்தியோகபூர்வமாக இவ்வறிப்பு வரும் வரை அனைவரும் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks.virakesari.lk
No comments:
Post a Comment