தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

01 November 2011

ராணி 2ம் எலிசபெத் மறைவை அறிவிப்பதற்கான பயிற்சியை பிபிசி தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

இங்கிலாந்து ராணி 2ம்

எலிசபெத் மறைந்தால் அதுபற்றி செய்தி வெளியிடும் முறை பற்றி ஊழியர்களுக்கு பிபிசி பயிற்சி அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து லண்டனில் வெளியாகும் தி சண்டே டைம்ஸ் நாளிதழில் இடம்பெற்ற செய்தி வருமாறு: 2002ம் ஆண்டில் இங்கிலாந்து ராணி (குயின் மதர்) இறந்தபோது அதை இங்கிலாந்து அரசு செய்தி நிறுவனமான பிபிசி வெளியிட்ட விதம் கடும் சர்ச்சைக்கு உள்ளானது.
அனுபவம் வாய்ந்த செய்தி வாசிப்பாளர் பீட்டர் சிசன்ஸ் பழுப்பு நிற கோட், பிரவுன் நிற டை அணிந்து ராணி மறைவை அறிவித்தார். அதுபோன்ற தவறு ஏற்பட்டு விமர்சனத்துக்கு உள்ளாகாமல் இருக்க, ராணி 2ம் எலிசபெத் மறைவை அறிவிப்பதற்கான பயிற்சியை பிபிசி தொடங்கியுள்ளதாக தெரிகிறது.
இதற்கான போலி வீடியோ ஒளிபரப்பி ஊழியர்களுக்கு செய்தி வெளியிட பயிற்சி தரப்படுகிறது. துக்க செய்தியை அறிவிக்கும்போது செய்தி வாசிப்பாளர்கள் அணிய வேண்டிய உடைகள் அலமாரிகளில் வைக்கப்பட்டன. மற்ற நிகழ்ச்சிகள் ரத்து, தேசிய கீதம் ஒலிபரப்பு,வாழ்க்கை வரலாறு வீடியோ ஆகியவை பற்றியும் ஊழியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
ராணி மறைந்தால் 12 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். அதன் பிறகு அவரது உடல் அடக்கம் செய்யப்படும் வரை மட்டுமின்றி அதன் பிறகு சில நாட்களும் காமெடி நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப கூடாது என்றும் பயிற்சி தரப்படுகிறது. இவ்வாறு தி சண்டேடைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Thanks:dinakaran.com

No comments:

Post a Comment