அல்குர்ஆன் விளக்கம்
அல்குர்ஆன் விளக்கம்
எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, நல்லதைச் செய்து நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார் (இருக்கின்றார்?)
நன்மையும் தீமையும் சமமாக மாட்டா. நீர் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக்கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்குமிடையே பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பர் போன்று ஆகிவிடுவார்.
பொறுமையாக இருந்தார்களே, அவர்களைத் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள். மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்களைத் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்.
உங்களுக்கு ஷைத்தானிடத்திலிருந்து ஏதேனும் ஊசலாட்டம் (தீயதைச் செய்ய) உம்மைத் தூண்டுமாயின், உடனே அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக் கொள்வீராக! நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியேற்பவன், நன்கறிபவன். (41: 3336)
No comments:
Post a Comment