தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

06 December 2011

1974 ல் மலையகத்தை அதிர வைத்த விமான விபத்து


1974 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி இரவு 10மணி 10 நிமிடம் நோட்டன் பிரிட்ஜ் பகுதியை மட்டுமல்லாது அப்பிரதேசத்தை அண்டிய ஏனை ய பகுதி மக்களையும் பீதியடைச்செய்த சம்பவம் அது.
ஆம் இந்தோனேசியாவிலிருந்து 185 ஹஜ் பயணிகளை ஏற்றிக்கொண்டு மக்கா நோக்கி பயணித்த Martin Air Dc 8ரக பயணிகள் விமானம் நோட்டன் ஏழுகன்னியர் மலையில் மோதி சிதறிய நாள் அது. சோகம் என்னவெனில் விமானமோட்டிகள் உட்பட 191 பேரும் அதே இடத்தில் உடல் சிதறிபலியாகினர்.
 இலங்கையைப்பொறுத்தவரை இது வரை வெளிநாட்டு விமானம் ஒன்றுக்கு ஏற்பட்ட மிக மோசமான விபத்து அது. மலையகத்திற்கு இது ஓர் அதிர்ச்சியளித்த புது அனுபவம். இன்னும் கூட 191 பேரை பலியெடுத்த ஏழு கன்னியர் மலை அமைதியாகத்தான் இருக்கிறது. இம்மலையை ஆங்கிலத்தில் Virgin Hills என்று அழைக்கின்றனர். இவ்விபத்தில் பலியான 190 பேர் கொத்தலென கந்த என்று அழைக்கப்படும் அவ்விடத்திலேயேபுதைக்கப்பட்டனர். அடையாளம் காணக்கூடியவாறு இருந்த விமானப்பணிப்பெண்ணில் உடலை அவரின் காதலர் ஹெலிகெப்டர் மூலமாக இந்தோனேசியாவுக்கு கொண்டு சென்ற நெகிழ்ச்சியான சம்பவமும் இதில் அடங்கும்.
விமானத்தின் டயர்
விபத்துக்குள்ளான விமான பாகங்களில் எஞ்சியிருக்கும் டயர்கள் இரண்டு மட்டும் இது வரைபாதுகாக்கப்பட்டு வருகின்றது. ஒரு டயர் நோட்டன் பொலிஸ் நிலையத்தில் உள்ளது.நல்லநிலையிலிருக்கும் டயர் நோட்டன் விமலசுரேந்திர அணைக்கட்டுக்கு செல்லும் வழியில் சம்பவங்களை சுருக்கமாக தாங்கி பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அவ்விடத்தில் சேகரிக்கப்பட்ட டொலர் தாள்கள் இன்னோரன்ன பொருட்களை அப்பிரதேச மக்கள் பாதுகாத்து வருகின்றனர்.
அனைவரையும் புதைக்கப்பட்ட இடத்தில் நினைவுத்தூண் ஒன்றும் அமைந்துள்ளது. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 4 ஆம் திகதி இந்தேனேசியாவிலிருந்து உறவினர்கள் இவ்விடத்திற்கு வந்து செல்வது பலருக்கு தெரியாத விடயமாகவுள்ளது. விமானத்தின் கருப்புப்பெட்டி தகவலின் படி தொழில் நுட்ப கோளாறு காரணமாகவே இவ்விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
டொலர் தாள்
இவ்விபத்து சம்பவம் நடந்த இடத்தில் வசித்தவர்கள் இன்னமும் அதை அசை போட்டவண்ணமும் அப்பகுதிக்கு செல்பவர்களுக்கு சம்பவத்தை எடுத்துக்கூறுபவர்களாவும் உள்ளனர். முக்கிய விடயம் என்ன தெரியுமா? இவ்விமானத்தை செலுத்திய விமானி 8 தடவைகள் இலங்கை மார்க்கமாக மக்காவிற்கு விமானத்தை செலுத்திய அனுபவஸ்தர் என்பது தான். இவ்வருடம் டிசம்பர் 4 ஆம் திகதியுடன் இவ்விபத்து இடம்பெற்று 37 வருடங்கள் கடந்துவிட்டன. இன்னமும் இச்சம்பவம் குறித்த நினைவுகளில் இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
நினைவுத்தூபி
படம் தகவல் :சிவலிங்கம் சிவகுமாரன்THANKS:வீரகேசரி இணையம் 12/6/2011

No comments:

Post a Comment