பெரிஸ் நகரிலுள்ள யுனெஸ்கோவின் தலைமையகக் கட்டிடத்தில் முதன்முறையாக பலஸ்தீனக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இது பலஸ்தீனத்தின் வெற்றியாக மட்டுமன்றி இஸ்ரேல், அமெரிக்காவிற்கு பாரிய அடியாகவும் கருதப்படுகின்றது.
அவ்விரு நாடுகளின் எதிர்ப்பினையும் மீறியே பலஸ்தீனம் யுனெஸ்கோவின் உறுப்பு நாடாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதன் போது கருத்துத் தெரிவித்துள்ள பலஸ்தீன ஜனாதிபதி இது தமக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியென தெரிவித்துள்ளார்.
ஐ.நா. சபையில் முழு உறுப்புரிமையைப் பெறுவதற்கு பாதுகாப்பு சபையில் 15 வாக்குகளில் 9 வாக்குகள் தேவை.
எனினும் இதனைத் தோற்கடிக்க அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தினை உபயோகிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
எனினும் முழு உறுப்புரிமையைப் பெறுவதற்கு கடும் முயற்சி மேற்கொள்வதாக பலஸ்தீனம் தெரிவிக்கின்றது.
கடந்த ஒக்டோபர் மாதமே யுனெஸ்கோவில் பலஸ்தீனம் 195 ஆவது அங்கத்துவ நாடாக இணைந்துகொண்டது.
இதற்குக் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் யுனெஸ்கோவிற்கான தமது நிதியினை நிறுத்தியது.
இதன் படி இவ்வாண்டுக்கான அதன் நிதியில் 66 மில்லியன் அமெரிக்கடொலர்களும், அடுத்த ஆண்டுக்கான நிதியில் 143 மில்லியன் அமெரிக்க டொலர்களும் பற்றாக்குறையாகியமை குறிப்பிடத்தக்கது
Thanks:virakesari
No comments:
Post a Comment