ஊர் செய்திகள்
date
19 August 2011
சவூதி பாணியில் காத்தான்குடியில் ஈச்சமரங்கள் காய்த்துக்குலுங்குகின்றன
சவூதி பாணியில் காத்தான்குடியில் ஈச்சமரங்கள் காய்த்துக்குலுங்குகின்றன
07/08/2011
-அபூ ஜுமைல்-
இது புனித றமழான் மாதம், இந்த மாதத்தின் சிறப்பு உணவுகளில் எம் கண்முன்னே தோன்றுவது ஈச்சம்பழங்கள்தான் என்றால் அது மிகையாகாது.
மத்திய கிழக்கு நாடுகளில் அதிலும் விசேடமாக சவூதி அரேபியாவில் இருந்து தான் கூடுதலான பேரீச்சம்மரங்கள் காய்த்து உலகிற்கெல்லாம் பேரீச்சம் பழங்கள் கிடைக்கின்றன.
ஆனால் அதே சவூதி பாணியில் காத்தான்குடி நகரில் 70 பேரீச்சம்மரங்கள் நடப்பட்டு அவைகள் காய்த்துக்குலுங்குகின்றன. பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பெருமுயற்சியினால் இம்மரங்கள் நடப்பட்டன.
வீதி அழகிற்காக நடப்பட்ட இந்த பேரீச்சம் மரங்கள் தற்போது காய்த்துக்குலுங்குவதைக் காண பலரும் வருகைதருகின்றனர்.
அண்மையில் காத்தான்குடிக்கு விஜயம் செய்த சுதேச வைத்திய அமைச்சர் சாலிந்த திஸாநாயக்காசும் அம்மரங்களைப் பார்க்கத்தவறவில்லை.
நன்றி
kattankudi.info
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment