சமீபத்தில் பிரித்தானிய நெடுஞ்சாலையான M1 இல் அதிவேகமாகச் சென்ற கார் ஒன்றை பொலிசார் மணித்தியாலக் கணக்கில் துரத்தி இறுதியாகப் பிடித்தனர். சுமார் 5 நிமிடம் காண்பிக்கப்படும் இக் காணொளி ஏதோ விறுவிறுப்பு சினிமா படம்போல அமைந்துள்ளது.
M1 நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்ற கார் ஒன்றைப் பொலிசார் மடக்கிப் பிடிக்க முயன்றபோது அது மிகவும் லாவகமாகத் தப்பிச் சென்றுவிட்டது. அதனைக் கோட்டைவிட்ட பொலிசார், உடனடியாக உலங்கு வானூர்தியின் உதவியை நாடியிருந்தனர். கமரா பொருத்தப்பட்ட உலங்கு வானூர்த்தி M1 நெடுஞ்சாலையில் தப்பிச் சென்ற காரை அடையாளம் கண்டு கீழே உள்ள பொலிசாருக்கு தகவல் வழங்க திரும்பவும் பொலிசார் அதனை துரத்தும் படலம் ஆரம்பமாகியது பல குச்சி ஒழுங்கைகளூடாக தனது காரைச் செலுத்துவதும் பின்னர் நெடுஞ்சாலையில் ஏற்றி காரை 120 தொடக்கம் 130 மைல் வேகத்தில் செலுத்துவதுமாக இருந்த அந்த வாகன ஓட்டுனருக்கு ஒரு விடையம் தெரியாமல்போய்விட்டது. அதாவது வானத்தில் தன்னை பொலிசாரின் ஹெலிகாப்டர் துரத்துவது அவருக்கு தெரியாது. ஒரு முறை பொலிசார் கிட்ட நெருங்கும்போது நெடுஞ்சாலையில் எதிர் திசையாகக் காரை ஓட்டி சாகசம் கூடப் புரிந்துள்ளார் இந்த ஓட்டுனர். இவரைப் பொலிசார் மடக்கிப் பிடித்தார்களா இல்லை கோட்டைவிட்டார்களா என வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். |
19 Aug 2011 நன்றி manithan.com |
No comments:
Post a Comment