தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

29 September 2012

'இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' திரைப்படத்தின்இயக்குனர் கைது!

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி படம் எடுத்த அமெரிக்கரான நகோலா பேசலி நகோலாவை அமெரிக்கப் பொலிஸார் திடீரென கைது செய்துள்ளனர். உலகம் முழுவதும் இஸ்லாமியர்களிடையே பெரும் கொந்தளிப்பையும், கொதிப்பையும் ஏற்படுத்தியது நகோலா இயக்கிய 'இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' என்ற திரைப்படம். இதில் நபிகள் நாயகத்தையும், இஸ்லாமியர்களையும் இழிவுபடுத்தும் வகையில் சித்தரித்திருந்தார் நகோலா. இதனால் இஸ்லாமியர்கள் கடும் கொந்தளிப்பையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர். லிபியாவில் அமெரிக்க தூதரகத்தைத் தாக்கி அங்கிருந்த அமெரிக்க தூதரைக் கொலை செய்தனர். உலக நாடுகள் முழுவதிலும் அமெரிக்காவுக்கு எதிராக பெரும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் வெடித்தன. இந்நிலையில் சர்ச்சைக்குரிய நகோலாவை அமெரிக்க பொலிஸார் திடீரென கைது செய்துள்ளனர். ஆனால் இவ் விவகாரம் தொடர்பாக அவர் கைது செய்யப்படவில்லை. கடந்த 2010ம் ஆண்டு அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு வேறொரு வழக்கி�் 21 மாத சிறைத் தண்டனை விதித்திருந்தது. இருப்பினும் பின்னர் அது புரேபஷனாக அது மாற்றப்பட்டது - அதாவது காத்திருப்புக் காலம். இந்த காத்திருப்புக் காலத்தின்போது அவர் இணையதளத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றத்திற்காக தற்போது அவரைக் கைது செய்துள்ளனராம். காத்திருப்புக் காலத்தின்போது அவர் ஐந்து ஆண்டுகளுக்கு நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல், கனணீ, இணையதளம் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்த து. அதை மீறியதற்காகத்தான் தற்போது கைது செய்துள்ளனர். மற்றபடி இஸ்லாமை இழிவுபடுத்திய குற்றத்திற்காக அவரைக் கைது செய்யவில்லை அமெரிக்க காவல்துறை. நகோலாவை கைது செய்த பொலிஸார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது. thanks:virakesari

26 September 2012

5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மக்கொன அல் ஹஸனியாவின் மூன்று மாணவர்கள் சித்தி

 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று உத்தியோகபூர்வமாக வெளியிடபட்டது .
எமது பாடசாலைஅல்-ஹஸனியா M.V.த்தில் 
இருந்து மூன்று மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர்.
தினகரன் இணயத்தளத்தில் இன்று வெளியிடப்பட்ட செய்தியை
தொடர்ந்து வாசிக்கவும் .

புலமைப்பரிசில் முடிவுகள் நேற்று வெளியாகின: தேசிய ரீதியில் 196 புள்ளிகளுடன் இருவர் முதலாமிடம்; 3ம் இடத்தில் கந்தானை மாணவி.

  தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டன. www.doenets.lk என்ற பரீட்சைத் திணைக்களத் தின் இணைய தளத்தில் நேற்று உள்ளடக்கப் பட்டிருந்ததுடன் காலை 10.00 தொடக்கம் கொழும்பு சுற்றுப்புறப் பாடசாலைகளுக்கு பரீட்சை பெறுபேறு கள் அனுப்பி வைக்கப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ. எம். என். ஏ. புஷ்பகுமார தெரிவித்தார். வெளியிடப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் 2 மாணவர்கள் முதலாம் இடத்தையும், 1 மாணவன் மூன்றாம் இடத்தையும், 8 மாணவர்கள் நான்காம் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

24 September 2012

தலைநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவமதிக்கும் விதமாகவும் முஸ்லிம்கள் தமது உயிரிலும் மேலாக நேசிக்கும் முஹம்மது (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் விதமாகவும் தயாரிக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்துக்கெதிராக இன்றும்
தலைநகரில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று  நடைபெற்றது.
நபவியா தரீக்காவினர் ஏற்பாடு செய்திருந்த இம்   மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியில்  ஆயிரக்கனக்கானவர்கள் கலந்துகொண்டனர்.
பட இணைப்பு 

21 September 2012

இலங்கையின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டம்

ஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவமதிக்கும் விதமாகவும் முஸ்லிம்கள் தமது உயிரிலும் மேலாக நேசிக்கும் முஹம்மது (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் விதமாகவும் தயாரிக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்துக்கெதிராக இன்று புனித ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து இலங்கையின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்களும் கண்டனப்பேரணிகளும் இடம்பெற்றன. இதோ சில பட இணைப்புககள்.




பேருவல

















இறைவனின் ஜோதியை (இஸ்லாத்தை) தங்கள் வாயால் ஊதி அணைக்க நினைக்கும் மூடர்கள்!

கடந்த ஷில நாட்களாக அமெரிக்காவில் உள்ள ஒருவன் இஸ்லாத்தையும், இறைதூதர் நபி(ஸல்)அவர்களையும், இழிவுபடுத்தி எடுத்த படத்தைபற்றி பேசப்படுகிறது. இணையதளங்களிலும், பத்திரிக்கைகளிலும் வழக்கம்போல முஸ்லிம்கள் சகிப்புத்தன்மையில்லாவர்கள், இஸ்லாத்தில் கருத்து சுதந்திரம் கிடையாது என்று சிந்தனைக்கோ, அறிவுக்கோ வேலை கொடுக்காமல் இஸ்லாத்தை, முஸ்லிம்களைப்பற்றி மீடியாக்கள் சொன்ன அளவுகோளை மட்டும் வைத்துக்கொண்டு எழுதிதள்ளுபவர்களை இதுவரை நாம் பார்த்தோம் இனியும் பார்க்கலாம்.

20 September 2012

நபிகளாரை அவமதிக்கும் திரைப்படம்: உலகெங்கும் கொதித்தெழுந்த முஸ்லிம்கள்

செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி. அவ்வளவு சீக்கிரம் இதனை யாரும் மறந்து விட முடியாது. அது அமெரிக்க வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளி. இன்னும் கொஞ்சம் தெளிவாய் சொல்வதானால் அமெரிக்காவின் துக்கமான நாள் என்று கூட சொல்லலாம். ஆம், இவ்வருடமும் செப்டம்பர் 11 ஆம் திகதி நடந்த சம்பவம் அது.யாரும் அதனை எதிர்ப்பார்த்திருக்க முடியாது. வழமையான கலவரங்கள் கூட குறைவாக பதிவாகிக் கொண்டிருந்த மத்திய கிழக்கில் திடீரென ஆர்ப்பாட்டங்கள். யார் ஏற்பாடு செய்தார்கள்? எதற்காக ஒழுங்குபடுத்தினார்கள்? என்பதையெல்லாம் அறிவதற்குள் பாரிய சேதங்கள். கூடவே சில உயிர்களையும் குடித்து விட்டது. எகிப்து மற்றும் லிபியா, இவை இரண்டும் அரபு வசந்தத்தின் தென்றலை அனுபவித்து வரும் நாடுகள். இவை இரண்டு நாடுகளிலும் தான் ஆர்ப்பாட்டம் தீவிரமாய் ஆரம்பித்தன.

19 September 2012

தலை நகரை அதிர வைத்த தவ்ஹீத் ஜமாஅத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்

[பட இணைப்பு ]
September 19, 2012
முஸ்லிம்கள் உயிருக்கு மேலாக மதிக்கும்
நபி (ஸல்)அவர்களையும் இஸ்லாத்தையும்
இழிவுபடுத்தும் விதம் திரைப்படம் எடுத்த
ஜெர்ரி ஜோன்ஸ் என்ற கிறிஸ்தவ பாதிரியையும்
அதை அங்கீகரித்த அமெரிக்க அரசையும்
வெளியிட்ட யூடியுப் தளத்தையும் கண்டித்த
 ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக
இன்று பி.ப 1.30 மணியளவில் கொழும்பில்
மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இன்ஷாஅல்லாஹ் கொழும்பில் வெள்ளிக்கிழமை 21 ஆம் திகதி பாரிய அமெரிக்க எதிர்ப்பு தினம்!


முஹம்மது நபி(ஸல்) அவர்களை கொச்சைப்படுத்தியும் தூய இஸ்லாமிய மார்க்கத்தை இழிவு படுத்தியும் திரைப்படம் வெளியிட்ட அதன் தயாரிப்பாளனுக்கும் அதனை அனுமதித்த அமெரிக்காவிற்கும் எதிர்ப்பினை தெரிவித்து வெள்ளிக்கிழமை 21 ஆம் திகதி கொழும்பில் பாரிய அமெரிக்க எதிர்ப்பு தினம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பகல் 1.30 மணிக்கு கொள்ளுப்பிட்டி ஜூம்மா பள்ளிவாசலிருந்து அமெரிக்க தூதரகத்தை நோக்கி இடம்பெற இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

உபயம்:ihzannetwork.blogspot.com

18 September 2012

Huawei Dongle ஐ Unlock செய்வது எப்படி?

இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Mobitel ,Dialog, Etisalat) Dongle இனை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் பாவிக்க இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள். நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code இனை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code இனை எப்படி கண்டுபிடிப்பது? முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும். இதை http://www.bb5.at/huawei.php?
imei=*************** அப்படியே Copy  செய்து,
இதில் இருக்கும் * இற்கு பதிலாக
உங்களுடைய  IMEI
Number யை கொடுத்து Address Bar  இல் Paste
செய்து கொள்ளுங்கள். இப்போது உங்களுடைய Dongle இற்குறிய Unlock Code கிடைக்கும். அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இற்குல் போடுங்கள்.உங்களிடம் Unlock Code கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும்.THANKS:www.nimzath.com/2012/02/huawei-dongle-unlock.html?m=1

17 September 2012

முஸ்லிம்களின் தொடர் ஆர்ப்பாட்டங்களும் துடிக்கும் உணர்வுகளும்

இஸ்லாத்துக்கு எதிராகவும் முஹம்மது நபியை அவமதிக்கும் விதமாகவும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு சமூக இணையத் தளங்களில் வெளியிடப்பட்ட Innocence of Muslims என்ற திரைப்படத்துக்கு எதிர்ப்புத்தெரிவித்து உலகளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக அமெரிக்க தூதரகங்களை இலக்கு வைத்ததாக அவ்வார்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.
முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் வகையில் வடிவமைக்குட்பட்டிருக்கும் குறித்த திரைப்படமானது அவர்களின் உணர்வுகளைப் பெரிதும் பாதித்துள்ளது.
"குற்றமற்ற முஸ்லிம்' என்ற தமிழ் பொருள்படும் இத்திரைப்படத்தை தயாரித்து இயக்கியவர் சாம் பசில். இது அவரது உண்மையான பெயரல்ல. இரண்டுமணித்தியாலங்கள் நீளமான இத்திரைப்படத்தில் 59 நடிகர்கள் தமது பங்களிப்பை வழங்கியுள்ளதுடன் திரைக்குப் பின்னாலான தொழில்நுட்ப உதவிகளுக்கு 49 தொழில்நுட்பவியலாளர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

14 September 2012

புதிய மத்திய கிழக்கு உடையும் சியோனிஸக் கனவு


morsi 1








றவூப் ஸெய்ன்

சோவியத் யூனியனின் உடைவுக்குப் பின்னர் உலக ஆதிக்கத்தை தன்கையில் எடுத்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோர்ஜ் டபிள்யு புஷ் புதிய உலக ஒழுங்கு ஒன்றை (‡New World Oder) அறிமுகம் செய்தார். 1993 இல் இஸ்ரேலின் சிமோன் பெரஸ் Aryenoar உடன் சேர்ந்து இப்புதிய ஒழுங்கை ஒரு நூலாகவும் வெளியிட்டார்.
பின்னர் அமுலுக்கு வந்த புதிய அமெரிக்க நூற்றாண்டுக்கான திட்டத்தின் (PNAC) அடிப்படையில் கிளின்டனும் அவரைத் தொடர்ந்து புஷ்ஷும் மத்திய கிழக்கு அறபு நாடுகளை இராணுவ மயமாக்குவதில் வெறியோடு ஈடுபட்டனர். புஷ்ஷின் இராஜாங்க செயலாளர் கொண்டலீசா ரைஸ் அத்திட்டத்தின் மூலம் உருவாக்கப்படும் மத்திய கிழக்கை "ஒரு புதிய மத்திய கிழக்கு" என்று வர்ணித்தார். அவரது கால உத்தியோகபூர்வ அறிக்கைகளிலும் உரைகளிலும் இந்தச் சொல்லாடல் அதிகம் பயன்படுத்தப்பட்டது.

12 September 2012

இணையத்தில் உள்ள வீடியோவை ஒரே சொடுக்கில்விரும்பிய Format-க்கு மாற்றலாம்.

இணையத்தில் கிடைக்கும் பலவகையான வீடியோக்களில் நமக்கு பிடித்த வீடியோக்களை ஒரே சொடுக்கில் சில நிமிடங்களில் நம் கணினியில் விரும்பிய ஃபார்மெட்-ஆக மாற்றி சேமிக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. படம் 1 இணையத்தில் இருந்து வீடியோக்களை தறவிரக்க
அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது, சில வீடியோக்களில் ஆடியோ மட்டும் தான் நமக்கு தேவைப்படும் அப்படி ஆடியோ மட்டும் தேவைப்பட்டாலும் நாம் முழுவீடியோவையும் தறவிரக்கி தான் கேட்க முடியும். இனி இணையத்தில் உள்ள வீடியோ முகவரியை கொடுத்து விரும்பிய ஃபார்மெட்டுக்கு எளிதாக மாற்ற ஒரு தளம் உதவுகிறது. இணையதள முகவரி :

10 September 2012

AL-HAJ M.A.BAKKIR MAKKAR

( அன்னாரின் நினைவு தினம் இன்றாகும் )
‘தேசமான்ய’ எம்.ஏ. பாக்கீர் மாக்கார் இந்த நாட்டின் வரலாற்றில் முக்கிய தடம்பதித்த ஒரு தலைவராவார். ஐக்கிய இலங்கை மீது அசையாத நம்பிக்கை கொண்ட இத்தலைவர், பணத்தை அல்ல, நல்ல மனித உள்ளத் தைத்தான் நிறையச் சம்பாதித்தார். வழக்கறிஞராக, அரசியல்வாதி யாக, நகரசபைத் தலைவராக, அமைச்சராக, பிரதி சபாநாயராக, சபாநாயகராக, ஆளுநராக என்றெல்லாம் பதவிகளை அலங் கரித்த இத்தலைவர், களங்கமற்ற கரங்களைக் கொண்டவர். அல்லாஹ்வுக்குப் பயந்து காரியங் களை ஆற்றி திருப்தி கண்டவர். சிறந்த முஸ்லிமாக இவர் வாழ்ந்தவர். இவற்றுக்கு இடையில் ஒற்றுமையாக நல்லெண்ணத்தை வளர்¡ப்பதில் இவரின் பங்களிப்பு அலாதியானது. நேர்மையான ஓர் அரசியல் பிரமுக ராக இவர் மிளிர்ந்தார். சகலரின் அன்புக்கும் பாத்திரமானார். தமிழ் மொழியை இவர் நேசித்தார். தமிழில் பேசினார். தமிழை வளர்த்தார். கொழும்பில் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார்.

09 September 2012

மூன்று மாகாணசபைகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி

கிழக்கு, வட மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண
சபைகளுக்கான தேர்தல் முடிவுகள்
தற்போது உத்தியோகபூர்வமாக
வெளியாகியுள்ளன. இம்முடிவுகளின்
படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 3
மாகாணங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. நேற்று நடைபெற்று முடிந்த தேர்தலின்
முடிவுகள்
இன்று அதிகாலை வரை வெளியிடப்பட்டது.
இம்முடிவுகளின் பிரகாரம் ஐக்கிய மக்கள்
சுதந்திரக் கூட்டமைப்பு அதிகப்படியான
ஆசனங்களை வென்று 3 மாகாணங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.
தமிழர்களின் பலத்த
எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்
சப்ரகமுவவில் இம்முறை இரு தமிழ்ப்
பிரதிநிதித்துவங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

07 September 2012

நொக்கியாவின் இறுதி நம்பிக்கை லுமியா 920:கைகொடுக்குமா?



கையடக்கத்தொலைபேசிச் சந்தையில்
நொக்கியா என்ற சொல்லை அறியாதவர்கள்
இல்லையெனலாம்.
குறிப்பாக ஆசிய நாடுகளில்
நொக்கியாவுக்கு என்றுமே தனியான
கூட்டமிருந்தது. நியாயமான விலையில்,நீண்டகால பாவனைக்கேற்ற
அனைவருக்குமான கையடக்கத்தொலைபேசியினைத்
தயாரிக்கும் நிறுவனம் என்றால்
அது நொக்கியாதான் என இன்றும் பலர்
கூறுவதனைக் கேட்கலாம்.

குறைந்த விலை, 3 ஆம் தர மற்றும் மத்தியதர சந்தைக்கான கையடக்கத்தொலைபேசிகளைத்
தயாரிப்பதில் நொக்கியா ஜாம்பவானாகத்
திகழ்ந்தது.

06 September 2012

பக்கவாதத்தை தடுக்கும் சாக்லேட்

தொப்பையை பெருக்கச் செய்யும் என்பதால்,
சாக்லேட்டுக்கள்
உங்களது உடலுக்கு உகந்ததாக இல்லாமல்
இருக்கலாம், ஆனால், அவை முளையை பக்கவாதம்
தாக்குவதில் இருந்து தடுப்பதாக புதிய
ஆய்வுகள் கூறுகின்றன. 37 000 சுவீடன் நாட்டவர்களிடம் நடத்தப்பட்ட
ஆய்வுகளின்படி அதிகம் சாக்லேட்
சாப்பிடுபவர்களுக்கு பக்கவாதம்
வருவது குறைவாக இருப்பதாக

முதல் இலங்கைப் பெண் பாராலிம்பிக்கில்

லண்டனில் நடந்துவரும் மாற்றுத்
திறனாளிகளுக்கான பாராலிம்பிக் ஒலிம்பிக்
போட்டிகளில் முதல் முறையாய் இலங்கையைச்
சேர்ந்த பெண் ஒருவர் பெங்கேற்றுள்ளார். கை நீக்கப்பட்டவரான
அமரா இந்துமதி கருணாதிலக, லண்டன்
ஒலிம்பிக் போட்டிகளில் டி 46 குறைபாடு உள்ள
பெண்களுக்கான இருநூறு மீட்டர்
ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றுள்ளார். இதுவரை தான் இந்த தூரத்தை ஓடியதிலே மிகக்
குறைவான நேரத்தில் இந்தப் பந்தயத்தில் இவர்
ஓடியிருக்கிறார். இதற்கு முன்பு 29.56 வினாடிகளில்200 மீட்டர்
தூரத்தை ஓடியிருந்த
அமரா பாராலிம்பிக்கில் 29.36 வினாடிகளில்
இந்த தூரத்தை ஓடியுள்ளார். ஆனாலும் அமராவால் இறுதிச்
சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை. இலங்கையில் இருந்து பாராலிம்பிக்
போட்டிகளில் பங்கேற்ற முதல் பெண்ணாக தான்
ஆகியிருப்பது வாழ்வின்
திருப்புமுனை என்று அமரா பிபிசியிடம்
தெரிவித்துள்ளார். மேலும் வேகமாக ஓடி அடுத்த சர்வதேச
பந்தயத்தில் இலங்கைக்கு பதக்கம் வென்று தர
வேண்டும் என்பதுதான்
தனது லட்சியமென்று அவர் கூறினார். "இலங்கை போன்ற ஒரு நாட்டில் உடற்திறன்
பாதிக்கப்பட்டவர்கள்
மீது சமூகத்துக்கு இருக்கும் பொதுவான
அபிப்பிராயங்கள், எண்ணங்கள் மாற வேண்டும்." உடற்திறன் பாதிப்பில்லாத
விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும்
அங்கீகாரமும் ஆதரவும் தங்களுக்கு கிடைத்தால்
தங்களால் மேலும் சிறப்பாக பரிமளிக்க
முடியும் என்று அவர் கூறியிருந்தார்.THANKS:BBC TAMIL

04 September 2012

நம் லேப்டாப் (மடிக்கணினி) இண்டர்நெட்-ஐமொபைல் போன் மற்றும் அருகில் இருக்கும்கணினியில் இலவசமாக பகிர்ந்துகொள்ளஉதவும் மென்பொருள்.

கிராமம் முதல் நகரம் வரை இணைய இணைப்பு இல்லாத இடம் என்று ஏதுவுமில்லை, பெரும்பாலான இடங்களில் அதிவேக இண்டர்நெட் என்று சொல்லக்கூடிய 3G இணைப்பில் இணையம் பயன்படுத்துகிறோம், நாம் பயன்படுத்தும் இண்டர்நெட்-ஐ WIFI அருகில் மூலம் இருக்ககூடிய மொபைல் போன் மற்றும் நண்பர்களின் லேப்டாப் என அனைத்திலும் பகிர்ந்து கொள்ள ஒரு மென்பொருள் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

01 September 2012

சாம்சங் அபராதம்: 30 வண்டியில் காசுகள் (நம்பாதீங்க!)

இணையத்தில் தொழில்நுட்ப செய்திகளை வாசித்து வருபவர்களுக்கு ஆப்பிள்(Apple), சாம்சங் (Samsung) நிறுவனங்களுக்கிடையே நடந்து வரும் "பேடன்ட் யுத்தம் (Patent War)" பற்றி தெரிந்திருக்கும். அதில் சமீபத்தில் ஆப்பிள் சாதனங்களை காப்பியடித்ததற்காக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பு 5800 கோடி ரூபாய்) அபராதம் சாம்சங் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்டது.

இது பற்றிய கற்போம் தளத்தின் பதிவு: ஆப்பிள் Vs சாம்சங் - 5800 கோடி வழக்கு

 இது தொடர்பாக இணையத்தில் பரபரப்பாக ஒரு வதந்தி பரவிவருகிறது. அது,

சாம்சங் நிறுவனம் ஆப்பிளுக்கு கட்ட வேண்டிய ஒரு பில்லியன் அமெரிக்க டாலரை ஐம்பது சென்ட் காசுகளாக (நம்மூர் ஐம்பது பைசா போன்று) முப்பது வண்டிகளில் (Trucks) அனுப்பியுள்ளது. அபராதம் விதித்த நீதிமன்றம் "அதை எப்படி செலுத்த வேண்டும்" என்றெல்லாம் சொல்லவில்லை என்பதால் சாம்சங் இப்படி செய்துள்ளது. இதனால் ஆப்பிள் நிறுவனத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது உண்மையல்ல, வதந்தி ஆகும். மேலும், சாம்சங் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட அபராதம் இறுதியானது இல்லை. இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. அப்போது இந்த அபராதம் மூன்று மடங்காகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

உண்மையில் சாம்சங் இப்படி அனுப்பினால் அதை நிராகரிப்பதற்கு அமெரிக்க சட்டத்தின்படி ஆப்பிளுக்கு உரிமை உள்ளது.

இந்த வதந்தி முதலில் El Deforma என்னும் தளத்தில் வந்தது. இதனை யாஹூ தளம் வெளியிட்டதால் இணையத்தில் வேகமாக பரவியது.

நம்மூரில் ஒரு பழமொழி சொல்வார்கள்,

"உண்மை செருப்பு அணிவதற்குள், வதந்தி ஊர் சுற்றிவிட்டு வந்துவிடும்"
THANKS BLOGGERNANBAN 

உங்கள் கணிணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா?

நாம் கணணியை தொடர்ந்து உபயோகப்படுத்திக் கொண்டிருப்பதால் அதிகமான அளவு சூடு அடைகிறது. அந்த சூட்டின் நிலை 60 டிகிரி செல்சியஸைத் தொடும் போது தானாகவே ரீஸ்டார்ட் ஆகும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.

கணணியில் உள்ள டிஜிட்டல் சாதனங்கள் இயங்கும் போது நிச்சயம் வெப்ப ஆவி உருவாகி வெளியே வருகிறது. அதனால் தான் ப்ராசசர் சிப் மேலாக ஒன்றும் கேபினட் உள்ளாக ஒன்றும் என மின்விசிறிகள் அமைக்கப்பட்டு அவை அந்த வெப்பத்தை வெளியேற்றுகின்றன.