14 தினங்கள் மட்டுமே தங்குவதற்கு அனுமதி உம்ரா விசா காலாவ தியாகும் காலம் 14 தினங்களுக்கு மட்டுப்படுத்த சவூதி அரேபிய ஹஜ் அமைச்சு தீர்மானித்துள்ளது. புனித மக்கா பெரிய பள்ளிவாசலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாலேயே இந்த கட்டு ப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சவூதி நிர்வாகம் இரண்டு தினங்களுக்கு முன் வெளி நாட்டு உம்ரா முகவர்களுக்கு
அனுப்பிய சுற்று நிருபத்தின்படி, இந்த புதிய கட்டுப்பாடு இன்றைய தினம் (திங்கட் கிழமை) அமுலுக்கு வருகிறது. "ஆம், டெல்லியில் இருக்கும் சவூதி தூதரகம் எமக்கு அனுப்பிய சுற்று நிருபத்தில் ஷஹ்பான் முதலாம் திகதி முதல் உம்ரா விசா 14 தினங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது" என இந்தியாவின் ஹைத்ராபாத்தில் இருக்கும் உம்ரா முகவர்
நிறுவனத்தின் மொஹம்மத் அப்துல் ரஸ்ஸாக் குறிப்பிட்டார். ரமழான் காலத்தில் புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனா செல்ல எதிர் பார்த்திருக்கும் பல முஸ்லிம்களுக்கு சவூதி அரசின் இந்த முடிவு அதிர்ச்சி அளித்துள்ளது. உம்ரா செல்லும் யாத்திரிகர்கள் போதுமான காலம் அங்கே தங்கியிருக்க எதிர்பார்த்தே பயண ஏற்பாடுகளை செய்கின்றனர். எனினும் எதிர்வரும் இரு மாத காலத்தில்
மக்காவில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்கள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜித்தாவில் உம்ரா செயற்பாடுகளில் ஈடுபடும் பணியாளரான ரஹ்மான் அஸிஸ், இந்த புதிய கட்டுப்பாடு அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது என குறிப்பிட்டார். இந்த முடிவின் மூலம் அதிக உம்ரா யாத்திரிகர்களுக்கு வாய்ப்பு கிட்டுவதாக அவர் குறிப்பிட்டார். புதிய
சுற்றுநிருபத்தின்படி உம்ரா பயணம் 14-14 என்ற சுழற்சியில் அமையும் என ரஹ்மான் அஸிஸ் விபரித்தார். "உம்ரா விசா பதியப்பட்டு 14 தினங்களுக்குள் குறித்த யாத்திரிகர் தனது உம்ரா பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். அதேபோன்று அவர் சவூதிக்கு வந்து 14 தினங்களுக்குள் வெளியேறி விட வேண்டும்" என அஸிஸ் கூறினார். லாஹுரில் இருக்கும் முனிர் ரஹ்மான் 'அரபு நியூஸ்' இணையதளத்திற்கு
கூறும்போது, தான் கடந்த வாரம் ஒரு மாத உம்ரா விசாவை பெற்றதாக கூறினார். "ஆனால் எனது தாய்க்கு உம்ரா விசாவுக்கு இரண்டு தினங்களுக்கு முன் விண்ணப்பித்த போது அது இரண்டு வாரங்கள் மாத்திரமே செல்லுபடியாகும் வகையில் மாற்றப்பட்டிருந்தது" என்றார்.
Thanks:thinakaran
No comments:
Post a Comment