ஈரான் ஜனாதிபதி தேர்தல் நிறைவடை நிலையில்,
ஈரானின் மறுசீரமைப்பு கட்சியின் வேட்பாளர்
ஹசன் ருஹானி புதிய ஜனாதிபதியாக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சனிக்கிழமையன்று நடந்த தேர்தலில் ஹசன்
ருஹானி ஒரு கோடியே எண்பத்தைந்து லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளதாக
உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
பதிவான வாக்குகளில் 51 சதவீதத்துக்கும்
சற்று கூடுதலான
வாக்குகளை ருஹானி பெறுவதாக இந்த
எண்ணிக்கை அமைந்துள்ளது இம்முறை அதிபர் தேர்தலில் அதிகமான அளவில்
மக்கள் திரண்டு வாக்களித்தனர் என்றும்
ஓட்டுப்போட பதிவுசெய்திருந்த மக்களில் 71
சதவீதமானோர் வாக்களித்துள்ளதாகவும்
உள்துறை அமைச்சகம் கூறுகிறது.
இரண்டாவது இடத்தில் வந்த தெஹ்ரான் நகர மேயர் முகமது பாக்கர் கலிபாஃப் அறுபது லட்சம்
வாக்குகளைப் பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment