தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

28 June 2013

உம்ராவுக்கான விசா விநியோகம், ஜுலை 08 இல் நிறைவு: 4 மில்லியன் விசாக்கள் இவ்வாண்டில் விநியோகம்

உம்ரா விசா விநியோகிக் கப்படும் கடைசி திகதி எதிர்வரும் ஜுலை 8 (சஹ்பான் 29) என சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி சஹ்பான் இறுதி வரை உம்ரா விசாக்களை விநியோகிக்கும் படி அனைத்து சவூதி தூதர கங்களுக்கும் அறிவுறுத் தப்பட்டிருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒசாமா நுகாலி குறிப்பிட்டார். எனினும், இந்த ஆண்டில் இது வரையில் சுமார்
நான்கு மில்லியன் உம்ரா விசாக்கள் விநியோகிக்கப் பட்டுள்ளதென சவூதி ஹஜ் அமைச்சின் தரவுகள் குறிப்பிடுகின்றன. "சவூதி அரசு இந்த செயற்பாட்டை ஒவ்வொரு ஆண்டும் முன்னெடுப்பது வழமையாகும்" என ரியாதில் ஹஜ் மற்றும் உம்ரா செயற்பாடுகளை முன்னெடுக்கும் பயண முகவர் ஆரிப் கன்னங்ஜி குறிப்பிட்டார். "ரமழான் காலத்தில் உம்ராஹ் விசாவை ஏற்க வேண்டாம் என்று ஒவ்வொரு ஆண்டும் நாம்
அறிவுறுத்துகிறோம்" என்றும் அவர் விபரித்தார். சஹ்பான் மாதத்தில் அனைவருக்கும் விசா விநியோகிக்கப்பட்டது என்பதை உறுதி செய்யும் வகையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது என கன்னங்ஜி குறிப்பிட்டார். உம்ரா விசாவை பெறுவதற்கு 7 முதல் 14 தினங்கள் வரை எடுத்துக்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. இஸ்லாமிய நாட்காட்டியின் இரண்டாவது மாதமான சபரில் ஆரம்பமாகும்
உம்ராஹ் காலம் ரமழான் முடிவுவரை நீடிக்கும். இதில் எதிர்வரும் ஜுலை முதலாம் திகதி வரையான காலத்தில் 3.8 மில்லியன் உம்ராஹ் யாத்திரிகர்கள் சவூதியை வந்தடையவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டில் இதே காலப்பகுதியை விடவும் 400,000 அதிகரிப்பாகும். இந்த தகவலை சவூதி ஹஜ் அமைச்சு வெளியிட்டுள்ளது.
நன்றி:தினகரன்

No comments:

Post a Comment