தொடக்க ஆட்டத்தில் "பி" பிரிவில் உள்ள இந்தியா- தென்ஆபிரிக்கா அணிகள் மோதல்
7-வது ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண போட்டி இங்கிலாந்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 23- ம் திகதி வரை இந்தப்போட்டி நடை பெறுகிறது . இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் "பி" பிரிவில் உள்ள இந்தியா- தென்ஆபிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்திய அணி 2002-ம் ஆண்டு இலங்கையுடன் இணைந்து ஐ.சி.சி. சம்பியன்ஸ் கோப்பையை வென்றது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் கூட்டாக
கோப்பையை பெற்றன. அதன்பிறகு இந்திய அணி முத்திரை பதிக்கவில்லை. இதில் 8 நாடுகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டு பிரிவிலும் உள்ள அணிகள் வருமாறு:- "ஏ" பிரிவு: அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, நியு+சிலாந்து. "பி"பிரிவு: இந்தியா, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், மே.தீவு இந்தப்போட்டி "லீக்" மற்றும் "நொக்அவுட்" முறையில் நடக்கிறது. ஒவ்வொரு
அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். "லீக்" முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். 17-ம் திகதியுடன் "லீக்" ஆட்டம் முடிகிறது. 19 மற்றும் 20-ம்திகதிகளில் அரை இறுதி நடைபெறுகிறது. இறுதிப்போட்டி ஜ_ன் 23- ம் ;திகதி நடக்கிறது. 2000-ம் ஆண்டில் நியு+சிலாந்திடம் தோற்று கோப்பையை இழந்தது.
"ஸ்பாட்பிக்சிங்" சு+தாட்ட விவகாரம் இந்திய அணி ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. அதையும் பொருட்படுத்தாமல் சிறப்பாக ஆட வேண்டிய நிலை உள்ளது. பயிற்சி ஆட்டத்தில் இலங்கை, அவுஸ்திரேலியாவை வீழ்த்தியதால் நம்பிக்கையுடன் உள்ளது. தென்ஆபிரிக்க அணி 2-வது முறையாக சம்பியன்ஸ் கிண்ணத்தை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. அவுஸ்திரேலிய அணி அதிகபட்சமாக 2
முறை சம்பியன்ஸ் கிண்ணத்தை (2006, 2009) கைப்பற்றியுள்ளன. தொடர்ந்து 3-வது முறையாக வென்று "ஹெட்ரிக்" சாதனை படைக்கும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது. உலக கோப்பையை அவுஸ்திரேலியா தொடர்ந்து 3 முறை வென்று (1999, 2003, 2007) . ஹெட்ரிக் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மினி உலககோப்பை என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 1998-ம் ஆண்டு பங்களாதே'pல் அறிமுகம்
செய்யப்பட்டது. வில்ஸ் சர்வதேச கோப்பைக்கான இந்தப் போட்டியில் தென் ஆபிரிக்க அணி மேற்கிந்தியவை வீழ்த்தி சம்பியன் பட்டம் பெற்றது. அதை தொடர்ந்து 2 ஆண்டுக்கு ஒரு முறை சம்பியன்ஸ் கிண்ண போட்டி நடைபெற்று வருகிறது
thanks:thinakaran
No comments:
Post a Comment