தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

29 June 2013

பாதுகாப்பற்ற ரயில் கடவைகள்: விபத்துகள் தினமும் அதிகரிப்பு

பாதுகாப்பற்ற ரயில் கடவையில் ஏற்பட்ட விபத்தில் மேலும் இருவர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் நேற்றுக் காலை மீரிகம - அம்பலன்வத்தை பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்றது. சிறிய ரக லொறியொன்றுடன் ரயில் மோதியதில் லொறியில் பயணித்த இருவரும் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அண்மைக்காலமாக பாதுகாப்பற்ற ரயில்வே கடவைகளில் ஏற்படும் விபத்துகள்
அதிகரித்துள்ளதோடு இந்த வருடத்தில் மாத்திரம் பாதுகாப்பற்ற ரயில்வே கடவைகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 27 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 25 ஆம் திகதி அளுத்கமை பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் இறந்ததோடு இந்துருவ கைகாவ ரயில் கடவையில் 26 ஆம் திகதி நடந்த விபத்தில் மற்றொருவர் இறந்தார். இந்த நிலையில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் ஏற்படும்
விபத்துகளை மட்டுப்படுத்துவது தொடர்பில் போக்குவரத்து அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது. நாடு பூராவும் சுமார் 775 பாதுகாப்பற்ற ரயில்வே கடவைகள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அவற்றில் கூடுதல் ஆபத்துள்ள அதிக விபத்துக்கள் இடம்பெறும் 200 பாதுகாப்பற்ற ரயில்வே கடவைகள் உள்ள இடங்களில் துரிதமாக பாதுகாப்பான ரயில்வே கடவைகளை இட உள்ளதாக ரயில்வே திணைக்களம்
கூறியது. பாதுகாப்பற்ற ரயில் கடவைகளினூடாக வாகனம் செலுத்துகையில் அவதானமாக வாகனம் ஓட்டாததாலும் அதிக விபத்துகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்தனர். சாரதிகள் கவனமாக செயற்படுவதன் மூலம் ரயில் கடவைகளில் நிகழும் விபத்துகளை மட்டுப்படுத்த முடியும் எனவும் பொலிஸார் கூறினர். இந்த வருடத்திலுன் மாத்திரம் இதுவரை 21 விபத்துகள் ரயில் கடவைகளில் பதிவாகியுள்ளன. இதற்கு
முன் ரயில் கடவைகளில் காவலாளிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். தற்பொழுது தன்னிச்சையா, இயங்கும் மணி அடிக்கும் கடவைகள் பொருத்தி வருவதாக ரயில்வே திணைக்களம் கூறியது. புதிதாக ரயில் கடவைகள் பாதுகாப்பு முறையை நிர்மாணிக்க 640 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.
நன்றி:தினகரன்

28 June 2013

உம்ராவுக்கான விசா விநியோகம், ஜுலை 08 இல் நிறைவு: 4 மில்லியன் விசாக்கள் இவ்வாண்டில் விநியோகம்

உம்ரா விசா விநியோகிக் கப்படும் கடைசி திகதி எதிர்வரும் ஜுலை 8 (சஹ்பான் 29) என சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி சஹ்பான் இறுதி வரை உம்ரா விசாக்களை விநியோகிக்கும் படி அனைத்து சவூதி தூதர கங்களுக்கும் அறிவுறுத் தப்பட்டிருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒசாமா நுகாலி குறிப்பிட்டார். எனினும், இந்த ஆண்டில் இது வரையில் சுமார்
நான்கு மில்லியன் உம்ரா விசாக்கள் விநியோகிக்கப் பட்டுள்ளதென சவூதி ஹஜ் அமைச்சின் தரவுகள் குறிப்பிடுகின்றன. "சவூதி அரசு இந்த செயற்பாட்டை ஒவ்வொரு ஆண்டும் முன்னெடுப்பது வழமையாகும்" என ரியாதில் ஹஜ் மற்றும் உம்ரா செயற்பாடுகளை முன்னெடுக்கும் பயண முகவர் ஆரிப் கன்னங்ஜி குறிப்பிட்டார். "ரமழான் காலத்தில் உம்ராஹ் விசாவை ஏற்க வேண்டாம் என்று ஒவ்வொரு ஆண்டும் நாம்
அறிவுறுத்துகிறோம்" என்றும் அவர் விபரித்தார். சஹ்பான் மாதத்தில் அனைவருக்கும் விசா விநியோகிக்கப்பட்டது என்பதை உறுதி செய்யும் வகையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது என கன்னங்ஜி குறிப்பிட்டார். உம்ரா விசாவை பெறுவதற்கு 7 முதல் 14 தினங்கள் வரை எடுத்துக்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. இஸ்லாமிய நாட்காட்டியின் இரண்டாவது மாதமான சபரில் ஆரம்பமாகும்
உம்ராஹ் காலம் ரமழான் முடிவுவரை நீடிக்கும். இதில் எதிர்வரும் ஜுலை முதலாம் திகதி வரையான காலத்தில் 3.8 மில்லியன் உம்ராஹ் யாத்திரிகர்கள் சவூதியை வந்தடையவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டில் இதே காலப்பகுதியை விடவும் 400,000 அதிகரிப்பாகும். இந்த தகவலை சவூதி ஹஜ் அமைச்சு வெளியிட்டுள்ளது.
நன்றி:தினகரன்

27 June 2013

பேருவளை மீனவர்களின் துணிகரம்

கடந்த 8.6.2013 அதிகாலை கடும் மழையுடன் ஏற்பட்ட புயல் காற்றினால் பேருவளைப் பகுதியில் பாரிய சேதங்கள் ஏற்பட்டன. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்கள் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி மரணமானார்கள். இரு மீனவர்கள் காணாமல் போயினர். 17 படகுகளில் சென்ற சுமார் 34 மீனவர்கள் உயிருடன் காப்பாற்றப்பட்டனர். பேருவளை மருதானைப் பகுதி முஸ்லிம் மீனவர்களின் துணிச்சலான செயல் காரணமாக
சுமார் 13 மணித்தியாலயங்கள் கடலில் தத்தளித்த சிங்கள- முஸ்லிம் மீனவர்கள் காப்பாற்றப்பட்டனர். கடும் மழை, காற்று, கடல் கொந்தளிப்புக்கு மத்தியில் தமது உயிரை பணயம் வைத்து கடலில் இறங்கிக் காப்பாற்றிய கூட மதிக்காமல் எம்.ஆர்.எம். இர்சாத் என்ற (28 வயதுடைய) கடற்றொழிலாளரை அனைவரும் பாராட்டுகின்றனர். 17 படகுகளையும் 34 மீனவர்களையும் காப்பாற்ற இவர் மேற்கொண்ட முயற்சியை சிங்கள
மீனவர்கள் நன்றியுடன் நினைவு கூருகின்றனர். புயல் காற்று வீசி அனர்த்தம் நிகழ்ந்த பின்னர் கடலுக்குச் சென்ற மீனவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதையடுத்து அவர்களது
குடும்பத்தினர்கள்
கதறி அழுதவாறு கடற்கரையை நோக்கி அணிதிரண்டனர். மின்சார விநியோகம் தடைப்பட்டிருந்தது. கும்மிருட்டில் என்ன செய்வதென்று அறியாது மக்கள் கடலை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தனர். மீன்பிடிப் படகுகளில் மின் வெளிச்சம் காணப்படவில்லை.

24 June 2013

சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்க மேற்கு, அரபு நாடுகள் இணக்கம்

சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்திற்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர்களுக்கு அவசர இராணுவ உதவிகளை வழங்க மேற்கு மற்றும் அரபு நாடுகள் இணக்கம் கண்டுள்ளன. கட்டாரில் சனிக்கிழமை கூடிய சிரியாவின் நட்பு நாடுகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 11 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்த இந்த கூட்டத்தில் "களத்தில் இருக்கும் எதிர்ப்பாளர்களுக்கு
தேவைப்படும் இராணுவ உபகரணங்கள் மற்றும் தளபாடங்களை வழங்க" இணக்கம் காணப்பட்டது. இந்த கூட்டத்தின் இறுதி அறிக்கையில், சிரிய யுத்தத்தில் ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஈராக், ஈரான் போராளிகள் தலையிட்டுள் ளதற்கும் கண்டனம் வெளியிடப் பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் சிரிய மோதலில் இதுவரை 90,000 க்கு அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் வெளிநாட்டு ஆதரவு
பெற்ற தீவிரவாதிகளுடனேயே போராடி வருவதாக சிரிய அரசு கூறி வருகிறது. கடந்த சனிக்கிழமை கூடிய சிரிய நட்பு நாடுகள் குழுவில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளடங்குவதோடு மறுபுறத்தில் சவூதி அரேபியா, துருக்கி, எகிப்து மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளும் இணைந்துள்ளன. இதில் சிரிய கிளர்ச்சியாளர்களுக்கான இராணுவ உதவிகள்
கிளர்ச்சியாளர்களின் இராணுவ கட்டளையகத்தினூடாக விநியோகிக்க மேற்படி சிரிய நட்பு நாடுகள் இணங்கியுள்ளன. ஏற்கனவே கிளர்ச்சியாளர்களுக்கு நேரடி இராணுவ உதவியை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சிரியாவுக்கு எதிரான ஐ. நா. பாதுகாப்புச் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களை சீனா மற்றும் ரஷ்யா தொடர்ந்து முடக்கி வந்ததற்கு பகரமாகவே சிரிய
நட்பு நாடுகளின் குழு தோற்றுவிக்கப் பட்டது. "ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உடன்பாட்டை எட்டுவதில் ஏற்பட்ட தோல்வி எமது பயணத்தை நிறுத்திவிடாது" என சனிக்கிழமை கூட்டத்தில் கட்டார் பிரதமர் வலியுறுத்தினார். சிரிய கிளர்ச்சியாளர்கள் அண்மைக் காலத்தில் அரச தரப்பு தாக்குதல்களால் பின்னடைவை சந்தித்துள்ளனர். ஆனால் தமக்கு புதிய ஆயுதங்கள் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும்
இது யுத்தத்தை திசைதிருப்பும் என்றும் கிளர்ச்சியாளர்கள் வெள்ளிக்கிழமை கூறியிருந்தனர்.
Thanks:thinakaran

23 June 2013

வார இறுதி நாட்களை மாற்றும் சவுதி

சவுதி அரேபியா தனது அதிகாரபூர்வ வார
இறுதி நாட்களை வெள்ளி மற்றும்
சனிக்கிழமைகளாக மாற்றியுள்ளது. அடுத்த வாரத்தில்
இருந்து அமலுக்கு வரும் இதற்கான
உத்தரவை மன்னர் அப்துல்லாஹ்
அறிவித்துள்ளார். வளைகுடாவில் உள்ள அரபு நாடுகளில்
சவுதி அரேபியா மாத்திரந்தான்,
தமது வேலை வாரத்தை சனிக்கிழமை முதல்
புதன்கிழமை வரையாகப் பேணி வந்ததது. பொருளாதார வாய்ப்புக்களில் ஏற்படும்
இழப்பை சரி செய்ய இந்த மாற்றம்
தேவைப்படுவதாக மன்னர் அப்துல்லாஹ்
கூறியுள்ளார். ஓமான் இப்படியான ஒரு மாற்றத்தை கடந்த
மாதம் அறிவித்தது.
Source:bbc

22 June 2013

5-வது மாடியிலிருந்து விழுந்தபிள்ளையை கீழே நின்றவர்கள் பிடித்தனர்

சீனாவில்
ஐந்தாவது மாடியிலிருந்து விழுந்த
இரண்டரை வயதுப் பெண்
குழந்தை ஒன்று கீழே நின்றிருந்த ஆண்கள்
சிலரால் தரையில் விழாமல் பிடித்துக்
காப்பாற்றப்பட்ட பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்தக்
குழந்தை உறங்கிக்கொண்டிருந்தபோது அதனைத்
தனியாக வீட்டுக்குள்
விட்டுவிட்டு பெற்றோர்கள் வெளியில்
சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது. கண் விழித்து பார்த்தக்
குழந்தை அழுது கொண்டே வீட்டு ஜன்னல்
மாடத்தில் ஏறி நின்று அழுதுள்ளது. இந்தக் குழந்தையின் அழுகுரல்
கேட்டு கீழே நின்றிருந்த ஆட்கள் திரும்பிப்
பார்ப்பதை கண்காணிப்பு கேமரா படங்கள்
காட்டின. குழந்தை கீழே விழ இவர்கள் சட்டென ஓடிப்போய்
அக்குழந்தை கீழே விழாமல் பிடித்து அதன்
உயிரைக் காப்பாற்றினர். இந்தக் குழந்தையை காப்பாற்றிய முயற்சியில்
இரண்டு பேர் காயமடைந்துள்ளனர், ஆனால்
குழந்தையோ முகத்தில்
சிறு சிராய்ப்போடு உயிர்த் தப்பியது. சீசீ இந்தப் பெண் குழந்தையின் பெயராம்.

18 June 2013

ரமழானை வரவேற்போம்

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம்,
அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!
நம்மை நோக்கி வந்திருக்கும் இம்மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்கவேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் அல் குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் தெளிவு படுத்தியுள்ளது. ரமழான் மாதத்தில் முஸ்லிமான, வயது வந்த, புத்தி சுவாதினமுள்ள, ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும்.
'இறைவிசுவாசிகளே! உங்களுக்கு 
முன்னிருந்தவர்கள் மீது எப்படி நோன்பு விதியாக்கப்பட்தோ அதே போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது நீங்கள் அதன் மூலம் இறையச்சமுடையவர்கள் ஆகலாம்' (அல்பகரா 2:183).

புருலப்பிட்டிய சிங்கள வித்தியாலயம்முஸ்லிம் மாணவிகளின் சீருடைப்பிரச்சினைகளுக்கு தீர்வு

மினுவாங்கொடை- புருலப்பிட்டிய சிங்கள
மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் முஸ்லிம்
மாணவிகளின் சீருடை தொடர்பாக அண்மையில்
எழுந்த
பிரச்சினைகளுக்கு முடிவு காணப்பட்டுள்ளது. மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன
ரணதுங்கவுடன்
தொடர்பு கொண்டு இது விடயமாக
தெளிவுபடுத்தியதன் பயனாகவே இந்த குழப்ப
நிலைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளதாக
மினுவாங்கொடை பிரதேச சபை உறுப்பினர் எம்.எம்.எம். சுஹைதர் தெரிவித்தார். ''இவ்வித்தியாலயத்தில் கல்வி கற்கும் முஸ்லிம்
மாணவிகள் இனிமேல் காற்சட்டை மற்றும்
முந்தானை அணிந்து வரக்கூடாது; முஸ்லிம்
மாணவர்கள் இதன் பிறகு ஜும்ஆத்
தொழுகைக்கு செல்ல முடியாது'' என்று அதிபர்,
உப அதிபர், உள்ளிட்ட ஒரு சில ஆசிரியர் குழுவினால் மாணவர்கள்
எச்சரிக்கப்பட்டிருந்தனர். இதனால் முஸ்லிம்
மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் பெரும்
பரபரப்பு ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் மினுவாங்கொடை வலயக் கல்விப்
பணிப்பாளர் எம்.எல்.டி.என். டைட்டஸ் உடன் கடந்த
10 ஆம்
திகதி இவ்வித்தியாலயத்திற்கு நேரடியாகச்
சென்று அதிபரை சந்தித்து இது விடயம்
குறித்து கலந்துரையாடியதன் பின்னர் ''அமுல்படுத்தப்படவிருந்த இந்த விவகாரம்
தற்போது கைவிடப்பட்டுள்ளதாக அதிபர்
தம்மிடம் உறுதியளித்ததாகவும் பிரதேச
சபை உறுப்பினர் தெரிவித்தார்.
இவ்வித்தியாலயத்திற்கு செல்லும் முஸ்லிம்
மாணவ, மாணவிகள், இனிமேல் எவ்வித அச்சமும் கொள்ளாமல் முன்னர் போலவே இப்பாடசாலைக்குச்
செல்ல முடியும்'' என்றும் அவர்
பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும்
தெரிவித்துள்ளார்.




Thanks:virakesari

17 June 2013

குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சரித்திரச்சான்று

இறைவனின் திருப்பெயரால்...

குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சரித்திரச் சான்று திருக்குர் ஆன் இறைவேதம் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. இதை நம்முடைய தமிழாக்கத்தில் தெளிவாக விளக்கியுள்ளோம். அந்த வகையில் குர் ஆன் இறைவேதம் என்பதற்கான சரித்திரச் சான்றைக் கீழே தந்துள்ளோம். இது விரைவில் வெளிவரவுள்ள திருக்குர்ஆன் தமிழாக்கத்தின் 12ஆம் பதிப்பில் கூறப்பட்ட விஷயமாகும். 467. யஹ்யா என்று யாரும்
இருந்ததில்லை இவ்வசனத்தில் (19:7) ஸக்கரிய்யா நபியின் தள்ளாத வயதில் அவருக்கு ஆண்குழந்தையை அல்லாஹ் கொடுத்த செய்தியைச் சொல்கிறான். திருக்குர்ஆன் இறைவேதம் என்று நிரூபிக்க இந்த ஒரே ஒருவசனமே போதுமான ஆதாரமாக அமைந்துள்ளது. ஸகரிய்யா நபிக்கு ஆண் குழந்தையைக் கொடுக்கும் போதே அதற்கு யஹ்யா என்ற பெயரைச் சூட்டி அல்லாஹ் வழங்குகிறான். இந்தப் பெயரை இதற்கு முன் ஒருவருக்கும்
சூட்டியதில்லை எனவும் கூறுகிறான். இந்தப் பெயரை இதற்கு முன் சூட்டியதில்லை என்று அன்றைக்கு எந்த மனிதனாலும் பேச முடியாது. ஒரு மனிதன் இப்படிச் சொல்வதாக இருந்தால் அவனுக்கு உலகில் உள்ள எல்லா மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும். அன்று வரை உலகில் பிறந்த, பிறந்து மரணித்த ஒவ்வொரு நபரின் பெயரும் அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். பல்லாயிரம் கோடி மக்களின்
பெயர்களுக்குள் யஹ்யா என்ற பெயரில் ஒருவரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அதன் பின்னர் தான் இப்படிக் கூற முடியும். இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கூட இப்படி ஒரு மனிதனால் சொல்ல முடியாது. இந்த விஷயம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஜகரியா நபியிடம் இறைவன் சொன்னதாகக் கூறப்படுகிறது. யஹ்யா என்ற பெயரில் இதற்கு முன் ஒருவரும் இல்லை என்று சொன்ன பிறகு உலகில் ஏதாவது
ஒரு காலத்தில் பழங்கால ஏடுகளில் யஹ்யா என்ற பெயரில் ஒருவர் இருந்து விட்டால் இறைவசனம் பொய்யாகி விடும். ஸக்கரியா நபியிடம் அல்லாஹ் இப்படிச் சொன்னதாக முஹம்மது நபி சுயமாகக் கற்பனை செய்து சொல்லியிருக்க முடியாது. அப்படிச் சுயமாகச் சொல்ல நினைத்தால் எங்காவது யஹ்யா என்ற பெயரில் ஒருவர் இருந்து விட்டால் என்னாவது என்ற தயக்கமே இது போல் பேசுவதை விட்டும் அவரைத் தடுத்து
இருக்கும். இப்படி ஒரு பெயரில் இதற்கு முன் ஒருவர் கூட இல்லை என்று இறைவனால் தான் சொல்லி இருக்க முடியும். இன்னும் சொல்லப் போனால் ஸகரிய்யா நபியிடம் இறைவன் இப்படிச் சொன்னதாக யூத கிறித்தவ வேதங்களில் சொல்லப்படாமல் இருந்தும் திருக்குர்ஆன் இப்படிச் சொல்கிறது என்றால் இது இறைவனின் வார்த்தை என்பதில் சந்தேகம் இல்லை. பொதுவாக குழந்தைக்குப் பெயர் சூட்டுவது இறைவன்
செய்ய வேண்டிய அளவுக்கு முக்கியமானது அல்ல. அது மனிதனுக்குச் சிரமமானதும் அல்ல. அல்லாஹ் குழந்தையைக் கொடுத்து விட்டால் ஸகரிய்யா நபி பெயர் சூட்டிக் கொள்ள மாட்டார்களா? அனைத்தையும் அறிந்த இறைவனாக நான் இருக்கிறேன் என்று நிரூபிக்கவே அல்லாஹ் இப்படிச் செய்திருக்க வேண்டும். எவர் வேண்டுமானாலும் எந்தக் காலத்தில் வேண்டுமானாலும் சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
இப்படி ஒரு பெயர் சூட்டப்பட்டவரை இதற்கு முன் நீங்கள் காண முடியாது என்று அறைகூவல் விடுவது போல் இப்படி இறைவன் பேசியுள்ளான். முழு உலகிலும் எந்தக் காலத்திலும் இது இருந்ததில்லை; அது இருந்ததில்லை என்று சொல்வது மிகவும் கடினமான விஷயமாகும். ஏனெனில் நமக்குத் தெரியாமல் எங்காவது அது இருந்து தொலைத்து விட்டால் நம்முடைய மானம் கப்பலேறி விடும். கடவுளால் மட்டும் தான்
இதுபோல் அடித்துச் சொல்லி இருக்க முடியும். இவ்வசனத்தைப் பொய்யாக்க யஹ்யா என்ற பெயரில் யாராவது இருந்தால் அதை வைத்தே இஸ்லாத்தைப் பொய்யாக்கி விடலாம் என்று கங்கணம் கட்டி கிறித்தவ சபைகள் தேடிப்பார்த்தும் அவர்களால் யஹ்யாவைக் கண்டுபிடிக்கவில்லை.
source:www.onlinepj.com/kelvi_pathil/quran_virivurai/quran_irai_vetham_sarithira_sanru/

Quran - Amazing Word Repetition

15 June 2013

ஹசன் ருஹானி ஈரானின் புதியஜனாதிபதியானார்

ஈரான் ஜனாதிபதி தேர்தல் நிறைவடை நிலையில்,
ஈரானின் மறுசீரமைப்பு கட்சியின் வேட்பாளர்
ஹசன் ருஹானி புதிய ஜனாதிபதியாக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சனிக்கிழமையன்று நடந்த தேர்தலில் ஹசன்
ருஹானி ஒரு கோடியே எண்பத்தைந்து லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளதாக
உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
பதிவான வாக்குகளில் 51 சதவீதத்துக்கும்
சற்று கூடுதலான
வாக்குகளை ருஹானி பெறுவதாக இந்த
எண்ணிக்கை அமைந்துள்ளது இம்முறை அதிபர் தேர்தலில் அதிகமான அளவில்
மக்கள் திரண்டு வாக்களித்தனர் என்றும்
ஓட்டுப்போட பதிவுசெய்திருந்த மக்களில் 71
சதவீதமானோர் வாக்களித்துள்ளதாகவும்
உள்துறை அமைச்சகம் கூறுகிறது.
இரண்டாவது இடத்தில் வந்த தெஹ்ரான் நகர மேயர் முகமது பாக்கர் கலிபாஃப் அறுபது லட்சம்
வாக்குகளைப் பெற்றுள்ளார்.

Project Loon - கூகுளின் இணையப் புரட்சி?

கூகுள் நிறுவனமானது இன்டர்நெட் பயன்பாட்டை அனைத்து மக்களும் பெறும் விதத்தில் ஒரு புதிய முயற்சியில் இறங்கி உள்ளது. ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட 30 பலூன்களில் இணையதள தொடர்புகளை அளிக்ககூடிய கருவிகள் பொருத்தப்பட்டு விண்வெளியில் பறக்கவிடப்பட்டு அவற்றின் பாதை தரையிலிருந்து கட்டுப்படுத்தப்படும். இதுவரை வசதிகளில்லாத தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்கள் இதன்மூலம் இணையதள வசதிகளைப் பெறமுடியும். கூடிய விரைவில் மக்கள் இதனைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு இதன் தொழில்நுட்பம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்ட சோதனை தற்போது நியுசிலாந்து நாட்டில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. இது வெற்றிப் பெற்றால் மற்ற நாடுகளுக்கும் விரிவுப்படுத்தப்படும். இவை ஆகாய விமானங்களை விட இரண்டு மடங்கு உயரத்தில் பறக்கக் கூடியவை. இத் தொழினுட்பத்தின் மூலம் 3ஜி வேகத்துடன் கூடிய இணையதளப் பயன்பாட்டை மக்கள் பெறமுடியும். தானியங்கி கார், கூகுள் கண்ணாடி போன்றவற்றைத் தயாரித்த கூகுள் நிறுவனத்தின் பிரத்தியேகக் குழு இந்த பலூனையும் தயாரித்துள்ளது. பிராஜெக்ட் லூன் என்று பெயரிடப்பட்ட இந்த திட்டத்தின் இயக்குனர் மைக் காசிடி இதனை ஒரு நிலவு வீச்சு என்று வர்ணித்தார். தான் சொல்லும் திட்டம் விஞ்ஞானக் கதை போலத் தெரியலாம். ஆயினும் பெரிய பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய முடிவு இது என்று அவர் கூறினார். இது போன்ற பலூன்கள், பிற்காலத்தில் எங்கேனும் இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட்டு தகவல் தொடர்புகள் கிடைக்க இயலாத நிலையில் ஆகாயமார்க்கமாக மீட்புப் பணிகளில் ஈடுபட உதவக்கூடும். கீழேயுள்ள வீடியோவைப் பார்த்தால் ஓரளவு புரியும்.

உலகின் முதல் 5Gதொழில்நுட்பத்தை சோதனை செய்தது சாம்சங்

தென்கொரிய நிறுவனமான சாம்சங் குறித்து நாம் அனைவரும் அறிவோம். மின்னணு சாதனங்களுக்கு பெயர் பெற்ற இந்த அலைபேசி நிறுவனம் தற்போது உலகிலேயே முதல் முறையாக 5G தொழில்நுட்பத்தை சோதித்து பார்த்துள்ளது. இதன் மூலம் இப்போது நாம் பெறும் இணைய வேகத்தை விட பல மடங்கு அதிக அளவுக்கு மிக வேகமான இணைய இணைப்பை பெற முடியும் என்றும் அறிவித்துள்ளது அந்த நிறுவனம். 5G தொழில்நுட்பத்தை 28 GHz
அலைகற்றையில் சோதித்து 1GB தகவலை ஒரே நொடியில் பரிமாறி உள்ளது சாம்சங். அதாவது இதன் மூலம் ஒரு முழு திரைப்படத்தை நாம் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் தரவிறக்கம் செய்ய முடியும். இது தற்போது நாம் பயன்படுத்தும் 2G மற்றும் 3G ஐ விட பல ஆயிரம் மடங்கு வேகம் ஆகும். சொல்லப் போனால் Broadband ஐ விடவும் மிக அதிக வேகம். இதன் மூலம் மிக அதிக தரமுள்ள HD வீடியோக்களை மிகக் குறைந்த நேரத்தில்
பரிமாற்ற முடியும், அதே போல 3D திரைப்படங்கள் மற்றும் விளையாட்டுகளை பார்க்க முடியும், Ultra HD வீடியோக்களை Real time streaming மூலம் பார்க்கலாம். இது 2020 முதல் பயனர்களுக்கு கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது சாம்சங் நிறுவனம்.





நன்றி : கற்ப்போம்.கொம்

11 June 2013

உங்களுடைய laptop இன் Monitor ஐ ஒரே Click இல் Offபன்ன வேண்டுமா?

laptop இல் ஏதாவது செய்து கொண்டிருக்கும் போது, அதன் Monitor தேவையில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கும்.இதனால் Laptop இன் Battery தான்
வீண்விரயமாகிக்கொண்டு இருக்கும்.அந்த நேரத்தில் Monitor ஐ Off செய்வதன் மூலம், Battery மூலம் நாம் பாவிக்கும் நேரத்தை அதிகாித்து கொள் முடியும். Format Factory போன்றவற்றை பயன்படுத்தி Convert செய்து கொண்டிருக்கும் போது, Pinnacle , Power Director, Video Studio போன்றவற்றில் Video File ஆக மாற்றும் போது மற்றும் இணையத்தில் இருந்து பொிய File ஒன்றை Download செய்யும் போது, போன்ற சந்தா்ப்பங்களில் அதிக நேரம் எடுத்துக்கொள்வதால்,
நம்முடைய வேறு வேலைகளை செய்து கொள்ள முயற்சிப்போம்.இந்த நேரத்தில் Monitor இன் தேவை நமக்கு பெரும்பாலும் தேவைப்படாது.Pc ஆக இருந்தால் Monitor ஐ Off செய்துவிட்டு செல்லலாம் ஆனால், Laptop இற்கு அப்படி இல்லியே? என்ற கவலையை போக்க இந்த சிறிய மென்பொருள் உதவுகிறது. இதில் ஒரே க்ளிக் மூலம் laptop இன் Monitor ஐ Off செய்ய முடியும் (விரும்பிய செக்கன் கொடுத்தும் Off பன்ன முடியும்) அதுமட்டும்மில்லாது அதை
செய்வதற்கு விரும்பிய Shortcut ஐயும் அமைக்க முடியும்.
Download செய்ய
http://www.mediafire.com/download.php?
wjs5zj7vlit7spk




நன்றி:அறிவின் உச்சக்கட்டம்

10 June 2013

உம்ரா விஸாவுக்கான கால எல்லை கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுல்

14 தினங்கள் மட்டுமே தங்குவதற்கு அனுமதி உம்ரா விசா காலாவ தியாகும் காலம் 14 தினங்களுக்கு மட்டுப்படுத்த சவூதி அரேபிய ஹஜ் அமைச்சு தீர்மானித்துள்ளது. புனித மக்கா பெரிய பள்ளிவாசலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாலேயே இந்த கட்டு ப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சவூதி நிர்வாகம் இரண்டு தினங்களுக்கு முன் வெளி நாட்டு உம்ரா முகவர்களுக்கு
அனுப்பிய சுற்று நிருபத்தின்படி, இந்த புதிய கட்டுப்பாடு இன்றைய தினம் (திங்கட் கிழமை) அமுலுக்கு வருகிறது. "ஆம், டெல்லியில் இருக்கும் சவூதி தூதரகம் எமக்கு அனுப்பிய சுற்று நிருபத்தில் ஷஹ்பான் முதலாம் திகதி முதல் உம்ரா விசா 14 தினங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது" என இந்தியாவின் ஹைத்ராபாத்தில் இருக்கும் உம்ரா முகவர்
நிறுவனத்தின் மொஹம்மத் அப்துல் ரஸ்ஸாக் குறிப்பிட்டார். ரமழான் காலத்தில் புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனா செல்ல எதிர் பார்த்திருக்கும் பல முஸ்லிம்களுக்கு சவூதி அரசின் இந்த முடிவு அதிர்ச்சி அளித்துள்ளது. உம்ரா செல்லும் யாத்திரிகர்கள் போதுமான காலம் அங்கே தங்கியிருக்க எதிர்பார்த்தே பயண ஏற்பாடுகளை செய்கின்றனர். எனினும் எதிர்வரும் இரு மாத காலத்தில்
மக்காவில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்கள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜித்தாவில் உம்ரா செயற்பாடுகளில் ஈடுபடும் பணியாளரான ரஹ்மான் அஸிஸ், இந்த புதிய கட்டுப்பாடு அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது என குறிப்பிட்டார். இந்த முடிவின் மூலம் அதிக உம்ரா யாத்திரிகர்களுக்கு வாய்ப்பு கிட்டுவதாக அவர் குறிப்பிட்டார். புதிய
சுற்றுநிருபத்தின்படி உம்ரா பயணம் 14-14 என்ற சுழற்சியில் அமையும் என ரஹ்மான் அஸிஸ் விபரித்தார். "உம்ரா விசா பதியப்பட்டு 14 தினங்களுக்குள் குறித்த யாத்திரிகர் தனது உம்ரா பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். அதேபோன்று அவர் சவூதிக்கு வந்து 14 தினங்களுக்குள் வெளியேறி விட வேண்டும்" என அஸிஸ் கூறினார். லாஹுரில் இருக்கும் முனிர் ரஹ்மான் 'அரபு நியூஸ்' இணையதளத்திற்கு
கூறும்போது, தான் கடந்த வாரம் ஒரு மாத உம்ரா விசாவை பெற்றதாக கூறினார். "ஆனால் எனது தாய்க்கு உம்ரா விசாவுக்கு இரண்டு தினங்களுக்கு முன் விண்ணப்பித்த போது அது இரண்டு வாரங்கள் மாத்திரமே செல்லுபடியாகும் வகையில் மாற்றப்பட்டிருந்தது" என்றார்.




Thanks:thinakaran

08 June 2013

பேருவளை கடற்பகுதியில் மீட்புப் பணியில் விமானப் படையினர்! ஐந்து மீனவர்கள் பலி: 17 பேரைக் காணவில்லை!

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 5 மீனவர்கள்
உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காணாமல்
போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ
மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. மேலும் 20 க்கும் அதிகமான படகுகள்
விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், அவற்றில்
இருந்த 20 மீனவர்கள்
காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் மத்திய நிலையம்
மேலும் தெரிவிக்கின்றது. பலமான காற்றினால் 20 வீடுகள் முற்றாக
சேதமடைந்துள்ளதுடன் 396 வீடுகள்
பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும்
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
குறிப்பிடுகின்றது.
பேருவளை கடற்பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்ட இலங்கை விமானப் படையினரை படங்களில் காணலாம்.

06 June 2013

மட்டு. சிறாஜிய்யா அரபுக்கல்லூரிக்கு இனந்தெரியாத ோரால் தீ வைப்பு

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ்
பிரிவிட்குட்பட்ட ஓட்டமாவடி ஜும்ஆ
பள்ளிவாயலுக்கு முன்பாக அமைந்துள்ள
சிராஜிய்யா அரபுக்கல்லூரிக்கு இன்று வியாழ
க்கிழமை அதிகாலை 03.30 மணியளவில்
இனந்தெரியாத குழுவொன்றினால் தீ வைக்கப்பட்டுள்ளது.
இதனால் அரபுக்கல்லூரியின் மேல் மாடியில்
அமைந்துள்ள அதிபர் அலுவலகம், மாணவர்களின்
படுக்கறை விடுதி, விடுதியிலுள்ள
பொருட்கள், மாணவர்களின் ஆடைகள், கணனிகள்;
உள்ளிட்ட சுமார் 6 இலட்சம் ரூபா பெறுமதிமிக்க உடமைகள், பொருட்கள்;
தீயில் கருகி சேதமாகியுள்ளதாக
சிராஜிய்யா அரபுக்கல்லூரியின்
பிரதி அதிபர் யூ.ஏ.மஜீத் (சிறாஜி)
தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதியில்
தங்கி கற்றல்களை மேற்கொண்டு வந்த
மாணவர்களுக்கு கடந்த 29.05.2013ஆம்
திகதி விடுமுறை வழங்கப்பட்ட
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியே குறித்த தீ
வைக்கப்பட்டுள்ளமையால் எவ்வித உயிர்ச் சேதமும் இடம்பெறவில்லை எனவும் அவர்
தெரிவித்தார்.
சம்பவம் இடம்பெற்ற போது தான் கல்லூரியில்
இருக்கவில்லை எனவும் அதிகாலை 4 மணியளவில்
எனக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து தான்
ஸ்தலத்திற்குச் சென்று அங்கு ரோந்து நடவடிக்கையில்
ஈடுபட்டிருந்த இராணுவத்தினரின்
உதவியுடனும் பொதுமக்களின் உதவியுடனும் தீ
மேலும் பரவாமல் கட்டுபாட்டுக்குள்
கொண்டு வரப்பட்டதாகவும் அவர் மேலும்
தெரிவித்தார். குறித்த சம்பவம் தொடர்பில் யார் மீதும்
சந்தேகமில்லை எனவும் இது தொடர்பில்
வாழைச்சேனைப் பொலிஸில்
முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர்
தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் இரண்டு பெற்றோல் போத்தல்கள் காணப்படுவதுடன் பெற்றோலினாலேயே குறித்த
விடுதியை இனந்தெரியாதவர்கள்
எரித்திருக்கலாம் எனத்
தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தீ விபத்து சம்பந்தமான மேலதிக
விசாரணைகளை வாழைச்சேனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

7-வது ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண போட்டி இன்று இங்கிலாந்தில் ஆரம்பம்

தொடக்க ஆட்டத்தில் "பி" பிரிவில் உள்ள இந்தியா- தென்ஆபிரிக்கா அணிகள் மோதல்


7-வது ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண போட்டி இங்கிலாந்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 23- ம் திகதி வரை இந்தப்போட்டி நடை பெறுகிறது . இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் "பி" பிரிவில் உள்ள இந்தியா- தென்ஆபிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்திய அணி 2002-ம் ஆண்டு இலங்கையுடன் இணைந்து ஐ.சி.சி. சம்பியன்ஸ் கோப்பையை வென்றது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் கூட்டாக
கோப்பையை பெற்றன. அதன்பிறகு இந்திய அணி முத்திரை பதிக்கவில்லை. இதில் 8 நாடுகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டு பிரிவிலும் உள்ள அணிகள் வருமாறு:- "ஏ" பிரிவு: அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, நியு+சிலாந்து. "பி"பிரிவு: இந்தியா, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், மே.தீவு இந்தப்போட்டி "லீக்" மற்றும் "நொக்அவுட்" முறையில் நடக்கிறது. ஒவ்வொரு
அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். "லீக்" முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். 17-ம் திகதியுடன் "லீக்" ஆட்டம் முடிகிறது. 19 மற்றும் 20-ம்திகதிகளில் அரை இறுதி நடைபெறுகிறது. இறுதிப்போட்டி ஜ_ன் 23- ம் ;திகதி நடக்கிறது. 2000-ம் ஆண்டில் நியு+சிலாந்திடம் தோற்று கோப்பையை இழந்தது.
"ஸ்பாட்பிக்சிங்" சு+தாட்ட விவகாரம் இந்திய அணி ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. அதையும் பொருட்படுத்தாமல் சிறப்பாக ஆட வேண்டிய நிலை உள்ளது. பயிற்சி ஆட்டத்தில் இலங்கை, அவுஸ்திரேலியாவை வீழ்த்தியதால் நம்பிக்கையுடன் உள்ளது. தென்ஆபிரிக்க அணி 2-வது முறையாக சம்பியன்ஸ் கிண்ணத்தை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. அவுஸ்திரேலிய அணி அதிகபட்சமாக 2
முறை சம்பியன்ஸ் கிண்ணத்தை (2006, 2009) கைப்பற்றியுள்ளன. தொடர்ந்து 3-வது முறையாக வென்று "ஹெட்ரிக்" சாதனை படைக்கும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது. உலக கோப்பையை அவுஸ்திரேலியா தொடர்ந்து 3 முறை வென்று (1999, 2003, 2007) . ஹெட்ரிக் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மினி உலககோப்பை என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 1998-ம் ஆண்டு பங்களாதே'pல் அறிமுகம்
செய்யப்பட்டது. வில்ஸ் சர்வதேச கோப்பைக்கான இந்தப் போட்டியில் தென் ஆபிரிக்க அணி மேற்கிந்தியவை வீழ்த்தி சம்பியன் பட்டம் பெற்றது. அதை தொடர்ந்து 2 ஆண்டுக்கு ஒரு முறை சம்பியன்ஸ் கிண்ண போட்டி நடைபெற்று வருகிறது




thanks:thinakaran

04 June 2013

உங்கள் செல்போனில் இருந்து கணணியை இயங்க வைப்பது எப்படி?

அநேகமாக இணையப் பயனாளர்கள்
அனைவருக்கும் Team Viewer
பற்றி தெரிந்து இருக்கும்.
பெரும்பாலனோர் கணினியில்
இதை பயன்படுத்தியும் இருப்பீர்கள்.
இதை இலவசமாக உங்கள் Android போனுக்கும் பயன்படுத்த இயலும். இந்த இந்த
Application மூலம் உங்கள் கணினியில் Team Viewer இருந்தால் அதன் மூலம்
உங்கள் கணினியை உங்கள் Android ஃபோனை பயன்படுத்தி Control செய்யலாம்.
இதன் மூலம் உங்கள் கணினியில் ஆன்டிராய்ட் போன் பயன்படுத்தி, உங்களுக்கு
தேவையான வேலைகளை செய்து கொள்ள முடியும். கணினியில் வரும் File Transfer
வசதி மட்டும் அலைபேசியில் இல்லை. Online ல் இருக்கும் Team Viewer
நண்பர்களை காண இயலும். விண்டோஸ், லினக்ஸ், மேக் என்று அனைத்து இயங்கு
தளங்களிலும் இயங்க முடியும். Keyboard பயன்படுத்தும் வசதியை மிக எளிதாக
வழங்கி உள்ளது. இதன் மூலம் கணினியில் உள்ள Keyboard தரும் வசதிகளை
நீங்கள் இதிலேயே செய்யலாம். left click, right click, drag & drop,
scroll wheel, zoom போன்ற அனைத்தும் உள்ளது. இதனால் உங்கள் வேலை மிகவும்
எளிதாகிறது, அதே சமயத்தில் எந்த இடத்தில் இருந்தும் உங்கள் கணினியை இயக்க
முடிகிறது. Team Viewer பற்றி அறிந்தவர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய
ஒன்று இது. முக்கியமாக உங்கள் கணினியில் Team Viewer இருக்க வேண்டும்.
இதை தரவிறக்கம் செய்ய...

https://play.google.com/store/apps/details?id=com.teamviewer.teamviewer.market.mobile

02 June 2013

தேனீக்களின் வழி அறியும் திறன்

68, 69. "மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ
அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது
இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!''474 என்று உமது இறைவன் தேனீக்களுக்கு
அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம்
வெளிப்படுகிறது.259 அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது.
சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் தக்க சான்று உள்ளது.26 474
தேனீக்களின் வழி அறியும் திறன் இவ்வசனத்தில் (16:68) தேனீக்களை நோக்கி
உனது இறைவனின் பாதைகளில்
எளிதாகச் செல் என்று தேனீக்களுக்கு உள்ளுணர்வை ஏற்படுத்தியதாகக்
கூறப்படுகிறது. தேனீக்கள் பாதைகளை அறிவதில் தனித்து விளங்குகின்றன என்பதை
இன்றைய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து பிரிட்டனைச் சேர்ந்த
ராயல் ஹாலோவே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானிகள் ஆய்வு
ஒன்றை மேற்கொண்டனர். அந்த ஆய்வறிக்கையில் அவர்கள் கூறியுள்ளதாவது

வர்த்தக நிறுவனங்களாக மாறும் தனியார் வைத்தியசாலைகள்

தனியார் ஆஸ்பத்திரிகள் இன்று நோயாளிகளிடமிருந்து நியாயமற்ற முறையில்
பணத்தைப் பறிக்கும் வர்த்தக நிறுவனங்களாக மாறிவருகின்றன.
நாரஹேன்பிட்டியவிலுள்ள தேசிய இரத்த நிலையம் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு
ஒரு அலகு அல்லது ஒரு பக்கெட் இரத்தத்தை 1,100 ரூபாவுக்கு மாத்திரமே
விற்பனை செய்கின்றது. ஆயினும் தனியார் ஆஸ்பத்திரிகள் அந்தப் பக்கெட்
இரத்தத்தை நோயாளிகளுக்கு 20 ஆயிரம் ரூபாவுக்கும், வேறு சில தனியார்
ஆஸ்பத்திரிகள் 30 ஆயிரம் ரூபாவுக்கும் விற்பனை செய்து ஒரு பக்கெட்டில்
மாத்திரம் 18 ஆயிரம் ரூபா முதல் 28 ஆயிரம் வரை கொள்ளை இலாபம் திரட்டுவதாக
அங்கு சென்று சிகிச்சை பெறும் நோயாளிகள் அங்கலாய்க்கிறார்கள். அது போன்று
தனியார் ஆஸ்பத்திரிகளில் சத்திரசிகிச்சை, மருத்துவ சிகிச்சை பிரசவம்,
போன்ற அனைத்துக்கும் ஆயிரக்கணக்கில் பணத்தை நோயாளிகளிடமிருந்து
அறவிடுகின்றன. அரசாங்க ஆஸ்பத்திரிகளை விட தனியார் ஆஸ்பத்திரிகளில் சிறந்த
பராமரிப்பும் வைத்திய சிகிச்சையும் இருப்பதனால் அரசாங்க ஆஸ்பத்திரிகளில்
தங்கியிருந்து நோயைக் குணமாக்குவதற்கு முடியாத நிலையில் உள்ள
செல்வந்தர்கள் மட்டுமின்றி சராசரி வருமானம் பெறுபவர்கள் கூட தனியார்
ஆஸ்பத்திரிகளை தங்கள் நோயைக் குணமாக்குவதற்கு நாடிச் செல்கின்றனர்.
இதற்கென அவர்கள் கைவசம் இருக்கும் பணத்தை செலவிட்ட பின்னர் மேலதிகமாக
கடன் பட்டு தனியார் ஆஸ்பத்திரிகளுக்கான கட்டணங்களை செலுத்த
வேண்டியுள்ளது. இது பற்றி சுகாதார அமைச்சின் அதிகாரியொருவருடன் தொடர்பு
கொண்டு கேட்ட போது தனியார் ஆஸ்பத்திரிகளை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ்
கொண்டு வருவதற்கு தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூறினார். அவரது
கூற்று உண்மையாகவிருந்தால் அரசாங்கம் ஏன் ஒரு சட்டத்தை பாராளுமன்றத்தில்
நிறைவேற்றி தனியார் ஆஸ்பத்திரிகளை கண்காணிப்பதற்கான ஒரு அமைப்பை
ஏற்படுத்த முடியாது என்று இந்த ஆஸ்பத்திரிகளுக்குச் சென்று சிகிச்சை
பெறுபவர்கள் வினா எழுப்புகிறார்கள். நம் நாட்டு மக்களை நோயிலிருந்து
காப்பாற்றி உடல் நலத்துடன் வாழ்வதற்கு வழி வகுக்கும் முகமாகவே அரசாங்கம்
இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னரும் சுதந்திரம் பெற்ற பின்னரும்
அரசாங்க ஆஸ்பத்திரிகளை ஏற்படுத்தின. 1960ஆம் தசாப்தம் வரை எமது அரசாங்க
ஆஸ்பத்திரிகள் சுகாதாரத் திற்கேற்புடைய வகையில் நோயாளிகளுக்கு சிகிச்சை
அளிக்கும் பணியை சிறப்பாக நிறைவேற்றின. ஆயினும் காலப்போக்கில்
அரசாங்கத்தை எதிர்நோக்கியிருந்த பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக
ஆஸ்பத்திரி களுக்கு அரசாங்கம் வழமையாக ஒதுக்கிய நிதி குறைக்கப்பட்டது.
அதனால் நான்கு நாளைக்கு ஒரு தடவை நோயாளிகளின் கட்டில் விரிப் புகள்
மற்றும் தலையணை உறைகள் சலவை செய்யும் முறை கைவிடப் பட்டு அவை இரண்டு
மூன்று வாரங்களுக்கு நோயாளிகள் மாறினாலும் அவை மாற் றப்படாத நிலையில்
இருக்கும். இதனால் நோயைக் குணப்படுத்துவதற்கு அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு
வரும் நோயாளிகளில் சிலருக்கு வேறு நோய்களும் தொற்றுவதுண்டு. இத்தகைய
சூழ்நிலையில் அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு சென்று அசெளகரியமான நிலையில்
சிகிச்சை பெற விரும்பாதவர்ககளுக்கு சிகிச்சை பெற உதவும் முகமாக
அரசாங்கங்கள் தனியார் ஆஸ்பத்திரிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி அளித்தது.
இதன் அடிப்படையில் 1920ஆம் ஆண்டு தசாப்தத்தில் யூனியன் பிளேஸில் முதல்
தடவையாக ஒரு தனியார் ஆஸ்பத்திரி ரத்னம் ஆஸ்பத்திரி என்ற பெயரில்
ஆரம்பிக்கப்பட்டது. அதையடுத்து டாக்டர் எம். சி. எம். கலீல் தனியார்
ஆஸ்பத்திரி மருதானையில் ஆரம்பிக்கப்பட்டது. சில காலத்துக்குப் பின்னர்
கொழும்பு கிராண்ட்பாஸில் சுலைமான் ஆஸ்பத்திரி ஆரம்பிக்கப்பட்டது. பின்னர்
நாடெங்கிலும் சிறிய தனியார் ஆஸ்பத்திரிகள் ஆரம்பிக்கப்பட்டன. அன்றைய
காலகட்டத்தில் இந்த தனியார் ஆஸ்பத்திரிகள் நியாயமான கட்டணத்தையே அங்கு
சிகிச்சை பெறும் நோயாளிகளிடமிருந்து அறவிட்ட போதும் அவர்களுக்கு சிறந்த
வசதிகளுடன் வைத்திய சிகிச்சையைக்கொடுத்து நோய்கள் குணமாக்கப்பட்டன.
1977ஆம் ஆண்டில் ஜே. ஆர். ஜயவர்தனவின் ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரத்தைக்
கைப்பற்றியவுடன் அன்றைய அரசாங்கத் தலைவரான ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன
கட்டுப்பாடற்ற பொருளாதாரக் கொள்கையை இலங்கையில் முதல் தடவையாக அமுலாக்கி
சகலவித வர்த்தக முயற்சிகளுக்கும் வரிச்சலுகையைப் பெற்றுக்கொடுத்தார்.
இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி பல செல்வந்தர்கள் பாரிய அடிப்படையில்
தனியார் ஆஸ்பத்திரிகளை நாடெங்கிலும் குறிப்பாக கொழும்பு மாநகரத்திலும்
ஆரம்பித்தனர். இந்த ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளின் புறம்பான அறைகளின்
தொலைக்காட்சிப் பெட்டிகள், தொலைபேசி வசதி, மற்றும் குளிரூட்டும் வசதி
அனைத்தும் பெற்றுக் கொடுக்கப்பட்டதனால் ஓர் அறைக்கு 8 முதல் 10 ஆயிரம்
ரூபா வரை நாளொன்றுக்கு கட்டணமாக பெறப்பட்டது. அத்துடன் மருந்து,
சத்திரசிகிச்சை வசதிகளுக்கும் பெருமளவு பணம் கட்டணமாக அறவிடப்பட்டது.
இதனால் ஒரு நோயாளி சத்திரசிகிச்சை செய்ய வேண்டுமாயின் ஒரு இலட்சம்
ரூபாவுக்கும் கூடுதலான பணத்தைச் செலவிட வேண்டியிருக்கிறது. இருதய
சத்திரசிகிச்சை செய்பவர்கள் 5 முதல் 6 இலட்சம் ரூபாவரை செலவிட
வேண்டியிருக்கிறது.



Source:thinakaran. lk/Vaaramanjari/2013/06/02/?fn=n1306021

சீரற்ற காலநிலை: இடி, மின்னல் எச்சரிக்கை, மண்சரிவு அபாயம்

தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற
காலநிலை மேலும் சில தினங்களுக்குத் தொடரும் என வானிலை அவதான நிலையம்
தெரிவிக்கின்றது. நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை
பெய்யுமெனவும் சில மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும்
தெரிவித்துள்ள வானிலை அவதான நிலையம், இடி, மின்னலிலிருந்து தம்மைப்
பாதுகாத்துக்கொள்ள எச்சரிக்கையுடன் செயற்படுமாறு மக்களை
அறிவுறுத்துகின்றது. இதேவேளை, புத்தளம் - யாழ்ப்பாணம் வரையிலான கடற்
பிரதேசங்களிலும் காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலுமான கடற்
பிரதேசங்களில் மழையுடன் கூடிய காற்று வீசும் எனவும் கடல் கொந்தளிப்பு
காணப்படுமெனவும் வானிலை அவதான நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.
குறிப்பாக காலி - ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்
பிரதேசத்தில் 50 மற்றும் 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனவும்
அவர் தெரிவித்தார். மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் குருநாகல்,
புத்தளம் மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யுமெனவும் சில பகுதிகளில்
இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, நேற்றும்
மேல் மாகாணத்தில் சீரற்ற காலநிலையால் தொடர்ந்து காலை முதல் மழை
தொடர்ந்தது. கடந்த இரண்டு தினங்களாக மழை, வெள்ளம், மின்னல் உள்ளிட்ட
இயற்கை அனர்த்தத்தினால் பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கிரிவுல்ல
பகுதியில் பாடசாலையொன்றின் மீது மின்னல் தாக்கியதில் மாணவர்கள் 14 பேர்
பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன்
யக்கலமுல்ல என்ற இடத்தில் சிவப்பு மழை பெய்துள்ளதாகவும் தகவல்கள்
கிடைத்துள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி பிரதேசத்தில் நேற்று
முன்தினம் வீசிய மினி சூறாவளியினால் 41 வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன்
தெனியாய பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவினால் 16 குடும்பங்கள்
இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.