தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 10 Apr 2025

14 April 2013

கருப்பை மாற்றுச் சிகிச்சை மூலம் கர்ப்பிணியான பெண்

ஒருவரிடமிருந்து பெறப்பட்ட கர்ப்பப்
பையை சத்திரசிகிச்சை மூலம்
பொருத்திக்கொண்ட துருக்கிய பெண்ணொருவர்
வெற்றிகரமாக கர்ப்பம் தரித்துள்ளார். கர்ப்பப்பை இன்றி பிறந்த இந்தப் பெண்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்
கர்ப்பப்பை மாற்று சிகிச்சை செய்துகொண்டார். அந்தப் பெண்ணின் ஒரு கருமுட்டையையும்
அவரது கணவரது விந்தணுவையும் ஐவீஎஃப்
சிகிச்சை மூலம் இந்தக் கருப்பைக்குள் மாற்றிய
நிலையில் அந்தப் பெண் இப்போது இரண்டு வார
கால கர்ப்பிணியாகியுள்ளார். குழந்தை பிறந்ததும் இந்த 22 வயதான பெண்தான்
உலகிலேயே கர்ப்பப்பை மாற்றுச்சிகிச்சை மூலம்
குழந்தை பெற்ற முதல் பெண் என்பார்
என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment