தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 08 Apr 2025

02 April 2013

'பெஷன் பக்' களஞ்சியசாலை மீதான தாக்குதல்: சந்தேகநபர்கள் 17 பேரும் விடுதலை

பெபபிலியான பகுதியில் அமைந்துள்ள 'பெஷன் பக்' ஆடை விற்பனை நிலையத்தின் களஞ்சியசாலை மீது கடந்த 28 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுடன் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பிக்குகள் உட்பட 17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்களை இன்று கங்கொடவில் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தினர். இதன்போது 'பெஷன் பக்' நிறுவனத்தினர், இந்த வழக்கினை தொடர்ந்து மேற்கொள்ள தேவையில்லை எனநீதவானுக்கு அறிவித்தனர். இதனையடுத்து நீதவான் சந்தேக நபர்கள் 17 பேரையும் எச்சரித்து விடுதலை செய்தார். Source:http://www. virakesari.lk/article/local.php?vid=3783

No comments:

Post a Comment