ஊர் செய்திகள்
date
04 April 2013
பர்மா : பௌத்தர்களின் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள்
பர்மாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் மீது,
அங்கு அண்மையில் ஏற்பட்ட மத வன்செயல்கள்
பெரும் கறையை ஏற்படுத்தியிருக்கின்றன. கடந்த வருடத்தில் அங்கு மேற்கு ரக்கைன்
மாகாணத்தில் ஏற்பட்ட வன்செயல்களில்
ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள்
இடம்பெயர்ந்தார்கள். இடம்பெயர்ந்தவர்களில்
பெரும்பானமையினர் தொடர்ச்சியாக
தாக்குதல்களுக்கு உள்ளாகிவரும் றொஹிஞ்ஞா முஸ்லிம் சிறுபான்மையினர். தற்போது அந்த வன்செயல்கள் நாட்டின் இதயப்
பகுதிக்கும், அதாவது முன்னாளைய அரச
தலைநகரான
மாண்டலேக்கு தென்கே பரவியிருக்கிறது. ஒரு பௌத்த பிக்கு கொல்லப்பட்டு விட்டதாக
பரவிய செய்தியை அடுத்து மெய்ட்டிலா நகரில்
ஆத்திரமடைந்த கும்பல் தாக்கியதில் 40 க்கும்
அதிகமானோர் கொல்லப்பட்டனர். பல தலைமுறைகளாக அங்கு கணிசமான
சிறுபான்மையினராக அந்தப் பகுதிகளில்
வாழ்ந்துவந்த முஸ்லிம்கள் இந்த தாக்குதலில்
இலக்கு வைக்கப்பட்டனர். பல கடும்போக்கு பௌத்த பிக்குகளே இந்த
தாக்குதலுக்கு காரணம் என்ற
குற்றச்சாட்டு உள்ளது. முஸ்லிம்கள் பர்மாவில் அனைத்து துறைகளிலும்
ஆக்கிரமிப்பதாகக் கூறி பௌத்தர்கள் இந்த
தாக்குதல்களை நடத்தியுள்ளனர். ஆனாலும், மையநீரோட்டத்தில் உள்ள பிக்குகள்
இப்படியான வன்முறைகளில்
சம்பந்தப்படுவதில்லை என்று செய்தியாளர்கள்
கூறுகிறார்கள். முஸ்லிம் வணிக நிறுவனங்களுக்கு எதிராக பல
பிரச்சாரங்களையும் பௌத்தர்கள்
மேற்கொண்டு வருகிறார்கள். பர்மா எங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மத்தியில்
அச்சம் என்பது மிகவும் உச்சத்தில்
காணப்படுகின்றது. அதிகரித்து வருகின்ற
சகிப்புத்தன்மை இன்மையை எவ்வாறு கையாள்வது
என்பது குறித்து புதிய அரசாங்கம்
தெளிவில்லாமல் இருக்கிறது. முன்னே நகர்ந்து முன்னேற வேண்டும்
என்று நினைக்கின்ற இந்த
நாட்டுக்கு இது ஒரு பின்னடைவுதான்.
Thanks:bbc
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment