தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 10 Apr 2025

13 April 2013

இலங்கை : முகத்தை வெண்மையாக்கும் கிரீம்களில்பாதரசம்

இலங்கையில் விற்கப்படும்
முகத்தை வெண்மையாக்கும் கிரிம்கள்
சிலவற்றில் பாதரசத்தின் அளவு அதிகமாக
இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இலங்கை, தாய்லாந்து மற்றும் சீனா ஆகிய
நாடுகளில் உற்பத்தியாகும் இத்தகைய 40
வகையான கிறீம்களில் இந்த பாதரசம் (மேர்குரி)
அளவு , உரிய மட்டத்தைவிட அதிகமாக
காணப்படுவதாக ஒரு சுற்றுச்சூழல்
அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில்
உள்ள இருவேறு ஆய்வுகூடங்களில் இவை குறித்த
ஆய்வுகள் நடத்தப்பட்டதாகவும், அவற்றின்
மூலமே இந்த தகவல் தெரியவந்ததாகவும், அந்த
ஆய்வை நடத்திய சுற்றாடல் நீதிக்கான மத்திய
நிலையம் கூறியுள்ளது. இந்த ஆய்வு நடவடிக்கைகள அந்த
நிலையத்தை சேர்ந்த ஹேமந்த விதானகே என்பவர்
நடத்தியுள்ளார். இந்த விடயங்கள்
குறித்து பிபிசி தமிழோசைக்கு தகவல் தந்த
இலங்கை சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரான, எஸ்.
விஸ்வலிங்கம் அவர்கள், இந்த இரசம் கூடிய
கிரீம்கள் தோலில் உள்ள மெலனின்
பதார்த்தத்தை வெளியேற்றி அதனை வெண்மையாக்குவதாகவும், அதேநேரம்
அது தோலின் ஊடாக உடலினுள் நுழைந்து பல
தோல்வியாதிகளை ஏற்படுத்துவதாகவும்
தெரிவித்தார். குறிப்பாக இலங்கையின் பின்தங்கிய பகுதிகள்,
மலையக தோட்டப் பகுதிகள் ஆகியவற்றில்
குறைந்த விலையில் பெண்கள் மத்தியில் இந்த
கிறீம்கள் பிரபலமாக விற்கப்படுவதாகவும்
அவர் கூறினார். இவை குறித்து தாம் இலங்கை அரசாங்கத்துக்கு
எச்சரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.




source:http://www.bbc. co.uk/tamil/sri_lanka/2013/04/130413_lankafairnes.shtml

No comments:

Post a Comment