தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 10 Apr 2025

10 April 2013

பேஸ்புக்கை வேகமாக பயன்படுத்துவது எப்படி?

பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் சமுதாய இணைய வலைத் தளமாக பேஸ்புக் தளம் உயர்ந்து வருகிறது. இந்த தளத்தில் பயன்படுத்தக் கூடிய ஷார்ட்கட் கீகளை இங்கு

காணலாம்.
ஷார்ட்கட் கீகளைப் பயன்படுத்தும் முன், முதல் கீயான மாடிபையர் கீ ( கீ போர்டின் செயல்பாட்டினை மாற்றித் தரும் கீ) நீங்கள் பயன்படுத்தும் பிரவுசருக்கானது என்ன என்று அறிந்து, அதனை இணைக்க வேண்டும்.
விண்டோஸ் இயக்கத்தில் பயர்பாக்ஸ் பிரவுசருக்கு Alt+Shift, குரோம் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் Alt. இந்த கீகளுடன், கீழே தரப்படும் கீகளை இணைத்துப் பயன்படுத்தலாம்.
1. புதிய மெசேஜ் பெற -M
2. பேஸ்புக் சர்ச் -?
3. நியூஸ் பீட் தரும் ஹோம் பேஜ்- 1
4. உங்கள் புரபைல் பேஜ் 2
5. நண்பர்களின் வேண்டுகோள்கள் – 3
6. மெசேஜ் மொத்தம் -4
7. நோட்டிபிகேஷன்ஸ் 5
8. உங்கள் அக்கவுண்ட் செட்டிங்ஸ் 6
9. உங்கள் பிரைவசி செட்டிங்ஸ் – 7
10. பேஸ்புக் ஹோம் பக்கம் 8
9. பேஸ்புக் ஸ்டேட்மென்ட் மற்றும் உரிமை ஒப்பந்தம் -9
10. பேஸ்புக் ஹெல்ப் சென்டர் -O
இறுதியில் தரப்பட்டுள்ள கீகளை, மேலே குறிப்பிட்டது போல, அந்த மாடிபையர் கீயுடன் பயன்படுத்த வேண்டும்.
எடுத்துக் காட்டாக, பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துபவர்கள், அவர்களின் புரபைல் பேஜ் பெற Alt+Shift+2 பயன்படுத்த வேண்டும்.

இந்த ஷார்ட்கட் கீகளில் உள்ள எண்களை, நம்லாக் செய்து கீ பேடில் இருந்து பயன்படுத்தக் கூடாது. எழுத்துக்களுக்கு மேலாக உள்ள எண்களுக்கான கீகளையே பயன்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment