தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

22 April 2013

இருமல் மருந்து வகைகளின் பாவனையில் புதிய கட்டுப்பாடுகள்

இலங்கையில் இருமலுக்கு பயன் படுத்தப்படும் மருந்து வகைகளின் விற்பனையை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் கோடைன் (Codeine) டெக்ஸ்ட்ரோ மெத்தோர் பான்(Dextromethorphan) போலோடைன்(Pholoodeine), டிஹைட்ரோ கோடையின் (Dihydro Codeine) ஆகிய இரசாயனப் பதார்த்தங்கள் அடங்கியுள்ள மாத்திரைக ளினதும், பாணி மருந்துகளதும் விற்பனையைக் கட்டுப்படுத்துவதற்கே சுகாதார
அமைச்சு நடவடிக்கை எடுத்து இருக்கின்றது. இந்த வகையில் இப் பதார்த்தங்கள் அடங்கியுள்ள மாத்திரை களையும் பாணி மருந்து வகைகளையும் அரசாங்க ஒசுசல மருந்தகங்களுக்கு மாத்திரமே விற்பனை செய்வதற்கு ஏற்றவகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார். மேற்படி இரசாயனப் பதார்த்தங்கள் அடங்கிய மாத்திரைகளையும் பாணி
மருந்துகளையும் அண்மைக்காலமாக போதைக்காக பயன்படுத்துவது தெரிய வந்ததையடுத்து இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். மேற்படி இரசாயனம் அடங்கி யுள்ள மருந்துகளை தனியார் மருந்தகங் களில் விற்பனை செய்ய முடியாது. இலங்கையில் இருமலுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வகைகளின் விற்பனை, மட்டுப்படுத்தல் விற்பனை நடவடிக்கை ஒழுங்குபடுத்தல்
என்பவற்றுக்காக அழகு சாதனப் பொருட்கள் மற்றும் தேசிய மருந்து பொருள் அதிகார சபையின் அழகு சாதனப் பொருட்கள், மருந்து தொழில்நுட்ப ஆலோசனை குழுவினார் கடந்த 18ம் திகதி பல முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளனர். இதற் கேற்ப மேற்படி தீர்மானங்கள் அமுலுக்கு வரவுள்ளன. இதன்படி இந்த மருந்துகளை விநியோகிக்கும்போது இரண்டாவது உப அட்டவணைக்கு ஏற்ப தகுதியும் அனு பவமும் பெற்ற
மேற்கத்திய டொக்டர் களின் சிபார்சின் பேரில் மட்டும் ஏப்ரல் 19 முதல் விற்பனை செய்வது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. தற்போது கையிருப் பில் உள்ள EPHEDRINE (எபட்ரைன்), அல்லது PSEUDOPHEDRINE (செடோபெடரைன்), அடங்கிய பாணியை யும் மாத்திரைகளையும் இருக்கும் கையிருப்பு பூர்த்தி பெறும் வரை மட்டும் விற்பனை செய்ய 03 மாதகால அவகாசம் வழங்கப் பட்டுள்ளது. 03 மாதங்களுக்குள், இவற்றை விற்றுத் தீர்க்க
வேண்டும். தவறும் பட்சத்தில் சந்தையிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். 03 மாதங்களுக்கு மேல் இவற்றை விற்றால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ORAL ANTIHISTAMINE (ஒரல் என்டிகிஸ்ட்மைன்ஸ்), ORAL ANTI TiSSIVEி (ஒரல் என்டி ரிஸ்ஸ¤), ORAL NASAL DECCONGESTANT (ஒரல் நாசல் டெக்கான்ஜெஸ்டன்), ORAL ANTI TISSIVEி (ஒரல் என்டி ரிஸ்ஸ¤) BRONCHOLDILATOR (புரொன்கோடிலேட்டர்) ஆகியவற்றை மட்டும் அதிகார சபை எதிர்காலத்தில் பதிவு
செய்யும் இந்த மருந்து பாவனையில் உறக்கத்தன்மை ஏற்படலாமென உற்பத்தி லேபல்களில் குறிப்பிட வேண்டும். பின்வருவனவற்றின் உற்பத்திகளைப் பதிவு செய்வதை முழுமையாக இடை நிறுத்துவதற்கும் தேசிய மருந்துப் பொருட்கள் அதிகார சபை தீர்மானித் துள்ளது. சளியை நிறுத்தப் பயன்படுத் தப்படும் (ANTITUSSIVE) (என்டிரிஸ்யூ), (EYPECTORANT) (எக்ஸ் பெக்டோடன்ட்), (ANALGESIC) (எனல்ஜெஸ்ரிக்), (எப்பஹெட்ரைன்), PSEUDOEPHEDRINE
(செடோபெடிரின்), PHENYLPROPANOLAMINE EPEHEDRINE (பீனைல்புரோபனோலமைன் எபிட்ரைன்) அல்லது PWEUDOEPHEDRINE, DEXTROMETHORPHAN அடங்கிய இறக்குமதி உற்பத்தியையும், அனுமதிப் பத்திரத்தையும் உடனடியாக அமுலுக்கு வரும் வண்ணம் அழகுச் சாதனப் பொருட்கள் மற்றும் தேசிய மருந்து அதிகார சபை பணிப்பாளரின் கீழ் பொறுப்பேற்க தீர்மானிக்கப்பட் டுள்ளது. இதன் கீழ், பதிவு செய்யப் பட்ட சான்றிதழ், இறக்குமதி சான்றிதழ் மேற்படி
மருந்து மாற்றத்தின் கீழ் மருந்து பொருள் அதிகார சபைப் பணிப்பாளரின் கீழ் பொறுப்பேற்பதற்கும் தீர்மானிக்கப் பட்டதாக அழகு சாதனப் பொருட்கள் மற்றும் தேசிய மருந்து பொருள் அதிகார சபை யின் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த பெனரகம தெரிவித்தார்.


நன்றி:மர்லின் மரிக்கார்
Thinakaran

No comments:

Post a Comment