தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

19 July 2016

துருக்கி சொல்லித் தரும் சேதி!


அந்த ஒரு இரவுக்குள் எல்லாம் முடிந்து விட்டது. அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்!!! மக்கள் சக்தியோடு விளையாட முடியாது!
பிந்திய இரவுப் பிராத்தனைகள் மனம் குளிர வைத்து விட்டன. மக்கள் உள்ளங்களை கொள்ளை கொண்ட தலைவர் அர்துகானின் அழைப்புக்கு துருக்கி உடனடியாக பதில் கொடுத்து அர்த் சாமத்தில் சதிக்கு எதிராக வீதிக்கு வந்தனர். இஸ்தான்பூல் விமானநிலையத்தை விட்டு சதியில் ஈடுபட்ட ராணுவம் பின்வாங்கியது. பொலிஸ் படையும் அர்துகானுக்கு பக்கபலமாக இருந்தது.
சதிப் புரட்சிக்கு முன்னால் அமரிக்கா, இஸ்ரேல், எமிரேட்ஸ் இருப்பதாக துருக்கி பிரதமர் அறிவித்திருந்தார். குறிப்பாக துருக்கியை சீரழப்பதற்கு பல தடவை முயற்சி செய்த நயவஞ்சன் பத்ஹுல்லா கோலான் பின்ணணியில் நேராடியாக செயற்படுவதாக துருக்கி நீதி அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
“அனைத்து சக்திகளையும் மிகைக்கக் கூடிய அதிகாரம் வல்ல அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் இல்லை” ஈமான் ததும்பும் மக்கள் தலைவன் அர்துகானின் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் இவை.
மேற்கும், சியோசின சக்திகளும், அரபு சியோனிஸ்ட்களும்
இந்த சதிக்காக எத்தனை கோடிகளை கொடுத்திருப்பார்கள். நிச்சயமாக எகிப்துக்கு கொடுத்ததை விட பலமடங்கு அதிகமாவே கொடுத்திருப்பார்கள். ஆனால் ஐந்து சதம் செவில்லாமல் ஒரு தொலைபேசி அழைப்பில் அல்லாஹ் அவருக்கு வெற்றியை கொடுத்தான். நிச்சயமாக அவனை மிகைக்க யாரும் இல்லை.
சியோனிஸத்தின் விசுவாசியாக இருந்து சுதந்திர துருக்கியை மீண்டும் எதிரிகளின் கைக்கு தாரைவார்க்க பதஹுல்லா கோலான் எடுத்த முயற்சிகள் ஏராளம். ஏற்கனவே ஒரு நுற்றாண்டுக்கு முன்பு அதாதுர்க் அந்த ஈனச் செயலை செய்தார். இன்று கோலான் அதனை பிரதி எடுக்கப் பார்த்திருக்கின்றார்.
பதஹுல்லா கோலானின் முஸ்லிம் முகம்
துருக்கியின் ஆன்மீகத் தலைவர் பதீஉஸ் ஸமான் ஸஈத் நூர்ஸியின் சிந்தனையால் தாக்கம் பெற்ற மாணவர்களில் ஒருவனே பதஹுல்லா கோலான். மதச்சார்பின்மைக்கு எதிராக போராடிய ஆன்மீக ஞானி பதீஉஸ்ஸமான் நூர்ஸி அவர்கள் அரசியல் வழிமுறையை கடுமையாக நிராகரித்து வந்தவர். ஒரு முறை ஷைத்தானிடமிருந்தும் அரசியலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறேன் என்று பிராத்தனை செய்தவர்.

அந்த வழியில் அடியொட்டி வந்த மாணவனாக பதஹுல்லா கோலான் துருக்கியில் அறிமுகமானான். இஸ்லாமிய சமூகமொன்றை கட்டி எழுப்புவதற்காக பாடுபடும் ஆன்மீக தலைவராக மதிக்கப்பட்டார். கோலானும் தனது குருவை போலவே அரசியலை எதிர்த்து கருத்து வெளியிட்டான். ஜிப்ரீல் வந்து அரசியிலில் ஈடுபடுமாறு ஏவினாலும் நான் அதில் ஈடுபடமாட்டேன் என்று பகிரங்கமாக அறிவித்து குருவை மிஞ்சிய சிஷ்யனாக மாறினான். பச்சை பச்சையாக புழுகிவிட்டு முழுக்க அரசியல் செயற்பாட்டில் கண்ணும் கருத்துமாக அடியெடுத்து வைத்தவன் தான் பதஹுல்லா கோலான்.
ஏமாற்றும் வித்தையை நன்று கற்ற வித்தகர்களைத்தான் சியோனிசம் எப்போதும் களமிறக்கும்.
மக்கள் பிரபல்யத்துடன் நாட்டில் ஒரு கருப்பாடாக சியோனிசத்தின் கைப்பாவை கோலான் அதிகாரம் செலுத்தும் அளவிற்கு வளர்ந்து வந்தான்.
தூய இஸ்லாமிய அரசியல் போக்கை கடைப்பிடித்த இஸ்லாமியவாதியான பொறியியலாளர் நஜ்முதீன் அர்பகானின் அரசியலைக் கூட கோலான் கடுமையாக விமர்சித்தான். அமரிக்காவை இஸ்லாமிய உலகின் எதிரியாக அர்பாகான் கண்ட போது அமரிக்காவுடனும் மேற்குடனும் இணங்கி ஒத்துழைத்துப் போக வேண்டும் என்று கூறிய கோலான் மதச்சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து ஒப்பந்தங்களும் செய்து கொண்டான்.
கருத்து முரண்பாடு காரணமாக அர்பகானின் கட்சியில் இருந்து பிரிந்து வந்த அர்துகான் அவர்கள் நீதிக்கும் அபிவிருத்திற்குமான கட்சியை உருவாக்கி அரசியல் களத்தில் செயற்பட்டபோது கொத்தும் பாம்பான பதஹுல்லா கோலானின் ஜமாஅத் செயற்பாடுகளுக்கு தாராளமாக இடம் கொடுத்தார். கோலானின் ஜமாஅத்தை சார்ந்தவர்கள் அர்துகானின் காலத்தில் நீதித்துறையிலும், ராணுவத்திலும் சேர்ந்து செயற்படுவதற்கு ஆதரவளித்தார். நாடு முழுவதிலும் நாட்டுக்கு வெளியிலும் கோலானின் இஸ்லாமிய ஆரம்பப் பள்ளிக் கூடங்களை திறப்பதற்கு உதவி செய்தார். இந்தப் பள்ளிக் கூடங்களுக்கு உலகளவில் பெரும் பிரபல்யம் உண்டு. Learnium International School எனும் பெயரில் இலங்கையிலும் இப்பாடசாலைகள் உள்ளன.
அர்துகான் அவர்கள் தனது நுணுக்கமான திட்டத்தின் வழியாக நீதியான அரசியல் வளர்ச்சிக்கு சாபக்கேடாக அமைந்த துருக்கிய ராணுவத்தின் பலத்தை ஒடுக்கி எழுச்சிப் பாதையில் அடியெடுத்து வைத்திருந்த கால கட்டம் அது.
ஐரோப்பாவின் நோயாளியாக வர்ணிக்கப்பட்ட துருக்கி, பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எழுச்சி பெற்று வரும்போது தான் அர்துகானுக்கும் கோலானுக்குமிடையில் முரண்பாடுகள் தோன்றின. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படத்தானே வேண்டும்.
நயவஞ்சகன் கோலான் தனது செல்வாக்கை பயன்படுத்தி அர்துகானின் கட்சி ஆதரவாளர்களை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சித்தான்.
அர்துகான் அவர்கள் துருக்கியின் தலைவலியாக காணப்பட்ட குர்திஷ் போராட்டத்தை மிக நுணுக்கமான வழிமுறைகளை கையாண்டு முடிவுக்கு கொண்டுவந்தார். பல தசாப்தங்களாக நீண்டு வந்த ஒரு போரட்டம் ஓய்ந்தது. ஆனால் அதன் வெற்றிக்காக ரகசிய பேச்சு வார்தையை மேற்கொண்ட புலனாய்வுத்துறை தலைவர் விசாரிக்கப்படவேண்டும் என பதஹுல்லா கோலான் போரடத் தெடாங்கினான். ஏன் இது? அதுதான் அன்று அவருக்கு புரியவில்லை. இன்று நன்றாகவே புரிந்து விட்டது.
காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை சுமந்து சென்ற துர்க்கிய மர்மரா கப்பல் இஸ்ரேல் படைகளால் தாக்கப்பட்டது. ஸியோனிசத்தை பகைத்துக் கொண்டு உதிவிகள் அனுப்பியது அர்துகானின் தவறான செயற்பாடு என கோலான் கடுமையாக விமர்சனம் செய்தார். வளர்த்த கடா மார்பில் பாய ஆரம்பித்தது. வளர்க்கும் போது அது ஒரு கடா என்று மட்டும் தான் அன்று அர்துகானுக்கு தெரியும்.
அவ்வாறே அறபு வசந்தத்திற்கு அர்துகான் ஆதரவு வழங்கியதையும் முர்ஸிக்கு சார்பான நிலைபாட்டை எடுத்தமைக்குமாக கோலான் எதிர்ப்பு தெரிவித்தார்.
1990ம் ஆண்டில் ஈராக்கின் தலைவராக இருந்த ஸதாம் ஹுஸைன் இஸ்ரேலுக்கு எதிராக விடுத்த ஏவுகனை தாக்குதலினால் குழந்தைகள் தாக்கப்பட்டார்கள். அப்போது அதற்கு எதிராக குரல் கொடுத்த கோலான் இன்று வரை இஸ்லாமிய உலகில் நாய்போல சுட்டுத்தள்ளப்படும் குழந்தைகளுக்காக ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
இவ்வளவும் நடந்து முடிந்த பின்னர் தான் பதஹுல்லா கோலானின் மீது பலத்த சந்தேகங்கள் தோன்றின. அவன் சியோனிசத்தின் உளவாளியாக இருப்பானோ எனவும் சந்தேகம் எழுந்தது.
அர்துகானின் செயற்பாடுகளை அரசியல் தவறு என்று விமர்சிக்க யாருக்கும் உரிமையுண்டு. தவறுகளை சுட்டிக்காட்டுவது, முறையாக விமர்சிப்பது வரவேற்கத்தக்க நல்ல பண்புகளாகும்.
ஆனால் பதஹுல்லா கோலான் விமர்சனம் என்ற எல்லையை தாண்டி அர்துகானின் பணிமனையை கருவிகள் பொறுத்தி உளவுபார்க்கத் தொடங்கினான். அர்துகானின் ஆட்சிக்கு எதிராக பல தடைவ பல சூழ்சிகள் செய்து வந்தான்.
இஸ்லாத்தின் எதிரிகளுடன் சமரசம் செய்து கொண்டான். தற்போது சிகிச்சைக்காக என்று கூறி அமெரிக்காவின் கலிபோனியாவில் வாழ்ந்து வருகின்றான். ஆனால் தனது விசுவாசிகளை அரச பதவிகளிலும் ராணுவத்திலும் ஊடுருவச் செய்து அங்கிருந்து கொண்டே இயக்கி வருகின்றான். நேற்றிரவோடு அந்த அதிகார ஆசை மண்ணைக் கவ்வி விட்டது.
எழுச்சி பெற்று எழும்பி வரும் துருக்கின் பாதையில் குறுக்கே நின்று செயற்படுபவராக கோலான் அன்று முதல் இன்று வரை கோடாரிக்காம்பாகவே இருந்து வந்துள்ளான்.
எனவேதான் பிரதமர் அர்துகான் அந்த சூழ்சிகளை முறியடிக்கும் வகையில் பல முன்னெடுப்புக்களை எடுத்துள்ளார். எடுத்து வருகின்றார்.
அர்துகானின் அதிரடி நகர்வுகள் கடந்த 2014 மார்ச் 30ம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தரில் அவருக்கு பலத்த சரிவை ஏற்படுத்தும் என்றே கோலானின் ஜமாஅத் கருதியது. பதிலாக அர்துகானின் கட்சி பெரும் வெற்றி பெற்றது.
துருக்கியின் அரசியல் களத்திற்கு காலடி எடுத்துவைத்த கோலானின் ஜமாஅத்தினர் தங்களை ‘அரசியல் இஸ்லாமியம்’ பேசுபவர்களாக வேறுபடுத்திக்காட்டினர். துருக்கியின் தாய்க்கட்சியான தேசிய கட்சிக்கும், போலன்ட் எசாவிடின் தலைமையில் இருக்கும் இடதுசாரி ஜநாயக கட்சிக்கும் ஆதரவளித்து வந்தனர். அர்பகானின் கட்சிகளுக்கு ஒரு போதும் ஆதரவு தரவில்லை. ஒரு முறை ‘எனக்கு மறுமையில் மன்றாடும் உரிமை இருந்தால் அதனை எசாவிட் அவர்களுக்கே பயன்படுத்துவேன் என கோலான் குறிப்பிட்டதை யாரும் இலகுவில் மறந்து விட முடியாது.
மேற்கில் மிதவாத இஸ்லாமிய அமைப்புக்களின் தரத்தில் கோலானின் ஜமாஅத் மதிக்கபப்டுகிறது. அந்த நற்பெயரை பாதுகாப்பதிலும் மிக கரிசனையோடு அவர்கள் செயற்படுகிறார்கள். இந்த நற்பெயர் காரணமாக அவார்களுக்கு சொந்தமான பாடசாலைகள் உலகளவில் வியாபித்துள்ளது. ஆனால் அவாகள் ஏனைய இஸ்லாமிய அமைப்புக்களை எதிர்க்கும் தீவிர போக்கை கடைப்பிடிக்கின்றனர். முஸ்தபா என்ற பெயரில் சீயா பள்ளிக் கூடங்கள் வியாபித்து இருப்பது போன்றுதான் கோலானின் சியோனிச பாடசாலைகள் வியாபித்து வருகின்றன.
ஆயுதம் தரித்த இஸ்லாமிய இயக்கங்களோடு ஹமாஸ் போராளிகளையும் சேர்த்து பயங்கரவாதிகள் என்றும் இஸ்லாத்திற்கு இழிவை தேடித் தருபவர்கள் என்றும் கோலானின் ஜமாஅத் சிந்தனைக் காணப்படுகிறது.
கோலானின் ஜமாஅத், மதங்களுக்கும் நாகரிகங்களுக்குமிடையிலான உரையாடல் மற்றும் சகிப்புத்தன்மையை வளர்க்க வேண்டும் என்ற வழிமுறையை ஆதரித்து வருகின்றது. அந்த வகையில் 1998ம் ஆண்ட கோலான் வத்திகான் விஜயம் செய்ததையும், ஸியோனிச அமைப்பான Anti-Defamation League தலைவர் அப்ராஹாம் போக்ஸ்மனுடான சந்திப்பையும் குறிப்பிடலாம்.
ரஷ்ய அதிகாரிகள் கோலானின் ஜமஅத்திற்கு சொந்தமான கம்பணிகளையும், பள்ளிக்க கூடங்களையும் சி.ஐ.ஏ விற்கு சார்பாக தொழிற்படும் முகவர்கள் என்று குற்றம் சாட்டியுள்ளனர். அந்தக் குற்றச் சாட்டுளை கோலானின் ஜமாஅத் மறுத்தள்ளது.
ஸஈத் நுர்ஸியின் சிந்தனைத் தாக்கத்தினால் உருவான பல ஜமாஅத்கள் துருக்கியில் காணப்படுகின்றன். அவை கோலானின் அனைத்துக் கருத்துக்களையும் நிலைப்பாடுகளையும் ஏற்றுக் கொள்வதில்லை. அவற்றுக்கிடையே பலத்த கருத்து முரண்பாடுகள் உண்டு. மிகப் பிரபல்யம் பெற்ற நூர்ஸியின் ஒரு மாணவரான முஹம்மத் கீரிகீன்ஜீ அர்துகானையும் அவரது ஆட்சியையும் நேசிப்பவர் என்பது இங்கு குறிப்பிடத்த விடயமாகும்.
உலகளவில் பிரபல்யம் அடைந்த கோலானின் பல்லிக்கூட வருடாந்த நிகழ்வுகளில் ஆண்-பெண் கலந்து பாடிக் கூத்தாடும் கலாசார நிகழ்ச்சியும் உண்டு. ஏனைய இஸ்லாமிய அமைப்புக்கள் வன்மையாக விமர்சிக்கும் ஒரு நிகழ்ச்சிகளில் அதுவும் ஒன்றாகும்.
என்பதுகளில் நாட்டில் ஹிஜாப் தடை சட்டம் வந்தபோது அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களும் அதனை எதிர்க்கவே செய்தது. ஆனால் கோலான் ஹிஜாப் அணிவது இஸ்லாத்தின் அடிப்படையல்ல. அது ஒரு கிளை அம்சமே. எனவே கல்வியை தொடர்வதற்காக ஹிஜாப் அணிவதை விட்டு விடுமாறு கோரிக்கை விடுத்தான்.
இங்கு பதஹுல்லா கோலன் சூழ்ச்சி வழிமுறையில் நாட்டுக்குள் ஊடுருவல் செய்வதற்கும், நாட்டை ஆக்கிரமிப்பதற்கும் பல தடவை முயற்சிகள் மேற்கொண்டமை கவனிக்கத்தக்கதாகும்.
எனவேதான் பதஹுல்லா கோலானின் ஜமாஅத்தை சேர்ந்த அவருக்கு பிரதிநிதியாக பதவிக்கு வர இருந்த முக்கியஸ்தர்களில் ஒருவர், நாட்டுக்கு வரப்போகும் பாரிய அபாய நிலையை அவதானித்து இவ்வளவு அழகா கட்டியெழுப்பபடும் துருக்கி நாட்டை ஸியோனிசத்துக்கு மீண்டும் தாரை வார்ப்பதா என அவர் மனச் சாட்சி உருத்த, கோலானின் அத்தனை திட்டங்களையும், சதி முயற்சிகளையும, அது சார்ந்த ஆவணங்களையும் அர்துகானிடம் 2014களில் ஒப்படைத்தார்.
அறபு சியோனிசத்தின் பலத்த ஆதரவுடன் சதிகாரன் பதஹுல்லா கோலான் அரங்கேற்றும் மெகா தொடர் நாடகம் இன்னும் முடிந்ததாக கூற முடியாது.
சூழ்ச்சிகளுக்கெல்லாம் சூழ்ச்சிக்காரன் அல்லாஹ், எதிரிகளின் சதித் திட்டங்களை ஒரே இரவில் தவிடுபொடியாக்கி விடுவான்.
எதிர்காலம் இஸ்லாத்திற்கே என்பது ஒவ் வொரு முஃமினது இரத்தத்தில் ஊறிப்போன ஈமானாகும். அந்த நம்பிக்கையை சதி செய்து அழித்து விட முடியாது.
அர்துகானின் ஆட்சி நீடிக்க வேண்டும் என யாசிக்கின்றோம். ஏன்?
அவர் சத்தியத்தோடு கைகோர்த்துள்ளார். அநீதிக்கு தூக்குப் போட்டு நீதியை வாழவைக்கின்றார். அடக்குமுறைக்கு எதிராக போராடுகிறார். மக்கள் நலன் பேணுகிறார். நாட்டு மக்கள் மட்டுமல்ல உலக மாந்தர்கள் அனைவரும் சுதந்திரத்தை சுவாசிக்க வேண்டும் என பாடுபடுகின்றார். அராஜகம் அழியவேண்டும் என குரல் கொடுக்கின்றார். வன்முறைக்கு எதிராக போராடுகின்றார். ஜனநாயகத்தை வாழவைக்கின்றார். சர்வாதிகாரத்தை பிடுங்கியெடுத்து மக்கள் கருத்தை அமுலுக்கு கொண்டுவருகின்றார். மொத்தத்தில் அவர் நீதிக்காகவும், சுதந்திரத்திற்காகவும், சமத்துவத்திற்காகவும் உழைக்கும் ஒரு போராளி.
எனவே தான் சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் அவர் உழைப்பை மதிக்கின்றார்கள். நீதியை நேசிக்கும் உள்ளங்கள் அனைத்தும் அவரது எழுச்சியை வரவேற்று பாராட்டுகின்றன. சிலருக்கு அது வீர வணக்கம் போல் தெரிகிறது. வயிர் எரிகிறது. ஏகிரி எகிரி தடுமாறுகிறது.
‘அர்துகான் பாவங்களில் இருந்து பாதுகாக்கப்பட்டவர் என்றோ அல்லது சமூக விவகாரங்களுக்காக அவரது கையில் மந்திரக் கோல் ஒன்று இருக்கின்றது என்றோ நாம கூறிவில்லை. அவர் சமூத்தின் திட்டங்களை முன்னிறுத்தி நாட்டை முன்னேற்றியவர் என சவுதி அறிஞரும், மக்கா திறந்த பல்கலைகழகத்தின் தலைவருமான கலாநிதி அலி அல்உமரி குறிப்பிட்டுள்ளார்.
நபிகளார் (ஸல்) அவர்கள் முதல் வஹி வந்தபோது திகைத்தார். பயந்து வந்து போர்த்துங்கள் என்று அன்பு மனைவி கதீஜா (ரழி) அவர்களிடம் கூறினார்கள். அப்போது கதீஜா அம்மையார் நபிகளாரப் பார்த்துக் கூறினார்கள் ‘ பயப்படவேண்டாம் அல்லாஹ் உங்களை ஒருபோதும் அவமானப்படுத்தவே மாட்டான். காரணம் கஷ்டத்தில் இருப்பவனுக்கு உதவுகிறீர்கள். இல்லாதவனுக்கு கொடுக்கின்றீர்கள். வந்தோரை கவனிக்கின்றீர்கள். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறீர்கள். எனவே பயப்பட வேண்டாம்.
ரஜப் தையிப் அர்துகானே! இந்த அத்தனையும் உலகம் அறிய உங்களிடம் இருக்கிறது. மேலதிகமாக அகதிகளுக்கும் புகழிடம் கொடுத்து கௌரவிக்கின்றீர்கள். எனவே உங்களோடு நாம் இருக்கின்றோம் என உலகமே உரக்க கூறுகிறது. உங்கள் நேரான பாதையில் சீராக பயணியுங்கள். உங்களுக்கு இந்தப் பாதையில் ஒரு போதும் தோல்வி கிடையாது. ஒன்றோ வெற்றி அல்லது ஷஹாதத்.
இந்தத் தரணியிலே முதன் முதல் ஈமான் கொண்டு, வாழும் போதே சுவன மாளிகைக்கு அருகதை பெற்ற அம்மையார் கதீஜா நாயகியின் பிராத்தனையும் சுப செய்தியும் கணீரெண்டு ஒலிக்கும் போது நீங்கள் பயப்படத் தேவையில்லை.
வாழ்க அர்துகான்!


– முஹம்மத் பகீஹுத்தீன் –
நன்றி:மீள்பார்வை

No comments:

Post a Comment