தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

30 April 2013

மனோ-விக்கிரமபாகு-அசாத் சாலி இணைந்து கொழும்பில் இனவாதத்திற்கு எதிராக மேதின ஊர்வலம்

கொழும்பில் இன மதவாதத்திற்கு எதிராக
ஜனநாயக மக்கள் முன்னணி, நவ சமசமாஜ கட்சி,
தேசிய ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகள்,
அரசு-தனியார்துறை தொழிற்சங்கள், வெகுஜன
அமைப்புகள், பெண்கள் அமைப்புகளுடன்
இணைந்து தலைநகரில் மேதின ஊர்வலத்தையும், கூட்டத்தையும் நடத்த உள்ளன. இந்த
ஊர்வலத்திலும், கூட்டத்திலும் கொழும்பில்
வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள்
அணிதிரண்டு கலந்துகொள்ள வேண்டும் என
ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன்
அழைப்பு விடுத்துள்ளார். மனோ கணேசன், விக்கிரமபாகு கருணாரத்ன,
அசாத் சாலி ஆகிய கட்சி தலைவர்களும், தமிழ்
தேசிய கூட்டமைப்பின்
பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக எம். ஏ.
சுமந்திரன் எம்பியும், ஜனநாயக மக்கள்
முன்னணியின் மாகாணசபை, மாநகரசபை, நகரசபை மக்கள் பிரதிநிதிகளும்,
மூன்று கட்சிகளினதும் அங்கத்தவர்களும்,
ஆதரவாளர்களும் கலந்து கொள்ளும் இந்த மேதின
நிகழ்வு தொடர்பில் மனோ கணேசன் மேலும்
கூறியதாவது,
இனவாதத்தையும், மதவாதத்தையும் எதிர்க்க இன்று தமிழ், முஸ்லிம் மக்களுடன்
பெருந்தொகையான சிங்கள
மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும்
தொழிற்சங்கங்களும் எம்முடன்
கரங்கோர்த்துள்ளார்கள்.
கொழும்பில் சிங்கள சகோதர மக்களுடன் சமத்துவமாக ஒற்றுமையுடன் வாழ தமிழ்,
முஸ்லிம் மக்கள் தயார் என்ற
செய்தியை நமது கூட்டு மேதினம் மூலம் நாம்
அறிவிப்போம். ஆகவே இந்த மேதின நிகழ்வில்
கொழும்பில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள்
அணிதிரண்டு கலந்துகொண்டு எங்கள் கரங்களை பலப்படுத்த வேண்டும் என
அழைப்பு விடுக்கின்றேன்.
மே முதலாம் திகதி நண்பகல் 1
மணிக்கு கொழும்பு புறக்கோட்டை குணசிங்கபுர
பிரைஸ் பார்க் பூங்கா மைதானத்தில்
இருந்து ஊர்வலம் ஆரம்பித்து மத்திய கொழும்பு நகர வீதிகள் வழியாக
சென்று மீண்டும் பிரைஸ் பார்க்
பூங்கா மைதானத்துக்கு திரும்பி அங்கு மேதின
பொதுக்கூட்டம் நடைபெறும்.
எனவே மே முதலாம் திகதி நண்பகல் 12
மணிக்கு கொழும்பு புறக்கோட்டை குணசிங்கபுர பிரைஸ் பார்க்
பூங்கா மைதானத்திற்கு வரும்படி தமிழ்,
முஸ்லிம் மக்களை அன்புடன் அழைக்கின்றேன்.



Thanks:virakesari

ஸஜ்தா சஹ்வு எப்படி செய்வது?

மறதியினால் ஒருவர் தொழுகையில் செய்ய வேண்டியவைகளில் சிலதை மறந்தாலோ,
அல்லது குறைத்தாலோ, அல்லது கூடுதலாகச் செய்தாலோ அவர் அதற்குப் பகரமாக
இரண்டு ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும். இதற்கு ஸஜ்தா ஸஹ்வு (மறதிக்குரிய
ஸஜ்தா) என்று சொல்லப்படும். தொழுகையில் செய்ய வேண்டியவைகளில் சிலதை
விட்டது தொழுகையின் போது உறுதியாகத் தெரிந்தால் ஸலாம் கொடுப்பதற்கு
முன்னர் இரண்டு ஸஜ்தாக்கள் செய்து ஸலாம் கொடுக்க வேண்டும். நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் ஒரு முறை லுஹர் தொழுவித்தனர். அப்போது இரண்டாம் ரக்அத்தில்
உட்காராமல் எழுந்து விட்டார்கள். மக்களும் அவர்களுடன் எழுந்து
விட்டார்கள். தொழுகை முடிக்கும் தருணத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
ஸலாம் கொடுக்கப் போகிறார்கள் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த
போது உட்கார்ந்த நிலையிலேயே தக்பீர் கூறினார்கள். ஸலாம் கொடுப்பதற்கு
முன் இரண்டு ஸஜ்தாக்கள் செய்து விட்டுப் பின்னர் ஸலாம் கொடுத்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி), நூல் : புகாரீ (829)
ரக்அத்களைக் குறைத்து தொழுதால் விடுபட்டதைப் பூர்த்தி செய்து ஸலாமுக்குப்
பின்னர் மறதிக்கான ஸஜ்தா செய்து. பிறகு ஸலாம் கொடுக்க வேண்டும். நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் மாலை நேரத் தொழுகைகளில் ஒன்றை இரண்டு ரக்அத்களாக
எங்களுக்குத் தொழுவித்து விட்டு ஸலாம் கொடுத்து விட்டார்கள். பள்ளியில்
நாட்டப்பட்டுள்ள
மரத்தினருகே சென்று கோபமுற்றவர்களைப் போல் அதில் சாய்ந்து கொண்டார்கள்.
தமது வலது கரத்தை இடது கரத்தின் மேல் வைத்துக் கை விரல்களைக் கோர்த்துக்
கொண்டார்கள்.
தமது வலது கன்னத்தை இடது கை மீது வைத்துக் கொண்டார்கள். அவசரக்காரர்கள்
பள்ளியின் பல வாயில்கள் வழியாக வெளிப்பட்டு தொழுகை குறைக்கப்பட்டு
விட்டது
என்று பேசிக் கொண்டார்கள். அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோர்
அக்கூட்டத்தில் இருந்தனர். (இது பற்றி) நபி (ஸல்) அவர்களிடம் கேட்க
அஞ்சினார்கள். அந்தக் கூட்டத்தில் இரு கைகளும் நீளமான ஒரு மனிதர்
இருந்தார். துல்யதைன் (இரு கைகள் நீளமானவர்) என்று அவர்
குறிப்பிடப்படுவார். அவர் அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டு
விட்டதா? அல்லது தாங்கள் மறந்து விட்டீர்களா? என்று கேட்டார்.
குறைக்கப்படவும் இல்லை. நான் மறக்கவும் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறிவிட்டு (மக்களை நோக்கி) துல்யதைன் கூறுவது சரி தானா? என்று
கேட்க ஆம் என்றனர் மக்கள். தொழுமிடத்திற்குச் சென்று விடுபட்டதைத் தொழுது
ஸலாம் கொடுத்தார்கள். பிறகு தக்பீர் கூறி (தொழுகையில் செய்யும்)
ஸஜ்தாவைப் போல் அல்லது அதைவிட நீண்ட ஸஜ்தாவைச் செய்து பின் தலையை
உயர்த்தி தக்பீர் கூறினார்கள். பிறகு தக்பீர் கூறி (தொழுகையில் செய்யும்)
ஸஜ்தாவைப் போல் அல்லது அதைவிட நீண்டதாக ஸஜ்தா செய்து ஸலாம்
கொடுத்தார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ (482)
தொழுகையில் மூன்று ரக்அத் தொழுதோமா? அல்லது நான்கு ரக்அத் தொழுதோமா என்ற
சந்தேகம் ஏற்பட்டால் குறைந்ததை, அதாவது மூன்று தான் தொழுதுள்ளோம் என்று
கணக்கிட்டு மேலும் ஒரு ரக்அத் தொழ வேண்டும். மேலும் இதற்காக ஸலாமுக்கு
முன் இரண்டு ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும். அல்லது ஸலாம் கொடுத்த பின்னர்
இரண்டு சஜ்தாக்கள் செய்யலாம். உங்களில் ஒருவருக்கு தாம் மூன்று ரக்அத்கள்
தொழுதோமா? அல்லது நான்கு ரக்அத்கள் தொழுதோமா? என்று சந்தேகம் ஏற்பட்டால்
சந்தேகத்தைக் கைவிட்டு உறுதியான (மூன்று ரக்அத்கள் என்ப)தன் அடிப்படையில்
(மீதி உள்ள ஒரு ரக்அத்தைத்) தொழுது விட்டு ஸலாம் கொடுப்பதற்கு முன் இரு
ஸஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும்! அவர் (உண்மையில்) ஐந்து ரக்அத்கள்
தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்கள் அத்தொழுகையை இரட்டைப்படை ஆக்கி
விடும். அவர் நான்கு ரக்அத்கள் தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்களும்
(தொழுகைகளில் குழப்பம் ஏற்படுத்திய) ஷைத்தானை முறியடித்ததாக ஆகும்.
அறிவிப்பவர் : அபூஸயீத் (ரலி), நூல் : முஸ்லிம் (990) மறதிக்காக செய்யும்
ஸஜ்தாவில் ஓதுவதற்கென குறிப்பிட்ட துஆ எதையும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்
தரவில்லை. ஸஜ்தாக்களில் எப்போதும் ஓதும் துஆக்களை ஓத வேண்டும்.
source:http://www.onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/sajda_sahvu_eppadi/

27 April 2013

ரியாளுஸ்ஸாலிஹீன் MP3 ;நபிகளாரின் பொன்மொழிகளை ஒலி வடிவில் கேட்பதற்க்கு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்கா
த்துஹு. நபிகளாரின் பொன்மொழிகளை ஒலி வடிவில்
கேட்பதற்க்கு முனையும்
தங்களுக்கு இதனை முழுவதுமாக கேட்டு,
நினைவில் நிறுத்தி வாழ்வில்
கடைபிடிக்கவும், தம்மோடு மட்டும்
நிறுத்திக்கொள்ளாமல், தம் குடும்பத்தினருக்கும்,
நண்பர்களுக்கும்,ஊரிலுள்ளவர்களுக்கும்,
இன்னும் உலகெங்கும் வாழும் தமிழ்
கூறும்மக்களுக்கும் இதனை CD க்கள்
மூலமாகவும், இணையதளம் மூலமாகவும், இன்னும்
பல வழிகளிலும் இதனை கிடைக்கச் செய்து சதக்கதுல் ஜாரி
ய்யாவை பெற்றுக்கொள்ளவும், இறுதியில்,
மறுமை வாழ்க்கையில் வெற்றி பெறவும், எல்லாம்
வல்ல ரப்புல் ஆலமீன் உதவட்டுமாக. புத்தகங்களை படிக்க, நேரமின்மையையும்,
சலிப்பையும் காரணம் காட்டி நபிகளாரின் பொ
ன்னான மொழிகள் நம் உள்ளத்தை அடையாமல் இரு
ப்பதை தவிர்க்க இவ்வகை ஒலி வடிவங்கள்
உதவக்கூடும். இதனை வாகனங்களில் பயணி
க்கும்போதும், கடைகளில் வேலைப்பார்க்கும்போதும், பெண்கள்
வீட்டுவேலைகளைப்பார்க்கும்போதும், சமையலறை
யில் இருக்கும்போதுமாக, இப்படி பல
நேரங்களிலும், வகைகளிகும் கேட்கலாம்.
மேலும் தங்கள் அலைபேசியில்
சேமித்து வைத்து நண்பர்களுக்கு ப்ளூடூத் (Bluetooth) மூலமும் அனுப்பலாம். "ரியாளுஸ்ஸாலிஹீன்" என்ற இந்த புத்தகம்,
அபூ ஸக்கரியா யஹ்யா பின் ஷரஃப் அன் நவவி
(ரஹ்) அவர்களின் உருவாக்கம். மிக பிரபலமான-
அதாரப்பூர்வமான ஹதீஸ் புத்தகங்களாகக் கரு
தப்படும்,புஹாரி, முஸ்லிம், திர்மிதி…என்பன
போன்றவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட ஹதீஸ்களில் தொகுப்புகளே இந்த புத்தகம். இதனை இங்கிருந்து பதிவிறக்கம் (Download)
செய்து கொள்ளலாம். https://dl.dropbox.com/s/hkkecwca6qrbm1f/0_0%
20TamilAudioIslam_Introduction.zip
https://dl.dropbox.com/s/m4xce78u07rbfc0/
Riyalussaliheen%201%20to%2050.zip
https://dl.dropbox.com/s/j1unrmqujaq139w/
Riyalussaliheen%2051%20to%20100.zip
https://dl.dropbox.com/s/wjk8aj628qqwxyv/
Riyalussaliheen%20101%20to%20150.zip
https://dl.dropbox.com/s/6gu3zm3btbm0fd8/
Riyalussaliheen%20151%20to%20200.zip
https://dl.dropbox.com/s/e7jf2kumt7wuyv4/
Riyalussaliheen%20201%20to%20250.zip
https://dl.dropbox.com/s/yc07lzj387z6ryx/
Riyalussaliheen%20251%20to%20300.zip
https://dl.dropbox.com/s/c6jhbzhb1dx75br/
Riyalussaliheen%20301%20to%20350.zip
https://dl.dropbox.com/s/04g6dw2tclmkzej/
Riyalussaliheen%20351%20to%20400.zip
https://dl.dropbox.com/s/m7l0u5nicrt94ip/
Riyalussaliheen%20401%20to%20450.zip
https://dl.dropbox.com/s/8v20ps8xvwsmb9s/
Riyalussaliheen%20451%20to%20500.zipi









Source:http://www.tamilaudioislam.com/home/

24 April 2013

இந்த வருடத்தின் முதலாவது சந்திர கிரகணம் நாளை

இந்த வருடத்தின்
முதலாவது பகுதியளவு சந்திர கிரகணம்
நாளை (25) தென்படும் என வளிமண்டலவியல்
திணைக்களம் தெரிவித்துள்ளது.
சூரியன், பூமி மற்றும் சந்திரன் என்பன மிகத்
துல்லியமாகவோ அல்லது ஏறத்தாளவோ ஒரே வரிசையில் வரும் போது சந்திர கிரகணம்
ஏற்படுகிறது.
நாளை சந்திர கிரகண குறை நிழல் தெரிய
உள்ளதோடு நாளை மறுதினம் கரு நிழல்
தோன்றும் என வளிமண்டலவியல் திணைக்களம்
குறிப்பிட்டுள்ளது. அதிகமான ஆசிய நாடுகள், ஆபிரிக்கா,
ஐரோப்பா நாடுகளிலும்
பகுதியளவு சந்திரகிரகணம் தென்படும் என
அறிவிக்கப்படுகிறது.

பீட்ரூட் சாறு உயர் ரத்தஅழுத்தத்தை தணிக்கிறது

பீட்ரூட் சாறு மனிதர்களின் உயர் ரத்த
அழுத்தத்தை தணிக்கவல்லது என்று
மருத்துவ ஆய்வாளர்கள்
தெரிவித்திருக்கிறார்கள். ஒரு தேநீர் கோப்பை அளவு, அதாவது சுமார்
250 மிலி லிட்டர் பீட்ரூட்
சாறு குடித்தால் ஒருவரின் உயர் ரத்த
அழுத்தம் சுமார் 10 எம் எம் அளவால்
குறைவதாக லண்டன் மருத்துவக்
கல்லூரியும் பார்ட்ஸ் சுகாதார மையமும் இணைந்து நடத்திய ஆய்வில்
தெரிய வந்திருக்கிறது. பதினைந்து பேரிடம் நடத்திய ஆய்வின்
முடிவில் ஒரு சிலருக்கு அவர்களின்
உயர் ரத்தஅழுத்தம் சாதாரண
அளவுக்கு குறைந்ததாகவும் இந்த
ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பதாக,
மருத்துவ சஞ்சிகையான ஹைபர்டென்ஷன் தெரிவிக்கிறது. இவர்கள் பீட்ரூட்
சாற்றை குடித்து மூன்று முதல்
ஆறுமணி நேரம் கழித்து இவர்களின் உயர்
ரத்த அழுத்தம் கணிசமாக குறைந்ததாக
இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்
கணக்கிட்டிருக்கிறார்கள். மேலும் மறுநாளும் கூட இவர்களின் உயர்
ரத்தஅழுத்தம்
குறைந்தே காணப்பட்டதாகவும் இவர்கள்
தெரிவிக்கிறார்கள். பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட்
சத்து மனிதர்களின்
ரத்தநாளங்களை விரிவடையச் செய்வதனால்
இரத்த ஓட்டம் சீராக செல்வதால்,
மனிதர்களின் உயர் ரத்தஅழுத்தம்
குறைவதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஏற்கெனவே அஞ்ஞைனா என்கிற இரத்தநாள
வலிநோயால்
அவதிப்படுபவர்களுக்கு நைட்ரேட்
மருந்து அளிப்பதன் மூலம் அவர்களின்
வலியை குறைக்க
முடிவதை சுட்டிக்காட்டும் மருத்துவர்கள், இங்கே நைட்ரேட்
சத்து அதிகம் கொண்டிருக்கும்
பீட்ரூட் சாறு அதே வேலையை செய்வதாக
கருதுகிறார்கள். நைட்ரேட் சத்து ரத்த நாளத்தை விரிவடையச்செய்யும் மண்ணில் இயற்கையிலேயே இருக்கும்
நைட்ரேட் சத்து, தாவரங்களின் வேர்கள்
மூலம் உறிஞ்சப்பட்டு அவற்றின் இலை,
தண்டு மற்றும் கிழங்குகளில்
சேமிக்கப்படுகிறது.
ஒவ்வொரு தாவரமும் இந்த நைட்ரேட் சத்தை ஒவ்வொருவிதமாக உறிஞ்சும்
தன்மையையும், சேமிக்கும் தன்மையையும்
கொண்டிருக்கின்றன. இதில் பீட்ரூட்
தாவரம் நிலத்தில் இருந்து உறிஞ்சும்
நைட்ரேட் சத்தை தனது கிழங்கில்
அடர்த்தியாக சேமிக்கும் தன்மை கொண்டது. எனவே இந்த பீட்ரூட் கிழங்கின்
சாற்றை குடிக்கும் போது, அதில்
இருக்கும் நைட்ரேட் மனிதர்களின் ரத்த
நாளங்களை விரிவடையச் செய்யும்
வேலையை செய்கிறது. இவ்வளவு குறைவான நைட்ரேட், உயர் இரத்த
அழுத்தத்தில் இவ்வளவு பெரிய நல்ல
பலனை அளிக்கும் என்பது தாங்கள்
எதிர்பார்க்கவில்லை என்கிறார் இந்த
ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்
அம்ரிதா அலுவாலியா. எனவே நைட்ரேட் சத்து அதிகம்
இருக்கும் பீட்ரூட் போன்ற
காய்கறிகளை உணவில்
சேர்த்துக்கொள்வதன் மூலம், ஒருவரின்
உயர் ரத்தஅழுத்தத்தை கணிசமாக
குறைக்க முடியும் என்பது நோயாளிகளுக்கும் எளிதில்
கடைபிடிக்கக்கூடிய, பக்கவிளைவுகளற்ற
சிகிச்சைமுறையாக மாறும்
வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார் அவர். அதேசமயம், நைட்ரேட் அதிகம் உள்ள
காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதன்
மூலம் நாள்பட்ட உயர் ரத்த
அழுத்தத்தை தொடர்ந்து
கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க
முடியுமா என்பது குறித்து முடிவு செய்வதற்கு மேலதிக ஆய்வுகள்
செய்யவேண்டியது அவசியம் என்றும்
அம்ரிதா அலுவாலியா தெரிவித்தார். அந்த ஆய்வின் முடிவுகளுக்காக
காத்திருக்காமல், பச்சைக்
காய்கறிகளை அதிகம் உண்பது உயர் ரத்த
அழுத்தம் உள்ளவர்களுக்கு நன்மைதான்
என்கிறார் அவர். அதேசமயம், பீட்ரூட்
சாற்றை குடிப்பவர்களின் சிறுநீர்
இளஞ்சிகப்பு நிறமாக மாறும் என்றும்
அவர் எச்சரிக்கிறார். எனவே சிறுநீரின்
நிறத்தை பற்றி கவலைப்படாதவர்கள்,
பீட்ரூட் சாற்றை குடித்து தங்களின்
உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க
முயலலாம் என்பது இந்த ஆய்வாளர்களின்
யோசனை.

source:http://www.bbc co.uk/tamil/science/2013/04/130416_sciencebeetroot.shtml

23 April 2013

அன்டிபயொட்டிக்களின் சகாப்தம் முற்றுப்பெறுகின்றதா?

நம்மை நோக்கி ஒரு பயங்கரமான எதிர்காலம்
உருவாகிக் கொண்டுள்ளது. ஒரு சிறிய காயம்,
உங்களது உயிரையே போக்குமளவுக்கு தீவிரத்தை
ஏற்படுத்தக்கூடும். சிறிய
அறுவைச்சிகிச்சைகளுக்கு உட்படுவோர்
கதை வாழ்வுடன் போராடும் சம்பவமாகும். புற்றுநோய்களுக்கு எதிரான சிகிச்சை,
உறுப்பு மாற்றம் போன்றவற்றை நினைத்துக்கூடப்
பார்க்க முடியாது. இது அன்டிபயொட்டிக்
எனப்படும் பக்டீரியா எதிர்ப்பிகள்
செயலிழந்த வருங்காலம்.
இது ஏதோ ஒரு அறிவியற்புனை கதை படிப்பது போன்று தோன்றினாலும் நாம் அனைவரும்
அன்டிபயொட்டிக்களின் முறையான
பயன்பாட்டைப்பற்றிய
விழிப்புணர்வு அன்றி இருப்போமாயின்
மேற்குறிப்பிட்ட நாள் இன்னும்
இருபது ஆண்டுகளில் உருவாகலாம். இந்த நிலைமைக்கு பக்டீரியா மட்டுமன்றி நாம்
அனைவரும்கூட காரணமாக இருக்கின்றோம்
என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுவான இலகுவில் குணமாகும்
தொற்றுநோய்களுக்கு மருந்துகள்
இல்லாது போகலாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கின்றது. ஐக்கிய
அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மையம்
இதை "கொடுங்கனவுப் பாக்டீரியா" என இதன்
முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றது. டேம்
சால்லி டேவிசு எனும் இங்கிலாந்து நாட்டுப்
பேராசிரியை இதைப் பேரழிவு என வர்ணிக்கின்றார்.
பக்டீரியா எனப்படும் நுண்ணுயிரிகள்
அன்டிபயொட்டிக்களால் செயலிழக்கின்றன
அல்லது இறக்கின்றன என்பது யாவருக்கும்
தெரிந்த விடயம், ஆனால் படிப்படியாக
அன்டிபயொட்டிக்களின் செயலாற்றலுக்கு எதிராக
தம்மை உருவாக்கிக்கொண்டு வரும்
பக்டீரியாக்கள் பற்றி அனைவருக்கும்
தெரியுமா என்பது சந்தேகமே.
அன்டிபயொட்டிக் எனும்
சொல்லை கவனிக்கவேண்டியது முக்கியமானது. இது பிரான்சிய antibiotique எனும் சொல்லில்
இருந்து உருவானது. இங்கே anti என்பது 'எதிர்'
என்றும் biotique என்பது உயிர்வாழும்
உயிரினங்களைக் குறிக்கும் சொல்லாகவும்
பயன்படுத்தப்பட்டது. பின்னர்
இது 'நுண்ணுயிரிகளுக்கு எதிரான' எனும் கருத்தில் பயன்படுத்தப்பட்டது. தமிழில்
இதனை நுண்ணுயிரி எதிர்ப்பிகள்
என்றோ அல்லது உயிர்மி எதிர்ப்பிகள்
என்றோ அழைக்கலாம். எனினும்,
இப்போது அன்டிபயொட்டிக்
என்று அழைக்கப்படும் மருந்துகள் பக்டீரியாவுக்கு எதிரானவை மட்டுமே என்பதால்
அவற்றை பக்டீரிய எதிர்ப்பிகள்
எனக்கூறுவதே சாலச்சிறந்தது.
(இக்கட்டுரையில் அன்டிபயொட்டிக் பக்டீரிய
எதிர்ப்பிகள்
என்று மேற்கொண்டு அழைக்கப்படுகின்றது என்பதை வாசகர்கள் கவனிக்க.) வைரசுக்கு எதிரான
மருந்துகள் "அன்டி வைரஸ்" (தீநுண்ம எதிரிகள்)
என்று அழைக்கப்படுகின்றன. இதேபோல
பூஞ்சைகளுக்கு எதிரானவையும் 'பூஞ்சை எதிர்'
என்று அழைக்கப்படுகின்றன.
பல பக்டீரியா தற்போது பயன்பாட்டில் உள்ள பக்டீரிய எதிர்ப்பிகளுக்கு ஏற்ப
தம்மை இசைவாக்கி வருகின்றன. சில
வருடங்களுக்கு முன்னர் ஒரு குறிப்பிட்ட
நோய்க்கு எதிராகப் பயன்படுத்திய பக்டீரிய
எதிர்ப்பியை இன்று பயன்படுத்தமுடியாத
சூழ்நிலை உருவாகிக்கொண்டே வருகின்றது. இதற்குக் காரணம் அக்குறிப்பிட
மருந்துக்கு எதிரான
தடுப்பாற்றலை படிப்படியாக
பக்டீரியா உருவாக்கி வருவதே ஆகும்.
இது அவற்றின் மரபலகு (ஜீன்) திரிபடைவதால்
உருவாகின்றது. நாம் பக்டீரிய எதிர்ப்பிகளைப் பயன்படுத்தும் முறையில் இது தங்கி உள்ளது.
ஒரு புதிய அன்டிபயொட்டிக்
மருந்தொன்று குறிப்பிட்டவொரு பக்டீரியா
வகைக்கு எதிராக வழங்கப்படுகின்றது;
அவை அந்த மருந்துக்கு எதிராக வாழ தம்மைப்
பழக்கப்படுத்திக்கொள்கின்றன. ஆண்டுகள் செல்லச் செல்ல அந்த பாக்டீரிய வகையை எதிர்க்க
வேறொரு புதிய மருந்து தேவைப்படுகின்றது.
அவற்றையும் தமது தடுப்பாற்றலால்
எதிர்கொள்கின்றன. பல வகை பக்டீரியா, பல
வகை புதிய மருந்துகள் என இந்தப் போர் மேலும்
தொடர்கின்றது. பக்டீரிய எதிர்ப்பிகள் கண்டுபிடிப்பு
பின்னர் என்ன சிக்கல்? மேலும் புதிய
மருந்துகளைப்
பயன்படுத்துவதுதானே என்று கேட்கத்
தோன்றும். முதன்முதலில் அலெக்சாந்தர்
பிளெமிங் என்பவரால் 1928ஆம் ஆண்டு "பெனிசிலின்" எனும் பக்டீரிய
எதிர்ப்பி கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர்
பலவேறு வகுப்பு வகைகள்
கண்டுபிடிக்கப்பட்டன. 1945இல்
டெட்ராசைக்கிளின், 1948இல் கேபலோஸ்போரின்,
1962இல் குயினலோன்கள், 1987இல் லிப்போபெப்டைட்டுகள் என்பன சில
கண்டுபிடிப்புகளின் காலமாகும்.
ஒவ்வொரு வகுப்பு வகையில் இருந்தும் சிறிய
மாறுபாடுகளுடன் பல மருந்துகள்
உருவாக்கப்பட்டு வருகின்றன.
எடுத்துக்காட்டாக, சிப்ரோபுளோக்சாசின் மற்றும் நோர்புளோக்சாசின் (norfloxacin) ஆகியன
குயினலோன்கள் வகையைச் சார்ந்தவை. லிப்போபெப்டைட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட
1987க்குப் பின்னர் வேறெந்தப் புதிய
வகுப்பு வகைகளும் கண்டுபிடிக்கப்படவில்லை! பெனிசிலின் வகுப்பு, குயினலோன்கள் மற்றும்
கேபலோஸ்போரின் போன்றவற்றிற்கு எதிராக
சர்வசாதாரணமாக தமது எதிர்ப்பைக்
காட்டுகின்றன அந்த நுண்ணிய உயிரிகள்.
சில பாக்டீரியாக்கள்
குறிப்பிட்டவொரு வகை பக்டீரிய எதிர்ப்பிக்கு எதிராகவே தடுப்பாற்றலைக்
கொண்டுள்ள சமயத்தில், வேறு சில
பக்டீரியாக்களோ சில வகை பக்டீரிய
எதிர்ப்பிகளுக்கு எதிரான ஆற்றலைக்
கொண்டுள்ளன. MRSA (Methicillin-resistant
Staphylococcus aureus) எனும் பக்டீரியம் சில பக்டீரிய எதிர்ப்பிகளுக்கு எதிரான ஆற்றலைக்
கொண்டுள்ளது. இந்த மெதிசிலின்
தடுப்பாற்றலுடைய
இசுடபிலோகொகசு ஔரியசு
குருதி நஞ்சடைதலை உருவாக்கும் ஆபத்தான
பாக்டீரிய வகை ஆகும். இவ்வகை பக்டீரியா சூப்பர்பக் (superbug)
என்று பேச்சுவழக்கில் அழைக்கப்படுகின்றன.
குளோபல் வோ(ர்)மிங் எனும் உலக
வெப்பமடைதலுடன் ஒப்பிடக்கூடிய
பிரச்சனையாக இது தலைதூக்கியுள்ளது.
இங்கிலாந்து நாட்டுப் பேராசிரியையான டேம் சால்லி டேவிசு இப்பிரச்சனையை 'டிக்'
ஒலியை ஏற்படுத்தும் நேரவெடிகுண்டுடன்
ஒப்பிடுகின்றார். இந்நிலைமை நீடிக்குமானால்
இன்னும் இருபது வருடங்களில்
தொற்றுநோய்க்கெதிராகப் போராடும்
ஆற்றலை இழந்துவிடுவோம் என்று டேம் சால்லி எச்சரிக்கை விடுத்தார்.
இச்சிக்கலுக்கு எதிராக எதுவித
நடவடிக்கையும் எடுக்கப்படாத பட்சத்தில்
அறுவைச்சிகிச்சைகளில் இலகுவாக
தொற்று ஏற்பட்ட 19ம் நூற்றாண்டை நோக்கிச்
செல்லுவோம் என்று மேலும் கூறினார். இன்னும் இருபது வருடங்களில்
ஒரு இடுப்பெலும்பு மாற்றும்
அறுவைச்சிகிச்சைக்குட்படும் ஒருவர்
இறந்துவிடுவார், காரணம் வழமையான
தொற்றுக்களே பக்டீரிய எதிர்ப்பிகள்
ஏதுமில்லாச் சூழலில் அவரைக் கொன்றுவிடும். இதுமட்டுமல்லாது, முதியோர்களில் இலகுவில்
உண்டாகும்
தருணத்தொற்று தவிர்க்கப்படமுடியாததாக
உருவாகிவிடும்; கொனேரியா போன்ற பாலியல்
நோய்கள் குணப்படுத்த முடியாச்
சூழ்நிலை ஏற்படும். இது புறக்கணிக்கத்தக்க விடையமல்ல. நாம்
யாவரும் கடுமையாக சிந்தித்து செயற்படும்
விடயம் இது. பற்பல நாடுகளில் பக்டீரிய
எதிர்ப்பிகளை உரிய முறையில்
பயன்படுத்துவது இல்லை. சிறிது காய்ச்சல்
வரினும் "அன்டிபயொட்டிக்"; வைரசுவால் ஏற்படும் தானாகவே குணமடையும்
தடிமனுக்குக் கூட "அன்டிபயொட்டிக்";
இவை எல்லாம் பக்டீரியாவுக்கு
தடுப்பாற்றலைத் தூண்ட நாம் வழிவகுக்கும்
முறைகள். பக்டீரிய எதிர்ப்பிகள்
ஓரிரண்டு வாரத்துக்கே பயன்படுத்தவேண்டும் என்பதும் அவசியமாகக்
கவனிக்கவேண்டியதொன்றாகும். நோயுற்றவர்களோ, அன்றி மருத்துவர்களோ இதனுடன்
தொடர்புடையவர்களாக இருக்கின்றனர்.
அன்டிபயொட்டிக் என அழைக்கப்படும் பக்டீரிய
எதிர்ப்பிகள்
பக்டீரியாவுக்கு மட்டுமே எதிரானவை.
வைரசுக்கு எதிரான மருந்துகள் "அன்டி வைரஸ்" என்று அழைக்கப்படுகின்றன.
சிலர் அன்டிபயொட்டிக் என்றால் எந்தவிதமான
தொற்றுகளையும் குணமாக்கும்
என்று நம்புவது அடுத்ததோர் பிரச்சனை. பல
மருந்துக் கடைகளில் பக்டீரிய எதிர்ப்பிகள்
இலகுவில் கிடைக்கின்றன. இதுவும் இவற்றின் தகாத பயன்பாட்டை விவரங்கள் அறிந்திடாதோர்
மத்தியில் கூட்டுகின்றது. அனைவருக்கும்
இவற்றைப் பற்றிய அறிவை,
விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது
அறிந்தோரின் கடமையாகும். சில
மருத்துவர்கள்கூட பக்டீரிய எதிர்ப்பிகளைத் தேவையற்ற சந்தர்ப்பங்களில் வழங்குகின்றனர்.
இது ஏதாவது ஒரு மருந்தை நோயாளிக்குக்
கொடுத்தே தீரவேண்டும் இல்லாவிடின்
நோயாளிக்கு தன்னில்
நம்பிக்கை இல்லாது போய்விடும் எனும் எண்ணம்
காரணமாக இருக்கலாம். அதேபோன்று சில நோயாளிகள் மருத்துவரிடம்
இருந்து எப்பொழுதிலும்
மருந்துகளை எதிர்பார்த்தலும் காரணமாக
இருக்கலாம்.
விதிவிலக்காக, சில வைரசு நோய்களின்
சந்தர்ப்பங்களில் இரண்டாம் தொற்றாக பக்டீரியத் தொற்று ஏற்படுவதுண்டு. இதனை மருத்துவர்
நன்கு அறிவார். எனவே எப்போதும்
மருத்துவரின் ஆலோசனையின்
பேரிலேயே பக்டீரிய எதிர்ப்பிகள்
பயன்படுத்தல் அவசியம் . உலகில் சில தொற்றுநோய்களுக்கு எதிரான
மருந்துகள் இன்னமும் பலனைத் தருகின்றன
என்பது மகிழ்ச்சியைத் தரும் விடையமாயினும்,
ஒரு பாக்டீரிய ஆதிக்கத்தை எதிர்நோக்க: சுகாதாரம் பேணுதல், பொதுமக்கள் மற்றும் மருத்துவர்கள்
தேவையற்ற சந்தர்ப்பங்களில் பக்டீரிய
எதிர்ப்பியைப் பயன்படுத்தலைத் தவிர்த்தல், புதியதொரு பக்டீரிய
எதிர்ப்பி வகுப்பு கண்டுபிடிக்கப்படல், ஏற்கனவே இருக்கும் மருந்துகளை உரிய
முறையில் பயன்படுத்தல் போன்றன சில
வழிவகைகளாக அமைகின்றன.. இவை ஒன்றும் பேணப்படாது பாக்டீரியாக்கள்
தமது போரில் வெற்றியடைந்து சென்றால்
எதிர்காலத்தில் பக்டீரிய எதிர்ப்பிகளின்
பயன்பாடு கேள்விக்குறியாக மாறிவிடும்.
அந்நேரத்தில், ஒரு ரோசா முள்ளுக்
குத்தி ஏற்பட்ட காயம் கூட உயிரையே போக்குமளவு ஆபத்தானதாக
அமையலாம்.
எனவே இன்றிலிருந்து அன்டிபயொட்டிக்கை
தேவையற்ற சந்தர்ப்பங்களில் பயன்படுத்தலைத்
தவிருங்கள், தேவையற்று நோயாளிக்குப்
பரிந்துரைப்பதை நிறுத்துங்கள். புதிதாக ஒரு மருந்து வகுப்பு
கண்டுபிடிப்பார்கள்தானே என்று அலட்சியமாக
இருந்துவிடாதீர்கள்.
அப்படி ஒன்று நிகழாமலும் போகலாம்.
பக்டீரியப் போரில் வெல்லுவதற்கு நாமும்
எமது ஒத்துழைப்பை வழங்குவோம்.

நன்றி:பல்கலைக்கழகம்

22 April 2013

இருமல் மருந்து வகைகளின் பாவனையில் புதிய கட்டுப்பாடுகள்

இலங்கையில் இருமலுக்கு பயன் படுத்தப்படும் மருந்து வகைகளின் விற்பனையை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் கோடைன் (Codeine) டெக்ஸ்ட்ரோ மெத்தோர் பான்(Dextromethorphan) போலோடைன்(Pholoodeine), டிஹைட்ரோ கோடையின் (Dihydro Codeine) ஆகிய இரசாயனப் பதார்த்தங்கள் அடங்கியுள்ள மாத்திரைக ளினதும், பாணி மருந்துகளதும் விற்பனையைக் கட்டுப்படுத்துவதற்கே சுகாதார
அமைச்சு நடவடிக்கை எடுத்து இருக்கின்றது. இந்த வகையில் இப் பதார்த்தங்கள் அடங்கியுள்ள மாத்திரை களையும் பாணி மருந்து வகைகளையும் அரசாங்க ஒசுசல மருந்தகங்களுக்கு மாத்திரமே விற்பனை செய்வதற்கு ஏற்றவகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார். மேற்படி இரசாயனப் பதார்த்தங்கள் அடங்கிய மாத்திரைகளையும் பாணி
மருந்துகளையும் அண்மைக்காலமாக போதைக்காக பயன்படுத்துவது தெரிய வந்ததையடுத்து இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். மேற்படி இரசாயனம் அடங்கி யுள்ள மருந்துகளை தனியார் மருந்தகங் களில் விற்பனை செய்ய முடியாது. இலங்கையில் இருமலுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வகைகளின் விற்பனை, மட்டுப்படுத்தல் விற்பனை நடவடிக்கை ஒழுங்குபடுத்தல்
என்பவற்றுக்காக அழகு சாதனப் பொருட்கள் மற்றும் தேசிய மருந்து பொருள் அதிகார சபையின் அழகு சாதனப் பொருட்கள், மருந்து தொழில்நுட்ப ஆலோசனை குழுவினார் கடந்த 18ம் திகதி பல முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளனர். இதற் கேற்ப மேற்படி தீர்மானங்கள் அமுலுக்கு வரவுள்ளன. இதன்படி இந்த மருந்துகளை விநியோகிக்கும்போது இரண்டாவது உப அட்டவணைக்கு ஏற்ப தகுதியும் அனு பவமும் பெற்ற
மேற்கத்திய டொக்டர் களின் சிபார்சின் பேரில் மட்டும் ஏப்ரல் 19 முதல் விற்பனை செய்வது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. தற்போது கையிருப் பில் உள்ள EPHEDRINE (எபட்ரைன்), அல்லது PSEUDOPHEDRINE (செடோபெடரைன்), அடங்கிய பாணியை யும் மாத்திரைகளையும் இருக்கும் கையிருப்பு பூர்த்தி பெறும் வரை மட்டும் விற்பனை செய்ய 03 மாதகால அவகாசம் வழங்கப் பட்டுள்ளது. 03 மாதங்களுக்குள், இவற்றை விற்றுத் தீர்க்க
வேண்டும். தவறும் பட்சத்தில் சந்தையிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். 03 மாதங்களுக்கு மேல் இவற்றை விற்றால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ORAL ANTIHISTAMINE (ஒரல் என்டிகிஸ்ட்மைன்ஸ்), ORAL ANTI TiSSIVEி (ஒரல் என்டி ரிஸ்ஸ¤), ORAL NASAL DECCONGESTANT (ஒரல் நாசல் டெக்கான்ஜெஸ்டன்), ORAL ANTI TISSIVEி (ஒரல் என்டி ரிஸ்ஸ¤) BRONCHOLDILATOR (புரொன்கோடிலேட்டர்) ஆகியவற்றை மட்டும் அதிகார சபை எதிர்காலத்தில் பதிவு
செய்யும் இந்த மருந்து பாவனையில் உறக்கத்தன்மை ஏற்படலாமென உற்பத்தி லேபல்களில் குறிப்பிட வேண்டும். பின்வருவனவற்றின் உற்பத்திகளைப் பதிவு செய்வதை முழுமையாக இடை நிறுத்துவதற்கும் தேசிய மருந்துப் பொருட்கள் அதிகார சபை தீர்மானித் துள்ளது. சளியை நிறுத்தப் பயன்படுத் தப்படும் (ANTITUSSIVE) (என்டிரிஸ்யூ), (EYPECTORANT) (எக்ஸ் பெக்டோடன்ட்), (ANALGESIC) (எனல்ஜெஸ்ரிக்), (எப்பஹெட்ரைன்), PSEUDOEPHEDRINE
(செடோபெடிரின்), PHENYLPROPANOLAMINE EPEHEDRINE (பீனைல்புரோபனோலமைன் எபிட்ரைன்) அல்லது PWEUDOEPHEDRINE, DEXTROMETHORPHAN அடங்கிய இறக்குமதி உற்பத்தியையும், அனுமதிப் பத்திரத்தையும் உடனடியாக அமுலுக்கு வரும் வண்ணம் அழகுச் சாதனப் பொருட்கள் மற்றும் தேசிய மருந்து அதிகார சபை பணிப்பாளரின் கீழ் பொறுப்பேற்க தீர்மானிக்கப்பட் டுள்ளது. இதன் கீழ், பதிவு செய்யப் பட்ட சான்றிதழ், இறக்குமதி சான்றிதழ் மேற்படி
மருந்து மாற்றத்தின் கீழ் மருந்து பொருள் அதிகார சபைப் பணிப்பாளரின் கீழ் பொறுப்பேற்பதற்கும் தீர்மானிக்கப் பட்டதாக அழகு சாதனப் பொருட்கள் மற்றும் தேசிய மருந்து பொருள் அதிகார சபை யின் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த பெனரகம தெரிவித்தார்.


நன்றி:மர்லின் மரிக்கார்
Thinakaran

21 April 2013

ரொக்லன்ட பஸ்-ரயில் விபத்தில் காயமடைந்த 28 பேரில் நால்வர் தீவிர சிகிச்சைப் பிரிவில்

மக்கொன இந்திரிலிகொட- ரொக்லன்ட் சந்தியிலுள்ள ரயில்
கடவையில் பஸ் ஒன்று ரயிலுடன் மோதியதில்
காயமடைந்த சுமார் 28 பேரில் நால்வர் மேலதிக
சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. ரொக்லன்ட் சந்தியிலுள்ள பாதுகாப்பற்ற ரயில்
கடவையில் நேற்றிரவு 7.15 அளவில் இந்த
விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த 23 பேர் நாகொட
வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் பேருவளை வைத்தியசாலையில்
சிகிச்சைபெற்று வருகின்றார்.
கடும் காயங்களுக்கு இலக்கான
நால்வரே மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய
வைத்தியசாலையின் தீவிர கண்காணிப்புப்
பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் அனில் ஜாசிங்க
குறிப்பிட்டார்.
காலியில் நடைபெற்ற இறுதிக் கிரியைகளில்
கலந்துகொண்டு கண்டிக்கு திரும்பிக்
கொண்டிருந்த சிலரே விபத்தில்
காயமடைந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பில்
ரயில்வே திணைக்களமும்
விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக
ரயில்வே அத்தியட்சகர் L.A.R.ரத்நாயக்க
தெரிவித்தார்.

சீனாவில் பூகம்பம்; 150 பேர் பலி, ஆயிரக் கணக்கானோர் காயம்

சீனாவின் தென்மேற்குப் பிராந்தியமான சிச்சுவான் மாகாணத்தில் உள்ள பின்தங்கிய மாவட்டமொன்றில் ஏற்பட்டுள்ள பூகம்பத்தில் 150க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயப்பட்டுள்ளனர். திபெத்திய பீடபூமியின் அடிவாரத்தில் இருக்கின்ற கிராமம் ஒன்று முழுவதுமாக அழிந்துவிட்டதுபோல காட்சியளிப்பதாக சீன அரச ஊடகம் கூறுகிறது. பல பகுதிகளில் வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ள மேற்கு செங்க்டூ பிராந்தியத்திற்கு படையினர் சுமார் 6000 பேர் அனுப்பப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நிலையில் பலரை மீட்புப் பணியாளர்கள் மீட்டுவருவதை தொலைக்காட்சிகள் காண்பிக்கின்றன. மீட்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக பிரதமர் லீ கெக்கியாங் அங்கு விரைந்துசென்றுள்ளார். உள்ளூர் நேரப்படி காலை 8 மணியளவில் தாக்கிய பூகம்பம் மக்னிடியூட் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ளது. இதே சிச்சுவான் பிராந்தியத்திலேயே 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.

20 April 2013

ரொக்லன் வீதியில் பயங்கர விபத்து

ரொக்லன் வீதியில் பயங்கர விபத்து பஸ் வண்டியில் ரயில் மோதி யுள்ளது
பலர் பலியாகியிருக்கலாம் என அச்சம்

18 April 2013

கேக்கில் ராஜினாமா கடிதம்: விசித்திரமான முறையை கையாண்ட பிரிட்டன் குடியுரிமை அதிகாரி

பிரிட்டனிலுள்ள கேம்ப்ரிட்ஜ்ஷைர் பகுதியை சேர்ந்த கிரிஸ் ஹோல்ம்ஸ்(31) என்பவர் ஸ்டாண்ஸ்டெட் விமான நிலையத்தில் குடியுரிமை துறை அதிகாரியாக பணியாற்றி வருகின்றார். இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக கேக் தயாரித்து விற்கும் தொழிலையும் பகுதி நேரமாக செய்து வருகின்றார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று வழக்கம் போன்று வேலை நேரத்தில் விமான நிலையத்திற்கு சென்ற இவர்,
அழகான அட்டைப் பெட்டியை தனது உயரதிகாரியிடம் கொடுத்துள்ளார். அந்த பெட்டியின் உள்ளே செவ்வக வடிவில் ஒரு பெரிய கேக் இருந்தது. கேக்கின் மேல் பகுதியில் வெள்ளை நிற 'ஐசிங்' கின் மீது கருப்பு நிற கிரீமால் தனது ராஜினாமா கடிதத்தை கிரிஸ் ஹோல்ம்ஸ் முத்து முத்தான கையெழுத்தில் எழுதி இருந்தார். அதில், நிர்வாகத்திற்கு சமீபத்தில் தந்தையான பின்னர் வாழ்க்கை எவ்வளவு விலை
மதிப்பு மிக்கது என்பதை நான் உணரத் தொடங்கியுள்ளேன். இந்த வாழ்க்கையில் என்னை சேர்ந்தவர்களுக்கும் மற்றும் எனது மனமகிழ்ச்சிக்கும் உகந்த வகையில் நேரத்தை செலவிட வேண்டியது எவ்வளவு முக்கியமானது என்பதையும் நான் நினைத்துப் பார்க்கிறேன். இந்த காரணத்திற்காக எனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்கிறேன். இனி எனது நேரத்தையும், ஆற்றலையும் குடும்பம் மற்றும் எனது கேக்
தொழிலை கவனிப்பதற்காக செலவிட முடிவு செய்துள்ளேன் என்று எழுதியுள்ளார். தனது மனைவி கர்ப்பிணியாக இருந்த போதே ராஜினாமா செய்ய முடிவு செய்த கிரிஸ் ஹோல்ம்ஸ், அதை புதுமையாக செய்ய யோசித்து, யோசித்து ராஜினாமா கடிதத்தை கேக் வடிவில் தற்போது சமர்ப்பித்துள்ளார்.

தங்கத்தின் விலையில் கடும் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்

உலகலாவிய ரீதியில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கையிலும் தங்கத்தின் விலையில் கடும் வீழ்ச்சி எற்பட்டுள்ளது.
இன்று (18-04-2013) இலங்கையில் ஒரு பவுண் நகைத் தங்கத்தின் விலை 38,552 ரூபா 31 சதமாக விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் நகைத் தங்கத்தின் விலை 5,048 ரூபா 11 சதமாக விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை இலங்கையில் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,
24 கரட் தங்கம் - ஒரு கிராமின் விலை 5,507 ரூபா 47 சதம்.
21 கரட் தங்கம் - ஒரு கிராமின் விலை 4,818 ரூபா 07 சதம்.
18 கரட் தங்கம் - ஒரு கிராமின் விலை 4,129 ரூபா 28 சதம்.
14 கரட் தங்கம் - ஒரு கிராமின் விலை 3,213 ரூபா 55 சதம்.
உலக சந்தையில் கடந்த மூன்று ஆண்டுகளாக தங்கத்தின் பெறுமதியில் உயர்வு நிலையே தெடர்ச்சியாக இருந்து வந்தது.
இந்நிலையில் இவ்வாரம் முதல் தங்கத்தின் பெறுமதி தொடர்ச்சியான சரிவை கண்டுள்ளது.
இந்த வருட ஆரம்பத்தில் நகைத்தங்கம் 53 ஆயிரம் ரூபா வரை ஏற்றம் கண்டமை குறிப்பிடத்தக்கது.
தங்க கொள்வனவாளர்களுக்கு இது சாதகமான மகிழ்ச்சி தரக் கூடிய செய்தியாக இருப்பினும் தங்கத்தை மூலதமாகக் கொண்டவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
எனினும் இது ஒரு நிரந்தர வீழ்ச்சியாக, தொடர்ச்சியான ஸ்திர தன்மையில் இருக்காது என கூறப்படுகிறது

உணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா?

உணவில் அதிகம்
சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு
புற்றுநோய், எலும்பு முறிவுநோய்,
மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள்,
இரத்த அழுத்தம், சரும நோய்கள், விரைவில் முதிர்ச்சி, உள்ளிட்ட
ஆபத்தான நோய்கள் ஏற்படுவதாக
அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மனிதன் அதிகம் உண்ணும் சத்தில்லாத
உணவுகளில் சர்க்கரையும் ஒன்று.
சர்க்கரை உடலுக்கு எந்த சத்தையும்
கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல்,
உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது.
அதனால்தான் இது சத்தில்லாத கலோரி, சத்தில்லாத உணவு என்றும்
அழைக்கப்படுகிறது. உண்மையில் நம்முடைய
உடலுக்கு சர்க்கரை அறவே தேவையில்லை.
உடலுக்கு சக்தி தேவைப்படும் போது இதர
உணவுகள் குளுகோஸ் ஆக
மாற்றி அமைக்கப்படுகின்றன. சிகரெட், மது முதலியவற்றைவிட
சர்க்கரை அதிக ஆபத்தானது எனலாம்.
புற்றுநோய், எலும்பு முறிவுநோய்,
மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதயநோய்கள்,
இரத்த அழுத்தம், சரும நோய்கள், விரைவில்
முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக்கோளாறு, சொத்தைப்பல்,
பெண்ணுறுப்பு தொற்றுநோய், அளவுக்கு மீறிய
சுறுசுறுப்பு, வன்செயல் மற்றும் பரவலாக
இருக்கும் நீரிழிவு நோய்,
இப்படி சர்க்கரை உடம்பிலுள்ள
ஒவ்வொரு உறுப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்று
எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். காபி, டீ, பால் போன்றவைகளில்
சர்க்கரையை அதிகம் சேர்த்துக்கொள்கின்றனர்.
சர்க்கரை அதிகமாகவும் வைட்டமின் மற்றும்
தாதுப்பொருட்கள் குறைவாகவும் உள்ள
உணவு வகைகளை உட்கொண்டு வருபவர்களுக்கு
உடம்பில் ரசாயன மாறுதல்கள் ஏற்பட்டு, அளவுக்கு மிஞ்சிய துடுக்குத்தனத்தையும்
வன்செயலையும் தூண்டிவிடும். ஜப்பானில்
பெருகிவரும் வன்செயல்களுக்கு நொறுக்குத் தீனிகளுக்கும் அதிக
தொடர்பு இருப்பதாக ஆய்வுகள்
சுட்டிக்காட்டுகின்றன. டின் பானங்கள்,
செயற்கை சத்துணவு முதலியவைகளில்
சர்க்கரை அதிகம் சேர்க்கப்படுகிறது.
அதேபோல் குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சர்க்கரை உள்ள
உணவுகளைக் கொடுப்பதன் மூலம் உங்கள்
குழந்தையை நீங்களே நோயாளியாக
உருவாக்குகிறீர்கள் என்று எச்சரிக்கின்றனர்
நிபுணர்கள். இனிப்பான பொருளை உண்ணும்போது வாயில் உள்ள
பாக்டீரியாக்கள் அதனுடன்
சேர்ந்து அமிலத்தை உருவாக்குகிறது. இந்த
அமிலம் பிறகு பற்களில் உள்ள
எனாமலை அரித்து ஓட்டையாக்கி பல்
சொத்தையை உண்டாக்குகிறது. சர்க்கரையும் கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப்பொருட்கள்
இரத்தத்தில் கொலாஸ்டிரல்
அளவை அதிகரித்து விடுவதால், இருதய
நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் இரத்தம்,
ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள்
செல்வது தடைபட்டுவிடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசை நார்கள்
இறந்து போய் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த
மாரடைப்புக்கு குழந்தைப்பருவத்திலேயே நாம்
வித்திட்டுவிடுகிறோம். உடலில் அதிகம் சர்க்கரை இருந்தால் அதைச்
சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின்
வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக
வெளியாகும் இன்சுலினுக்கும் நோய்
எதிர்ப்பு சக்தியைத்தடுக்கும் ஹார்மோன்களான
புரோஸ்டே கிளேன்டின் E2வுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய்
கழலையை உருவாக்குகிறது.
கேன்டிடா எல்பிகன்ஸ் என்ற
பெண்ணுறுப்பு தொற்று நோயை அதிக
அளவு சர்க்கரை இன்னும்
துரிதப்படுத்துகிறது. தினமும் 24
தேக்கரண்டி சர்க்கரை நமது உணவில் சேர்ந்தால்
இது 92 சதவிகித வெள்ளை இரத்த அணுக்கள்
உருவாவதை தடுக்கிறது. இந்த
வெள்ளை அணுக்கள் அபாயகரமான
பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உடையவை. எனவே உடலில் நோய்
எதிர்ப்பு சக்தி குறைவதற்கு சர்க்கரையே
காரணமாகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

16 April 2013

இரானில் கடும் நிலநடுக்கம்- 40 பேர் பலி?, டில்லியில் கட்டிடங்கள் ஆட்டம்

இரானின் தென்கிழக்குப் பகுதியில்
பாகிஸ்தானுடனான எல்லைக்கு அருகே 7.8
புள்ளிகள் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ஒன்று தாக்கியுள்ளது. இலகுவில் செல்ல முடியாத,
சனநெருக்கடி மிக்க சிஸ்டான் பலுசிஸ்தான்
மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் மையம்
கொண்டிருந்தது. பலியாகியிருப்போரின்
எண்ணிக்கை குறித்து குழப்பம்
காணப்படுகிறது. எவரும் இதில் உயிரிழக்கவில்லை என்று மாகாண
ஆளுநரை ஆதாரம் காட்டி செய்திகள்
கூறுகின்றன. ஆனால், 40 பேர் வரை கொல்லப்பட்டதாக அரசாங்க
தொலைக்கட்சி கூறியுள்ளது. எல்லையில் தமது பக்கமாக 13 பேர்
பலியானதாகவும், நூற்றுக்கணக்கான வீடுகள்
சேதமடைந்ததாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர். மின்சாரமும், தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ள
அந்த பகுதிக்கு 20 தேடுதல் மற்றும் மீடுபுக்
குழுக்களை தாம் அனுப்பியுள்ளதாக இரானிய
செம்பிறைச் சங்கம் கூறியுள்ளது. அந்தப் பகுதியில் பெரும்பாலும் மண்
வீடுகளே இருக்கும் நிலையில்
அவை இடிந்து விழும் வாய்ப்புகள் உள்ளன. கடந்த நாற்பது ஆண்டுகளில் ஏற்பட்ட
நிலநடுக்கங்களிலேயே இதுதான் மிகவும்
பெரியது என்று தலைநகர் டெஹ்ரானிலுள்ள
பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார். எனினும் அங்குள்ள புஷேர் பகுதியில் உள்ள
அணுமின் நிலையத்தை கட்டிய ரஷ்ய நிறுவனம்,
அதற்கு ஏதும்
பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறியுள்ளது. இந்த நிலநடுக்கம் பல மத்திய
கிழக்கு நாடுகள் மற்றும்
கிழக்கே இந்தியா வரை உணரப்பட்டுள்ளது. இந்தியத் தலைநகர் புதுடில்லியில் பல
கட்டிடங்கள் ஆட்டம் கண்டன. டில்லி தவிர ஜெய்பூர், சண்டிகர், அகமதாபாத்
போன்ற நகரங்களிலும் இந்த நிலநடுக்கம்
உணரப்பட்டுள்ளது.

thanks:bbc

14 April 2013

கருப்பை மாற்றுச் சிகிச்சை மூலம் கர்ப்பிணியான பெண்

ஒருவரிடமிருந்து பெறப்பட்ட கர்ப்பப்
பையை சத்திரசிகிச்சை மூலம்
பொருத்திக்கொண்ட துருக்கிய பெண்ணொருவர்
வெற்றிகரமாக கர்ப்பம் தரித்துள்ளார். கர்ப்பப்பை இன்றி பிறந்த இந்தப் பெண்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்
கர்ப்பப்பை மாற்று சிகிச்சை செய்துகொண்டார். அந்தப் பெண்ணின் ஒரு கருமுட்டையையும்
அவரது கணவரது விந்தணுவையும் ஐவீஎஃப்
சிகிச்சை மூலம் இந்தக் கருப்பைக்குள் மாற்றிய
நிலையில் அந்தப் பெண் இப்போது இரண்டு வார
கால கர்ப்பிணியாகியுள்ளார். குழந்தை பிறந்ததும் இந்த 22 வயதான பெண்தான்
உலகிலேயே கர்ப்பப்பை மாற்றுச்சிகிச்சை மூலம்
குழந்தை பெற்ற முதல் பெண் என்பார்
என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுப்பாட்டை மீறி கடலுக்குள் மூழ்கிய விமானம்: 7 பேர் படுகாயம்

இந்தோனேசியாவின் சுற்றுலாத்தலமாக விளங்கும் பாலித் தீவிற்கு வருடத்திற்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள தென்பசார் என்ற விமானத் தளத்திலிருந்து 172 பேரை ஏற்றிக்கொண்டு இன்று(13.04.2013) லையன் ஏர் போயிங் 737 என்ற விமானம் ஒன்று புறப்பட்டது. ஓடுதளத்தில் சென்றுகொண்டிருந்த அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து திடீரென அருகில்
இருந்த கடலுக்குள் பாய்ந்தது. ஆனால் எந்தவித சேதாரமும் இன்றி விமானத்தில் இருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் தலை மற்றும் கையில் காயமடைந்த 7 பேரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

13 April 2013

இலங்கை : முகத்தை வெண்மையாக்கும் கிரீம்களில்பாதரசம்

இலங்கையில் விற்கப்படும்
முகத்தை வெண்மையாக்கும் கிரிம்கள்
சிலவற்றில் பாதரசத்தின் அளவு அதிகமாக
இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இலங்கை, தாய்லாந்து மற்றும் சீனா ஆகிய
நாடுகளில் உற்பத்தியாகும் இத்தகைய 40
வகையான கிறீம்களில் இந்த பாதரசம் (மேர்குரி)
அளவு , உரிய மட்டத்தைவிட அதிகமாக
காணப்படுவதாக ஒரு சுற்றுச்சூழல்
அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில்
உள்ள இருவேறு ஆய்வுகூடங்களில் இவை குறித்த
ஆய்வுகள் நடத்தப்பட்டதாகவும், அவற்றின்
மூலமே இந்த தகவல் தெரியவந்ததாகவும், அந்த
ஆய்வை நடத்திய சுற்றாடல் நீதிக்கான மத்திய
நிலையம் கூறியுள்ளது. இந்த ஆய்வு நடவடிக்கைகள அந்த
நிலையத்தை சேர்ந்த ஹேமந்த விதானகே என்பவர்
நடத்தியுள்ளார். இந்த விடயங்கள்
குறித்து பிபிசி தமிழோசைக்கு தகவல் தந்த
இலங்கை சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரான, எஸ்.
விஸ்வலிங்கம் அவர்கள், இந்த இரசம் கூடிய
கிரீம்கள் தோலில் உள்ள மெலனின்
பதார்த்தத்தை வெளியேற்றி அதனை வெண்மையாக்குவதாகவும், அதேநேரம்
அது தோலின் ஊடாக உடலினுள் நுழைந்து பல
தோல்வியாதிகளை ஏற்படுத்துவதாகவும்
தெரிவித்தார். குறிப்பாக இலங்கையின் பின்தங்கிய பகுதிகள்,
மலையக தோட்டப் பகுதிகள் ஆகியவற்றில்
குறைந்த விலையில் பெண்கள் மத்தியில் இந்த
கிறீம்கள் பிரபலமாக விற்கப்படுவதாகவும்
அவர் கூறினார். இவை குறித்து தாம் இலங்கை அரசாங்கத்துக்கு
எச்சரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.




source:http://www.bbc. co.uk/tamil/sri_lanka/2013/04/130413_lankafairnes.shtml

10 April 2013

பேஸ்புக்கை வேகமாக பயன்படுத்துவது எப்படி?

பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் சமுதாய இணைய வலைத் தளமாக பேஸ்புக் தளம் உயர்ந்து வருகிறது. இந்த தளத்தில் பயன்படுத்தக் கூடிய ஷார்ட்கட் கீகளை இங்கு

காணலாம்.
ஷார்ட்கட் கீகளைப் பயன்படுத்தும் முன், முதல் கீயான மாடிபையர் கீ ( கீ போர்டின் செயல்பாட்டினை மாற்றித் தரும் கீ) நீங்கள் பயன்படுத்தும் பிரவுசருக்கானது என்ன என்று அறிந்து, அதனை இணைக்க வேண்டும்.
விண்டோஸ் இயக்கத்தில் பயர்பாக்ஸ் பிரவுசருக்கு Alt+Shift, குரோம் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் Alt. இந்த கீகளுடன், கீழே தரப்படும் கீகளை இணைத்துப் பயன்படுத்தலாம்.
1. புதிய மெசேஜ் பெற -M
2. பேஸ்புக் சர்ச் -?
3. நியூஸ் பீட் தரும் ஹோம் பேஜ்- 1
4. உங்கள் புரபைல் பேஜ் 2
5. நண்பர்களின் வேண்டுகோள்கள் – 3
6. மெசேஜ் மொத்தம் -4
7. நோட்டிபிகேஷன்ஸ் 5
8. உங்கள் அக்கவுண்ட் செட்டிங்ஸ் 6
9. உங்கள் பிரைவசி செட்டிங்ஸ் – 7
10. பேஸ்புக் ஹோம் பக்கம் 8
9. பேஸ்புக் ஸ்டேட்மென்ட் மற்றும் உரிமை ஒப்பந்தம் -9
10. பேஸ்புக் ஹெல்ப் சென்டர் -O
இறுதியில் தரப்பட்டுள்ள கீகளை, மேலே குறிப்பிட்டது போல, அந்த மாடிபையர் கீயுடன் பயன்படுத்த வேண்டும்.
எடுத்துக் காட்டாக, பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துபவர்கள், அவர்களின் புரபைல் பேஜ் பெற Alt+Shift+2 பயன்படுத்த வேண்டும்.

இந்த ஷார்ட்கட் கீகளில் உள்ள எண்களை, நம்லாக் செய்து கீ பேடில் இருந்து பயன்படுத்தக் கூடாது. எழுத்துக்களுக்கு மேலாக உள்ள எண்களுக்கான கீகளையே பயன்படுத்த வேண்டும்.

08 April 2013

இரும்புப் பெண்மணி மார்கரெட் தாட்சர் காலமானார்

இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்ட
பிரிட்டனின் முன்னாள் பிரதமரான மார்கரெட்
தாட்சர் திங்கட்கிழமை லண்டனில் காலமானார்.
அவருக்கு வயது 87. சர்வதேச அரங்கில் பல ஆண்டுகள்
ஆளுமை செலுத்தி வந்த அவர் சில காலம்
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். பக்கவாத நோய் தாக்கியதை அடுத்து அமைதியாக
அவரது உயிர் பிரிந்ததாக பேச்சாளர் ஒருவர்
தெரிவித்துள்ளார். மார்கரெட் தாட்சர் பழமைவாதக்
கொள்கைகளை கொண்ட கான்சர்வேட்டிவ் கட்சியின்
தலைவியாகவும் இருந்தார். பிரிட்டனின் முதலாவது பெண் பிரதமர் என்ற
பெருமையும் அவருக்கு உண்டு. அவர் பிரதமராக இருந்த காலத்தில்தான்
ஃபாக்லாண்ட் தீவுகள் தொடர்பில்
ஆர்ஜண்டீனாவுடன் பிரிட்டன் போரில்
ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றது. 1979 ஆம் ஆண்டு தான்
பதவி ஏற்றதை அடுத்து பிரிட்டனின் அரசியல்
அரங்கில் பல மாற்றங்களை அவர் ஏற்படுத்தினார்.
புரட்சிகரமான பல பொருளாதாரக்
கொள்கைளையும் அவர் முன்னெடுத்தார். பெருமளவில் அரச நிறுவனங்களை தாட்சர்
தனியார்மயப் படுத்தினார்.
தொழிற்சங்கங்களின் மீது கடுமையான
கட்டுப்பாடுகளை முன்னெடுத்தன் விளைவாக
ஒரே நேரத்தில் மிகவும் நேசிக்கப்பட்டும்,
வெறுக்கப்பட்டவருமான தலைவியாக அவர் திகழ்ந்தார். சர்வதேச அரங்கில் செல்வாக்குப் பெற்ற,
அங்கீகரிக்கப்பட்ட மிகப்பெரிய பிரிட்டிஷ்
தலைவியாகவும் அவர் திகழ்ந்தார்.
அவரது மறைவு குறித்து தான் மிகவும்
வருத்தமடைந்ததாக தெரிவித்துள்ள
பிரிட்டிஷ் அரசி எலிசபெத்,
அவரது குடும்பத்தாருக்கு தனது
அனுதாபங்களை வெளிப்படுத்தி ஒரு தனிப்பட்ட
செய்தியை அனுப்பவுள்ளதாக கூறியுள்ளார்.
தாட்சருக்கு முழு இராணுவ மரியாதையுடன்
கூடிய சம்பிரதாய ரீதியிலான இறுதிச்
சடங்கு நடைபெறும் எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.






thanks:bbc

07 April 2013

உடலுக்குள்ளேயே உட்கார்ந்திருக்கும் ஒரு இரத்தப் பரிசோதனை நிலையம்

அரை அங்குலம் நீளமும்
தீக்குச்சி தடிமனுமே கொண்ட கருவி இது நம்முடைய தோலுக்கு அடியில்
பொருத்தப்படுகின்ற
ஒரு சிறு கருவி மூலம் நம்முடைய
இரத்தப்
பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன்
கைத்தொலைபேசியில் பார்க்க வகை செய்யும் கண்டுபிடிப்பு ஒன்றைத்
தாம் செய்துள்ளதாக
சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள்
கூறுகின்றனர். அரை அங்குலம் நீலமும் தீக்குச்சியின்
தடிமனுமே கொண்ட இக்கருவியின் மாடல்
ஒன்றை சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள்
தற்போது உருவாக்கியுள்ளனர். நம் இரத்தத்திலிருந்து ஐந்து
உட்கூறுகளின் அளவுகளை இந்தக்
கருவி உடனுக்குடன் தெரிவிக்குமாம். இந்தக்
கருவியிலிருந்து பரிசோதனை முடிவுகள்
ரேடியோ அலைகள் மூலமாகவும், புளூடூத்
கம்பியற்ற தகவல் பரிமாற்றம்
மூலமாகவும்
மருத்துவருக்கு தெரிவிக்கப்படும். இன்னும் நான்கு ஆண்டுகளிலேயே இந்தக்
கருவி பயன்பாட்டுக்கு வந்துவிடும்
என்று விஞ்ஞானிகள்
நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ஒரு ஊசியைக் கொண்டு நம் உடலில் புஜம்
கால், வயிறு போன்ற ஒரு இடத்தில்
தோலுக்கு அடியில் தசையின்
மேற்பகுதியில் இந்த
சிறு கருவியை வைத்துவிட முடியும்
என்றும், அவ்வாறு இக்கருவியை வைத்தால் மாதக் கணக்கில்
அது அங்கிருந்தபடி இரத்தப்
பரிசோதனை முடிவை வேண்டுமானபோது
வழங்கிக்கொண்டிருக்கும் என்றும்
விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இரத்தித்தில் கொழுப்பின்
அளவு இனிப்பின்
அளவு ஆகியவற்றோடு மருத்துவர்களுக்கு
தேவைப்படும் வேறு சில
உட்கூறு அளவுகளையும் கண்டறியும்
வல்லமை இந்த சிறு கருவிக்கு உண்டு. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய்
போன்ற வாழ்க்கை முறை சார்
நோய்களை உடையவர்களுக்கும்,
கீமோதெரபி போன்ற சிகிச்சைகளைப்
பெறுகின்ற புற்றுநோயாளிகளுக்கும்
இந்தக் கருவி ஒரு வரப்பிரசாதமாக அமையும் என எகோல் பாலிடெக்னிக்
பெடெரால் த லௌசான் என்ற
கல்வியமைப்பைச் சேர்ந்த பேராசியர்
ஜியோவனி டெ மிஷெலியும்
விஞ்ஞானி சண்ட்ரோ கர்ராராவும்
கூறுகின்றனர். இக்கருவியின் உதவியால் ஒரே நேரத்தில்
பல இரத்தக் கூறுகளின்
அளவுகளை அறிந்துகொள்ள முடியும்
என்றும், ஊசி வலியை திரும்பத் திரும்ப
அனுபவிக்க வேண்டிய அவசியம்
இல்லாது செய்துவிடும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இராட்சத சிலந்தி!

மாங்குளம் பகுதியில் அண்மையில்
கண்டுபிடிக்கப்பட்ட மனித முகமொன்றின்
அளவை ஒத்த
சிலந்தியானது முழு உலகினது கவனத்தினையு
ம் ஈர்த்துள்ளது. இச்சிலந்தியானது குறுக்காக சுமார் 8
அங்குளம் நீளமானதென
கணிப்பிடப்பட்டுள்ளதுடன் கால்களில் மஞ்சள்
நிற கோடுகளையும் கொண்டுள்ளது. டரான்டூலாஸ் 'tarantulas' எனப்படும் இராட்ச
சிலந்தி குடும்பத்தைச் சேர்ந்த இச்
சிலந்தியானது பொயிசிலோதேரியா 'Poecilotheri
a' இனத்தைச் சேர்ந்தது என ஆராய்ச்சியாளர்கள்
தெரிவிக்கின்றனர். இலங்கை மற்றும் இந்தியாவில் மட்டும்
காணப்படும் இச் சிலந்திகள்
மரங்களிலேயே பெரும்பாலும் வாழ்வதாக
தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இவை வேகமான அசைவுகளைக் கொண்டதுடன்
விஷத்தன்மை வாய்ந்தது. இவற்றின் விஷமானது பூச்சிகள், எலி, பாம்பு மற்றும்
சிறிய பறவைகளைக் கொல்லக்கூடியது. இதுமட்டுமன்றி இச்சிலந்தியானது 'கோலியாத்
பேர்ட் ஈட்டர்' எனப்படும் தென் அமெரிக்காவில்
வாழும் உலகின் மிகப் பெரிய
சிலந்திகளை ஒத்ததென ஆய்வாளர்கள்
தெரிவிக்கின்றனர். இலங்கையில் இச்சிலந்தி 2009 ஆம் ஆண்டு முதல்
முறையாக கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. இதன்போது உயிரிழந்த
சிலந்தியொன்றை கிராமவாசிகள் உயிரினப்
பல்வகைமை தொடர்பான கல்வி மற்றும்
ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ரணில்
நாணயக்காரவுக்கு அளித்துள்ளனர். அதை அவர்கள் அடித்துக்கொன்றுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது. அச்சிலந்தியை ஆராய்ந்த ரணில் குறித்த
சிலந்தியானது இதற்கு முன்னர் இலங்கையில்
இணங்காணப்பட்டதொன்றல்லவென
அறிந்து கொண்டுள்ளார். பின்னர் ரணில் தலைமையிலான குழுவினர்
குறித்த சிலந்தியை தேடும்
பணியை தொடங்கியுள்ளனர். நீண்ட நாள் தேடலின் பின்னர் பெண்
சிலந்தி மற்றும் அதன் குஞ்சுகளை மாங்குளம்
வைத்தியசாலையின் வைத்தியரொருவரின்
தங்குமிடத்தின் வளாகத்தில்
கண்டுபிடித்துள்ளனர். இதை கண்டுபிடிக்க உதவிய பொலிஸ்
உத்தியோகத்தரான மைக்கல் ராஜ்குமார்
புராஜா என்பவருக்கு மரியாதை செலுத்தும்
பொருட்டு இச்சிலந்தி இனமானது Poecilotheria
rajaei எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதேபோல் பல சிலந்திகள் எதிர்வரும்
காலத்தில் கண்டுபிடிக்கப்படலாம் என
ஆராய்ச்சியாளர் ரணில் நாணயக்கார
தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள
சிலந்தியானது இந்தியாவில் காணப்படும் Poecilotheria regalis என்றழைக்கப்படும்
சிலந்திகளை ஒத்ததென ஆராய்ச்சியாளர்கள்
தெரிவிக்கின்றனர். இதேவேளை Poecilotheria rajaei இனை தனிப்
பிரிவாக அங்கீகரிக்க மேலும்
உறுதிப்படுத்தல்கள் அவசியமென
அவுஸ்திரேலிய
குயின்ஸ்லாந்து நூதனசாலையைச் சேர்ந்தவரும்
சிலந்தி ஆராய்ச்சித் துறையில் நிபுணருமான ரொபர்ட் ரவேன் தெரிவித்துள்ளார்.

04 April 2013

பர்மா : பௌத்தர்களின் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள்

பர்மாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் மீது, அங்கு அண்மையில் ஏற்பட்ட மத வன்செயல்கள் பெரும் கறையை ஏற்படுத்தியிருக்கின்றன. கடந்த வருடத்தில் அங்கு மேற்கு ரக்கைன் மாகாணத்தில் ஏற்பட்ட வன்செயல்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்தார்கள். இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பானமையினர் தொடர்ச்சியாக தாக்குதல்களுக்கு உள்ளாகிவரும் றொஹிஞ்ஞா முஸ்லிம் சிறுபான்மையினர். தற்போது அந்த வன்செயல்கள் நாட்டின் இதயப் பகுதிக்கும், அதாவது முன்னாளைய அரச தலைநகரான மாண்டலேக்கு தென்கே பரவியிருக்கிறது. ஒரு பௌத்த பிக்கு கொல்லப்பட்டு விட்டதாக பரவிய செய்தியை அடுத்து மெய்ட்டிலா நகரில் ஆத்திரமடைந்த கும்பல் தாக்கியதில் 40 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பல தலைமுறைகளாக அங்கு கணிசமான சிறுபான்மையினராக அந்தப் பகுதிகளில் வாழ்ந்துவந்த முஸ்லிம்கள் இந்த தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்டனர். பல கடும்போக்கு பௌத்த பிக்குகளே இந்த தாக்குதலுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ளது. முஸ்லிம்கள் பர்மாவில் அனைத்து துறைகளிலும் ஆக்கிரமிப்பதாகக் கூறி பௌத்தர்கள் இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளனர். ஆனாலும், மையநீரோட்டத்தில் உள்ள பிக்குகள் இப்படியான வன்முறைகளில் சம்பந்தப்படுவதில்லை என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள். முஸ்லிம் வணிக நிறுவனங்களுக்கு எதிராக பல பிரச்சாரங்களையும் பௌத்தர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். பர்மா எங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் அச்சம் என்பது மிகவும் உச்சத்தில் காணப்படுகின்றது. அதிகரித்து வருகின்ற சகிப்புத்தன்மை இன்மையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து புதிய அரசாங்கம் தெளிவில்லாமல் இருக்கிறது. முன்னே நகர்ந்து முன்னேற வேண்டும் என்று நினைக்கின்ற இந்த நாட்டுக்கு இது ஒரு பின்னடைவுதான். Thanks:bbc

02 April 2013

'பெஷன் பக்' களஞ்சியசாலை மீதான தாக்குதல்: சந்தேகநபர்கள் 17 பேரும் விடுதலை

பெபபிலியான பகுதியில் அமைந்துள்ள 'பெஷன் பக்' ஆடை விற்பனை நிலையத்தின் களஞ்சியசாலை மீது கடந்த 28 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுடன் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பிக்குகள் உட்பட 17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்களை இன்று கங்கொடவில் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தினர். இதன்போது 'பெஷன் பக்' நிறுவனத்தினர், இந்த வழக்கினை தொடர்ந்து மேற்கொள்ள தேவையில்லை எனநீதவானுக்கு அறிவித்தனர். இதனையடுத்து நீதவான் சந்தேக நபர்கள் 17 பேரையும் எச்சரித்து விடுதலை செய்தார். Source:http://www. virakesari.lk/article/local.php?vid=3783