தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

28 September 2014

புலமைப் பரிசில் பரீட்சை: அல் ஹஸனியாவின் இருவர் சித்தி

இவ்வருடத்திற்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள்
இன்று வெளியாகியுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி இடம்பெற்ற ஐந்தாம் தரப் புலமைப் பரிசில்
பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 27,648 மாணவர்கள் தோற்றினர்.

இம்முறை நடைபெற்ற ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் மக்கொன அல்
ஹஸனியா மகாவித்தியாலய மாணவி பாத்திமா ரிசாதா ரிஸ்வான் 177 புள்ளிகளையும்
மாணவன் இம்தாத் பைஸான் 165 புள்ளிகளையும் பெற்றனர்.

அதேநேரம், இம்முறை நடைபெற்ற ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில்
மாவனல்லை சாஹிரா கல்லூரி மாணவி பாத்திமா ஸாமா 197 புள்ளிகளைப் பெற்று
இலங்கையில் தமிழ் மொழியில் முதலாம் இடத்தையும், அகில இலங்கை ரீதியில்
முன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
இவ்வருடத்திற்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்களின் விபரம் இதோ
01) டப்ளியூ.ஏ.வெனுஜ நிம்சத் - 199 புள்ளிகள் - எம்பிலிபிடிய கனிஸ்ட பாடசாலை


02) எச்.எம்.மாலக நெத்மால் திலஹரத்ன - 198 புள்ளிகள் - ரோயல் கனிஸ்ட பாடசாலை, பொலன்னறுவை

03) நிஸ்வார் பாத்திமா ஸாமா - 197 புள்ளிகள் - ஷாகிரா மத்திய கல்லூரி, மாவனெல்லை

03) ஜி.ஷானி யசோதரா குணசேகர - 197 புள்ளிகள் - பிடியேகெதர கனிஸ்ட பாடசாலை, பெம்முல்லை

04) என்.வி.அதீஷ ஆலோக - 196 புள்ளிகள் - அளுத்வெவ கனிஸ்ட பாடசாலை, அகுணகொலபெலச


04) டப்ளியூ.ஈ.பி.டிலினி திஸர - 196 புள்ளிகள் - விஹாரமஹா தேவி பெண்கள் பாடசாலை, பதுளை


04) எச்.என்.நிஷார டி சில்வா விஜேசிங்க - 196 புள்ளிகள் - குளுபென கனிஸ்ட பாடசாலை - பொகுனுவிட்ட

04) கே.ஓ.சி.சேனல்ய கருணாநாயக்க - 196 புள்ளிகள் - யசோதரா தேவி பாலிகா வித்தியாலயம், கம்பஹா

04) கே.ஜே.பி.ருச்சிர செஹான் ஜெயவீர - 196 புள்ளிகள் - வெஸ்லி கல்லூரி, கொழும்பு
.

- பட உதவி:Riflan Rasheed

ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் இல்லாத நிலையில் இன்றை மாநாடு திட்டமிடப்பட்டு நடைபெறுகிறது

நாட்டில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புசெயலாளர்கள் இல்லாத நிலையில் இன்று
பௌத்த பிக்குகள் நான்காயிரம் பேர் ஒன்றிணைந்து, இலங்கையை பௌத்த நாடுஎன
நிரூபிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற
உறுப்பினர்சட்டத்தரணி சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் தலைவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று
மட்டக்களப்பில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், இந்நிகழ்வு தற்செயலாக
நடக்கின்றவிடயமாக கொள்ள முடியாது. நேரத்தினை சரியாக தெர்ந்தெடுத்து
வன்செயலினை ஆரம்பிப்பதற்கான முறையாக நாங்கள் இதனை அவதானிக்க முடிகின்றது.
இதனை தற்செயலாக நடைபெறுவதாக நினைத்தால் இது எமது மடமை. இந்த நாட்டினை
பௌத்த சிங்கள நாடு என உணர்த்தும் தேவை அரசுக்கு இன்றுஏற்பட்டிருகின்றது.
இலங்கை அரசுக்கு பல்வேறு கோணங்களின் வெளிநாட்டு அழுத்தங்கள்
கூடுதாலாகஇடருந்து கொண்டு இருகின்றது. இதனை தவிர உள்நாட்டிலும்
வித்தியாசமானஅழுத்தங்கள் அரசுக்கு தற்போது ஏற்பட்டிருக்கின்றது.
யுத்த வெற்றியினை வைத்துக் கொண்டு இந்த நாட்டினை
இருபத்தைந்துவருடங்களுக்கு ஆட்சி நடாத்துவோம் என்று கூறிவந்த
ஜனாதிபதிக்கு இன்று ஐந்துவருடங்களுக்குள் ஆட்டம் கண்டுள்ளனர்.
இதனால்தான் இவர்கள் தேவையற்ற பிரச்சினையை தூண்டி விடுகின்றனர்.
இந்தநாட்டில் ஏனையவர்களுக்கு இருக்கக் கூடிய உரிமையைத்தான்
நாங்கள்கேட்கின்றோம்.
இந்தநாட்டின் உரிமைக்கு நாங்கள் உரித்துடையவர்கள். ஒரு
நாட்டுக்குள்நாங்கள் இறைமையின்றி இருக்கக் கூடாது. எமது உரிமைக்கு
ஏற்றபடி அரசியல்யாப்பு முறைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு நடந்தால் தங்களது ஆதிக்கம் இல்லாம் போய்விடும்.
என்பதற்காவேபேரினவாதத்தினை தூண்டி விடுகின்றனர். இதற்கு நாங்கள் இடமளிக்க
முடியாதுஎனத் தெரிவித்தார்.


Source:-Meelparvai

27 September 2014

கற்றலினால் ஆன பயன் தான் என்ன ?

கடந்த 23ம் தேதி எல்லாரையும் பதை பதைக்க வைத்திருக்கிறது டில்லி உயிரியல் பூங்கா.அந்த 15 நிமிட வீடியோ காட்சி நம் கண் முன்னேயே நிழலாடுகிறது.
..
மெக்சூத் என்ற அந்த வாலிபர், 10 நிமிடமாக, விஜய் என்று பெயரிடப்பட்ட வெள்ளைப் புலியைக் கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டிருந்த காட்சி பார்க்கிற எல்லோரையும் கண்ணீர் வர வைத்துவிடும்.
..
ஆனால் இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு, இரவு தூக்கம் இல்லாமல் தவிக்கும் அந்த அர்த்த ராத்திரியில் ஒரே ஒரு கேள்விதான் என் மனதில் நின்றது.
..
அது –
..
கற்றலினால் ஆன பயன் என்ன?
..
எதை எதையெல்லாமோ படிக்கிறோம்..பட்டங்கள் வாங்குகிறோம்..கல்வியாளர் என்று அழைக்கப்படுகிறோம்..அறிவாளிகள் என்று போற்றப்படுகிறோம்..விஞ்ஞானிகள் என்று மதிக்கப்படுகிறோம்..டாக்டர்கள் என்று கெளரவிக்கப்படுகிறோம்.
எல்லாம் சரிதான்.
..
ஆனால்..கற்றலினால் ஆன பயன் தான் என்ன?
ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே..
..
ஒரு உயிர் ஒரு புலியிடம் மாட்டிக் கொண்டு 10 நிமிடங்களாக கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டேயிருக்கும் பொழுது அந்த உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்பதை பார்வயாளர்கள் யாருக்கும் நம் கல்வி கற்றுக்கொடுக்கவேயில்லையே..
..
அலெக்ஸாண்டரின் குதிரையின் பெயர் என்ன? தெரிந்து வைத்திருக்கிறோம்.
..
ஆப்பிரிக்காவில் தங்கம் எந்த இடத்தில் கிடைக்கிறது? தெரிந்து வைத்திருக்கிறோம்.
..
கெளதம புத்தரின் இயற்பெயர் என்ன? தெரிந்து வைத்திருக்கிறோம்.
..
“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.”
..
என்ற பாடலை காரணமேயில்லாமல், வக்கனையாய் மனப்பாடமாய் அறிந்து வைத்திருக்கிறோம்.
..
ஆனால் ஆபத்து நேரத்தில் எப்படி செயல்படுவது என்பதை அறிந்து வைத்திருக்கிறோமா?
..
அந்த வாலிபன், அந்த இடத்தில் அமைதியாய் எழும்பி நின்றிருந்தால் அந்தப் புலி ஒருவேளை தன் உயரத்தை விட வளர்த்தியாய் இருக்கிறானே..இவனை எப்படி எதிர் கொள்வது என்று அமைதியாகத் திரும்பிப் போயிருந்திருக்கும்.
ஏனென்றால் அது பசியினால் அவனைத் தாக்கவில்லை. அப்படித் தாக்கியிருந்தால் அவன் சரீரத்தை அங்கு விட்டு விட்டுப் போயிருக்காது. அதுமாத்திரமல்ல..10 நிமிடங்கள் அவனை அப்படியே பார்த்துக்கொண்டேயிருக்கிறது. தாக்க முனையவேயில்லை.
..
ஆனால் பார்வையாளர்கள் மேலிருந்து கல்லெறிந்த உடன்..அது சினம் கொள்கிறது. மேலே பார்த்து உறுமுகிறது. பார்வையாளர்கள் விடவில்லை. தொடர்ந்து கல்லெறிகிறார்கள். கூச்சலிடுகிறார்கள்.
..
அதன்பிறகுதான் அந்தப் புலி, அந்த வாலிபனைத் தாக்க முயற்சிக்கிறது. அதுவும் இறையைத் தூக்கிக் கொண்டு தன்னிடத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று விட வேண்டும் என முடிவு செய்து அவனுடைய கழுத்தைக் கவ்விப் பிடிக்கிறது.
இவையெல்லாமே தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
..
காரணம்..அறிவின்மை.. என்ன செய்வது என்கிற அறிவின்மை.
மிருகங்கள் சப்தத்திற்கு மிரளும். ஆனால் நெருப்பிற்கு பயப்படும்.
..
கூடியிருந்த அத்தனை பார்வையாளர்களில் யாராவது ஒருவர், தன் சட்டையைக் கழற்றி, அதில் நெருப்பு வைத்து, அதை அந்த வாலிபனிடத்தில் எறிந்திருந்தால் புலி மிரண்டு ஓடியிருந்திருக்கும்.
..
இந்த அறிவைக் கூட கற்றுக் கொடுக்காமல் (a+b)2 =a2 + 2ab + b2 என்று கற்றுக் கொண்ட வெற்றுத் தேற்றத்தினால் எனக்கு என்ன பயன்?
..
ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது, வேறு எந்த உதவியுமே தனக்கு அந்த இடத்தில் கிடைக்கவில்லை.. தப்பித்து ஓடவும் முடியவில்லை..மிருகமோ தன்னிலும் பலத்த உருவம்.. அது முதலையாக இருக்கலாம்..சிங்கமாக இருக்கலாம்.. அல்லது.. யானையாக இருக்கலாம். அதை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவைக் கற்றுக் கொடுக்காத கல்வியினால் எனக்கென்ன பயன்?
..
அந்த விலங்குகளின் கண்களை நம் கை முஷ்டியினால் பலங்கொண்ட மட்டும் ஓங்கித் தாக்கினால் அவை நிலை குலைந்து ஓடி விடும். நாமும் தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். அல்லது சிறு மண் துகள்களை அள்ளி அதன் கண்களில் தூவினால் போதும் அவை அந்த இடத்திலிருந்து தப்பித்துச் செல்லத்தான் முயற்சிக்கும்.
..
இந்த அறிவைக்கூடக் கற்றுக்கொடுக்காமல்.. பட்டங்கள் என்ன.. சட்டங்கள் என்ன.. பல்கலைக் கழகங்கள் என்ன?
..
தென்னாப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் என்ன தோண்டியெடுக்கிறார்கள் என்பதை கற்றுக்கொடுப்பதை விட.. வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள்.
..
மற்றவர்களை மதிப்பது எப்படி.. மற்றவா்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி? சாலை விதிகள் என்ன? ஏன் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்? அடிப்படைச் சட்டங்கள் என்ன? நமக்கான உரிமைகள் என்ன? காவல் நிலையங்களை எப்படி அணுகுவது?
..
விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர் கொள்வது? விஷக்கடிகளில் எப்படித் தப்பிப்பது? மாரடைப்பு வந்தால் என்ன செய்வது? நோய்களை எவ்வாறு கண்டறிவது? எந்த மருந்துக்கள் எல்லாம் தடை செய்யப்பட்டவை..பின் விளைவுகள் உள்ளவை?
..
மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது? கணவனிடம் எப்படி நடந்து கொள்வது? மற்றவர்களை நேசிப்பது எப்படி? நேர்மையாய் இருப்பது எப்படி?
..

இவை எதையுமே கற்றுக் கொடுக்காத கல்வியினால் ஆன பயன் தான் என்ன?
..

சர்ச்சைக்குரிய விராது தேரர் இலங்கையில்! வி.ஐ.பி. மரியாதையுடன் வரவேற்பு


பொதுபல சேனா அமைப்பு நாளை நடத்தும் தேசிய மாநாட்டின் பிரதம அதிதியாகக்
கலந்து கொள்ளும் நோக்கில் அவரது இலங்கை விஜயம் அமைந்துள்ளது.
இவரை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் விசேட வரவேற்பு ஏற்பாடுகள்
மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஏனைய நாடுகளின் இரண்டாம் நிலை அரச தலைவர்கள்
இலங்கைக்கு வருகை தரும்போது அளிக்கப்படும் வரவேற்பு விராது தேரருக்கும்
அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது பல சேனாவின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கையில் இருக்கும்
காலப்பகுதியில் விராது தேரருக்கு அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவின்
மூலம் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
மியன்மாரில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் விராது தேரரின் 969
அமைப்பினரால் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. பௌத்த
சிந்தனைகளின் பேரில் கொடூரமான முறையில் உயிருடன் எரித்தும், அடித்தும்
கொலை செய்யப்படும் நிகழ்வுகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான கடும்போக்குவாத அமைப்பான பொதுபல
சேனாவின் மாநாட்டில் விராது தேரர் கலந்து கொள்வது தொடர்பில் இலங்கை
முஸ்லிம்கள் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Source:-Netrikkan

24 September 2014

உங்கள் வாக்குரிமையை இணையத்தில் இப்போதே சோதித்துப் பாருங்கள்

வாக்காளர் இடாப்பில் தனது பெயர் உள்ளதா என உறுதி செய்து கொள்ள முடியும் என தேர்தல்கள்
ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை http://www.slelections.gov.lk/id/index.aspx என்ற இணையத்தள முகவரியில் பார்வையிடலாம்.
செப்டெம்பர் 30ஆம் திகதி வரை குறித்த இணையத்தள முகவரிக்குச் சென்று தனது மாவட்டம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை கொடுத்து தனது பெயர் வாக்காளர் இடாப்பில் உள்ளதாக என உறுதி செய்து கொள்ள முடியும்.
வாக்காளர் இடாப்பில் பெயர் இல்லாத நபர்கள் செப்டெம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் தமது கிராம சேவகர் ஊடாக விண்ணப்பப் படிவம் ஒன்றை பெற்று மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு அனுப்புவதன் மூலம் வாக்காளர் இடாப்பில் சேர்த்துக் கொள்ளப்படும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை 2014 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு பிரதேச கிராம சேவகர் அலுவலகத்தில், பிரதேச செயலாளர் அலுவலகத்தில், உள்ளூராட்சி சபை அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

22 September 2014

களுத்துறை மோதலில் பலர் காயம்(Video)

களுத்துறை கட்டுக்குருந்த பிரதேசத்தில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றுக்குச் செல்லும் வழியில் வழிபாட்டுக்காக கிறிஸ்தவ திருவுருவச் சொரூபம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போது ஏற்பட்ட குழப்ப நிலைமைகளைத் தொடர்ந்தே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் உள்ளூர் கிறிஸ்தவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் நிலை ஏற்பட்டதாக உள்ளூர் செய்தியாளர் ரத்னசிறி கமகே பிபிசி சிங்கள சேவையிடம் கூறினார்.
அதேவேளை அருகில் கூடியிருந்த சிங்கள ராவய உள்ளிட்ட பௌத்த அமைப்புகளைச் சேர்ந்த பிக்குகள் காவல்துறையிடம் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுமாறு கூறியதாகவும் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து, கண்ணீர்ப்புகையை பிரயோகித்ததாகவும் அவர் கூறினார்.




Source:-BBC

19 September 2014

தென் கொரியாவின் கோலாகலமாக தொடங்கிய 17வது ஆசிய விளையாட்டுப் போட்டி


இன்சியான்:
17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி தென் கொரியாவின் இன்சியான் நகரில்
இன்று கோலகலமாக தொடங்கியது. கொரியன் பாப் பாடகர் கங்னம் ஸ்டைல் புகழ்
சை நடனமாடி பார்வையாளர்கள் உற்சாகத்தில் ஆழ்த்தினார் இன்று முதல் 16 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டி அக்டோபர் 4-ம்
தேதி நிறைவடைகிறது. இந்தப் போட்டி 3-வது முறையாக தென் கொரியாவில்
நடைபெறுகிறது. இதற்கு முன்னர் 1986 (சியோல்), 2002 (புசான்) ஆகிய ஆண்டுகளில்
ஆசிய விளையாட்டுப் போட்டியை தென் கொரியா நடத்தியிருக்கிறது. இந்தப் போட்டிக்கான அதிகாரப்பூர்வமாக வாசகமாக "பன்மயம் ஒளிர்கிறது இங்கே" என்ற
வார்த்தை இடம்பெற்றுள்ளது. ஆசியாவின் வரலாறு, கலாச்சாரம் உள்ளிட்டவற்றின்
முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் மேற்கண்ட வாசகம் இடம்பெற்றுள்ளது.

சின்னம் ‘மேஸ்காட்’
போட்டியின் சின்னமாக (மேஸ்காட்) இன்சியானின் சாங்டோ தீவில் வசிக்கும் கடல்
நாய்கள் (ஸ்பாட் சீல்ஸ்) அறிவிக்கப்பட்டுள்ளன. அவை பரேமி, சுமுரோ, விச்வோன் என
அழைக்கப்படுகின்றன. கொரிய மொழியில் பரேமி, சுமுரோ,
விச்வோனுக்கு முறையே காற்று, நடனம், ஒளி என்பது பொருள். வட கொரியா மற்றும்
தென் கொரியா இடையே அமைதியை வலியுத்தும் வகையில் மேற்கண்ட
சின்னத்தை தேர்வு செய்துள்ளனர் போட்டி ஏற்பாட்டாளர்கள்.

இலச்சினை
போட்டிக்கான அதிகாரப்பூர்வ இலச்சினை ஆசியாவின் முதல் எழுத்தான ‘ஏ'
வை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. ‘ஏ' வின் இடது மேற்பகுதியில் சூரியன்
இடம்பெற்றுள்ளது. ஆசிய மக்கள் வானத்தை தங்களின் கையில் பிடித்திருப்பதைக்
குறிக்கும் வகையில் இந்த இலச்சினை அமைக்கப்பட்டுள்ளது.

45 நாடுகள்
ஆசிய கண்டத்தில் உள்ள இந்தியா, சீனா, ஜப்பான், வடகொரியா, பாகிஸ்தான் உள்ளிட்ட
45 நாடுகளைச் சேர்ந்த 13 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் உள்பட மொத்தம் 20 ஆயிரம்
பேர் இதில் பங்கேற்கிறார்கள்.

36 வகையான போட்டிகள்

36 வகையான விளையாட்டுகளில் 439 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதில் 28 வகையான விளையாட்டுகள் 2016-ல் நடைபெறவுள்ள ரியோ ஒலிம்பிக்
போட்டியில் இடம்பெறுகின்றன. மொத்தம் 49 மைதானங்களில் போட்டிகள்
நடைபெறுகின்றன. அதில் 23 மைதானங்கள் புதிதாக கட்டப்பட்டவையாகும்.


Official Name: 17th ASIAN GAMES INCHEON 2014 Duration: September 19, 2014 - October 4, 2014 (16 days) Venues: In and around Incheon Metropolitan City Participants: About 13,000 athletes and officials and about 7,000 media from the 45 OCA member states Staff: Approx. 30,000 Host: The Olympic Council of Asia (OCA) Organizer: The 2014 Incheon Asian Games Organizing Committee (IAGOC) No. of Sports: 36


ASIAN GAMES INCHEON 2014 36Sports
Aquatics, Archery, Athletics, Badminton, Basketball, Boxing, Canoe & Kayak, Cycling, Equestrian, Fencing, Football, Golf, Gymnastics, Handball, Hockey, Judo, Modern Pentathlon, Rowing, Rugby, Sailing, Shooting, Table Tennis, Taekwondo, Tennis, Triathlon, Volleyball, Weightlifting, Wrestling, Baseball, Bowling, Cricket, Kabaddi, Karate, Sepaktakraw, Squash, Wushu



Thanks:-
oneindia
incheon2014ag.org

18 September 2014

எபோலாவால் குணமடைந்தவர்களின் ரத்தத்திற்கு கடும் கிராக்கி


மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கடந்த பிப்ரவரி மாதம்
தென்படத் தொடங்கிய எபோலா என்னும் விஷத் தொற்றுநோய்
அண்டை நாடுகளான லைபீரியா, சியரா லியோன், நைஜீரியா,
காங்கோ ஆகிய நாடுகளிலும் பரவி இதுவரை 2461 உயிர்களைப்
பலி வாங்கியுள்ளது.
இன்னும் ஆயிரக்கணக்கானோர் இந்த நோய்த்தாக்கத்திற்கான சிகிச்சைகளைப் பெற்று வருகின்றனர். அவர்களில் சிலர் பூரண
குணமடைந்து வீடு திரும்பி விட்டதாகவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எபோலா நோய்த்தொற்று தாக்கி, வைத்தியசாலைகளில்
அனுமதிக்கப்பட்டு, உரிய சிகிச்சைக்குப் பின்னர்
குணமடைந்தவர்களின் ரத்தம் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாகவும், இதற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கடும்
கிராக்கி ஏற்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம்
அறிவித்துள்ளது.
லைபீரியாவில் எபோலா ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுவந்த
அமெரிக்காவைச் சேர்ந்த சமூகச் சேவகரான டாக்டர் ரிச்சர்ட்
ஸக்ரா என்பவரையும் சமீபத்தில் எபோலா நோய்த்தொற்று பற்றிக் கொண்டது.
உடனடியாக, லைபீரியாவில் இருந்து விமானம் மூலம் அவர்
அமெரிக்காவுக்கு ஏற்றிச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர
சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவ சிகிச்சை நீங்கலாக, அவருக்கு ஒரு மாதம் முன்னதாக
எபோலா நோய்த்தொற்றுக்காக சிகிச்சை பெற்று, பூரண குணமடைந்த மற்றொரு அமெரிக்கரான டாக்டர் கெண்ட் பிராண்ட்லி என்பவரின்
ரத்தமும், டாக்டர் ரிச்சர்ட் ஸக்ரா-வுக்கு ரத்த
மறுசுழற்சி முறை மூலம் செலுத்தப்பட்டது.
இந்த சிகிச்சையையடுத்து, டாக்டர் ரிக் ஸக்ரா தற்போது பூரண
குணமடைந்து விட்டதால், எபோலா தாக்கி, உரிய
சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் ரத்தமானது, எல்லா கொடிய நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது என்னும்
நம்பிக்கை ஆப்பிரிக்க மக்களிடையே தற்போது வேகமாக
பரவி வருகிறது.
இதனால், எபோலா தொற்றுக்காக
சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின்
ரத்தத்தை எவ்வளவு விலை கொடுத்தாவது வாங்கி சேமித்து வைத்துக் கொள்ள அந்நாட்டைச் சேர்ந்த பல செல்வந்தர்கள் தயாராக உள்ளனர்.
இந்த தேவை அதிகரித்து வருவதால்,
எபோலா தாக்கி சிகிச்சை பெற்று, குணமடைந்து,
வீடு திரும்பியவர்களை தற்போது தரகர்கள் கூட்டம் வட்டமிடத்
தொடங்கியுள்ளது.
அவர்களது ரத்தப்பிரிவு உள்ளிட்ட விபரங்களை சேகரித்துக் கொண்டு, அதே ரத்த வகையை சேர்ந்த செல்வந்தர்களிடம் இந்த
தரகு கும்பல் பெரும் தொகைக்கு பேரம் பேசி, அதில் ஒரு சிறிய
தொகையை ரத்தம் விற்பனை செய்யும் நபருக்கு அளித்துவிட்டு,
இதைப் போன்ற கள்ளச்சந்தை வியாபாரத்தின் வாயிலாக கொழுத்த லாபம்
சம்பாதித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம்
அறிவித்துள்ளது. அதே வேளையில், இதைப்போன்ற நபர்களிடமிருந்து பெறப்படும்
ரத்தத்தை செலுத்திக் கொள்பவர்கள், உரியமுறையிலான மருத்துவ
கண்காணிப்பை தொடர்ந்து பெறத் தவறினால், ’எந்த நோயையும்
தாக்குப்பிடிக்கும் ஆற்றல் வாய்ந்தது’ என்று ஆப்பிரிக்க மக்கள்
கருதும் இதே ரத்தம், புதிதாக செலுத்திக் கொள்பவர்களின்
உயிரையே பறித்து விடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் மார்கரெட் சான்
எச்சரித்துள்ளார்.



Thanks:-
Ada derana
BBC

14 September 2014

சிறுமூளை இல்லாமல் வாழும் சீனப்பெண்: மருத்துவர்கள் வியப்பு

மூட்டு இயக்கம் மற்றும் பேச்சு போன்றவற்றிற்கு முக்கிய காரணமாக
விளங்கும் சிறுமூளை இல்லாமலே 24 வயதுடைய சீனப் பெண் ஒருவர்
மற்றவர்களைப்போல் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருவது சமீபத்தில்
தெரிய வந்துள்ளது.
வாந்தி மட்டும் குமட்டல் புகார்களுடன் அந்தப் பெண் மருத்துவமனைக்கு
வந்தபோது மருத்துவர்கள்
அவருக்கு சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்துள்ளனர். அப்போதுதான்
அவரது சிறுமூளைக்குப் பதிலாக அந்த இடத்தில்
மூளைப்பகுதியைப் பாதுகாக்கும் வெறும் திரவம்
மட்டுமே நிறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவ
வரலாற்றிலேயே இது மிகவும் அரிதான விஷயமாகக் கருதப்படுகின்றது.
பொதுவாக இவ்வாறான பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு நடப்பதிலும்,
பேசுவதிலும் பெரும் குறைபாடுகள் காணப்படும். ஆனால் இவர்
நேராக நடக்கும்போது சிறிதளவு மயக்கமாக உணர்வதுடன்
பேசுவதில் சிறிது தெளிவில்லாத முறையில் இருப்பது தவிர
சராசரியாகவே காணப்படுகின்றார். இவரது தாயாரைத் தொடர்புகொண்டபோது, தனது மகள்
ஆறு வயதில்தான் சுயமாக நடக்க ஆரம்பித்தாள் என்றும் அந்த
வயதில்தான் சற்று தெளிவாகப் பேச ஆரம்பித்தாள் என்றும்
குறிப்பிட்டார். அதுபோல் அவர்
பள்ளிக்கு செல்லவில்லை என்பதையும் அவர் கூறினார்.
திருமணமாகி ஒரு பெண் குழந்தைக்கும் தாயாக உள்ள இவர், மருத்துவ உலகிற்கே
ஒரு வியப்பு என்று மருத்துவர்கள்
குறிப்பிட்டுள்ளனர். இவரது மூளையின்
அனுசரிப்புத்தன்மை மகத்தானது என்று அமெரிக்க நரம்பியல்
அறுவை சிகிச்சை மருத்துவரான ராஜ் நாராயண்
கருத்து தெரிவித்துள்ளார்.

நன்றி:மாலைமலர்

12 September 2014

தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயை குறைக்கலாம்



உணவில் தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களைத் தாக்கும்
இரண்டாவது பெரிய புற்றுநோயான புராஸ்டேட்
புற்றுநோயை கணிசமான அளவுக்கு தடுக்க முடியும்
என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சராசரியாக ஒரு வாரத்துக்கு சுமார்
ஒன்றரைகிலோ தாக்காளியை தமது உணவில் சேர்த்துக்கொள்ளும்
ஆண்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் 20
சதவீதம் குறைவதாக இவர்கள் கூறுகிறார்கள். உலக அளவில் ஆண்களுக்கு ஏற்படும்
இரண்டாவது பெரிய
புற்றுநோயாக புராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய்
காணப்படுகிறது. இங்கே பிரிட்டனில் மட்டும் ஆண்டுக்கு 35,000
ஆண்களுக்கு இந்த புற்றுநோய் ஏற்படுகிறது. அவர்களில் 10,000
பேர் இந்த நோய் காரணமாக இறந்து போகிறார்கள். பொதுவாக புற்றுநோய் வராமல்
தடுக்கவேண்டுமானால் உணவில்
பச்சைகாய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில்
சேர்த்துக்கொள்வதோடு, இறைச்சியின் அளவையும், கொழுப்பு மற்றும்
உப்பின் அளவையும் குறைக்க வேண்டும் என்பது மருத்துவர்களின்
பரிந்துரையாக இருந்து வருகிறது. பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த
ஆய்வாளர்கள் சுமார் 20,000
ஆண்களிடம் புராஸ்டேட் புற்றுநோய் குறித்து ஆய்வு செய்தனர். இந்த
ஆய்வில் பங்கேற்றவர்களின் வயது 50 முதல் 69 வயதுவரையானதாக
இருந்தது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் உணவுப்பழக்கம் மற்றும்
வாழ்வியல் முறைகள் ஆய்வுசெய்யப்பட்டன. இதில்
வாரத்துக்கு குறைந்தது 1500 கிராம் தக்காளியை உணவில்
சேர்த்துக்கொண்டவர்களிடம் புராஸ்டேட் புற்றுநோய் தோன்றுவதன்
சாத்தியம் 18 சதவீதம் வீழ்ச்சியடைந்ததை இவர்கள் கண்டறிந்தனர்.

அத்துடன், சராசரியாக ஒரு நாளைக்கு தங்களின் மொத்த உணவில்
குறைந்தது 500 கிராம் பச்சை காய்கறிகளையும், பழங்களையும்
சாப்பிட்டவர்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் தாக்குவதற்கான
சாத்தியம் 24 சதவீதம் அளவுக்கு குறைவதையும் இவர்கள்
கண்டறிந்தனர். புராஸ்டேட் புற்றுநோய் தடுப்பில் தக்காளி முக்கிய
பங்காற்றுவதாக தங்களின் ஆய்வு கண்டறிந்திருப்பதாக கூறும்
பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத்துறையைச் சேர்ந்த
வனசா எர், அதேசமயம், இதை உறுதி செய்யவேண்டுமானால்
இது தொடர்பான மேலதிக ஆய்வுகள் தேவைப்படுவதாகவும்
தெரிவித்தார். தக்காளிக்கு சிகப்பு நிறத்தை அளிக்கும் லைகோபீன் என்கிற
இயற்கையான வேதிப்பொருள், மனித செல்களில் மரபணு மாற்றம்
ஏற்பட்டு அதன் காரணமாக அந்த செல்கள் வேகமாக
சிதைவுறுவதையோ அல்லது வேகமாக வளர்வதையோ தடுக்க வல்லது.
அதன்மூலம் இந்த லைகோபீன் மனித செல்களின் வேகமான
கட்டுப்படுத்தமுடியாத வளர்ச்சி புற்றுநோயாக உருவாவதை தடுக்கும் பணியை செய்வதாக மருத்துவ விஞ்ஞானிகள்
தெரிவித்திருக்கிறார்கள். தக்காளியில் இருக்கும் லைகோபீன் மட்டுமல்லாமல், நாம் அன்றாடம்
உண்ணும் உணவு வகைகளான கோதுமை மாவில்
இருந்து தயாரிக்கப்படும் ரொட்டி, பாஸ்தா போன்றவற்றில்
இருக்கும் செலீனியம் என்கிற வேதிப்பொருளும், பாலிலும்
அதிலிருந்து தயாராகும் அனைத்துவகையான
உணவுப்பொருட்களிலும் இருக்கும் கால்சியமும் கூட ஆண்களுக்கு உருவாகும் புராஸ்டேட்
புற்றுநோயை தடுக்கவல்லவை என்றும் விஞ்ஞானிகள்
தெரிவித்திருக்கிறார்கள். எனவே ஆண்கள், கணிசமான தக்காளியையும், மாவுப்பொருளில்
இருந்து தயாராகும் உணவுகள் மற்றும் பாலில்
இருந்து தயாரிக்கப்படும் உணவுகளை கூடுதலாக தங்களின் அன்றாட
உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் தங்களுக்கு புராஸ்டேட்
புற்றுநோய் வருவதை கணிசமான அளவுக்கு கட்டுப்படுத்த
முடியும் என்றும் இந்த ஆய்வாளர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

Source:-BBC

11 September 2014

பாகிஸ்தானில் வெள்ள நிலைமை மேலும் மோசமடைகிறது - video

Sep.10
பாகிஸ்தானில் வெள்ளப்பகுதியில் நீரில் அழுத்ததை குறைக்கவும்,
நகரப் பகுதிகளைக் காக்கவுமாக அங்குள்ள ஒரு கேந்திர
முக்கியத்துவம் மிக்க அணையை அதிகாரிகள்
உடைத்திருக்கிறார்கள். இதன் காரணமாக 7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்
தமது வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வெள்ள நீர் இந்திய காஷ்மீர் பகுதியில் இருந்துதான்
பாகிஸ்தானுக்குள் புகுந்துள்ளது. இந்தியப் பகுதிகளில் தற்போது வெள்ளம் வடிந்து வருகின்றது. குடிபெயர்ந்து வேலை செய்யும் தொழிலாளர்களும், சுற்றுலாப்
பயணிகளும் வெளியேற முற்பட்டதால், ஸ்ரீநகர் விமான நிலையத்தில்
ஸ்தம்பித நிலை ஏற்பட்டுள்ளது.



Source:-BBC

08 September 2014

சிறுவர்களின் கண் பார்வையை மங்க வைக்கும் கெரட்ரோகோனஸ் நோய்

புலனுறுப்புகளில் கண் மிகவும் பிரதான உறுப்பாக இருக்கின்ற­
மைக்கு காரணம் இந்த உலகை எமக்கு காட்சிப்படுத்துவது கண் என்­
பதால் தான். கண் இல்லாது விட்டால் வாழ்க்கையே இருண்டு போய்
விடும். அதிலும் ஏற்கனவே பார்வை இருந்த ஒருவர் பார்­
வையை இழந்து விட்டால் சொல்லவும் வேண்டுமா சிறுவர்களின்
பார்வையை மெல்ல பாதித்து குருடாக்கி விடக்கூடிய ஆபத்தான ஒரு நோய் தான்
கெரட்ரோகோனஸ் (keratoconus)நோயாகும். பெரிதாக வளரும் பிள்ளைகளில்
ஏற்படும் இந்த நோய் கண்ணின் மணி­
யாக கருவிழி மென்மையடைவதால் ஏற்படுகிறது. இதற்கான சரி­
யான காரணம் இனங்காணப்படாவிட்டாலும் இந்நோயை ஆரம்ப நிலையில்
இனங்கண்டால் குணப்படுத்த முடியும்.
நன்றாக படித்து கொண்டிருந்த சிறு பிள்ளைகள் படிப்பில் பின்­
தங்கி விடுவதற்கு இந்நோயினால் ஏற்படுகின்ற பார்வை குறை­ பாடு ஒரு
காரணமாகும். பார்வை குறைபாட்டிற்கு பல்வேறு கார­
ணங்கள் இருக்கின்றன.
கண் வில்லை(lens) இயல்புக்கு மாறான அளவில் இருக்கும்
போது அதன் குறைப்பாட்டை பரிசோதித்து அறிந்து அதற்கான தீர்வாக
பொருத்தமான மூக்கு கண்ணாடியை அணிவதை அறிவீர்கள்.
விம்பம் விழித்திரையில் சரியாக விழாத பட்சத்தில் பார்வை வில்­ லைகள்
மூலம் அதை விழித்திரையில் சரியாக வடிவமைத்து சீர் செய்­
யப்படுகின்றது. எனினும் இவ்வாறான குறைபாடு பெரும்பாலும்
40 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே ஏற்படுகிறது. சில வேளை­
களில் சிறுவர்களுக்கும் ஏற்படலாம். சிறுவர்களை பொறுத்த­
வரை விட்டமின் A குறைபாட்டினால் ஏற்படும் கெரரோ மலே­
சியா (Kerato malesia) பார்வையை பாதிக்கக்கூடியது என்பதை அறிந்திருப்பீர்கள். ஒருவ­
ரது உணவில் போதியளவு விட்டமின் A கிடைக்காத பட்சத்தில்
கண்ணின் முன்புறமாக உள்ள வெண்விழி (Conjuntiva) கரு­
விழி (Cornia) என்பன பாதிப்புக்குள்ளாகி பார்வை குறை­
பாடு ஏற்படுகின்றது. விட்டமின் A நிறைந்த மீணெண்னை, கரட், மீன்
முதலான உணவுகளை உட்கொள்வதன் மூலம் இக்குறைபாடு ஏற்படு­ வதை தவிர்க்க முடியும்.
ஏற்கனவே குறைபாடு இனங்காணப்பட்டுள்ளவர்களில் விட்டமின் A
மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். குழந்தைகளில்
இக்குறைபாடு ஏற்படுவதை தவிர்ப்பதற்கு சிறுவர் கிளினிக்கில்
செறிவான விட்டமின் A மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
கண்களில் ஏற்படும் காயங்கள், தொற்றுக்கள் என்பவற்றாலும் கண் பார்வை
பாதிப்பு ஏற்படும் சாத்தியம் உண்டு. கண்களில் நோய் ஏற்­
படும்போது கட்டாயம் உங்கள் வைத்தியரிடம் ஆலோசனை பெறுங்கள்.
ஆரம்பத்தில் குறிப்பிட்ட கெரட்ரோகோனஸ் நோய் பற்றி பார்ப்போம்.
படிக்கும் குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும்
திடீரென்று ஏதோ பார்வைக் கோளாறு என்று வைத்தியரிடம் கூட்டிக்­
கொண்டு வருவார்கள். இவ்வாறான சிறுவர்களை கண் வைத்திய நிபுணர்
பரிசோதிக்கும் போது சிலருக்கு இந்நோய் இருப்பது கண்டு பிடிக்­
கப்படுகின்றது. இவர்களின் கருவிழிகளின் வடிவம் அசாதாரணமாக
இருப்பதன் மூலம் தான் இந்நோய் கண்டுபிடிக்கப்படுகின்றது. பிறப்­
பிலேயே பலமில்லாத கருவிழிகள் உள்ள குழந்தைக்கே இந்நிலை ஏற்ப­
டுகிறது.
இவ்வாறான குழந்தைகள் வளரும் போது கருவிழிகளின் வடிவ­ மைப்பு
மாறுபடுகிறது. இதனால் பார்க்கும் பொருள் கடும் வெளிச்­
சமாகவும் சரியான விம்பத்தை பெறமுடியாமலும் இருக்கும்.
இது மெதுமெதுவாக ஏற்படுவதால் ஆரம்பத்தில் இதை அலட்சியப்ப­
டுத்தி விடுவார்கள்.
கண்களில் அரிப்பாகவும் சிவப்பு நிறமாகவும் இருக்கும். இவ்வா­
றான நிலை ஏற்பட்டவர்கள் கண்களைப் போட்டு கசக்கக் கூடாது. கண்ணில் வேறெந்த
நோய்தொற்று, அலர்ஜி என்பன ஏற்படும்போது கூட கசக்கக்
கூடாது. சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவலாம்.
கண் வைத்தியர் ரோபோ கிறாபி (tobo graphy) பரிசோதனை மூலம்
உங்கள் கண்களில் கெரட்ரோகோனஸ் இருப்பதை உறுதிசெய்வார்.
இந்நோயினால் கருவிழிகளின் வடிவம் மாறியிருப்பதை துல்லிய­
மாக கண்டறிய முடியும். இன்னும் சில பரிசோதனைகள் மூலம் நோயின் பாதிப்பின்
அளவை சரியாகக் கண்டறிந்து இதற்கு ஏற்ற­
வாறு சிகிச்சை அளித்திட முடியும்.
நவீன கருவிகள் மூலமும் உபகரணங்கள் மூலமும் நனோ தொழில்நுட்­
பத்தை பயன்படுத்தியும் கருவிழியை முப்பரிமாணத்தில் (Three
diamension) பார்த்து பாதிப்பின் அளவை துல்லியமாக
கணிக்கும் வழி முறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதனால் மிக ஆரம்ப
நிலையிலேயே நோயை இனங்காண முடியும்.
நோய் தீவிரமடையும் முன்னர் ஆரம்ப காலத்தில் கண்டுபி­
டித்து விட்டால் சிகிச்சையளிப்பது சுலபம். கண் வைத்தியரின்
தொடர் கண்காணிப்பில் (கிளினிக்) இடையிடையே கண்ணாடியை மாற்ற
வேண்டியிருக்கும். பாதிப்பு சற்று அதிகமாக இருப்பின்
contect lens பாவிக்கப்படுகிறது. பிரத்தியேக ஒளியைச் செலுத்தியும்
சீர்செய்யும் முறையுண்டு. ஆனால் கோணியா மிக மோச­
மாக பாதிப்படைந்திருப்பின் பார்வை மிக மோசமடைவதுடன் முன்கு­
றிப்பிட்ட சிகிச்சைகள் பலனளிக்காது.
இவர்களில் விழித்திரை மாற்று (Corneal Tranplantasion)
சிகிச்சை மூலம் தான் குணப்படுத்த முடியும். இதற்கு தானமாக
கண்களைப் பெற்றே சிகிச்சையளிக்க முடியும். உயிருடன் இருக்கும் ஒருவர்
தனது கண்களை தானமாக, தான் இறந்ததும் வழங்க
ஏற்பாடு செய்ய முடியும்.குறிப்பிட்ட சில மணிகளுக்குள்
இறந்தவரின் கண்களைப் பெற்று பாதுகாத்து இன்னொருவரின்
கண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியும்.
டாக்டர் ச.முருகானந்தன்


Source:-virakesari

நிகாராகுவா தலைநகரை தாக்கிய விண்கல்: 39 அடி பள்ளத்தை ஏற்படுத்தியது

லத்தீன் அமெரிக்காவில் உள்ள நிகராகுவா நாட்டின்,மனாகுவா என்ற தலைநகரில்.
விண்கல்ஒன்று 2014 செப்டம்பர் 7 ஞாயிறு அன்று தாக்கியது. இதனால்
39 அடிப் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
விண்கல் விழுந்த இடம் வனப் பகுதி என்பதால் யாருக்கும் எந்தக்
காயமும் ஏற்படவில்லை.விண்கல்விழுந்த அதிர்வு, மனாகுவா முழுவதும்
உணரப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் நிலநடுக்கத்தை அளவிடும் கருவிகளிலும்
இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விண்கல் விழுந்த போது ஏற்பட்ட அதிர்வால், அருகில் இருந்த விமான
நிலையத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

07 September 2014

அநீதியை விட்டும் விலகிக்கொள்ளுங்கள்! புகாரி நபிமொழித் தொகுப்பிலிருந்து சில..

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள், ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான்.
அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான். அவனை (பிறரின் அநீதிக்கு
ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு
செய்வதில் ஈடுபட்டிருக்கிறவரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும்
ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றவரைவிட்டு
அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒன்றை நீக்குகிறான். ஒரு
முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும்
மறைக்கிறான். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், "உன் சகோதரன் அக்கிரமக்காரனாக
இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும்
அவனுக்கு உதவி செய்" என்று கூறினார்கள். மக்கள், "இறைத்தூதர் அவர்களே!
அக்கிரமத்துக்குள்ளானவனுக்கு நாங்கள் உதவுவோம். அக்கிரமக்காரனுக்கு
நாங்கள் எப்படி உதவுவோம்?" என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், "அவனுடைய
கைகளைப் பிடித்து (அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து)க் கொள்வாய் (இதுவே,
நீ அவனுக்குச் செய்யும் உதவி)" என்று கூறினார்கள் என்பதாக அனஸ்(ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள். அநீதி, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி
தரும் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி)
அறிவிக்கிறார்கள். அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால்
அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு
உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள்.
ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை" என்று
நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி
வைத்தபோது கூறினார்கள் என்பதாக இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா(ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள், ஒருவர், தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு
(பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ, இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம்
காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே
மன்னிப்புப் பெறட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ)
பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால்
(மன்னிப்புப் பெறட்டும்). (ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல்
ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக்
கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும்.
அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின்
(அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு
அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள்
கூறியதாக, ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், பிறரின்
நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்தவர் ஏழு நிலங்களை (மறுமையில்) கழுத்தில்
மாலையாகக் கட்டித் தொங்க விடப்படுவார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக
அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், அல்லாஹ்விடம் மிகவும்
வெறுப்புக்குரியவன் யாரென்றால், மனிதர்களிலேயே கடுமையாக (எப்போது
பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான். உம்மு ஸலமா(ரலி)
அறிவிக்கிறார்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் அறையின் வாசலுக்கருகே
(சிலர்) சச்சரவிட்டுக் கொண்டிருந்ததைச் செவியுற்றார்கள். அவர்களிடம்
சென்று, "நான் ஒரு மனிதனே. என்னிடம் வழக்காடுபவர்கள் வருகிறார்கள்.
உங்களில் ஒருவர் மற்றவரை விட வாக்கு சாதுர்யம் மிக்கவராக இருக்கலாம்.
அவர்தான் உண்மையைப் பேசியுள்ளார் என்று கருதி, நான் அவருக்கு சாதகமாகத்
தீர்ப்பளித்து விடுவேனாயின், எவருக்கு ஒரு முஸ்லிமின் உரிமையை எடுத்துக்
கொள்ளும்படி (யதார்த்த நிலை அறியாமல்) நான் தீர்ப்பளிக்கிறேனோ (அவருக்கு)
அது நரக நெருப்பின் ஒரு துண்டேயாகும். அவன் (விரும்பினால்) அதை எடுத்துக்
கொள்ளட்டும் அல்லது அதை (எடுத்துக் கொள்ளாமல்)விட்டு விடட்டும்" என்று
கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக, அப்துல்லாஹ் இப்னு
அம்ர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நான்கு குணங்கள் எவனிடத்தில்
உள்ளனவோ அவன் நயவஞ்சகனாவான். அல்லது அந்த நான்கு குணங்களில் ஒரு குணம்
அவனிடம் குடி கொண்டிருந்தாலும் அவன் அதை விட்டுவிடும்வரை நயவஞ்சகத்தின்
ஒரு குணம் அவனிடம் இருப்பதாகப் பொருள். (அந்த நான்கு குணங்கள் இவைதாம்)
அவன் பேசும்போது பொய் பேசுவான்; வாக்களித்தால் மாறு செய்வான்; ஒப்பந்தம்
செய்தால் மோசடி செய்வான்; வழக்காடினால் அவமதிப்பான்.

Thanks:islamkalvi

05 September 2014

காட்டு ராஜாக்களை ஓட வைத்த கீரி (video)

சிங்கங்களுடன் சண்டையிட்டு வெற்றி பெற்ற கீரியின் அதிசய காணொளியொன்று வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் கென்னியாவின் மாஸாய் மாரா சரணாலயத்தில் இடம் பெற்றுள்ளது.
இரண்டு அடி உயரமான கீரி காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களுடன் சண்டையிட்டு பின்னர் அந்த சிங்களை விரட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த காணொளி 2011 ஆம் ஆண்டு ஜெரோம் எனும் புகைப்படபிடிப்பாளரால் படம்பிடிக்கப்பட்ட போதும் தற்போதுதான் வெளியிட்டுள்ளார்.

Thanks:newsfirst