சோயுஸ் ரொக்கெட் கிளம்பிய தருணம் பூமிக்கு மேலே வட்டமிட்டுக்கொண்டிருக்கும்
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சோயுஸ்
விண்வெளி ஓடம் இந்த முறை மேற்கொண்ட பயணம்
வழமைக்கும் மிகக் குறைவான நேரத்தில்
நடந்துள்ளது. வியாழன் இரவு ஜிஎம்டி நேரப்படி சுமார்
எட்டே முக்கால் மணிக்கு கஸக்ஸ்தானில் உள்ள
பைக்கானூர் விண்ணேற்ற
தளத்திலிருந்து கிளம்பிய ஸோயுஸ் ராக்கெட்
பயணம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக
அமைந்துள்ளது. ஏனென்றால் சாதாரணமாக ரஷ்யாவின் சோயுஸ்
ராக்கெட்டுகள் மூலமாக
பூமிக்கு மேலே சுமார் நானூறு கிலோமீட்டர்
உயரத்தில் மணிக்கு 27ஆயிரம் கிலோமீட்டர்
வேகத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கும்
சர்வதேச விண்வெளி நிலையம் எனப்படுகின்ற இந்த செயற்கைக்கோளுக்கு செல்ல வேண்டுமானால்
மொத்தம் ஐம்பது மணி நேரங்கள் ஆகும். ஆனால் இந்த முறை பயணம் சென்றவர்கள்
ஆறு மணி நேரத்தில் சர்வதேச
விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர். இதற்கு முன் சென்ற பயணங்களில் எல்லாம்
இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து சுமார்
முப்பது முறை பூமியை சுற்று வட்டப்பாதையில்
வட்டமடித்த பின்னர்தான்
விண்வெளி நிலையத்தை நெருங்க முடிந்தது. இம்முறை பயணம் சென்றவர்கள் ஆனால் இந்த முறை ராந்தேவு டெக்னிக் என்ற
புதிய பறக்கும்
வித்தையை செய்து பூமியை நான்கு முறை
மட்டுமே சுற்றிய நிலையில்
விண்வெளி ஓடத்துடன் ஆட்கள் சென்ற சோயுஸ்
விண்ணோடக் குப்பி இணைய முடிந்துள்ளது. ராந்தேவு டெக்னிக் பறக்கும்
முறை இதற்கு முன் ஆள் இல்லாமல் பறக்கக்கூடிய
ரஷ்யாவின் பிராக்ரஸ்
சரக்கு விண்வெளி ஓடத்தில்
மூன்று முறை பயன்படுத்தப்பட்டிருந்தது
என்றாலும், மனிதர்களை சுமந்து சென்ற ஒரு விண்வெளி பயணத்தில் இந்த
உத்தி பயன்படுத்தப்படுவது இதுவே முதல்
முறை. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவைச்
சேர்ந்த கிறிஸ் கேஸிடியும், ரஷ்ய
விண்வெளி ஆய்வு மையமான ரொஸ்கொஸ்மோஸைச்
சேர்ந்த பவெல் வினோக்ரடொவ் மற்றும்
அலெக்ஸாண்டர் மிஸுர்கின் ஆகிய மூன்று பேரும்
இப்பயணத்தில் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றுள்ளனர். இவர்கள் ஆறு மாத
காலத்துக்கு அங்கு தங்கியிருந்து பணிகளைச்
செய்வார்கள். விண்வெளி நிலையத்தில்
ஏற்கனவே இருந்து வருகின்ற மூன்று பேர்
வரும் மே மாதம் அங்கிருந்து பூமிக்குத்
திரும்புவர். அடுத்த ஆறு மாத காலத்தில்
அமெரிக்கா சார்பில் சர்வதேச
விண்வெளி ஓடத்தில் மொத்தம் 137 ஆய்வுகள்
நடக்கவுள்ளன, ரஷ்யா சார்பில் 44 ஆய்வுகள்
நடத்தப்படவுள்ளன
என்று நாசா அறிக்கை ஒன்று கூறுகிறது.
No comments:
Post a Comment